புதன், 22 மார்ச், 2023

கல்வி வளர்ச்சியில் புதிய அத்தியாயம், 'காலை உணவுத் திட்டம்' தொடங்கப்பட்டது

 

 1.14 லட்சம் மாணவர்களுக்கு 'காலை உணவுத் திட்டம்' தொடங்கப்பட்டது

மதுரை,செப்.16- அரசுப் பள்ளி களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத் தார். அப்போது, குழந்தைகளின் பசியைப் போக்க எந்த தியாகத் தையும் செய்யத் தயார் என்று அவர் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் பசி, ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி, கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித் திருந்தார்.

அதன்படி, அண்ணா பிறந்த நாளான நேற்று (15.9.2022) மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், காலை உணவு திட் டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், குழந்தைகளுடன் அமர்ந்து சாப் பிட்டார். குழந்தைகளுக்கு கேசரி, ரவா கிச்சடி, சேமியா உப்புமா வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் ‘தமிழக அரசின் நூற்றாண்டு கண்ட கல்விப் புரட்சி’ என்னும் நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முதல் பிரதியை கோவையைச் சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாள் பெற்றுக்கொண்டார்.

பின்னர் முதலமைச்சர் பேசிய தாவது: பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் என்பது, அமெரிக்காவில் பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அய்ரோப் பிய நாடுகளிலும், குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிலும் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பள்ளிகளில் காலை உணவு வழங்குவதால் அந்த நாட்டு மாண வர்களின் கற்றல் திறன் மேம்படுவ தாகவும், மாணவர் வருகை அதிகரிப் பதாகவும் பல ஆய்வு முடிவுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

சென்னையில் ஒருமுறை ஒரு பள்ளிக்கு சென்றபோது, அங்கே இருந்த குழந்தைகளிடம், ‘ஏன் சோர்வாக இருக்கிறீர்கள், சாப்பிட வில்லையா’ என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘காலையில் எப்போதும் நாங்கள் சாப்பிடுவ தில்லை. அப்படியே பள்ளிக்கு வந்துவிடுவோம்’ என்று சொன்ன தும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே அதிகாரிகளுடன் ஆலோ சித்தபோது, நிறைய குழந்தைகள் காலையில் சாப்பிடாமல்தான் பள்ளிக்கு வருகிறார்கள் என்றனர்.

குழந்தைகளை பட்டினியாக அமரவைத்து பாடம் சொல்லித் தரக்கூடாது என்று நினைத்துதான் காலை உணவு வழங்கும் திட் டத்தைத் தொடங்கி இருக்கிறோம். இன்று எத்தகைய நிதிச் சுமை இருந்தாலும், பசி சுமையைப் போக்க நாம் முடிவெடுத்து இப் பணியை நிறைவேற்றிக் கொண்டி ருக்கிறோம்.

இத்திட்டத்தின்படி தினமும் முதல்கட்டமாக 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட உள்ளது. 1,545 பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் பயனடைவர். ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 12 ரூபாய் 75 காசு செலவு செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தை படிப்படியாக விரிவுபடுத்தி, முழுமையாக நிறை வேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

‘பசிப்பிணியும், பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்க வாழ்’ என்கிறது மணிமேகலை காப்பியம். அத்தகைய மாநிலமாக தமிழ்நாடு அமைய எந்நாளும் உழைப்போம். குழந்தைகளின் பசியைப் போக்கிட எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன், பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பெ.கீதா ஜீவன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மதுரை மேயர் இந்திராணி, ஆட்சியர் அனீஸ் சேகர், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்   மாநக ராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


ஞாயிறு, 19 மார்ச், 2023

நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க புதிய ஆணை வெளி வருகிறது

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையாருக்கு கருஞ்சட்டையின் கடிதம்!

சனி, 18 மார்ச், 2023

அன்னை மணியம்மையார் நினைவு நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

முடிந்தவரையல்ல - தந்தை பெரியார் பணியை முடிக்கும்வரையில் உழைப்பதில் இன்பம் காண்பதுதான் நமது கடமை! - தமிழர் தலைவரின் சூளுரை

சனி, 11 மார்ச், 2023

எத்தனை தந்திரங்கள், சூழ்ச்சிப் படலங்களை நிகழ்த்தினாலும், பெரியார் மண்ணும், மக்களும் - அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று வென்று காட்டுவார்கள்!


வெறும் கானல் நீர் வேட்டையில் இறங்காதீர் ஆளுநர் அவர்களே!

தமிழ்நாடு பெரியார் மண் - சுயமரியாதை மண் - 

அதன் சூட்டை காவி தாங்காது- கனவுகள் சிதைக்கப்படும்!

எத்தனை தந்திரங்கள், சூழ்ச்சிப் படலங்களை நிகழ்த்தினாலும், பெரியார் மண்ணும், மக்களும் - அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று வென்று காட்டுவார்கள்! பொய் நெல்லைக் குத்திப் பொங்கலிட்டு மகிழலாம் என்று நினைத்து, வெறும் கானல் நீர் வேட்டையில் இறங்காதீர் - ஆளுநர் அவர்களே! இந்த மண் சுயமரியாதை மண் - அதன் சூட்டை காவி தாங்காது - கனவுகள் சிதைக்கப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு: 

தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, வந்த நாள் முதல் இந்த நாள் வரை - தாம் அரசமைப்புச் சட்டப்படி தமிழ்நாடு அரசின் ஓர் அங்கம் - அதன் வாயாகவும், குரலாகவும், செயலாகவும் இருக்கவேண்டும் என்ற அடிப்படைக் கடமை உணர்வை மறந்து அல்லது துறந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி யான தி.மு.க. ஆட்சியின் முழு முதல் எதிர்க்கட்சித் தலைவர்போலவே நடந்து வருவதோடு, நித்தம் நித்தம் ஆளுநர் வசிக்கும் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். பிரச்சார கேந்திரமாகவும் மாற்றி, திராவிட ஆட்சித் தத்துவத்தின் கொள்கை லட்சியங்களுக்கு எதிரான தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அனைத்துத் தரப்பு மக்களின் ஆத்திரத்தையும் பரிசோதித்துக் கொண்டே இருக்கிறார்!

தமிழ்நாட்டு மக்களின் 

பொறுமையை சோதித்து வருகிறார்!

மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட வரைவுகளை (சுமார் 14-க்கும் மேற்பட்ட மசோதாக்களை) வேண்டுமென்றே ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு, தமிழ்நாட்டு ஆட்சி, தமிழ்நாட்டு மக்களின் பொறுமையை சோதித்து வருகிறார்!

இதற்கு ஓர் ஆழமான பின்னணியாம்; அந்தப் பின்ன ணியை பின்னியவர்களின் கெட்ட புத்தியும்  (Mala fide), தீய எண்ணமுமே இதன் அடிப்படையில் இருக்கவேண்டும் என்பதை சராசரி மக்களால் கூட ஊகித்துவிட முடியும்.

இதற்கிடையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினைப் பிளந்து, பிரிவுகளாக்கி சின்னாபின்னமானாலும் ஒரு பக்கம் சண்டை, மறுபக்கம் அரசியல் உறவு என்ற குரலொலி!

நாளும் அரங்கேறும் வித்தைகள் - 2024 இல் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும் என்று தங்களது வாடகைக் குதிரைகளுக்குக் ‘கொள்ளு' காட்டுகிறது போலும்.

‘‘வெறும் பைதான் கொள்ளு இல்லை; 

காலிப் பை!''

முகமூடி அணிந்த அந்தக் குதிரைகளும் ‘‘வெறும் பைதான் கொள்ளு இல்லை; காலிப் பை'' என்பதைப் புரிந்துகொள்ளாமலே சவாரிக்குச் சரி என்று தலையாட்டி, அடிமை முறிச் சீட்டிலிருந்து வெளியேறிட ஆசை இருந்தாலும், துணிவின்றி அல்லாடுகின்றன!

இதற்காகவே மக்களின் ஆத்திரத் தீயில் அனுதினமும் நெய்யூற்றி வளர்க்கின்றன ஆர்.எஸ்.எஸ்.சும், அதன் ஆளுமை முகங்களும்!

அதில் சமீபத்திய வியூகம்தான் ஆன்-லைன் சூதாட்ட தடை மசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, ஏறத்தாழ நான்கு மாதங்கள் - 142 நாள்கள் ஆன பிறகும், ஒப்புதல் தராமலேயே கிடப்பில் போட்டிருந்தார் ஆளுநர்.

தற்கொலைகள் 

எண்ணிக்கை 44

இக்காலகட்டத்தில், தமிழ்நாட்டில் ஆன்-லைன் சூதாட்டத்தினால் வாரந்தோறும் வளர்ந்த தற்கொலைகள் எண்ணிக்கை 44 என உயர்ந்து வந்தது!

இத்தனை உயிர்ப் பலிக்குப் பின்பு - இப்போது அச்சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தராமல், ஆளுநர் திருப்பி அனுப்பி - ஓர் அரசியல் போருக்கு ஆயத்த மாகிறார் போலும்!

அதற்குக் காரணம் இந்த சட்டமன்றத்திற்கு அப்படி ஒரு சட்டம் செய்ய அதிகாரம் இல்லையாம்!

எந்த காவி மரத்திற்குக் கீழ் அமர்ந்து 

'ஞானம்' பெற்றாரோ? 

அதை இத்தனை நாள் கழித்து எந்த காவி மரத்திற்குக் கீழ் அமர்ந்து ‘ஞானம்' பெற்றாரோ தெரியவில்லை!

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்பற்றியும் ‘அறிவு சூன்யமா?'

அந்தப் படிக்கு அதிகாரம் இந்த ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு இல்லை என்று கூறும் இவர், அதே விதி, பிரிவுகளைக் கொண்ட சட்ட வரைவான அவசரச் சட்டத்திற்கு (Ordinance) ஒப்புதல் கொடுத்தாரே அது சரியா?

பதிலளிப்பாரா ஆளுநர் ரவி?

அது சரி என்றால், இப்போது மறுப்பது அபத்தம் அல்லவா? திட்டமிட்ட அரசியல் வம்பு வளர்க்கும் படலம் அல்லாமல் வேறு என்ன?

அவருக்கு அரசமைப்புச் சட்டத்தை இன்று தமிழ் நாட்டு மண்தான் போதித்துக் கற்றுக் கொடுக்கவேண்டும் போலிருக்கிறதே!

ஏழாவது அட்டவணையில் உள்ள மாநில அரசின் அதிகாரங்கள் - (சட்டம் இயற்ற) என்ற பிரிவில், 34 ஆவது தலைப்பாக, Betting and Gambling என்று உள்ளது கூடத் தெரியாமலா இந்த சட்டப் பேரவைக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று கூறுகிறார்!

வாதத்திற்காக இதை ஏற்றுக்கொண்டாலும்கூட, மற்றொரு கேள்வியை உடனே கேட்பார்களே!

அது தெரிந்த ‘சட்ட ஞானி' ஏன் 4 மாதம் மசோதாவைக் கிடப்பில் போட்டார் - உடனடியாகத் திருப்பி அனுப்பி, இதே காரணத்தை உடனே கூறியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

அறிஞர் அண்ணா அடிக்கடி எழுதுவார்:

‘சூட்சமம் புரிகிறதா தம்பி' என்று. அதுதான் இப்போது நமக்கு நினைவிற்கு வருகிறது!

மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் கையெழுத்திடத்தானே வேண்டும்!

இப்போது அதே வாசகங்களுடன் அப்படியே மார்ச் 20 ஆம் தேதி கூடவிருக்கும் சட்டப்பேரவையில் அம்மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 200 ஆவது (Article 200) கூற்றின்படி, இவர் கையெழுத்திட்டு அனுப்பித்தானே ஆகவேண்டும்?

அப்போதும் இதைவிட பெரிய வித்தையையும், வியூகத்தையும் செய்ய அவரது ஆலோசகர்கள் யோசிப்பார்களோ?

அறிஞர் அண்ணாவின் ‘ஆரிய மாயை'யில் தெளிவாக கூறியிருப்பதுபோன்று,

‘தந்திர மூர்த்தி போற்றி

தாசர்தம் தலைவா போற்றி!'

தமிழ்நாட்டு மண் சுயமரியாதை மண் - 

அதன் சூட்டை காவி தாங்காது!

எத்தனை தந்திரங்கள், சூழ்ச்சிப் படலங்களை நிகழ்த் தினாலும், இந்தப் பெரியார் மண்ணும், மக்களும் - அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று வென்று காட்டுவார்கள்!

பொய் நெல்லைக் குத்திப் பொங்கலிட்டு மகிழலாம் என்று நினைத்து, வெறும் கானல் நீர் வேட்டையில் இறங்காதீர் - ஆளுநர் அவர்களே!

இந்த மண் சுயமரியாதை மண் - அதன் சூட்டை காவி தாங்காது - கனவுகள் சிதைக்கப்படும்!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

11.3.2023   

புதன், 8 மார்ச், 2023

தோள்சீலை போராட்டம் 200 ஆம் ஆண்டுவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சம உரிமை - சம அதிகாரம் பெண்கள் பெற்றால் மனித குலம் மகிழ்ச்சிக் கடலில் நீந்துவது உறுதி!

ஞாயிறு, 5 மார்ச், 2023

இராமன் பாலம் அல்ல - மணல் திட்டே! - மின்சாரம்

      பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)

இராமன் பாலம் அல்ல - மணல் திட்டே!

மின்சாரம்

இராமாயணத்தைப் பற்றி 

இராஜாஜியின் கருத்து என்ன?

1930ஆம் ஆண்டு, சுதந்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது, இராஜாஜி கூறிய கருத்துகள் பிற்காலத்தில், 'இராஜாஜியின் கட்டுரைகள்' என்ற தொகுப்பு நூலாக வெளிவந்தது. அதில், 'பொருளற்ற சண்டைகள்' என்ற தலைப்பில், 'இராமாயணம் நடந்ததல்ல; நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேற்றுமைகளைக் காட்ட வால்மீகி முனி சிருஷ்டித்த கற்பனைதான்' என்று இராஜாஜி கூறியது, அதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது வருமாறு:

"உலக அனுபவத்தை வைத்து ஆராய்ந்து யோசித் தால், வால்மீகி ரிஷியானவர் இராமாயணத்தைப் பாடி யதற்கு முன்னமே - அதாவது புராதன காலந்தொட்டே, 'சீதாராம சரித்திரம்' எழுத்து வடிவம் பெறாமலே, பல நூற்றாண்டுகளாக மக்களிடையே வாய்வழிக் கதையாக வந்திருப்பதாகத் தோன்றுகிறது. கர்ண பரம்பரையாக முன்னமேயே இருந்த இராம சரிதத்தை எடுத்துக் கொண்டு அதற்கு வால்மீகி பகவான் நூல் வடிவம் கொடுத்தாற்போல் தோன்றுகிறது. அதனா லேயே கதையில் பல சிக்கல்கள் ஏற்பட்டது என்றும் ஊகிக்கலாம். வாலியைக் கொன்ற முறை, அதில் காணும் நியாயக் குறை, சீதையைக் காட்டுக்கு அனுப் பிய அநீதி என்பன போன்ற இன்னும் பல சிக்கல்கள்.

வால்மீகி ரிஷியின் காவியத்தில் இராமனுடைய நடவடிக்கைகளை, ஈஸ்வர அவதாரமாக வைத்து எழுதவில்லை. சில அதிகாரங்களிலும், இங்குமங்கும் சுலோகங்களிலும், தெய்வ அவதார விஷயத்தையும் சொல்லி வந்தாலும், மொத்தத்தில் வால்மீகி இராமா யணத்தில் காணப்படும் இராமன் ஒரு சிறந்த இராஜ குமாரன். வீர புருஷன். அபூர்வமான தெய்வீக நற் குணங்கள் பெற்றவன். அம்மட்டே; கடவுளாக வேலை செய்யவில்லை."

ஆன்மீகத்திலும், கடவுள் நம்பிக்கையிலும் அழுத்தமான ஈடுபாடு கொண்டவரான இராஜாஜி. வால்மீகி இராமாயணத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்ட பெருமை அவருக்குண்டு. மிகுந்த ஆய் வுக்குப் பிறகு, 'வால்மீகி இராமாயணம் வாய்வழியாக வந்த கதை' என்று அவரே கருத்து தெரிவித்து இருக்கிறார்.

- கே.எஸ்.அழகிரி 

(தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)

- - - - -

பாரதியாரின் பாடலைப் பாருங்கள்!

"கடலினைத் தாவும் குரங்கும்

வெங் கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்

வடமலை தாழ்ந்தத னாலே 

தெற்கில் வந்து சமன்செயும் குட்டை முனியும்

நதியி னுள்ளேமுழு கிப்போய் 

அந்த நாகர் உலகிலோர் பாம்பின் மகளை 

விதியுற வேமணம் செய்த திறல் 

வீமனும் கற்பனை என்பது கண்டோம். 

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும் 

ஒன்றில் உண்மையென் றோதிமற் 

றொன்று பொய்யென்னும் 

நன்று புராணங்கள் செய்தார் 

கவிதை மிகநல்ல தேனும் 

அக்கதைகள் பொய்யென்று 

தெளிவுறக் கண்டோம்!" 

இது எங்களுடைய பாட்டு அல்ல நண்பர்களே; பாரதியாருடைய பாட்டு.

"குரங்குகள் பாலம் கட்டின" என்ற பொய்த் திரையைப் பாரதியாரே கிழிக்கிறார். "கவிதை மிக நல்ல தேனும், அக்கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்" என்று ‘தேசியக்கவி' பாரதியாரே கூறியிருக்கின்றாரே என்ன பதில்?

- திராவிடர் கழகத் தலைவர் 

ஆசிரியர் கி.வீரமணி

- - - - -

ராமனே உடைத்து விட்டானே!

ராமன் கட்டினான் பாலம் என்கின்றனர். கம்ப ராமாயணக் கூற்றின்படி, அந்தப் பாலத்தை ராமனே உடைத்துவிட்டான் (ஆதாரம்: கம்பராமாயணம் மீட்சிப்படலம் 171ஆம் பாடல்)

மரக்கல மியங்க வேண்டி வரிசிலைக் குதையாற் கீறித் 

தருக்கிய விடத்துப் பஞ்ச பாதக ரேனுஞ் சாரிற் 

பெருக்கிய வேழு மூன்று பிறவியும் பிணிக ணீங்கி 

நெருக்கிய வமரர்க் கெல்லா நீணிதி யாவரன்றே

இராமன் புஷ்பகத்தின்மீது ஏறிச் செல்லுகையில் கடலில் அவ்விடத்து மரக்கலங்கள் இடையே இனிது செல்லுதற்பொருட்டு தனது வில்லின் நுனியாற் சேதுவைக்கீறி யுடைத்து வழிவிட்டார்.

மரக்கப்பல்கள் ஓட்டுவதற்கு அப்பாலம் தடையாக இருந்தது என்று கருதி. ராமனே அந்தப் பாலத்தை உடைத்துவிட்டான் என்று ராமாயணத்தில் கூறிய பிறகு, ராமன் பாலம் அங்கு இப்போது இருக்கிறது என்பது அறிவு நாணயமா? இராமனையே மறுப்ப வர்கள் இவர்கள் தானே!

அன்றைக்கு மரக்கப்பல் ஓட பாலத்தை இடிக்க நேர்ந்தது. இன்று பெரிய பெரிய கப்பல்கள் பயணிக்க மணல் திட்டாகிய அந்தப் பாலத்தை இடிக்க நேரு கிறது-அவ்வளவுதானே!

- திராவிடர் கழகத் துணைத் 

தலைவர் கலி.பூங்குன்றன்

ஜெயலலிதாவின் முரண்பாடு

"இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சி யான கப்பல் போக்குவரத்துக்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டுமானால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாகத்தான் சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பாலம் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் இவற்றையெல்லாம் அகற்றி ஆழப்படுத்தி, கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்."

- 10.5.2001 அன்று அதிமுக வெளியிட்ட 

தேர்தல் அறிக்கையிலிருந்து

ஆடம்ஸ் பாலம் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அதே ஜெயலலிதாதான் ராமன் பாலம் என்றும், அது பதினேழு இலட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ராமன் பாலம் என்றும் புதுக்கரடி விட்டார்.

- - - - -

ராமர் சேது பாலம் பற்றிய 

உறுதியான ஆதாரம் இல்லை!

மாநிலங்களவையில் 

ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு!

"விண்ணிலிருந்து படம்பிடித்து இராம் சேதுவை ஆராய்வதில் பல்வேறு கட்டுப்படுத்தும் காரணிகள் இருக்கின்றன. இராமாயணத்தின் வரலாறு பதினெட்டா யிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இராம் சேது 56 கிலோ மீட்டர் நீளமுடையது. கடலுக்குள் காணப்படும் மணற்படுகை, இராம் சேதுவின் எஞ்சியிருக்கும் பகுதி என்று துல்லியமாகக் கூற முடியாது. இராம் சேது உருவான வரலாறு, அதன் காலம் ஆகியன பற்றி விண்கலங்களிலிருந்து எடுக்கப்படும் படங்கள் துல்லியமான தகவல்களைத் தருவதில்லை" என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங். 2022 டிசம்பர் 23 அன்று மாநிலங்களவையில் கூறியுள்ளார்.

- (புதுடில்லி, 24 டிசம்பர் 2022) 

"இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே பழங்கால ராமர் சேது பாலம் இருந்ததாகக் கருதப்படும் பிராந்தியத்தின் செயற்கைக்கோள் படங்கள். தீவுகள் மற்றும் சுண்ணாம்புக் கற்களைக் கைப்பற்றியுள்ளன. ஆனால் அவை ஒரு பாலத்தின் எச்சங்கள் என்று துல்லியமாகச் சொல்ல முடியாது' என்று 22.12.2022  அன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

"ஓரளவிற்கு, விண்வெளி தொழில்நுட்பத்தின் மூலம் துண்டுகள், தீவுகள், சில வகையான சுண்ணாம் புக் கற்கள் ஆகியவற்றைக் கண்டறிய முடிந்தது. அவை எச்சங்கள் அல்லது பாலத்தின் பாகங்கள் என்று துல்லியமாகச் சொல்ல முடியாது" என்று, ஒன்றிய விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

- மதுரையில் நடைபெற்ற சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் திறந்த வெளி மாநாட்டில் எடுத்துக்காட்டப்பட்ட தகவல்கள் (27.1.2023)

இப்பொழுது சொல்லுங்கள் - இராமன் பாலம் என்பது பொய்தானே! மக்கள் நல வளர்ச்சிக்காக அந்த மணல் மேட்டை உடைத்து சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்துவதுதானே சரி!

கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவமனையில் கோவிலா?

 தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறை அமைச்சரின் கவனத்திற்கு...!

கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவமனையில் கோவிலா?

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி (தீயணைப்பு நிலையம் அருகில்) வளாகத்தில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து "அறிவுவழி காணொலி இயக்கம்" சார்பில் 24.01.2023 அன்று  மதியம் காணொலி இயக்குநர் பழ.சேரலாதன் தலைமையில் சா.தாமோதரன், துரைராஜ், மாணிக்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் மருத்துவ கல்லூரி இயக்குநர் திருமதி.சாந்திமலர் அவர்களைச் சந்தித்து கோயில் கட்டுமானப் பணிகளை நிறுத்தக்கோரி மனு அளித்தனர். உடன் அரசு ஆணையையும், நீதிமன்றத் தீர்ப்பு நகலையும் அளித்தனர். மனு குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவ கல்லூரி இயக்குநர் தெரிவித்தார்.

இந்தக் கோயில் சட்டத்திற்குப் புறமான வகையில் அரசு நிலத்தில் கட்டப்படும் கோயிலாகும். இதற்காக யாரிடமும் யாரும் அனுமதி பெறவில்லை.  இவ்வாறான செயலைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொதுப் பணித்துறை கைகட்டி, வாய் மூடி சும்மா இருப்பதிலிருந்தே, இந்த கோயில் கட்டும் பணியைச் செய்பவர்கள் வழக்கமான திரை மறைவுச் சதிச்செயல்கள் மூலம் தங்கள் வேலைகளைச் செய்பவர்கள்என்பதைத் தெளிவுபடுத்தும்.

இந்தக் கோயில் கட்டும் செயலானது, தமிழ்நாடு அரசின் ஆணை 426 நாள்: 13.12.1993 க்கும், சென்னை உயர்நீதிமன்ற ஆணை 07.06.2022 ல் W.P.  27748 of 2022  என்ற வழக்கில் கூறப்பட்ட தீர்ப்புக்கும் எதிரானதாகும்.