அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில் செப்டம்பர் 21, 22 ஆகிய நாள்களில் அமெரிக்க மனித நேயர் அமைப்பும், பெரியார் பன்னாட்டு அமைப்பும் ஒருங்கிணைந்து நடத்திய மாநாட்டில் பங்கேற்று, இன்று (30.9.2019) விடியற்காலை தமிழகம் திரும்பிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உள்ளிட்ட கழகத் தோழர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் தலைமைக் கழகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தாம்பரம் கழக மாவட்டத்தின் சார்பில், மாநாட்டில் பங்கேற்றவர்களுக்குப் பயனாடை அணிவிக்கப்பட்டது.
- விடுதலை நாளேடு, 30. 9 .19