முதலமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதலமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 மார்ச், 2024

ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  Published March 12, 2024, விடுதலை நாளேடு

சென்னை, மார்ச் 12 ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப் படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரச மைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தமிழ்நாட்டில் இச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இன்று (12-3-2024) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாள்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இருந்துவரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் நேற்று (11-4-2024) அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப் புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல; பலவகையான மொழி, இன, மதம் மற்றும் வாழ்விட சூழல் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நலனுக்கும், இந்திய நாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றி லும் எதிரானதாகும். அதுமட்டுமல்ல; சிறுபான்மை சமூகத் தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம்.
இதன் காரணமாகத்தான், தமிழ்நாடு அரசு அமைந்த வுடனேயே, அதாவது, கடந்த 8-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதனை நிறைவேற்றி, இச்சட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு அதனை அனுப்பி வைத்தோம். தமிழ்நாட்டைப் போலவே, பல்வேறு மாநிலங்களும் இதனை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ளன.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்களை திசைதிருப்பும் நோக்கத்துடன், தேர்தல் அரசியலுக்காக இந்தச் சட்டத்தை தற்போது நடை முறைக்குக் கொண்டு வந்துள்ளதோ என கருத வேண்டி யிருக்கிறது.

இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், இரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும். எனவே, ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறை வேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது; இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்பு கிறேன்.

– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

தமிழன் - திராவிடன் இரண்டு சொற்களையும் அறிவாயுதமாக ஏந்தியவர் அயோத்திதாசர்!

   

அவரின் 175 ஆம் ஆண்டில் மணிமண்டபம்!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

v3

சென்னை,செப்.3- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன்கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,

திருவள்ளுவர்அவ்வையார்கபிலர்வள்ள லார் வரிசையிலே தமிழ்ச் சிந்தனை மரபை வளர்த் தெடுத்த மாபெரும் ஆளுமையான அயோத்தி தாசப் பண்டிதர் அவர்களின் பெருமையைப் போற்றக்கூடிய அறிவிப்பு ஒன்றை, 110 ஆவது விதியின்கீழ் இந்த மாமன்றத்தில் எடுத்து வைப் பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரையில்இரண்டு சொற்கள் இல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாது.  ஒன்றுதமிழன்இன்னொன்றுதிராவிடம்இந்த இரண்டு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாளச் சொல்லாக மாற்றியவர்தான்அறிவாயுதம் ஏந்தியவர்தான் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள்.

1881 ஆம் ஆண்டே மக்கள்தொகைக் கணக் கெடுப்பில் 'பூர்வத் தமிழர்என்று பதியச் சொன் னவர் பண்டிதர் அவர்கள்.  1891 ஆம் ஆண்டு அவர் தொடங்கிய அமைப்பின் பெயர் 'திராவிட மகாஜன சபைஎன்பதாகும்.  1907 ஆம்  ஆண்டு 'ஒரு பைசாத் தமிழன்என்ற இதழைத் தொடங்கிஅதையே 'தமிழன்என்ற இதழாக நடத்தி வந்தவர் அவர். 'பூர்வீக ஜாதிபேதமற்ற திராவிடர்காள்என்று அழைத்தவர் அவர்அதனால்தான் தமிழன்திராவிடம் ஆகிய இரண்டு சொற்களையும் அறி வாயுதமாக அவர் ஏந்தினார் என்று குறிப்பிட்டேன்அவர் போட்டுக்கொடுத்த பாதையில்தான் தமிழ்நாட்டு அரசியல் செயல்பட்டு வருகிறது.

எழுத்தாளர்ஆய்வாளர்வரலாற்று ஆசிரியர்மானுடவியல் சிந்தனையாளர்பதிப்பாளர்பத்திரி கையாளர்மருத்துவர்பேச்சாளர்மொழியியல் வல்லுநர்பன்மொழிப் புலவர்புதிய கோட் பாட்டாளர்சிறந்த செயல்பாட்டாளர்சளைக்காத போராளி எனப் பன்முக ஆற்றலைக் கொண்ட வர்தான் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள்அவரது தாத்தா கந்தப்பன் அவர்கள்தன்னிடம் இருந்த திருக்குறள் ஓலைச் சுவடிகளை எல்லீஸ் அவர்களிடம் கொடுத்துதிருக்குறளை அச்சுப் பதிப்பாக கொண்டுவந்ததை நினைக்கும்போதுகுறளுக்கு அவருடைய குடும்பம் ஆற்றிய தொண் டுக்காக நாம் அனைவரும் தலைவணங்க வேண்டும்.

தந்தை பெரியார் அவர்களே, “என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும்சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாசப் பண்டிதர்தான்என்று குறிப்பிட்டிருக்கிறார்அதனால்அவர் சொன்னதைத்  தாண்டி நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.  ‘‘இந்திய நாட்டின் முன்னேற்றத்துக்கு ஜாதியும் மதமுமே தடை'' என்று சொன்ன அயோத்திதாசர், ''மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் எவரோஅவர்தான் மனிதர்என்று முழங்கினார்.

1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசர் அவர்களுடைய  175 ஆவது ஆண்டு விழாவின் நினைவாகவும்அவரது அறிவை வணங்கும் வித மாகவும்வடசென்னைப் பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடு வதில் இந்த அரசு பெருமைப்படுகிறது.

மகான் புத்தரை 'இரவு பகலற்ற ஒளிஎன்று சொன்ன அயோத்திதாசப் பண்டிதர் அவர்களு டைய சிந்தனைகளும்இரவு பகலற்ற ஒளியாக இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும் என்று சொல்லி அமைகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனைகள் இரவு பகலற்ற ஒளியாக தமிழ்ச் சமுதாயத்திற்குப் பயன்படவேண்டும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிமூலம் உரை

  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிமூலம் உரை

10

சென்னை, டிச.1 அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனை கள் இரவு பகலற்ற ஒளியாக தமிழ்ச் சமுதாயத்திற்குப் பயன்படவேண்டும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள்

சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் திறப்பு விழாவில் இன்று (1.12.2023) காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக ஆற்றிய உரை வருமாறு:

தமிழ்நாட்டினுடைய அறிவியக்கத்தின் மாபெரும் பேரொளியாக திகழ்ந்த அயோத்திதாசப் பண்டிதருக்கு நம்முடைய ‘திராவிட மாடல்' அரசு மணிமண்டபம் அமைத்துச் சிறப்புச் செய்கிறது. இது அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை!

“வான்புகழ் வள்ளுவர்! அறநெறி இலக்கணம் வகுத்த அவ்வை! சமரச நெறி வகுத்த வள்ளலார்! இந்த வரிசை யில், தமிழ்ச் சிந்தனை மரபை வளர்த்தெடுத்த மாபெரும் ஆளுமையான அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பெருமையை போற்றும் வகையில், சென்னையில், அவ ருடைய முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 3.9.2021 அன்று நான் அறிவித்தேன். 

சென்னை கிண்டி காந்தி மண்படம் வளாகத்தில் அயோத்திதாசப் பண்டிதருடைய முழு உருவச் சிலை யுடன் கூடிய மணிமண்டபம் எழில்மிகு தோற்றத்தோடு 'அறிவொளி இல்லமாக' அமைக்கப்பட்டிருக்கிறது.

அறிவுலகப் பேரொளியான அவருடைய மணிமண்ட பத்தை திறந்து வைக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

· தமிழ்நாட்டு அரசியலில் தமிழன், திராவிடன் ஆகிய இரண்டு சொற்களையும் அடையாளச் சொல்லாக மாற்றியவர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள்! தமிழ் அல்லது திராவிடம் என்பது மொழி மட்டுமல்ல! அதை ஒரு பண்பாட்டு நடைமுறையாக பார்த்தவர் அயோத்தி தாசர் அவர்கள்.

· 1881 ஆம் ஆண்டே மக்கள்தொகைக் கணக்கெடுப் பில் 'பூர்வத் தமிழர்' என்று பதியச் சொன்னவர் அயோத்திதாசர் அவர்கள்.  

· 1891 ஆம் ஆண்டு அவர் தொடங்கிய அமைப்பின் பெயர் ‘திராவிட மகாஜன சபை’! 

· 1907 ஆம் ஆண்டு ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழைத் தொடங்கி, அதையே ’தமிழன்’ என்ற இதழாக நடத்தி வந்தார்.

· ஒடுக்கப்பட்ட மக்கள் அனைத்து வேற்றுமை களையும் மறந்து தமிழர்களாக, ஜாதி பேதமற்ற திராவிடர்களாக ஒன்றிணைய வேண்டும் என்று இறுதி வரை எழுதியவர், பேசியவர், போராடியவர் அயோத்தி தாசர் அவர்கள்.

· எழுத்தாளர், 

· ஆய்வாளர்,

· வரலாற்று ஆசிரியர்,

· மானுடவியல் சிந்தனையாளர்,

· பதிப்பாளர்,

· பத்திரிகையாளர்,

· மருத்துவர், 

· பேச்சாளர், 

· மொழியியல் வல்லுநர், 

· பன்மொழிப் புலவர், 

· புதிய கோட்பாட்டாளர், 

· சிறந்த செயல்பாட்டாளர், 

· சளைக்காத போராளி- என்று

பன்முக ஆற்றல் கொண்டவராக செயல்பட்ட அயோத்திதாசர் அவர்கள், தான் வாழ்ந்த காலம் முழுவதும் அறிவொளி பரப்பியவர்! இவர் அமைத்துக் கொடுத்த அறிவுத் தளத்தில்தான் 150 ஆண்டுகால தமிழர் அறிவியக்கம் செயல்பட்டு வருகிறது.

 “என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாசப் பண்டி தர்தான்" என்று ‘பகுத்தறிவுப் பகவலன்’ தந்தை பெரியார் அவர்கள் சொன்னார். இவருடைய பத்திரிகைகளுக்கும், புத்தகங்களுக்கும் உலக அளவில் வாசகர்கள் உரு வானார்கள்.

“இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு ஜாதியும் மதமுமே தடை” என்று சொன்ன அயோத்திதாசர், “மனிதர்களை, மனிதர்களாக பார்க்கும் எவரோ, அவர்தான் மனிதர்” என்று முழங்கினார். அவருடைய நூல்கள் இன்றைக்கும் அறிவொளி ஊட்டுவதாக இருக்கிறது.

1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசர் அவர்களுடைய 175 ஆவது ஆண்டு விழாவின் நினை வாகவும், அவருடைய அறிவை வணங்குகின்ற வித மாகவும் இந்த மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆதி திராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த, “அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்" வரும் அய்ந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது என்ற அறிவிப்பையும் நம்முடைய திராவிட மாடல் அரசு செய்திருக்கிறது.

மகான் புத்தரை 'இரவு பகலற்ற ஒளி' என்று சொன்ன அயோத்திதாசப் பண்டிதர் அவர்களுடைய சிந்தனை களும், இரவு பகலற்ற ஒளியாக இந்தத் தமிழ்ச் சமுதாயத் துக்குப் பயன்படவேண்டும்.

நன்றி, வணக்கம்.

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

'இந்தியா டுடே' கருத்துக்கணிப்பு மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடம்

 

 புதுடில்லி,ஆக.18- இந்தியா வில் சொந்த மாநில மக் களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டி யலில் தமிழ்நாடு முதல மைச்சர் மு..ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தியாவில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் யார் என்பது தொடர்பாக இந்தியா டுடே ஒரு கருத் துக்கணிப்பு நடத்தி யுள்ளதுஇதில் தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் அவர்கள் 42 சதவீத ஆதரவை பெற்று முதலிடத் தில் உள்ளார்.

இவரை தொடர்ந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 38 சதவீதத்தை பெற்று 2ஆவது இடத்தி லும்கேரளா முதலமைச் சர் பினராயி விஜயன் அவர்கள் 35 சதவீதம் பெற்று மூன்றாம் இடத் திலும்மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே 31 சதவீதத்தை பெற்று நான்காம் இடத் திலும் உள்ளனர்.

மேலும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் 30 சதவீதம் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளார்அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 6ஆவது இடத்திலும்உத்திரபிர தேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 7ஆவது இடத்திலும்ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கேலாட் 8ஆவது இடத்தி லும் உள்ளனர்இதனை தொடர்ந்து டில்லி முத லமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 9ஆவது இடத்தி லும்ஜார்காண்ட் முதல மைச்சர் ஹேமந்த் சோரன் 10ஆவது இடத்திலும்சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாஹெல் 11ஆவது இடத்தில் இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.