விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 அக்டோபர், 2023

குஜராத் மாடலும் - திராவிட மாடலும்' இதோ! விளையாட்டில் பதக்கம் குஜராத்-0, தமிழ்நாடு-17


மோடி அரசின் ‘பாரபட்சம்’: ஆசிய விளையாட்டில் ‘படுதோல்வி’

ரூ.608 கோடி ஒதுக்கி ஒரு பதக்கம் கூட பெறாத குஜராத் 

33 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ள 

தமிழ்நாடு மட்டும் தனியாக 17 பதக்கங்களை வென்று அசத்தல்

WhatsApp%20Image%202023-10-13%20at%2017.16.45

புதுடில்லி, அக்.13 சீனாவின் ஹாங்சோ நகரில் நடை பெற்ற 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத வகையில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 107 பதக்கங்களை வென்று வரலாறு படைத்தது. 

மாநில வாரியாக அதிகபட்சமாக அரியானா 44 பதக்கங்களும், பஞ்சாப் 32 பதக்கங்களும், மகாராட்டிரா 31 பதக்கங்களும், உத்தரப்பிரதேசம் 21 பதக்கங்களும், தமிழ்நாடு 17 பதக்கங்களும், மேற்கு வங்கம் 13 பதக்கங் களும், ராஜஸ்தான் 13 பதக்கங்களும், மிசோரம் ஒரு பதக்கமும் வென்றுள்ளன.

இதில், குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென் றால், ‘கேலோ இந்தியா’ திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசின் விளையாட்டுத்துறை பட்ஜெட்டில், மிகக் குறைவான நிதி ஒதுக்கீட்டைப் பெற்ற மாநிலங்களே, ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்க வேட்டை நடத்தி யுள்ளன. மாறாக, நாட்டிலேயே மிக அதிகமான நிதி ஒதுக்கீட்டை பெற்ற குஜராத் மாநிலம் ஒரு பதக்கம் வெல்ல முடியாமல் சோகத்துடன் திரும்பியுள்ளது என்பதுதான்.

குஜராத் ரூ.608 கோடி-“0” பதக்கம்

‘கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ் ஹரியானா ரூ. 88.89 கோடியும், பஞ்சாப் ரூ. 93.71 கோடியும், மகாராட்டிரா ரூ. 110.8 கோடியும், உத்தரப் பிரதேசம் ரூ. 503.02 கோடியும், தமிழ்நாடு ரூ. 33 கோடியும், மேற்கு வங்கம் ரூ. 26.77 கோடியும், ராஜஸ்தான் ரூ. 112.26 கோடியும், மிசோரம் ரூ.39 கோடியும், மோடியின் சொந்த மாநிலமான குஜராத் அதிகப்பட்சமாக ரூ. 608 கோடி நிதியை பெற்றுள்ளன.

இதில், மோடி அரசிடமிருந்து ரூ.200 கோடிக்கும் குறைவான பட்ஜெட் ஒதுக்கீட்டைப் பெற்றுள்ள பஞ்சாப், அரியானா மாநிலங்கள்தான், இந்தியா வென்றுள்ள 107 பதக்கங்களில் 75 பதக்கங்களை பெற்றுத் தந்துள்ளன. வெறும் 33 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ள தமிழ்நாடு மட்டும் தனியாக 17 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

ஆனால், ரூ. 608 கோடி என பிரம்மாண்டமான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ள குஜராத் மாநிலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு பதக்கம் கூட வெல்லாமல் திரும்பியுள்ளது. மேற்குறிப்பிட்ட விஷயம் மாநிலங்களுக்கு இடையேயான போட்டி அல்ல. மாநில எல்லைகளின் அடிப்படையில் மக்களைப் பிரிப்பதற்காக அல்ல. மாறாக, பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய பாஜக அரசும், இனிமேலாவது அனைத்து மாநிலங் களுக்கும் பாரபட்சம் இல்லாமல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதுதான்.

விளையாட்டிலும் தங்களுக்கு வேண்டிய மாநிலம் வேண்டாத மாநிலம் என்று பாகுபாடு பார்த்து நிதி ஒதுக்கீடு செய்வதைக் கைவிட வேண்டும் என்பதுதான்.

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

இந்திய விளையாட்டு வீராங்கனை வந்தனா கட்டாரியா வீட்டின் முன் ஜாதி வெறியாட்டமா?

 

* மிகவும் வெட்கப்பட வேண்டிய அவலம்!   

* ஜாதி வெறியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக!

இந்திய விளையாட்டு வீராங்கனை ஒடுக்கப் பட்ட சமூகப் பெண் வந்தனா கட்டாரியாவின் வீட்டின் முன் ஜாதி வெறியாட்டம் நடந்திருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய அவலம்இத்தகைய ஜாதி வெறியர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலி யுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

ஒலிம்பிக் போட்டிகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுஇதுவரை ஒரு தங்கம் உள்பட 7 பதக்கங்களைப் பெற்றுள்ளதோடுஹாக்கி உள்ளிட்ட பல போட்டிகளில் வெற்றிக்கு அடுத்த நிலையை எட்டிப் பிடித்திருக்கிறது என்னும் அளவுக்கு இந்தியா முன்னேறியிருக்கிறது என்ற நிலை ஒருபுறம் ஆறுதலைத் தந்திருக்கிறது.

ஆனால்மகளிர் ஹாக்கி போட்டியில் மிகக் கடுமையாகப் போராடிஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இந்தியப் பெண் என்ற  சாதனையையும் நிகழ்த்தியுள்ள உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வந்தனா கட்டாரியா என்ற ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்ணுக்கு நேர்ந்துள்ள அவமதிப்புநம் நெஞ்சத்தைக் கொதிப்படையச் செய்கிறது.

பேதங்களுக்கு மத்தியிலும்...

ஏழைஎளிய குடும்பத்தில் பிறந்து ஏராளமான நெருக்கடிகளுக்கு மத்தியிலும்ஜாதிமதமொழிபாலினவர்க்கப் பிரிவினைகள்-பேதங்களுக்கு மத்தியிலும் போராடித்தான் இந்தியாவில் ஒருவர் விளையாட்டுக் குழுவில் பங்கேற்க முடிகிறது என்பது ஓர் அவலநிலை.

ஆனால்இவற்றையும் கடந்து உலக நாடுகளெல்லாம் பங்குபெறும் ஒலிம்பிக் போட்டிக்குச் சென்றுஅங்கும் தன் திறமையை மிகச்சிறந்த முறையில் வெளிப்படுத்தியுள்ளார் வந்தனா கட்டாரியாவெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வெல்ல இயலாமல் இந்தியா தோல்வியுற்ற நிலையில்அவரது வீட்டின் முன் வெடிவெடித்து ஜாதி வெறியர்கள் வெறியாட்டம் போட்டுள்ளனர்அனைத்து விளையாட்டு அணிகளிலும் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை நீக்கினால் தான் விளையாட்டு போட்டிகளில் இந்தியா வெல்லும் என்று தங்களது ஆடைகளைக் கழற்றிக் கூச்சலிட்டுதங்கள் ஜாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜாதியின் பேரால் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்

இந்த நாட்டில் ஜாதி வெறி எத்தனை மோசமாக இருந்துகொண்டிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்றாகும்ஒரு நாட்டுக்காக விளையாடிஅதிலும் தன் பங்கை நிறைவாகச் செய்திருக்கும் ஒருவரை ஜாதியின் பேரால் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள் என்றால் எத்தகைய தடைகளை யெல்லாம் அவரும்அவரைப் போன்றே இந்நாட்டின் வெகுமக்களும் கடக்க வேண்டியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க முடியும்.

ஒதுக்கித் தள்ளிவிட முடியாது

அந்தச் செயலைச் செய்தவர்கள் ஏதோ இருவர் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாதுஅந்நிகழ்வுதான் இங்குள்ள கேடுகெட்ட ஜாதிவெறியின் கண்கண்ட அடையாளம்இப்படி நாளும்நாளும் எத்தனை ஜாதிதீண்டாமை வன் கொடுமைகள் நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றனஇது இந்நாடு வெட்கப்பட வேண்டிய நிகழ்வாகும்.

இத்தகைய ஜாதி வெறியர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்ஜாதி வெறியர்களை மீறி சாதனை படைத்துள்ள வந்தனா கட்டாரியாவை இந்நாடு மேலே உயர்த்திக் கொண்டாட வேண்டும்!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

8.8.2021