செவ்வாய், 8 அக்டோபர், 2019

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் அமெரிக்காவில் தந்தை பெரியார் 141ஆவது பிறந்த நாள் விழா



Stalwart Of   Dravidian Ideology விருது  தமிழர் தலைவருக்கு   பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் வழங்கியது.


பாஸ்டன், செப்.29 தந்தை பெரியார் அவர்களின் 141 - ஆவது பிறந்த நாள் விழா (28.9.2019) வெகுச் சிறப்பாக பாஸ்டனில் (அமெரிக்கா) கொண் டாடப்பட்டது.

விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி , மோகனா அம்மையார் அசோக்ராஜ் வீரமணி,  சுபிதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித் தனர். நிகழ்ச்சியில் பாஸ்டன்  மோகனா  வரவேற்புரை ஆற்றினார். வரவேற்பு ரையைத் தொடர்ந்து தோழர்கள் அருள், பிரபு, கார்த்திகேயன் பிரபு ஆகியோர் பறை இசைத்தனர்.

பட்டிமன்றம்

தொடர்ந்து பெரியாரின் தொண் டறத்தில் விஞ்சி நிற்பது ஜாதி ஒழிப்பே! பகுத்தறிவே ! என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது.

‘பகுத்தறிவே’ என்ற அணியில் தோழர் பார்த்திபன், மருத்துவர் சரோஜா  இளங்கோவன், தோழர் பமிலா வெங்கட் ஆகியோர் தங்கள் கருத்துகளை தெளிவுற பதிவு செய்தனர். ‘ஜாதி ஒழிப்பே’ என்ற தலைப்பில் வீரமர்த்தினி, திருமலை ஞானம், ஷோபனா ஆகியோர் உரையாற்றினார்கள். நடுவராக  கார்த் திகேயன் தெய்வீகராஜன் பட்டிமன் றத்தை வழி நடத்தி பெரியாரின் தொண்டறத்தில் விஞ்சி நிற்பது ‘ஜாதி  ஒழிப்பே!’ என்ற அருமையான தீர்ப்பை பல விளக்கங்களுடன் வழங் கினார்.

பட்டிமன்றத்தில் உரையாற்றிய அனைவருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் நூல் களை  வழங்கினார்.



தமிழர் தலைவர்  - மோகனா அம்மையாருக்கு விருது  பாராட்டு

அஜோய் நடத்திய Jeopardy எனும் வினாடி- வினா நிகழ்ச்சி பலரின் கவனத்தை கவர்ந்தது. 'பொது அறிவுக் கேள்விகள்' ,  ' அமெரிக்க வரலாறு' என பல தலைப்புகளில் இருந்து கேட் கப்பட்ட கேள்விகள் தகவல் களஞ்சியமாக அமைந்தன.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பாக மோகனா அம்மையார் அவர் களுக்கு ‘சுயமரியாதை இயக்க வீராங்கனை’ என்ற விருது வழங்கப் பட்டது. விருதினை மருத்துவர் சரோஜா இளங்கோவன் வழங் கினார்.



பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் தோழர்கள் திரளாக மோகனா அம்மையாருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பாக Stalwart Of Dravidian Ideology விருது  வழங்கப்பட்டது. விருதினை   மருத் துவர் சோம. இளங்கோவன் அவர் களும், பெரியார் பிஞ்சு ஈ.வெ.ரா அவர்களும்  இணைந்து வழங்கி னார்கள்.

விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், பெண்களின் முன்னேற்றத்திற்காக தந்தை பெரியார் செய்த பணியினை எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார்கள். குறிப்பாக முதல் சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்பதை வலியுறுத்தி நிறைவேற்றிய தீர்மானம், பெண் களுக்கான சொத்துரிமை வலியுறுத்தி அண்ணல் அம்பேத்கர் நேரு பிரதமராக இருந்தபோது எடுத்த முயற்சி, எவ்வாறு பின்னாளில் அய்யாவின்   தீர்மானம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் களால் சட்ட மாக்கப்பட்டது என்ற செய்திகளை எடுத்துக்கூறினார்.

அமெரிக்க பாஸ்டன்  நகரில் திருமதி. மோகனா அம்மையாருக்கு "சுயமரியாதை இயக்க வீராங்கனை" விருது




செப்டம்பர் 28 ஆம் நாள் அமெரிக்க பாஸ்டன் நகரில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 141ஆவது  பிறந்த நாள் விழா கோலாகலமாக பகுத்தறிவு விழாவாகக் கொண்டாடப்பட்டது. பகுத்தறிவு, மனித நேயம், ஜாதி ஒழிப்பு பற்றி பேசப்பட்டது. அந்த விழாவிலே பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைக் கண்ணை இமை காப்பது போலக் காத்துவரும் அவரது வாழ்விணையர் திருமதி.மோகனா அம்மையாருக்கு "சுயமரியாதை இயக்க வீராங்கனை " என்ற விருது அளித்து சிறப்பு செய்யப்பட்டது.   விழாக் குழுவினர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில்  சபரிஷ் நன்றியுரை ஆற்றினார்.

மோகனா, மகேஷ், பார்த்திபன், பாண்டி ஆகியோர்  நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தமைக்கு சிறப்பு பாராட்டுகள் பெற்றனர்.  மேலும் நிகழ்ச் சியில் இரவு உணவிற்கு பொருள் உதவி தந்து ஆதரவு வழங்கிய நமது படிப்பு வட்டம் அருள் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டது.

கனிமொழி தொகுத்து வழங்கினார்.

தந்தை பெரியாரின் 141 ஆவது பிறந்த நாளில் பாஸ்டனில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் சிறப்பாக  செயலாற்றி உள்ளது குறிப் பிடத்தக்கது.

தொகுப்பு:

ம.வீ.கனிமொழி

 - விடுதலை நாளேடு, 29. 9 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக