குலக்கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குலக்கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து களம் அமைப்போம்! ‘திராவிட மாடல்' அரசு கடுமையாக எதிர்க்கும் - எதிர்க்கவேண்டும்!விஸ்வகர்மா திட்டம்' என்ற பெயரில் குலக்கல்வியா?


‘விஸ்வகர்மா திட்டம்' என்ற பெயரில் குலக்கல்வியா? 

செருப்பு தைப்பவர் மகன் செருப்பு தைக்கத்தான் வேண்டுமா?

 அன்று ஆச்சாரியார் (ராஜாஜி) கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை விரட்டியடித்ததுபோல் இதையும் விரட்டியடிப்போம்!

1

‘விஸ்வகர்மா' திட்டம் என்ற பெயரில் ஒன்றிய பி.ஜே.பி. அரசு குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கத் திட்டமிட்டுள்ளது. செருப்பு தைப்பவர் மகன் செருப்பு தைக்கவேண்டும் என்பதுதான் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் கொள்கை- திட்டம் என்பது அம்பலமாகிவிட்டது. அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி இந்தத் திட்டத்தை முறியடிப்போம். ‘திராவிட மாடல்' அரசு - முதலமைச்சர் கடுமையாக எதிர்ப்பார் - எதிர்க்கவேண்டும் என்று வலியுறுத்து கிறோம் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

வருணாசிரம தர்மமான சனாதன தர்மத்தை - ஜாதியை காப்பாற்றி நிலைக்க வைக்கும் தத்துவத்தைப் பாதுகாப்பதே கடந்த 9 ஆண்டுகளாக நடந்துவரும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சியின் செயல்பாடாகும்.

மோடி ஆட்சியில் குலதர்மப் பாம்பு படமெடுக்கிறது!

இப்போது மீண்டும் ஆரியத்தின் ஆணிவேரான பே(வ)தத்தினை - படிக்கட்டு ஜாதி முறையை Graded inequality என்று டாக்டர் அம்பேத்கர் தெளிவுபடுத்திய பேத ஒழிப்புக்கு எதிராக மனித சமத்துவத்தை வெடி வைத்து, உயர்ந்தவன் - தாழ்ந்தவன்; தொடக்கூடியவன் - தொடக்கூடாதவன் என்று மனிதர்களை வேற்றுமைப் படுத்தி, அடிமைப்படுத்திய குலதர்மப் பாம்பு, பிரதமர் மோடி ஆட்சியில் திடீரெனப் படமெடுத்தாடி அதன் நச்சுப் பல்லை நீட்டிக் காட்டுகிறது - இப்போதும்!

2

‘‘விஸ்வகர்மா திட்டம்'' என்பதின்படி ஒரு புதிய குலதர்மத் தொழிலைப் புதுப்பித்து, ஒடுக்கப்பட்ட மக்கள்மீது சுமத்தப்பட்ட அந்தப் பிறவி இழிவை மறைமுகமாகப் புதுப்பித்து, அந்த ‘‘கீழ்ஜாதியர் அவரவர் குலத்தொழிலை கிராமங்களிலும், நகரங்களிலும் 30 லட்சம் பேர் செய்வார்கள் - அதற்கு நிதி, மானியம் உதவி உண்டு என்று ஆகஸ்டு 15 ஆம் நாளில் டில்லி செங்கோட்டை உரையில் பேசியுள்ளார் பிரதமர் மோடி அவர்கள்.

16.8.2023 அன்று ‘‘பி.எம். விஸ்வகர்மா''  (‘‘PM Viswakarma'')  திட்டம் என்பதை அமைச்சரவையின் பொருளாதார குழு ஏற்று 13,000 கோடி ரூபாய் ஒதுக்கி யுள்ளதாம்! பள்ளிக்கூடங்களுக்குப் பதிலாக குரு - சிஷ்ய பரம்பரைக் கல்விப் பயிற்சியாம்! 

2023-2024 முதல் 2027-2028 வரை இத்திட்டப்படி குலத் தொழிலை செய்ய அவரது வாரிசுகளுக்கு, குடும்பத்தினருக்கு கற்றுக் கொடுப்பார்களாம். அதற்கு இந்த 13,000 கோடி ரூபாயாம்!

18 பாரம்பரிய குலத் தொழிலை அடையாளம் கண்டுள்ளார்களாம்!
சனாதனத்தின் முழு வீச்சு!

என்னே கொடுமை! சனாதனத்தின் முழு வீச்சுத் திணிப்பல்லவா இது! வர்ணாசிரம வக்கிரத்தின் அக் கிரமம் அல்லவா இது!

தச்சுத் தொழில், படகு செய்தல், கருமான் பட்டறைத் தொழில், குயவன் மண்பாண்டத் தொழில், சுத்தி முதல் துடைப்பம் - விளக்குமாறு கட்டும் தொழில் (ஙிக்ஷீஷீஷீனீ விணீளீமீக்ஷீ), பொம்மை செய்தல், சிரைக்கும் தொழில் (ஙிணீக்ஷீதீமீக்ஷீ), கைத்தறித் தொழில், பூக்கட்டும் தொழில், சலவைத் தொழில், தையல் தொழில், மீன் பிடித் தொழில் முதலியன இத்திட்டத்தில் வருமாம்!

இதனைச் செய்யப் பழகுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை மானிய அடிப் படையில் கடன் அளிப்பார்களாம்!

தூண்டில் எவ்வளவு லாவகமாக அமைக்கப்பட் டிருக்கிறது பார்த்தீர்களா?

நம் நெஞ்சங்கள் சமூகநீதிக்காகப் போராடிப் போராடி, சலவைத் தொழிலாளியின் மகன் மீண்டும் அதே தொழிலில் போய் அவமானமும், தற்குறித்தனத்தையும் பெறாமல், திராவிடம் முயன்று அவரைப் படிக்க 

வைத்து அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். ஆக்கி வெற்றி கண்டது!

திராவிடத்தின் அடிப்படையே ஆரிய வர்ண தர்ம மும், குலத்தொழிலும் அல்ல! ஆடு மேய்ப்பவர்களையும் - அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். ஆக்கி, அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்படவேண்டும் என்பதே!

அதுதானே உண்மையான சமூக மாற்றமாக இருக்க முடியும்? இளைஞர்களே, நீங்கள் உங்கள் குலத் தொழிலைச் செய்தாக வேண்டும் என்றால், நிரந்தர இழிவும், அடிமைத்தனமும்தான் உங்களுக்குக் கிட்டும் - இந்த ஆரிய ஆர்.எஸ்.எஸ். சனாதன ஆட்சியில்!

திருக்குறள் பிறந்த மண்ணில் குலக்கல்வியா?

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்''

என்ற குறள் பிறந்த மண்ணில் இப்படி மீண்டும் குலக்கல்வியா? அதுவும் அனைத்து இந்தியாவிலும் என்றால், இதைவிட கடைந்தெடுத்தப் பிற்போக்குத்தனம் உண்டா? முன்னேற்ற கடிகாரத்தை தலைகீழாகத் திருப்பி வைப்பதா?

இதுபற்றிக் கண்டனக் குரலினை அத்துணை முற் போக்கு - ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் காண விரும்பும் அனைவரும் - ஒன்றுபட்டு உடனடியாக ஓர் அணியில் திரண்டு எழுந்து எதிர்ப்புக் கடலாய்ப் பொங்கி இத்திட்டத்தை கருவிலேயே அழித்து, குலத்தொழில் பாதகத்தை ஒழித்துக் கட்டவேண்டும்.

அனைத்துக் கட்சிகளையும் திரட்டுவோம்!

தொழிலை ஏன் பாரம்பரியமாகச் செய்ய வற்புறுத்த வேண்டும் - செருப்புத் தைப்பவர், துணி வெளுப்பவர், சிரைப்பவர் பிள்ளைகள் வேறு படிப்பைப் படித்து முன்னேற முடியாமலே இப்படி முட்டுக்கட்டை போடுவதை எப்படி ஏற்க முடியும்?

தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை 1952-1953 இல் ஓட ஓட விரட்டி, ஒழித்து சமத்துவ நாயகர் பச்சைத் தமிழர் காமராசர் துணையோடு, புது வாய்ப்பு களை உருவாக்கி வரலாறு படைத்த மண் பெரியார் மண்ணான திராவிட மாடல் ஆட்சி நடக்கும் இந்த மண்!

இதுபற்றி அனைத்துக் கட்சிகளையும் திரட்டி, தலைவர்களை அழைத்து, முக்கிய முடிவுகளை எடுத்து, இந்தக் குலதர்ம புதுக்கரடியை விரட்டிட அனைத்து முயற்சிகளையும் செய்திட ஆயத்தமாவோம்!

உதாவதினி தாமதம் -

உடனே விழியுங்கள் ஒடுக்கப்பட்டோரே!

ஆச்சாரியாரின் பழைய குலக்கல்வித் திட்டத்தை விரட்டியடிப்போம்!

தமிழ்நாட்டில் 70 ஆண்டுகளுக்கு முன் புதைகுழிக்கு அனுப்பப்பட்ட குலக் கல்வித் திட்டம், ஆரியம், ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின்மூலம் மீண்டும் புதிய அவதாரம் எடுத்து, அகில  இந்தியா முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்டோரை வதைக்க - டாக்டராக, பொறி யாளராக, வழக்குரைஞராக, நீதிபதியாக ஆகாமல் தடுப்பதற்கான ஒரு திட்டமே இந்தப் புதிய குலதர்மத் தொழில் புதுப்பிக்கும் இந்தத் திட்டமாகும்!

பெற்றோர்களே, புரிந்துகொண்டு, விழித்துக் கொள் வீர்! விடியல் ஏற்படுத்த ஆயத்தமாவீர்!

தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்' ஆட்சியும், அதன் ஆற்றல்மிகு முதலமைச்சரும் தமிழ்நாடு இத்திட்டத்திற்கு ஒருபோதும் இசைவு தராது; கடுமையாக எதிர்க்கும் என்பதைப் பிரகடனப் படுத்துவதும் அவசர, அவசியம்!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
18.8.2023
...........................
வாய்க் கொழுப்பு ‘தினமலர்!'
இது உங்கள் இடம் என்ற பகுதியில் ‘தினமலரில்' வெளிவரும் கடிதங்களும் சரி,
செய்திகளும் சரி கொழுப்பு தினவெடுத்து அவுட்டுத் திரி ஆணவத்துடன்
அம்மண ஆட்டம் போடுகிறது. இன்று வெளிவந்துள்ள ஒரு கடிதத்தின் தலைப்பு என்ன தெரியுமா? ‘‘தி.மு.க.வினர் எத்தர்கள் என்பதை நாடறியும்'' என்பதுதான் அந்தத் தலைப்பு. ஒட்டுமொத்த தி.மு.க.வினரையே தடியால் எழுதும் தடியர்களை
அடையாளம் காண வேண்டாமா?


சனி, 19 பிப்ரவரி, 2022

ஆச்சாரியார் கொண்டு வந்தது குலக்கல்வியா - தொழிற் கல்வியா?

புதன், 30 டிசம்பர், 2020

எப்பொழுதும் பார்ப்பனர் திரைமறைவில்தான்!


 'துக்ளக்' பூனைக்குட்டி வெளியில் வந்தது!



கேள்வி: ராஜாஜி காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வி திட்டம் போன்றது- மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அதனைக் கட்சி வரைக்கும் எதிர்க்க வேண் டும்! என்று இந்திய கம்யூனிஸ்ட் கடைசித் தலைவர் முத்தரசன் கூறியுள்ளதுபற்றி...

இந்தக் கேள்விக்குத் துக்ளக் இதழில் (18.11.2020) அரசியல் புரோக்கர் திருவாளர் சாமிநாதன் குருமூர்த்தி - பூனைக் குட்டி வெளியில் வந்தது! என்று சொல்லும் வண் ணம் அந்தரங்கத் தகவலைக் கூறியுள்ளார்.

1952இல் நடைபெற்ற சென்னை மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் கம்யூனிஸ்டுகள் உட்பட 166 எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலையில், ஆட்சி அமைக்க ஆளுநரிடம் அனுமதி கோரப்பட்டது. கம்யூனிஸ்ட் பெரும்பான்மை கொண்ட கூட்டணி ஆட்சி அமையும் அபா யம் உருவானது.

அந்த ஆபத்திலிருந்து எப்படி காப்பாற் றினார்களாம்? குருமூர்த்தி கூறுகிறார். தின மணி ஆசிரியராக இருந்தஏ.என். சிவராமனும், கோயங்காவும் ராஜாஜியை நேரில் சந்தித்து, அவரின் காலில் இருவரும் சாஷ்டாங்கமாக விழுந்தார்களாம்.

சாமி நீங்கள் தான் நாட்டைக் காப்பாத் தணும் என்று வேண்டிக் கொண்டார்களாம்.

என்ன விஷயம்? என்று ராஜாஜி கேட்க, கம்யூனிஸ்ட் அபாயத்திலிருந்து தாங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூற, ஜவஹர் லால் உங்களை அனுப்பினாரா, என்னை முனிஸிபாலிட்டி சேர்மனாக்க விரும்பு கிறாரா? என்று கிண்டலாகக் கேட்டாராம் ராஜாஜி.

தாங்கள் சம்மதித்தால் மட்டுமே தேசிய வாத ஆட்சி அமையும். கம்யூனிஸ்ட்களை தடுக்க வேறு வழியே இல்லை என்று இரு வரும் மன்றாடினார்களாம்.

நேரு உங்களை வேண்டிக் கொண்டால், நீங்கள் முதலமைச்சராக சம்மதிக்க வேண்டும் என்று கோயங்காவும், ஏ.என். சிவராமனும் கேட்க யோசித்தார், ராஜாஜி. நேரு விரும் பினால் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வருவ தைத் தடுக்க என்னால் முடிந்ததைச் செய்ய நான் தயார் என்று உத்தரவாதம் கொடுத் தாராம் ராஜாஜி.

நேருவிடம் கோயங்கா தொலைபேசியில் எல்லாவற்றையும் விளக்கிக் கூற, நேருவும் ராஜாஜியுடன் தொலைபேசியில் பேச, ராஜாஜி முதல் அமைச்சர் ஆனார்.

இந்தத் தகவல்களை எல்லாம் கோயங்கா குருமூர்த்தியிடம் கூறியதாக துக்ளக்கில் (18.11.2020) எழுதித் தள்ளியிருக்கிறார் குரு மூர்த்தி அய்யர்வாள்.சட்டசபையில் கம்யூனிஸ்ட்டுகள் என் முதல் எதிரி என்று முதல் அமைச்சரான ராஜாஜி அறிவித்ததையும் துக்ளக்கில் குறிப் பிடப்பட்டுள்ளது. முதலில் இந்தக் யோச னையை கோயங்காவிடம் தெரிவித்ததே ஏ.என்.சிவராமன் தானாம். இதில் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் முக்கியமா னவை எவை?

1952 தேர்தலில் கோயங்கா காங்கிரஸ் சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி யில் போட்டியிட்டு, திருக்குறளார் வீ.முனு சாமியிடம் பெருந் தோல்வியைச் சந்தித்தார் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

அரசியலில்  - தேர்தலில் நேரடியாக ஈடு படாத சிவராமன்களால் அரசியலில் ஆட் சியை நிறுவுவதில் எப்படிப்பட்ட கபட வேலையை செய்ய முடிகிறது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆரிய த்தின் சூழ்ச்சி வலை எத்தகையது என்பது முக்கியம்.

1952 சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜாஜி போட்டியிட்டாரா? (எந்தத் தேர்தலில் ராஜாஜி மக்கள் வாக்குப் பெற்று வெற்றி பெற்றார்?) அந்த சிரமமான வேலை எல்லாம் வைத்துக் கொள்ள மாட்டார் அவர். யானை வந்து கழுத்தில் மாலை போட்டு ராஜா வாக்கிவிடும் ராஜாஜியை).

1952இல் மேல் சபையில் ஆளுநர் மூலம் நியமிக்கப்பட்டு கொல்லைப்புறம் வழியாக நுழைந்தவர்தான்  ராஜாஜி. கொல்லைப்புற வழி நுழைபவர் என்ற சொல்லாடல் இவருக் காகவே உருவான ஒன்றாகும்.

சுதந்திரம் அடைந்து முதலில் நடை பெற்றது 1952 பொதுத் தேர்தல்தான்.

இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபட்ட கட்சி என்று இந்தியா முழுவதும் அனைத்து மாநி லங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந் தாலும் சென்னை மாநிலத்தில் தோல்வியைச் சந்தித்தது.

காங்கிரஸ் எதிர்ப்புக் கட்சிகள் அய்க்கிய முன்னணி என்ற ஓர் அமைப்பின் கீழ் காங் கிரசை எதிர்க்கும் அணி உருவாக்கப்பட்டது.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டணிக்குத் துணை நின்று சென்னை மாநிலம் முழுவதும் சுற்றிச் சுழன்று சூறாவளிப் பிரச்சாரப் பெருமழை பொழிந் தவர்.

கார்ல்மார்க்சை நாங்கள் நேரில் பார்த் ததில்லை - இதோ பெரியாரைப் பார்க்கிறோம் என்றெல்லாம் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலை வர்கள் எல்லாம் புகழாரம் சூட்டினார்கள்.

பல கம்யூனிஸ்டுத் தோழர்கள் தலைமறை வாக இருந்த அந்தக் கால கட்டத்தில் கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் மிகப் பெரிய வெற்றி யைப் பெற்றனர் என்றால் அது சாதாரணமான தல்ல. தந்தை பெரியாருக்கும் திராவிடர் கழகத்திற்கு அதில் மிகப் பெரிய பங்கு உண்டு.

கம்யூனிஸ்டுகளை முதல் எதிரி என்று ஒரு கட்டத்தில் சொன்ன ராஜாஜி கருப்புச் சட் டைகள்தான் என் முதல் எதிரி என்று பிற் காலத்தில் சொன்ன நிலையும்கூட உண்டு.

சிவராமன்களும் கோயங்காக்களும் மூளையைக் கசக்கி பார்ப்பனத்தனத்துடன்  பின் திரையில் இயங்கி, இயக்கி, உடல் முழுவதும் மூளை உள்ளதாகத் தம்பட்டம் அடிக்கப்படும் ராஜாஜியைக் கொண்டு வந்து நிறுத்தினாலும், வாய்தா காலம் அவரால் ஆள முடியவில்லையே!

கவர்னர் ஜெனரல் என்னும் உயர்ந்த பதவியை எல்லாம்கூட அனுபவித்தாலும் ஆரியத்தின் அடிப்படைச் சித்தாந்தமான வர்ண தர்மத்தை நிலை நிறுத்துவதில்தானே அவர் குறியாக இருந்திருக்கிறார்.

சூத்திரனுக்கு எதை கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்ம சிந்தனைதானே அவருக்குள் குடியிருந்து வழி நடத்தியிருக்கிறது.

1937இல் சென்னை மாநில பிரதமராக (Premier) வந்த போதும் 2500 பள்ளிகளை இழுத்து மூடினார். 1952இல் முதல் அமைச்சராக அவர் திணிக்கப்பட்டபோதும் 6000 பள்ளி களை இழுத்து மூடிஅரை நேரம் படித்தால் போதும், மீதி அரை நேரம் அப்பன் தொழி லைச் செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கவில்லையா?

அந்த ஆணையே அவருக்குப் படு குழியாக்கப்படவில்லையா? தொழிற்கல்வி என்று எல்லாம் பார்ப்பனப் பத்திரிகைகள் மடிகட்டி, மல்லுக்கட்டிப் பிரச்சாரம் செய் தாலும், இது குலக்கல்வியே! என்ற தந்தை பெரியாரின் ஒற்றை அடியே மரண அடியாகி, ஆச்சாரியாரை ஆட்சியை விட்டே ஓடச் செய்ததே!

அந்தக் கால கட்டத்தில் கோயங்காவும், தினமணி சிவராமன்களும் உயிரோடு தானே இருந்தனர்! ராஜாஜிக்கு முட்டுக் கொடுத்து ஆட்சியைக் காப்பாற்றச் செய்ய முடியவில் லையே ஏன்?

1954இல் ஆட்சியை விட்டு தந்தை பெரியாரால் விரட்டியடிக்கப்பட்ட ராஜாஜி யின் அரசியல் பொது வாழ்வு  அத்தோடு அஸ்தமனம் ஆனது ஆனதுதான். அதற்குப் பின் சுதந்திரா கட்சி என்ற ஓர் அரசியல் கட்சியை உண்டாக்கிப் பார்த்தார், 1971இல் தன் பரம எதிரியான காமராசரின் கையைப் பிடித்து கர்ணம் போட்டும் பார்த்தார், விளக் கெண்ணெய்க்குக் கேடாக முடிந்ததே தவிர பிள்ளை பிழைத்த பாடில்லையே!


அன்று சிவராமன்கள் செய்த வேலை யைத்தான் அவரின் சீடர் கோடிகளான குருமூர்த்திகளும் செய்து பார்க்கிறார்கள். நான் அரசியல் புரோக்கர்தான் என்று பச் சையாக ஒப்புக் கொண்டு எழுதினார் மறைந்த சோ.ராமசாமி; இப்பொழுதும் அதே புரோக்கர் வேலையைத் தான் அன்றாடம்  செய்து கொண்டு வருகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்.

அன்று கம்யூனிஸ்டு ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக காலில் விழுந்த படலம் எல்லாம் நடந்திருக்கிறது. இப்பொழு தும் குருமூர்த்தி கூட்டம் யார் காலில் விழுந்தாலும் (நடிகர்களாகக் கூட இருக் கலாம்) தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்று சத்ருசம்ஹார யாகம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் எந்தக் காரணங்களுக்காக திமுக வரக் கூடாது என்று நினைக்கிறார்களோ, அதே காரணங்களுக்காகவே திமுக ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் துடிதுடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது மட்டும் காலத்தின் கல்வெட்டாகும்.