கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 அக்டோபர், 2021

கோயிலை அரசியலாக்குவோர்களால் ஆபத்து! ஆபத்து!!

 

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை என்பது - மனித உரிமைப் போராட்டம்! ‘பிறப்பின் அடிப்படையில் உயர் ஜாதி - முன்னுரிமைகள் எல்லாமே எங்களை நோக்கித்தான்!’ என்று விரலை நீட்டும் வேதிய புரத்தாரின் ஆணவக் கோட்டையின் அடித்தளத்தை அடித்து நொறுக்கும் அடிப்படை உரிமைப் போராட்டம்!

ஜாதி - தீண்டாமை என்னும் மானுடத்தைக் கவ்விப் பிடித்த கரோனாவை விட கழிசடை நோயின் வேர்புரத்தை வீழ்த்தும் விவேகப் பே(£)ராயுதம் ஏந்தும் விழிப்புறு போராட்டமாகும்.

கடவுள்தான் மக்களைப் படைத்தார் - மக்கள் எல்லாம் கடவுளின் குழந்தைகள்தான் என்று ஒரு பக்கம் நீட்டி முழங்கிக் கொண்டேகடவுள் வசிப்பதாகக் கூறப்படும் கருவறையில் ஜாதியைத் திணித்து சல்லடங்கட்டும் சவுண்டிகளின் சனாதன திமிருக்கு சம்மட்டி அடி கொடுக்கும் சமத்துவ சமதர்மப் போராட்டமாகும்.

உண்மையைச் சொல்லப் போனால் ஆர்.எஸ்.எஸ்கூட இதனை எதிர்க்கவில்லை - பிஜேபி கூட பச்சைக் கொடி காட்டி விட்டதுசங்பரிவார்களும் ‘சரிதான்’ என்று ‘சரிகம பதனிசா’ பாடி விட்டது.

அப்படியென்றால் எதிர்ப்போர் யார்எதிரிகள் என்று தங்கள் முகவரிகளை முகக்கவசம் இல்லாமலேயே காட்டுவோர் யார்யார்?

பார்ப்பனர்கள்பார்ப்பனர்கள்!!  பார்ப்பனர்கள்தாம்கூக்குரல் போடுகிறார்கள் - ‘சத்ரு சம்ஹார யாகம்’ நடத்துகிறார்கள்அதாவது அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டத்துக்குக் காரணமானவர்களும்சட்டம் இயற்றுபவர்களும் சாக வேண்டுமாம்ஆகா., எவ்வளவு பரந்த உள்ளம் இந்தப் பார்ப்பனப் பரதேசி கூட்டத்துக்கு!

இவர்களின் சனாதனம் என்பது - மனித வெறுப்பின் -பகைமையின் பச்சைப் பாசிசமே என்பது இப்பொழுது புரிகிறதா?

இப்பொழுது பார்ப்பனர் என்ன செய்ய ஆரம்பித்து விட்டார்கள் தெரியுமா? ‘துக்ளக்‘ கூட்டத்தின் துன்புத்தி என்ன தெரியுமா?

பார்ப்பனர் அல்லாதாரின் கண்மூடிப் பக்தியைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி - கலகம் விளைவிக்க கத்தி தீட்டுகிறார்கள்.

பரம்பரைப் பரம்பரையாகப் பழக்கத்தில் இருந்து வரும் பார்ப்பனர் அர்ச்சகர் முறையை மாற்றுவதாஎன்று பார்ப்பனர் அல்லாதவரையே ஏவி விடும் - அவாளுக்கே உரித்தான பிரித்தாளும் சூழ்ச்சியை அரங்கேற்ற ஆரம்ப வேலையில் இறங்கியுள்ளனர்.

தந்தை பெரியார் சொல்லுவாரே - நினைவு இருக்கிறதா? “இராமன் காட்டுக்குப் போனானே - எத்தனைப் பேர்இராமன்சீதைஇலட்சுமணன் ஆகிய மூன்றே மூன்று பேர்கள்தானே!

இந்த மூன்று பேரும் தான் இலங்கையின் மீது படையெடுத்து  பேரரசன் இராவணனை வீழ்த்தினார் களாம்?

அவன் வெற்றி பெற்றதாகக் கூறப்படு கிறதே - விபீடணன்சுக்ரீவன் கூட்டத்தாரின் தயவால் தானே - பதவி எச்சில் துண்டுக்காகத்தான் பணிந்த தாசர்களின் புத்திதானே - இராமனுக்குப் பின் பலம்.

எனக்குள்ள கவலையெல்லாம் தமிழர்களில் விபீடணர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதுதான்” என்றாரே தந்தை பெரியார்எத்தகைய மனப் புண்!

இப்பொழுது என்ன செய்கிறார்களாம்இன்றைய பார்ப்பனக் கூட்டத்தின் அதிகாரப்பூர்வ இதழாகவே அவதாரம் எடுத்துள்ள ‘துக்ளக்கில் (8.9.2021, பக்கம் 19) வெளியாகி இருப்பது என்ன?

ஆண்டாள் கோவிலில் திரண்ட அனைத்து ஜாதியினர்” என்ற தலைப்பில் ஒரு (£)ட்டுரை வெளியாகியுள்ளது.

சிறீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கோயிலில் பல்வேறு ஜாதி சங்கங்களைச் சேர்ந்தவர்கள்பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடினார்களாம்.

சிறீவில்லிபுத்தூர் கோவிலின் அர்ச்சகர் மற்றும் பரிசாரக மரபில் அரசு தலையிட்டு அராஜகம் செய்யக் கூடாது” என்று 18 நாட்டாண்மைகளும்ஜாதித் தலைவர்களும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றினார்களாம்.

ஆக ஒரு கோயிலை அரசியல்படுத்தி யுள்ளனர் ஜாதிகளின் பெயரால்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை என்பது பார்ப்பனரல்லாதாரின் சுயமரியாதை உணர்வு - என்ற அடிப்படையில் ஒன்று திரண்டுசிறீவில்லிப்புத்தூர் கோயில் வளாகத்துக்குள் கூட்டம் நடத்தித் தீர்மானம் போடலாமா?

சிறீவில்லிபுத்தூர் கோயில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டுள்ளார்கள்வீண் பிரச்சினைக்கு விதை நட வசதி செய்து கொடுக்கிறார்களா?

ஆண்டாள் கோயிலுக்கு வந்து தீர்மானம் போடப்பட்டது உண்மை என்றால்அவர்களுக்கு ஒரு முக்கிய கேள்வி இருக்கிறது.

உங்களுக்கும் சேர்த்துதான் இந்த அர்ச்சகர் சட்டம்நீங்கள் எல்லாம் சூத்திரர்களாம் - மனுதர்மப் படி சொல்ல வேண்டுமானால் விபச்சாரி மக்களாம்அதனால் நீங்கள் கர்ப்பக் கிரகத்துக்குள் நுழைந்தால் கர்ப்பக்கிரகம் தீட்டுப்பட்டு விடுமாம்.  சாமி சிலையை தொட்டால் சாமியின் சக்தி மாயமாக மறைந்து செத்துப் போய்விடுமாம் - ஏற்றுக் கொள்கிறீர்களா?

பக்தியில் மூழ்கிக் கிடக்கும் பார்ப்பனர் அல்லாத அருமைச் சகோதரர்களேநீங்கள் நம்பும்மதிக்கும் அந்தக் கடவுள் உங்களுக்கெல்லாம் தகப்பன் அல்லவா - படைத்தவன் அவர்தான் என்று நம்புகிறீர்களேஅந்தத் தகப்பனை அவனின் பிள்ளைகளாகிய நீங்கள் தொட்டால் தகப்பன் செத்துப்போய் விடுவானா?.

இதன் மூலம் நீங்கள் நம்பும் உங்கள் தகப்பன் கடவுளைக் கொச்சைப்படுத்துவது யார்?

பக்தர்களே பதறாமல் சிந்திப்பீர்!

பார்ப்பனர் விரிக்கும் விஷம வலையில் சிக்காதீர்!

சீரழிந்து போகாதீர்எச்சரிக்கை!

வெள்ளி, 30 ஜூலை, 2021

சாலைகளை ஆக்கிரமித்து கோயில்களா?

 

உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

சென்னை,ஜூலை30- சாலைகளை ஆக்கிரமித்து கோயில்கள் கட்ட வேண்டுமென்று எந்தக் கடவுளும் கேட்பதில்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை ஓட்டேரி பகுதியில் நடைபாதைகள் மற்றும் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில்கள் மற்றும் கடைகளை அகற்றக் கோரி செம்பியத்தைச் சேர்ந்த தேவ ராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று (29.7.2021)  நீதிபதிகள் என்.கிருபாகரன்டி.விதமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்ததுஅப்போது மனுதாரர் தரப்பில்,

பாதசாரிகள் சாலையில் நடக்க முடியாத அளவுக்கு நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனகோயில்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதை பயன்படுத்தி அதன் அருகிலேயே நடைபாதை கடைகளும் ஆக்கிரமித்து விடுகின்றனஎனவே ஓட்டேரி பகுதியில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள் மற்றும் கோயில்களை அகற்ற உத்தரவிட வேண்டும்” என்று கூறி அதற்கான ஒளிப்படங்களையும் தாக்கல் செய்தார்.  மேலும் உயர் நீதிமன்றத்தின் வெளியே நடை பாதையை ஆக்கிர மித்து அமைக்கப்பட்டிருந்த கோயில்நீதிமன்ற உத்தர வுப்படி அகற்றப்பட்டதாகவும் சுட்டிக் காட்டினார்.

அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “சாலைகளை ஆக்கிரமித்து கோயில்கள் கட்ட வேண்டுமென எந்த கடவுளும் கேட்பதில்லைஆனால் மதத்தின் பெயரை எந்தெந்த வகையில் தவறாக பயன்படுத்த முடியுமோ அந்தந்த வகையில் தவறாக பயன்படுத்துவது மனிதன் மட்டுமே” என வேதனை தெரிவித்தனர்பின்னர் நீதிபதிகள் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுவிசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

புதன், 11 மார்ச், 2020

கரோனா பரவிவரும் நிலையில் கோவில்களுக்கு வரவேண்டாம் என்பது வரவேற்கத்தக்கதே!

சர்வ சக்தி - சர்வ வியாபி - சர்வதயாபரன் எனும் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்யென்று உணர்வீர்!

பகுத்தறிவு சிந்தனையைத் தூண்டும் தமிழர் தலைவரின் அறிக்கை

கரோனாவா - சிவனா? யாருக்கு சக்தி?

வாரணாசி சிவனுக்கு முகக் கவசம்

கரோனா நோயின் அச்சத்தால் கோவில்களுக்கு வரவேண்டாம் என்று கோவில் தேவஸ்தான நிர்வாகம்  அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி - கடவுளின் சர்வ சக்தி என்பதெல்லாம் உண்மையல்ல என்று பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்திக்கவேண்டிய தருணம் இது என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

சீனாவில் ஏற்பட்ட ‘கரோனா வைரஸ்' என்ற தொற்று நோய், அங்கே லட்சக்கணக்கானவர்களைப் பாதித்ததோடு, மூவாயிரம் பேர்களுக்குமேல் உயிர்க் கொல்லியாகவும் அமைந்தது - மனித குலத்திற்கே ஏற்பட்ட மிகப்பெரிய அவலம்; துன்பமும், துயரமும் பொங்குமாங் கடல்போல் வாட்டுகின்றது!

அந்நோய் தொற்றானதால் உலக நாடுகள், சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் நுழைந்து, சுற்றுலா,  தொழில், பயணங்கள் இவைகளில் எல்லோரும் அஞ்சி வாழும் கொடுமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கவும், கைகொடுப்பது, தும்மலை அருகிலிருந்து செய்வது, அடிக்கடி கைகளைச் சுத்தமாக கழுவாமை முதலிய பல்வேறு அன்றாட உடல் அசைப்புகளுக்கும் மிகவும் கவனமாக இருக்க மருத்துவர்களின் கட்டளைகளைப் பின்பற்றி ஒழுகவேண்டிய நியதிகள் ஆகும்!

வருமுன்னர் காப்பதே சிறப்பு!

வருமுன்னர் காப்பதே சிறப்பு. எனவே, தகுந்த எச்சரிக் கையை ஏற்று நடப்பது சாலச் சிறந்தது. மத்திய - மாநில அரசுகளும் அவரவர்கள் யுக்தானுச்சார முறையில் அவசரத் தடுப்பு நடவடிக்கைகளை ஏற்று வருகின்றன. மேலும் தீவிரமாக்குவது - போர்க்கால நடவடிக்கைகளைப் போன்று செய்தல் அவசியம் என்று பலரும் கூறுவது - நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான். எந்த மாச்சரியத்திற்கும் இடந்தரக் கூடாத சூழல் இந்த கரோனா எதிர்ப்பு யுத்த முயற்சிகளும், முன்னெடுப்புகளும் - மனிதாபிமான முறைகளே!

பகுத்தறிவு அடிப்படையில் ஒரு கேள்வி

இந்நேரத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்டுவது - பகுத்தறிவு அடிப்படையில் மிகவும் தேவைப்படும்.

கோவில்கள், திருவிழாக்களுக்கு மக்கள் அதிகம் கூடுவார்கள் என்கிறபோது, அதை தவிர்ப்பது நல்லது என்று கேரள அரசு போன்ற அரசுகள் வெளிப்படையாகக் கூறு கின்றன. அவ்வளவு தூரம் போவானேன்!

‘‘திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் வரவேண்டாம்; அதிலும் குறிப்பாக என்.ஆர்.அய். என்ற வெளிநாட்டிலிருந்து வரும் பக்தர்கள் அறவே அதனைத் தவிருங்கள்'' என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

அதுபோலவே சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கும் அதிக பக்தர்கள் வரவேண்டாம் என்று கோவில் நிர்வாகம் - தேவசம் போர்டு சார்பாக பக்தர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இவை வரவேற்கப்பட வேண்டியவைகள் - கரோனாவின் கொடுமையைக் கருதி,

கடவுளுக்கே முகமூடியா?

வாரணாசியில் ஒரு கடவுள் சிலைக்கே அங்கே உள்ள அர்ச்சகர், நிர்வாகிகளால் வாய்க்குக் கவசம் - நோய் தடுக்க மூக்கு, வாயை அடைக்கும் முகமூடி அணிவிக்கப் பட்டுள்ளது எவ்வளவு வேடிக்கை என்பதை பக்தகோடிகள் எண்ணிப் பார்க்கவேண்டாமா?

கரோனா - கடவுளையும் தாக்குமாம்! தடுப்பு முறையாம் - இந்த முகபடாம்!

அட, அதிபுத்திசாலி ஆத்திகர்களே! பரிதாபத்திற்குரிய பக்தர்களே - கொஞ்சமாவது யோசித்தீர்களா? கரோனா கடவுளைத் தாக்கும் என்றால், ‘‘கடவுள் சக்தி  என்னவாயிற்று?'' என்று பகுத்தறிவுவாதிகள் கேட்டால், ஏன் கோபம் வர வேண்டும்?

சர்வ சக்தி சாமிக்கு இது தேவையா?

‘‘தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன் - திருப்பதி வெங்கடாசலபதி'' என்பதால்தான் அதிகாரத்தில் உள்ளவர்கள் பலரும் தங்களையும், தங்களது பதவி சேமிப்பு களையும் பாதுகாக்க அடிக்கொருமுறை குடும்ப சமேதரராய் ‘ஜருகண்டி' இல்லாமல் வசதியான தரிசனம் செய்து வருகின்றனர்!

அதுபோலவே, அடுத்த பெரு வருவாய் சபரிமலை அய்யப்பனுக்குத்தானே! அவன் இந்தக் கரோனாவைத் தடுத்திருக்கவேண்டாமா? துவம்சம் செய்திருக்கவேண்டாமா? அதை பினராய் விஜயன் தலைமையில் (கம்யூனிஸ்ட் அரசு அல்லவா) செய்யவேண்டியுள்ளது!

கடவுளையும், பக்தர்களையும் பாதுகாப்பதும் மனித சக்தி தானே - அரசுகள்தானே!

‘‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை'' என்பது கரோனா வுக்குமுன் செல்லுபடியாகாது என்பதால்தானே தகுந்த தடுப்பு ஏற்பாடுகள்.

‘‘கடவுள் கருணையே வடிவானவன்'' என்று சொல்கிறார்கள் பக்தர்கள்.  அதற்கு நிரூபணம் எங்கே?

கடவுள்களின் முச்சக்தி எங்கே?

‘‘எல்லா மதக் கடவுள்களுக்கும் முப்பெரும் சக்திகள் உண்டு'' என்று பொதுவாக அனைவரும் கூறி, அதனால் உலக க்ஷேமம் கருதி கடவுளை வணங்கி, பிரார்த்தனை மூலம், காணிக்கை போடுவதன்மூலம் பலனடையலாம் என்று போதிக்கிறார்கள்.

1. சர்வ சக்தி (Omnipotent)

2. சர்வ வியாபி (Omnipresent)

3. சர்வ தயாபரன் (Omniscient)

இம்மூன்றும் இருந்தால், கரோனா, பறவைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், சார்ஸ் போன்ற கொள்ளை நோய்கள் மனித குலத்தை அழிக்க வரலாமா? தண்டனை தந்தான் என்றால், அன்பே வடிவமானவன் என்பது பொய் அல்லவா?

அறிவை விரிவு செய்க - பேராபத்தைத் தவிர்த்திடுக!

இப்படிக் கேட்பது நிதர்சனமானது. கண்ணுக்குத் தெரிந்து, கண்மூடிப் பழக்கத்திற்கு அடிமையாகலாமா? குடிப்பவருக்குத் தேவைப்படும் போதை போன்றதுதானே பக்தி!

கடவுளால் ஆகாதது- மருத்துவத்தால் இன்று முடிகிறது. இதுதான் பகுத்தறிவின் விளக்கம்.

எது நடந்தாலும் புத்தியை மட்டுப்படுத்தாமல், கோபத்தைத்தான் பதிலாகத் தர முடியுமே தவிர, அறிவை விரிவு செய்ய இதைவிட அருமையான வாய்ப்பு மனித குலத்திற்கு வேறு கிடைக்குமா?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! சிந்தியுங்கள், தோழர்களே!!!

 

கி.வீரமணி

ஆசிரியர்

நன்றி: ‘உண்மை' தலையங்கம்

சென்னை

11.3.2020

செவ்வாய், 3 மார்ச், 2020

தொல்பொருள் துறையின்கீழ் வரும் தமிழகக் கோவில்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஏற்பாடா?

மாநில அரசின் அதிகாரத்தில் தலையிட அனுமதிக்கலாமா?

தொல்பொருள் துறையின்கீழ்  இருந்துவரும் தஞ்சைப் பெருவுடையார் கோவில் போன்ற தமிழ்நாட்டுக் கோவில்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதை - மத்திய அமைச்சர் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, இது மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாகும், இதனை அனுமதிக்கக்கூடாது என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர்  தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  கண்டன அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்து சமய அற நிலையத் துறை (Hindu Religious Endowment Board Department)  யைச் சார்ந்ததாகும்.

நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டம்

நீதிக்கட்சி என்ற ஜஸ்டீஸ் கட்சியாகிய திராவிடர் ஆட்சியில் பனகல் அரசர் முத லமைச்சராக இருந்தபோது எதிர்ப்புகளை எதிர்த்துப் போராடி, அதை பிரிட்டிஷ் அரசு காலத்திலே சட்டமாக்கி சாதனை புரிந்தனர்.

கோவில் அர்ச்சகர் ‘பெருச்சாளிகள்' ‘பூனை'களாகவும் கோவில் வருமானங் களை சரி வர தணிக்கையின்றி சுரண் டியதைத் தடுக்கவே அச்சட்டம். அதனு டைய கடமை - பக்தி பரப்புவதோ, கும் பாபிசேகம் செய்வதோ அல்ல; சட்டப்படி; வருகிற வருமானம் சரிவரச் செலவிடப்பட்டு கணக்குக் காட்டப்படுகிறதா? என்பதற் குத்தான்!

மற்ற வட மாநிலங்களில் கோவில்கள் தனித்தனியே சுரண்டல் பக்தி வியாபார நிலையங்களாக, ‘கொள்ளை கூட்டுறவு வினை' என்று வடலூரார் சொன்னபடி நடந்துவரும் நிலையில், நீதிக்கட்சி 95 ஆண்டுகளுக்கு முன்பே வரலாற்றுச் சாதனை செய்தது.

பார்ப்பனர் கொள்ளைக்கு வழிவகுக்கத் திட்டம்

இதனை ஒழித்து மீண்டும் பார்ப்பனர் கொள்ளைக்கு வழிவகுக்கவே இங்கு அரசுத் துறையாக அது இருக்கக்கூடாது என்று இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் தொடர்ந்து முயற்சிக்கின்றன. தயானந்த சரசுவதி என்ற (மஞ்சக்குடி நடராஜய்யர் தான் இவர்) பார்ப்பனர் உச்சநீதிமன்றத்தில் வழக்கே போட்டு, அது நிலுவையில் உள்ளது.

அந்தத் துறைமீது தொடர்ந்து பழி சுமத்தி, கடமையாற்றும் அதிகாரிகள்மீது அழிவழக்குகள் போட்டு, மிகவும் தொல்லை கொடுத்து, எப்படியும் அந்த ஏற்பாட்டை மாநில அரசுத் துறையில் இருப்பதை ஒழிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

மத்திய அமைச்சரின் அறிவிப்பு

இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் ஒருவர், ‘‘ஒட்டகம், கூடாரத்திற்குள் மெதுவாக நுழைவதுபோல்'' - தொல் பொருள் துறையின் கண்காணிப்பின் கீழ் உள்ள தமிழ்நாட்டுக் கோவில்களை மத்திய அரசே தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவிருக்கின்றது என்று கூறியிருக்கிறார்.

இது மிகவும் ஆபத்தான - மாநில உரிமையைப் பறிக்கும் விபரீத யோசனை!

இதன்படி பார்த்தால், தஞ்சை பெரிய கோவில்  போன்ற பிரசித்தி பெற்ற கோவில் களை மத்திய அரசே எடுத்துக்கொள்ளும் நிலை வெகுவிரைவில் கருக்கொண்டு ‘பிரசவிக்கக் கூடும்!'

இதனைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தவேண்டியது தமிழக அரசின் அவசரக் கடமையாகும்.

கிஷிமி என்ற தொல்பொருள் துறையின்கீழ் இருப்பது மேற்பார்வை, சிற்பங்கள் முத லியவை மட்டுமே என்பது அறவே மாற்றப்பட்டு, மத்திய அரசு கோவில் களாகவே அவை அறிவிக்கப்பட்டு கையகப்படுத்தப்படக் கூடும்.

நீதிக்கட்சி திராவிடர் ஆட்சி செய்த இந்து சமய அறநிலையத் துறையை மெல்லக் கொல்லும் நஞ்சுபோல ஒழிக்கவே இது ஒரு முன்னோட்டம் - கவனமாக இருக்கட்டும் தமிழக அரசு!

நாத்திக - ஆத்திகப் பிரச்சினையல்ல - மாநிலங்களின் உரிமைப் பிரச்சினை

இப்படி நாம் சுட்டிக்காட்டும்போது சிலர் ‘‘நாத்திகர்கள், கோவிலுக்குப் போகாத வர்கள் ஏன் இதுபற்றிக் கவலைப்பட வேண்டும்?'' என்று குறுக்குக் கேள்வி கேட்பர். அத்தகையவர்களுக்குக் கூறுகி றோம், இது ஆத்திகர் - நாத்திகர் உரிமைப் பிரச்சினை அல்ல.

மாநிலங்களின் உரிமைப் பிரச்சினை என்பதும், தனி நபர்கள் வடநாட்டில்  கோவில்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் பார்ப்பன சுரண்டலுக்காகவே பயன் படுத்தும் பேராபத்துகள் இங்கு தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

வருமுன்னர் தடுப்பதே புத்தி சாலித்தனம்!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

3.3.2020


திங்கள், 13 ஜனவரி, 2020

70 ஆண்டு குடியரசின் இலட்சணம்!

தாழ்த்தப்பட்ட அமைச்சர்களும் கோவிலுக்குள் நுழைய முடியவில்லையே!

இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் குமுறல்!

கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட  இமாச்சலப் பிரதேச மாநில அமைச்சர்  ராஜீவ் சைசால், கோவிலுக்கு வெளியே நின்றிருந்த காட்சி.

சிம்லா, ஜன. 13 இமாச்சலப் பிரதேசத்தின் சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாட் டுத்துறை அமைச்சர் ராஜிவ் சைசால் மாநிலத்தின் இட ஒதுக்கீடு தொடர்பான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தின் போது தன்னை கோவிலில் நுழைய விடாமல் அவமானப்படுத்திவிட்டனர். என்னை மட்டுமல்ல, பல அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வரு கின்றனர் என்று புலம்பியுள்ளார்.

மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு மட் டும் வழங்கப்பட வேண்டுமென அரச மைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

எனினும், இந்த இடஒதுக்கீட்டை 1960-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 10 ஆண்டு களுக்கும் மத்திய அரசு நீட்டித்து வந்தது. அந்த வகையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை நீட்டித்து கடந்த 2010-ஆம் ஆண்டு இயற் றப்பட்ட சட்டம், வரும் 25-ஆம் தேதியோடு நிறைவடைகிறது.

‘‘எம் ஓட்டுநர் கோவிலுக்குள் போகலாம்;

நான் போக முடியாது!''

இதையடுத்து, இந்த இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அரசமைப்புச் சட்ட (126-ஆவது) திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநில சட்டப் பேரவைகளிலும் இந்த இடஒதுக்கீடு நீட்டிப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு வருகிறது.  இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவைக் கூட்டத்தின்போது மத்திய அரசின் இந்த சட்டம் மாநிலத்தில் நடை முறைப்படுத்த விவாதம் நடைபெற்றது. அப்போது சமூக நீதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜீவ் சைசால் கூறும் போது, “நானும் சட்டமன்ற உறுப்பினரான வினோத் முகோரும் கோவி லுக்குச் சென்றோம் (கோவில் பெயர் குறிப் பிடப்படவில்லை). அப்போது கோவி லுக்கு வெளியே வந்த கோவில் நிர்வாகிகள் எங்களை கோவில் வாசலில் இருந்து பல மீட்டர் தூரம் வெளியே நிற்குமாறு மிரட் டினார்கள்.

என்னுடன் வந்த பாதுகாவலர்கள் மற்றும் உதவியாளர்கள் கோவிலுக்குள் சென்று வந்துவிட்டனர், அங்கு நின்று கொண்டு இருந்த எங்களுக்கு மிகுந்த அவமானமாகப் போய்விட்டது,  எனது ஓட்டுனர் கோவிலுக்குள் சென்று வந்த பிறகு நாங்கள் அங்கு நிற்பதைப் பார்த்து ஒன்றும் கூறாமல் நின்றுவிட்டார்” என்று வேதனையுடன் கூறினார். அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கின்னரூ ஜகத் சிங் நெஹி என்பவர், ‘‘உண்மைதான் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இது போன்று பல கோவில்களில் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டுள்ளனர்'' என்று கூறினார்.

இதற்குப் பிறகும் பேசிய சைசால் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் கேபினெட் தகுதி பெற்ற என்னைப் போன்ற அமைச்சருக்கே இந்த அவமான சூழ்நிலை என்றால், மற்றவர்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டிருப்பார்கள். இந்த இழிநிலை எப்போதுதான் முடிவிற்கு வரும் என்று கண்கள் கலங்க சபையில் பேசினார். மேலும் அவர் பேசும் போது, சீக்கிய மதகுரு இந்த பேதங்களை நீக்க அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடும் முறையையும் (லங்கர்), அனைவரும் ஒன்று சேர்ந்து வணங்கும் முறையையும் கொண்டுவந்தார். இதன் மூலம் சீக்கியர்களிடம் ஜாதிய முறை ஒழிந்தே போனது என்று கூறினார்.

இது தொடர்பாக மற்றொரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சுக்வீந்தர் சிங்சாக்கு  கூறும் போது, “நமது மாநில கேபினெட் தகுதி பெற்ற அமைச்சரை கோவிலில் நுழையவிடாமல் தடுத்தவர்களை தாழ்த் தப்பட்ட பழங்குடியினர் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும். இது போன்ற நிலை வரக்கூடாது என்று தான் ராஜீவ் காந்தி சிறப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்'' என் றார்.

கோவில்களில் தீண்டாமை இன்றும் உள்ளது -முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்

தனக்கு ஏற்பட்ட இந்த அவமானமான நிகழ்வு குறித்து அமைச்சர் ராஜிவ் சைசால் கூறியதும், சிறிது நேரம் அவையே அமைதி யானது. அதன் பிறகு முதல்வர் ஜெயராம் தாக்கூர் பேசிய போது, “சைசால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது வேதனை எங்களுக்குப் புரிகிறது, அவரைப்போலவே அவையில் உள்ள பலரின் வேதனைகளையும் நான் கணக்கில் எடுத்துள்ளேன்.  சில இடங்களில் நானும் இதே போன்ற ஒரு நிலையை சந்தித்துள்ளேன். தாழ்த்தப்பட்ட வர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உணவு வழங்கும் போது தனிவரிசை மற்றும் தனி பாத்திரம் கொடுப் பதும் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இதற்கான மாற்றங்கள் அடிமட்டத்தில் இருந்து வரவேண்டும். இன்னும் நிறைய தூரம் நாம் செல்லவேண்டியுள்ளது'' என்றார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆசா குமாரி பேசும் போது முதல்வர் இவ்விவகாரத்தை சாதாரணமாகப் பேசுவது போல் தெரிகிறது, மாநிலம் முழுவதுமே இந்த தீண்டாமை தொடர்கிறது.  ஒரு சில இடங்களில் மட் டும் நடக்கிறது என்பது போல் உள்ளது முதல்வரின் பேச்சு என்று கூறினார்

இதனை அடுத்து சிபிஅய்(மார்க்சிஸ்ட்) சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் சின்கா பேசும்போது, மாநிலத்தில் தீண்டாமையை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் தீண்டாமை நீடிப் பது அவமானகரமான ஒன்றாகும் என்று கூறினார்.

அப்போது பேசிய பாஜக உறுப்பினர்கள் காங்கிரஸ் ஆட்சியின் போதும் தீண்டாமை இருந்தது இப்போதுமட்டும் புதிதாக தோன்றியது போன்ற நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்றனர்.

இதற்குப் பதிலளித்து காங்கிரஸ் உறுப் பினர் ஆசாகுமாரி பேசும் போது, “காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் ஒரு வாரம் நடைபெறுகிறது, உறுப்பினர்கள் அனைவருமே பேச வாய்ப்புகள் தரப்படுகின்றன. ஆனால் இங்கே ஒரு நாள் அதுவும் சில மணி நேரம் மட்டுமே சட்டமன்ற கூட்டம் நடைபெறு கிறது. இச்சபையில் இருக்கும் அனைத்து உயர்ஜாதியில்லாத உறுப்பினர்கள் தாங்கள் தீண்டாமையால் பாதிக்கப்பட்டோம் என்றுகூறுகிறார்கள். ஆனால், அவர்கள் பேசுவதற்கு அரசு அனுமதி மறுத்து, சபையை விரைவில் முடித்துவிடப் பார்க் கிறது. இதுதான் பாஜகவினரின் தீண்டா மையை ஒழிக்கும் நடைமுறையா என்று கூறினார். இதனை அடுத்து சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

2017-ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநில சட்டமன்றத்திலும் கோவில்களில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் அளித்தனர். அப் போதைய மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ் மீது திடீர் பாசம் கொண்டவருமான தருண் விஜய் சில தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு உத்தராகண்டில் உள்ள கோவில்களுக்குச் சென்றார். அப் போது கோவில் நிர்வாகத்தினர் அவருடன் வந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட நபர்கள் மீது கல்லெறிந்தனர். அதன் பிறகு அவருடன் சென்ற தாழ்த்தப்பட்ட நபர்கள் ஊரில் இருந்து ஒதுக்கிவைக்கப் பட்டனர். இது தொடர்பாக ‘‘தைனிக் பாஸ்கர்'' என்ற இந்தி இதழில் செய்தி வந்த பிறகும், இது தொடர்பாக தருண் விஜய் எந்த கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு 13 1 20

சனி, 14 டிசம்பர், 2019

சென்னை பாரிமுனையில் இடிக்கப்பட்டது ஆக்கிரமிப்பு கோயில்

சென்னை பாரிமுனையில் இடிக்கப்பட்டது ஆக்கிரமிப்பு கோயில்
சென்னை, டிச.14 பாரிமுனையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கோவில்  உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இடித்து அகற்றப்பட்டது.
பாரிமுனை ஆர்மேனியன் சாலையை ஆக்கிர மித்து  சக்தி மாரியம்மன் கோவில் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு கோயில், அப்பகுதியில் போக்கு வரத்துக்கு பெரும் இடையூறாக இருந்தது.
பொதுமக்களுக்கு இடையூறாக, நடை பாதையை ஆக்கிரமித்துள்ள இக்கோவிலை இடிக்க வேண்டும் என, ‘டிராபிக்’ ராமசாமி, 2008இல் வழக்கு தொடர்ந்தார்.கோவிலை இடிப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில் நிர்வா கத்தினர் தடை ஆணை பெற்றனர். 11 ஆண்டுகளாக இவ்வழக்கு நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ஆக்கிர மித்து கட்டப்பட்டுள்ள கோயிலை அகற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இராயபுரம் மண்டல அலுவலர் லாரன்ஸ் மற்றும் காவல் துறை உதவி ஆணையாளர் விஜயராமலு, ராயபுரம் உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் உள்ளிட் டோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாநக ராட்சி ஊழியர்கள் 4 ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமிப்புக் கோவிலை இடித்து, லாரிகள் மூலம் கட்டட கழிவுகளை நேற்று அகற்றினர். 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-விடுதலை நாளேடு, 14.12.19