பார்ப்பனர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்ப்பனர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஜூலை, 2025

தமிழ்நாட்டில் இல்லை, பீகாரில்! பார்ப்பனர்களுக்கு எதிரான அறிவிப்புப் பலகைகள்! பார்ப்பனர்களை வைத்து வீட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை: கிராம மக்கள் முடிவு!


புதுடில்லி, ஜூலை 2  பீகாரில் உள்ள சில கிராமங்களில் பார்ப்பனர்களை வைத்துத் திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியும் நடத்தத் தடை விதித்து அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது, உத்தரப் பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கதாகலாட்சேபகர் மீதானத் தாக்குதல் எதிரொலியாகக் கருதப்படுகிறது.

பார்ப்பனர்களுக்குத் தடை

பீகார் மாநிலம், மோதிஹாரி மாவட்டத்தின் அடாபூரிலுள்ள திகுலியா கிராமத்தின் பல இடங்களில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், ‘‘இந்தக் கிராமத்தில் திருமணம் உள்ளிட்ட சடங்குகள் செய்வதற்குப் பார்ப்பனர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது! பிடிபட்டால், அவர்களை அழைத்த குடும்பத்தினர் பஞ்சாயத்தால் தண்டிக்கப்படுவீர்கள்’’ என எழுதப்பட்டுள்ளது.

பார்ப்பனச் சமூகத்தின் அர்ச்சகர்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட சடங்குகளை செய்பவர்களுக்கு  எதிரான இந்த முடிவு அடாபூரின் திகுலியா கிராமப் பஞ்சாயத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது, உ.பி.யில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த  கதாகலாட்சேபகர் முகுந்தமணி சிங் மற்றும் அவரது உதவியாளர் சந்த் குமார் தாக்கப்பட்டதன் எதிரொலியாகும்

உத்தரப்பிரதேசத்தில் கதாகலாட்சேபகர் முகுந்த்மணி சிங் மற்றும் அவரது உதவியாளர் சந்த் குமார் தாக்கப்பட்டனர். இதனிடையே, முகுந்த்மணியின் தலைமுடியை மொட்டையடித்த கும்பலில் 4 இளைஞர்கள் கைதாகியுள்ளனர். பார்ப்பனர் அல்லாத முகுந்தமணி யாதவ் கதாகலாட்சேபம் செய்யக் கூடாது என்ற புகார், அந்தத் தாக்குதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனை எதிர்க்கட்சியான சமாஜ் வாதியின் தலைவர் அகிலேஷ் உள்ளிட்ட பலரும் கண்டித்துள்ளனர்.

பார்ப்பனரல்லாதோர் கதாகலாட்சேபம் செய்வதன் மீது ஆதரவாகவும், எதிராகவும் ஆன்மிகவாதிகளும் கருத்துகளைக் கூறியிருந்தனர்.

உத்தரப்பிரதேச சமூக அரசியல் பிரச்சினையாக உருவெடுத்த இச்சம்பவத்தின் தாக்கம், பீகாரிலும் பிரதிபலித்துள்ளது. உத்தரப்பிரதேச எட்டாவா நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திகுலியா கிராம வாசிகள் அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர். திகுலியா கிராமத்தின் நுழைவுப் பகுதியில் இந்த அறிவிப்புப் பலகை எழுதி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமத்தில் பல மின் கம்பங்களிலும் பார்ப்பனப் பண்டிதர், பூசாரிகளுக்கு எதிரான இதே வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இதை விட ஒரு படி அதிகமாக, பல கிராமவாசிகள் தங்கள் வீடுகளுக்கு முன்புறத்திலும் இதுபோன்ற அறிவிப்புகளை வைத்துள்ளனர். திகுலியா கிராமத்தில் பெரும்பாலான மக்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர். இந்தக் கிராமத்தில் பார்ப்பன மக்கள் வசிக்கவில்லை. இருப்பினும், பார்ப்பன மக்கள் வசிக்கும் பல கிராமங்கள் அருகிலேயே உள்ளன.

அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்ட பிறகு, பார்ப்பனர்கள் திகுலியா கிரமத்திற்குள் வருவதை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

வியாழன், 25 நவம்பர், 2021

அட, "பிச்சைக்கார" பார்ப்பனர்களே!


நிர,புவனாநாகராஜன், செம்பனார்கோவில்

கேள்வி: கடவுள் மறுப்புக் கொள்கையுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளாராமே?

பதில்: வீரமணி, அவர் மனைவி மோஹனா இருவரும் கொரோனா வந்து, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள் என்று செய்தி படித்தோம். அவர்கள் நலமடைய, அவர் உடைத்த பிள்ளை யாரையே பிரார்த்திக்கிறோம். இது தொடர்பாக ஒரு செய்தி. 2018-ல் பெரியார் திடலில் வீரமணி பேரன் கபிலனுக்கும், மஹாலஷ்மிக்கும் நடந்த திருமண ஃபோட்டோவில் மணப்பெண், ஹிந்துக்கள் வணங்கும் மஹாலக்ஷ்மி போலவே நெற்றியில் பொட்டுடன் சர்வாலங்கார பூஷிதையாக இருப்பதைக் காணலாம். அவர் தாயாரும் அப்படியே தெரிகிறார். வீரமணி தம்பதிகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், கடவுள் நம்பிக்கை உள்ளவர் போலத் தெரியும் அந்த மணப்பெண். அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வார். (ஃபோட்டோ கீழே) வேண்டுமானால் இணையதளத்தில் அதைப் பெரிதுபடுத்திப் பார்க்க.

ஒரு உபகதை. ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும். ஜிப்பா போட வேண்டும். நம் நாட் டுப் பெண்களின் முன்னேற்றத்தைத் தடுப்பது அவர்களது புடவை, நகை, துணி, அலங்கார வேஷங்கள்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். பெண்கள் ஆறடி, ஏழடி கூந்தலை வளர்த்துக் கொள்வது அநாகரீகமும், தேவையற்ற தொல்லையும் ஆகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ள வேண்டும்‘ என்று பெண்களுக்கு அறிவுரை கூறினார் ஈ.வெ.ரா. (2). வீரமணி மனைவி உள்பட ஃபோட்டோவில் உள்ள பெண்கள் ஈ.வெ.ரா கூறியதைக் குப்பையில் போட்டு விட்டுத்தான் ஃபோட்டோவில் நிற்கிறார்கள்.

(1)https://www.dailythanthi.com/News/State/2018/06/18013240/invitation-has-been-done-without-printing-K-Veeramani.vpf (2) https:\\newindian.activeboard.com/t64544642/topic-64544642

துக்ளக், 1.12.2021, பக்கம் 30

எதைச் சொல்லியாவது திராவிடர் கழகத் தலைவரைச் சீண்ட வேண்டும் - அப்படிச் சீண்டாவிட்டால்  அவாளுக்கு தூக்கம் வராதே! இதனால் தான் இந்தப் பினாத்தல்!

உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒன்றை வைத்துக் கூட கிண்டலும் கேலியும் செய்யும் அளவுக்கு அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆகி விட்டார்கள். அவாளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

ஓடுகாலி சங்கராச்சாரியார் மரணத்துக்குக்கூட இரங்கல் தெரிவித்தவர் திராவிடர் கழகத் தலைவர்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது கூட குத்துக் கல்லுபோல உட்கார்ந்திருந்த ஓர் ஆசாமி தானே அவர்களின் ஜெகத்குரு  - அவர்களிடம் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியுமோ!

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் பேரன் - கடவுள் நம்பிக்கையுள்ள ஒரு வீட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டாராம் - அதில் என்ன தப்பு?

யாரையும் வற்புறுத்திட வேண்டிய அவசியம் இல்லை. கால ஓட்டத்தில் அவர்களும் திருந்துவதற்கு வாய்ப்பு உண்டே - அதுதானே இப்பொழுது நடந்தும் இருக்கிறது.

இந்தப் பிரச்சினைக்கும் திராவிடர் கழகத் தலைவருக்கும், அவர் தம் இணையர்க்கும் கரோனா வந்ததற்கும் என்ன சம்பந்தம்?

எதையாவது உளறிக் கொட்டி ஆற்றாமையை வெளிப்படுத்த வேண்டும் என்கிற அரிப்பு நோய் - நாம் என்ன செய்ய!

சங்கர மடத்தைப் பழித்தார் கருணாநிதி. அவர் படுத்துண்டார் என்று சொன்ன நாகரிக மற்ற மனிதர்தான் அவர்களின் குலக்குரு.

 புத்தி அப்படித்தானே இருக்கும்.

கூந்தலை வெட்டியும் கிராப் வைத்துக் கொள்ள வேண்டும், பெண்கள் லுங்கி கட்ட வேண்டும், ஜிப்பா போட வேண்டும் என்றார் ஈ.வெ.ரா. ஆனால் அதுமாதிரி அவர்களின் குடும்பப் பெண்கள் இல்லையே என்று பெரிய குற்றச்சாட்டைக் கண்டுபிடித்து விட்டார்.

தந்தை பெரியார் சொன்ன புரட்சிகரமான கருத்துக்கள் இன்று கூறி நாளையே நடந்து விடும் என்பதல்ல. காலவோட்டத்தில் அந்த மாறுதல் வந்தே தீரும் - வந்து கொண்டும் இருக்கிறது.

நாமும் கூட திருப்பி அடிக்கலாம், குருமூர்த்தி அய்யர் ஏன் அவுட்டுத் திரி வைக்கவில்லை. அவர் ஏன் பஞ்ச கச்சம் கட்டாமல் வெள்ளைக்காரன் கற்றுக் கொடுத்த பேண்ட்டை ஏன் போட வேண்டும்?

புருஷனை இழந்த அக்ரகாரப் பெண்கள் ஏன் மொட்டைப் போட்டுக் கொள்ளவில்லை? வெள்ளைப் புடவை கட்டி ஏன் மூலையில் ஒதுங்கிக் கிடக்கவில்லை?

குருமூர்த்தி அய்யர் ஏன் உஞ்சி விருத்தி செய்யவில்லை? நாலுதெரு சுற்றிப் பிச்சை எடுத்துத்தானே வயிறு கழுவ வேண்டும்.  காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னது போல கும்பகோணத்தில் பிச்சைக்கார பார்ப்பான் தெரு என்று இன்றும் இருக்கிறதே என்று காஞ்சி சந்திரசேகரன் (அதுதான் அந்த சங்கராச்சாரியார்) சொன்னதுண்டே!

இதுபோல் ஆயிரம் ஆயிரம் கேள்விகளை நம்மாலும் கேட்க முடியுமே!

மேலும் தகவல் வேண்டுமானால் எழுத்தாளர் சகோதரி சிவசங்கரி அவர்கள், திராவிடர் கழகத் தலைவரைக் கண்ட பேட்டி- காலங் கடந்து, வீரமணி சொன்னது சரிதான் என்று  தம் அனுபவத்தின் அடிப்படையில் ஒப்புக் கொண்டதுமான தகவலை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

தனிமைப்படுத்தப்பட்ட பார்ப்பனர்கள்


தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாளை "சமூக நீதி நாளாக" சமூகநீதி சரித்திர நாயகர் முதல் அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த 6ஆம் தேதி அறிவித்தாலும் அறிவித்தார், தமிழ்நாடே மகிழ்ச்சியில் பூத்துக் குலுங்குகிறது.

குறிப்பாக திராவிடர் கழகத் தோழர்கள் தன்னிச்சையாக, தாங்களாகவே முன்வந்து மக்களுக்கு இனிப்புகளை வழங்குகிறார்கள், சுவர் எழுத்துகளை எழுதி முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறார்கள் - வண்ண வண்ண சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டுகிறார்கள். அவர்களின் மகிழ்ச்சிக்கோர் எல்லையில்லை.

காரணம் இல்லாமல் இல்லை. காலத்தின் ஓட்டத்தை மாற்றி அமைத்து, புதுவழி காட்டிய உண்மையான புரட்சித் தலைவர் தந்தை பெரியார் அல்லவா!

அவரின் கொள்கைகள் தான் தனி மனிதனையும் சமூகத் தையும் மாற்றி அமைக்கும் என்பதை உறுதியாக உணர்ந்து, அதற்கொரு உத்வேகம் கொடுப்பதுதான்  - சிந்தனையில் உரத்த முறையில் ஒரு மின் பாய்ச்சலை ஏற்படுத்துவதுதான் இந்த அறிவிப்பு.

இது தமிழ் நாட்டோடு முடிந்து விடக் கூடியதல்ல; திராவிட மாடல், திராவிட மாடல் என்று சொல்லுகிறார்களே - அது என்ன என்பதை இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள மாநிலங்கள் கவனமோடு திரும்பிப் பார்ப்பதற்கான திருப்பம் தரும் சொல் இது.

இதனைப்  புரிந்து கொண்ட நிலையில்தான் பார்ப்பனக் கூட்டம் இடுப்பு வேட்டி அவிழ்வதுகூடத் தெரியாமல் ஆத்திர நெருப்பாய் உருண்டு புரளுகிறார்கள்.

எடுத்துக்காட்டுக்கு நேற்றைய பார்ப்பன இனமலரான 'தினமலரை' எடுத்துக் கொள்ளலாம்.

பெரியார் என்று தப்பித் தவறிகூட எழுதாது இந்த ஏடு. இவர்கள் எழுதாததால், தந்தை பெரியாரின் பெருமை குறைந்தா விடும்? இன்னொரு வகையில் இவர்கள் எத்தகை யவர்கள் என்று தந்தை பெரியார் எடுத்துக் கூறியதுதான் எட்டுணை உண்மை என்பதை - இதுவரை உணராதவர் களும்கூட உணரும் ஒரு நிலை ஏற்படும் - அந்த வகையில் இதுவும் நல்லதுதான்.

ஒரு நாள் செய்தியிலேயே இவ்வளவு நஞ்சைக் கொட்டித் தீர்க்கிறது தினமலர் என்றால் -  இது இவர்களின் உடலில் ஓடுவது எல்லாம் நஞ்சுதான் என்பதற்கான எடுத்துக்காட்டு.

சாமி கும்பிடுகிறீர்களோ, இல்லையோ, எனக்குக் கவலையில்லை - இனத்தைக் காக்க வேண்டும் - தமிழன் வலிமையோடு இருக்க ஈ.வெ.ரா. போட்ட (ஈ.வெ.ரா. என்றா துரைமுருகன் சொன்னார்?) அடித்தளமே காரணம் என்று அவை முன்னவர் துரைமுருகன் சொல்லி விட்டாராம்! அடேயப்பா 'தினமலருக்கு' எங்கேயோ தேள் கொட்டி விட்டது.

இப்போது அவரை வாழ்த்தும் அல்லது வாழ்த்திய திராவிடத் தலைவர்கள் பலர், அவர் உயிருடன் இருந்தபோது, கடுஞ்சொற்களால் ஏசினர் என்பதை வரலாறு மறக்காதாம் - எழுதுகிறது  தினமலர் - இருக்கட்டும் - ஏசியவர்கள் சிந்தனையில் மாற்றமே வரக் கூடாதா? ஓடு காலியாக சங்கர மடத்தை விட்டு ஓடிய ஒருவரை 'ஜெகத் குரு' என்று ஏற்றுக் கொண்ட  கூட்டமா இது பற்றிப் பேசுவது!

அதே போல் சமூக நீதி சரித்திர சாதனையாளர் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்தை எடுத்துக் காட்டியுள்ளது.

"சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூகநீதி, இன நலம் ஆகியவற்றை அடிப்படைக் கொள்கையாக ஈ.வெ.ரா. உருவாக்கினார். அதுதான் கடந்த நூற்றாண்டில் இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. எதிர்காலத்துக்கு பாதை அமைத்துத் தரப் போகிறது" என்று முதல் அமைச்சர் சொல்லி விட்டாராம். தினமலரின் பூணூல் ஏன் துடியாய்த் துடிக்க வேண்டும் - என்ன எழுதுகிறது?

நீங்கள் சொல்லும் பெரியவர் (அப்பாடா, இந்த இடத்தில் மட்டும் பெரியவர் என்று கை சுளுக்கி கொண்டு எழுதி விட்டது போலும்!) உயிருடன் இருந்த காலத்தில் 50-60 ஆண்டுகளாக இந்தக் கொள்கைகளுக்காகத் தான் போராடினார். அவர். இறந்து 47 ஆண்டுகள் ஆகி விட்டன. அவர் புகழைத்தான் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் கட்சிகள் பேசுகின்றன. இருந்தாலும் பகுத்தறிவு, சமதர்மம், சுயமரியாதை, சமூகநீதி, இன உணர்வு இன்னும் வாய்க்கவில்லையோ என்ற டவுட் மக்களுக்கு வந்துள்ளது என்கிறது இனமலர்.

வாய்த்திருக்கிறது - இன்னும் வாய்க்க வேண்டியதும் உள்ளது - எந்த அளவுக்கு வாய்த்திருக்கிறது தெரியுமா? 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப் பேரவையில் பெயர் சொல்லுவதற்குக்கூட ஒரே ஒரு பார்ப்பான் இல்லையே - அந்த ஆத்திரம்தான் தினமலர்க் கும்பல் வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொள்கிறது.

பார்ப்பனர்களின் இத்தகு அழுக்காறு - ஆபாச புத்தி - அவர்களைத் தமிழ் மண்ணில் தனிமைப்படுத்தி விட்டதே! பா.ஜ.க.வுக்குள்கூட ஆரிய - திராவிடப் போராட்டம் தொடங்கி விட்டதே. தினமலர்க் கூட்டத்துக்கு அனுதாபங்கள் உரித்தாகுக!

சனி, 21 ஆகஸ்ட், 2021

பலே! பலே!!: வேறு தீவுக்குக் குடியேறப்போகிறார்களாம் பார்ப்பனர்கள்!


தமிழில் அர்ச்சனை மற்றும் பார்ப்பனர் அல்லாதோரும் ஆகம விதிகளின் படி நன்கு பயிற்சி பெற்று கருவறையில் சென்று பூஜை செய்யும் உரிமையை பெற்றுள்ளனர். இந்த நிலையில் இதுபிடிக்காத பல பார்ப்பன அரசியல் பிரமுகர்களும் ஹிந்துத்துவ அமைப்புகளின் தலைவர்களும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பிக்கொண்டு வருகின்றனர்.

இதில் பாஜகவைச் சேர்ந்த பிரமுகர்  லட்சுமி நாராயணன் சுந்தர் என்பவர் பாஜவின் பிரபல நபராக அறியப்பட்டவர், இவர் தன்னை ஆடிட்டர் என்றும், அரசியல் ஆலோசகர் என்றும் கூறிக் கொண்டு வருகிறார்.

இவர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற திட்டம் நடைமுறைக்கு  வந்த பிறகு ஏற்கெனவே அர்ச்சனை செய்த குருக்களை அடித்துத் துரத்திவிட்டதாக ஒரு செய்தியை வெளியிட்டார்,

அதற்காக ஒரு பார்ப்பனர் அழுதுகொண்டே வெளியேறுவது போல் படத்தைப் போட்டு, இதோ பாருங்கள் ஒரு குருக்கள் கண்ணீர் சிந்துகிறார் - இரக்கமில்லாத அரசே என்று எழுதியிருந்தார்.  இந்த போலித்தகவல் சமூகவலைதளங்களில் மிகவும் வேகமாக பரவியது, அந்த உண்மைக்குப் புறம்பான தகவலை பாஜக பிரமுகர்களான கே.டி.ராகவன் உள்ளிட்டோர் வேண்டுமென்றே தாங்களும் அதைப் பரப்பிக்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள் விளக்கம் கொடுத்தார். அதன் பிறகு முதலமைச்சரே சட்டப்பேரவையில் விளக்கம் கொடுக்கும் கடமையைச் செய்துள்ளார்.

உண்மைக்குப் புறம்பான ஒரு தகவல் மக்களிடையே சேர்ந்த பிறகு, அதற்கு முதலமைச்சர் நேரம் எடுத்துவிளக்கம் கொடுக்கும் நிலைஏற்பட்டது, இப்போதுவரை அந்த போலியான தகவலைப் பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லை. இந்த நிலையில் போலியான தகவல்களை அனுப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசின் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது,

இனிமேல் போலி தகவலைப் பரப்பினால், தம் மீது நடவடிக்கை வந்து பாயுமே என்று அஞ்சிய பார்ப்பனர்கள் தற்போது நாட்டைவிட்டு வெளியேறி வேறு தீவில் வாழலாம் என்றும், ராக்கெட்டில் ஏறி உயிர்வாழத்தகுந்த வேறு கோள்களில் வாழலாம் என்றும் புலம்பத் துவங்கிவிட்டனர்.

Mahesh  

@Mahesh10816

Patriotic Indian-India First-Call a Spade a Spade. Honored to be followed by  @narendramodi ji & @rajnathsingh Ji

I strongly advocate that Brahmins all over world should come together purchase an island in some part of the world (not in India) & create a separate country for Brahmins where they can follow their culture & rituals with their heads held high. Another Israel has to be created

நான், உலகில் உள்ள அனைத்துப் பார்ப்பனர்களுக்கும் சொல்வது என்னவென்றால், நாம் அனைவரும் ஒன்று கூடி பணம் சேர்த்து விற்பனைக்காக இருக்கும் தீவுகளில் பெரிய தீவுகளை வாங்கி (இந்தியாவிற்கு அருகிலோ அல்லது இந்தியாவிடமிருந்தோ வாங்கவேண்டாம்) குடியேறிவிடுவோம், அங்கே நாம் நமது கலாச்சாரத்தை வழிபாட்டை மேற்கொள்வோம், புதிய இஸ்ரேலை உருவாக்குவோம்.

மற்றொருவர் இந்த பூமியை விட்டு வேறு உலகத்திற்குச் சென்றுவிடலாம், என்கிறார். (சபாஷ்! சரியான முடிவு!)

நாம் இந்த பெருவெளியில் மனிதர்கள் வாழ்வதற்கேற்ற ஓர் உலகத்தை கண்டுபிடித்து பார்ப்பனர்கள்(ஹிந்து) அங்கே குடியேறி நமது கலாச்சாரத்தை வளர்க்கலாம், அங்கே எந்த எதிர்ப்பும் இன்றி பின்பற்றலாம். (குடுமி வைத்துக் கொள்வார்களா? பஞ்ச கச்சம் கட்டுவார்களா?)

இங்கே முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த அரசுகள் நமது கலாச்சாரத்தை சிதைக்கின்றன, ஊடகங்கள் பெரும்பாலும் அவர்களின் கட்டளைக்கு ஆடுகின்றன. ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்குவதையே பகுத்தறிவு என்கிறார்கள் என்று இப்படி தொடர்ந்து சமூகவலைதளத்தில் புலம்பத்துவங்கிவிட்டனர்.

1971இல் சேலத்தில் திராவிடர் கழக மாநாட்டில் - ஊர்வலத்தில் ராமன் படத்தை செருப்பால் அடித்து விட்டனர் என்று பெரும் பிரச்சாரப் புயலை எழுப்பி - தி.க. ஆதரிக்கும் திமுகவைத் தோற்கடிப்பீர் என்று நாடெங்கும் பிரச்சாரம் செய்தனர். கோயில் கதவு அளவுக்கு பெரிதாக பெரிய பெரிய சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டினர்.

தேர்தல் முடிவு என்ன? 1967 தேர்தலில் 138 இடங்களைப் பெற்ற திமுக - 1971இல் 184 இடங்களில் வென்று மானமிகு கலைஞர் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.

அப்பொழுது - சுதந்திரா கட்சியின் தலைவர் - குலதர்மவாதி ராஜாஜி கல்கி இதழில் என்ன எழுதினார் தெரியுமா’

“இனித் தமிழ்நாட்டில் ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது. இந்த ராஜ்ஜியத்தை விட்டே வெளியேற வேண்டும் என்று சில மகா புருஷர்கள் உட்பட எண்ணத் தொடங்கி விட்டார்கள்” என்று எழுதினாரே (கல்கி: 14.4.1971)

அப்பொழுது எந்தெந்த மகா புருஷர்கள் நாட்டை விட்டு வெளியேறினர் என்று தெரிவிக்க வில்லை.

இப்பொழுது அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை செயல்படுத்தும் நிலையில், கோயில்கள் எல்லாம் என்னவோ பார்ப்பனர் வீட்டு பணத்தில், பார்ப்பனர்களே தொழிலாளர்களாக இருந்து கோயிலைக் கட்டியது போல், தங்களின் பிதிரார்ஜித  சொத்து போல வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அலறுகிறார்கள் - சாபம் இடுகிறார்கள்.

பார்ப்பனர்களின் ஆதிக்கம் - சமூக அநீதி செயல் பற்றித் தந்தை பெரியார் பேசினார். எழுதினார், தந்தை பெரியார் மறைவுக்குப் பிறகும் அது தொடர்கிறது என்று வருகிறபோது “பார்ப்பனர்களைப்பற்றி இன்னும் பேச வேண்டுமா? அவர்கள் எல்லாம் திருந்திவிட்டனர்!” என்று பார்ப்பனர் அல்லாதாரே பேசுவதுண்டு. அவர்களெல்லாம் - பார்ப்பனர்கள் இப்பொழுது போடுகிற கூச்சல், ஆவேசத்தை பார்த்த பிறகு என்ன சொல்லப் போகிறார்கள்?

பார்ப்பனர் அல்லாத இளைஞர்களே உணரும் ஒரு சூழலை பார்ப்பனர் ஏற்படுத்திக் கொடுத்து விட்டனர்.

ஆம், பூனைக்குட்டி வெளியில் வந்தது. இளைஞர்களே பார்ப்பனரைத் தெரிந்து கொள்வீர்! புரிந்து கொள்வீர்!

வியாழன், 29 ஜூலை, 2021

பார்ப்பனப் பற்றே இல்லாத பார்ப்பனர்கள்????


 பார்ப்பனர்கள் பசப்புவதைப் பார்த்து அவர்கள் அந்த ஜாதிப் பற்றோஇனப்பற்றோ இல்லாதவர்கள் என்று நம்பினால் அவர்களை விட கடைந்தெடுத்த ஏமாளிகளை எங்குத் தேடினாலும் கண்டுபிடிக்கவே முடியாது.

துக்ளக்கையும், ‘தினமலரையும், ‘தினமணியையும் படித்ததற்குப் பிறகும் கூட அப்படியொரு நம்பிக்கை எங்கே இருந்து குதிக்கும்?

ஒரு ‘குமுதம்‘ பார்ப்பனக் கைக்கு மாறியவுடன் ஒவ்வொரு வாரமும் செத்துப் போன - ‘தீண்டாமை ஷேமகரமானது’ என்று சொன்ன  - மனிதப் பண்பே அற்றொழிந்த காஞ்சி சங்கராச் சாரியாரின் அற்புதங்கள் என்று கூறி வாராவாரம் பொய்ம் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டிய பிறகும் கூடபார்ப்பனர்கள் பற்றிக் கண்டிப்பாக ஒரு கணிப்பு ஏற்படத்தான் செய்யும்.

எடுத்துக்காட்டுக்காகத் ‘துக்ளக்கை எடுத்துக் கொள்ளலாமா?

திருவாளர் சோ ராமசாமி தனக்குப் பின்னாலே அந்த இதழை நடத்துவதற்கு ஒரு குருமூர்த்தி அய்யரைத்தானே தேடிப்பிடித்து சாவிக் கொத்தைக் கொடுத்துக் கண் மூடி இருக்கிறார்.

அவரும் அக்கிரகாரத்து அடிபிறழாமல்அட்சரம் பிசகாமல் (பூநூல் பிடித்து எழுதிக் கொண்டும் இருக்கிறார்.

சில எடுத்துக் காட்டுகளைக் காணலாம்.

கேள்விஇந்திய மக்கள் குசேலர்கள் ஆகி விட்டது போல் தெரிகிறதே?

பதில்மக்கள் குசேலர்கள் ஆகி விட்டார்கள்கிருஷ்ணன்  எங்கே என்றுதான் தெரியவில்லை. (‘துக்ளக்‘ 9.6.2021, பக்கம் 10)

யார் இந்தக் குசேலர்?

தந்தை பெரியார் கூறுவதைக் கவனியுங்கள்:

குசேலோபாக்கியானம் என்னும் குசேலர் கதையில் - குசேலருக்கு 27 பிள்ளைகள் என்றும், 27 பிள்ளைகள் பெற்று குலேசர் தரித்திரத்தில் துன்பப்பட்டு - 24 குழந்தைகளை அழைத்துக் கொண்டு கிருஷ்ணன் (கடவுள்இடத்தில் சென்று பிச்சைக் கேட்டதாகவும்கடவுள் ஏராளமாகச் செல்வம் கொடுத்ததாகவும் கதை சித்தரித்த ஆசிரியர் சிறிது கூடப் பகுத்தறிவைப் பயன்படுத்தவில்லைஒருவருக்கு 27 குழந்தைகள் இருந்தால் அவன் வருஷத்துக்கு 1 குழந்தைப் பெற்று இருந்தால் 20 வயதிலும்அதற்கு மேற்பட்ட வயதும் நிறைந்த குழந்தைகள் எட்டாக இருந்திருக்கும்இந்தக் குழந்தைகளும் சோம்பேறித் தடியன்கள் போல் ஒரு வேலைக்கும் இலாயக்கு இல்லாத மாமிசப் பிண்டங்களாகவா இருந்திருக்கக்கூடும்இப்படி 20 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளை வீட்டிலே வைத்துக் கொண்டு ஒருவன் பிச்சைக்குப் போய் இருந்தால் அந்த நாட்டில் மற்றவர்களும் இதுபோல் இருந்திருக்க வேண்டாமாஅப்படி இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படி ஆகி  இருக்கும்இப்படிப்பட்ட சோம்பேறித் தடியன்களுக்குக் கடவுள் செல்வம் கொடுக்கலமா?” என்று கேட்டார் தந்தை பெரியார்.

தண்ட சோம்பேறிகள் கதையையும்முட்டாள் கடவுள் கதையையும் ‘துக்ளக்‘ உயிரூட்டுவது எதற்குஎன்ன பலனை ஊட்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

குசேலன்தான் இந்த யோக்கியதை உடையவன் என்றால் இந்தக் கிருஷ்ணன் யார்?

அபிதான கோசம் என்ன சொல்லுகிறது?

தேவர்களெல்லாம் போய் ‘உலகில் அதர்மம் அதிகமாகி விட்டதுஇராட்சதர்கள் தொல்லைப் பொறுக்கமுடியவில்லைஅதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும்’ என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம்உடனே விஷ்ணு என்னச் செய்தான் தெரியுமாதன் மார்பிலிருந்த இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம்அந்த இரண்டு மயிர்களில் ஒன்று கருப்பு நிறமாம்மற்றது வெண்மை நிறமாம்கருப்பு மயிர் கிருஷ்ணனாகவும்வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயின” என்று கூறுவது அபிதான கோசம்.

இந்த அருவருப்பான ஆபாசக் கதைகளை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உயிரூட்டிக் கவுரவிக்கப் பார்க்கிறார் என்றால் இந்தப் பார்ப்பனர்களைவிட இந்தக் கதைகளை விட ஆபாச சைக்கோ யாராகத்தான் இருக்க முடியும்?

*********

கேள்விஅம்மா உணவகம் அம்மா பெயராலேயே செயல்பாட்டில் இருக்கும் என்ற ஸ்டாலின் உத்தரவு பாராட்டுக்குரியதா?

பதில்அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும்.வெ.ராஅண்ணாதுரைஎம்.ஜி.ஆர்போன்ற மறைந்த தலைவர்களின் வரிசையில் ஜெயலலிதாவும் சேர்க்கப்படுகிறார் என்று தோன்றுகிறது. (‘துக்ளக்‘ 9.6.2021)

ஜெயலலிதாவைப் பெருமைப்படுத்த எண்ணும் போது மட்டும் .வெ.ரா., அண்ணாதுரைஎம்.ஜி.ஆர்போன்றவர்கள் அனைத்துக் கட்சியினரும் ஏற்றுக் கொள்ளும் தலைவர்களாக குருமூர்த்திகளின் கண்களுக்குத் தெரிகிறதுஅதிலும் ஓர் இனப்பற்று வழிவதைக் காணமுடிகிறது.

அதே நேரத்தில் .தி.மு.ஆட்சி போய் தி.மு.ஆட்சி வந்தநிலையில்  அம்மா பெயரிலேயே அம்மா உணவகம் செயல்பாட்டில் இருக்கும் என்ற முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவைப் பாராட்டும் மனம் இந்தப் பார்ப்பனர்களுக்கு இல்லை என்பதை கவனிக்கத் தவறக் கூடாது.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்முதலமைச்சர் ஸ்டாலின் இல்லையாம் - வெறும் ஸ்டாலின்தானாம்.

.வெ.ரா., அண்ணாதுரை என்று எழுதும் இந்தத் ‘துக்ளக்குகள் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என்று எழுதமாட்டார்கள்மாறாக இராஜாஜி என்றுதான் எழுதுவார்கள்சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று எழுதமாட்டார்கள்மஹா பெரியவாள் என்றுதான் சப்புக் கொட்டி எழுதுவார்கள்.

நம்புங்கள்பார்ப்பனர்களுக்குப் பார்ப்பனப்பற்றே கிடையாது - மனிதப்பற்றுதான்.

*********

கேள்விபிராமண தர்மத்தைக் கடைப்பிடிப்பது மிகக் கஷ்டமாக உள்ளதே  - ஏன்?

பதில்சோ-வின் “எங்கே பிராமணன்” புத்தகத்தைப் படித்தால் பிராமண தர்மத்தைக் கடைப்பிடிப்பது ஏன் கடினம் என்பது புரிந்து விடும். (‘துக்ளக்‘ 16.6.2021, பக்கம் 26)

அது என்ன பிராமண தர்மம்நாங்கள் துவி ஜாதிகள் (இரு பிறப்பாளர்கள்), பிர்ம்மாவின் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள் என்று கூறும் பிறவித் திமிர் தர்மம்தானே!

இந்த 2021லும் பூணூலைத் தரிப்பதன் தாத்ப்பரியம் என்ன?

செட்டியாரும்ஆசாரியாரும்பூணூல் தரிக்கிறார்களே என்று திசை மாற்ற வேண்டாம்மனுதர்மத்தில் அதற்கு இடமில்லை.

சூத்திரன்பிராமண ஜாதிக் குறியை - பூணூல் முதலியவற்றைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும் (மனுஅத்தியாம் 9, சுலோகம் 224 ) என்பதுதானே மனுதர்மம்.

மனுதர்மத்தை நீங்கள்தான் நினைவூட்டுகிறீர்கள் என்று திசை திருப்ப வேண்டாம்எழுச்சித் தமிழர் தொல்திருமாவளவன் மனுதர்மத்தைப் பற்றி உண்மை நிலையை எடுத்துக் கூறியதற்காக ‘தினமணியிலிருந்து ‘தினமலர்’ தொடங்கிபார்ப்பனர்கள் வரிசை கட்டி நிற்கவில்யை£?

இதே ‘துக்ளக்கில் குருமூர்த்திகளின் குருநாதர் சோ ராமசாமி சுருட்டை ஊதித் ஊதித்தள்ளி எழுதிடவில்லையா?

ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மத்தோடு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளை ஒப்பிடும், ‘போக்கிரித்தனம்’ சங்கரமடத்திலிருந்து வந்து கொண்டு இருக்கிறதே - நாகசாமியின் பேனாவும் இந்த வகையில் நர்த்தனமாடுகிறதே!

திருக்குறளின் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும்விலக்கியன ஒழிதலும்ஆம்.!’ என்று குறளுக்குப் பார்ப்பன பரிமேலழகர் உரை எழுதவில்லையா?

பார்ப்பனக் கழிச்சடை மனப்பான்மை மனு மந்தாதா காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து தொல்லைக் கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறதுஹிந்து தர்மத்தைப் பற்றி ‘ஆகா ஊகா’ என்று ஆகாயத்தைப் பிளந்து எழுதும் குருமூர்த்தி வகையறாக்களை பார்த்துக் கேட்கிறோம்!

சனாதன தர்மத்தின் அடிப்படையில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களாஉங்கள் கிராப்புத் தலை எங்கிருந்து வந்ததுபேண்ட்ஷர்ட்டை எங்கிருந்து குதித்ததுஉங்கள் உச்சிக் குடுமி எங்கேஎங்கே?

கிருத்துவர்களை கீழிறக்கமாக ஒரு பக்கத்தில் பேசிக் கொண்டே அந்தக் கிருத்துவ வெள்ளைக்காரன் கொடுத்த ஹிந்து என்ற பெயரில் தானே ஓசிக் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்!

பிராம்மணன் என்று இன்றும் வீராப்புப் பேசுகிறீர்களே - பிராம்மண தர்மம் என்றால் என்னஎதற்கெடுத்தாலும் மஹா பெரியவாள்என்று மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருக்கும் திருவாளர் குருமூர்த்தியைக் கேட்கிறோம்அந்த மஹா பெரியவாள் பிராமண தர்மம் பற்றி என்ன சொல்லுகிறார்?

பழைய நாளில் பிராமணன் தான் பிச்சை எடுப்பான்மற்ற ஜாதிக்காரர்கள் நாமாக கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். ‘பிச்சைக்கார பார்ப்பனன் தெரு’ என்று கும்பகோணத்தில் ஒரு தெரு கூட இருக்கிறது.

பிராம்மண சந்நியாசிகள் அன்னப்பிச்சை வாங்குவார்கள்பிராமணர்கள் உஞ்சி விருத்தி செய்வார்கள்மற்ற ஜாதிக்காரர்கள் பிச்சை வாங்குவதில்லை. ‘ஏதாவது வேலை செய்து விட்டுஅதைக் கூலியாகப் பெற்றுக் கொள்கிறேன்’ என்பார்கள்.

இப்பொழுது இவன் செய்கிற காரியம் நல்லதோகெட்டதோ  அதை அப்படியே மற்றவர்களும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.”  (காஞ்சி காமக்கோடி சங்கராச்சாரியார் உபந்யாசத்தின் முதற்பகுதி - ‘கலைமகள்’ - 1957-1958, பக்கம் 28)

குருமூர்த்தி வகையறாக்களே - குருநாதராகமஹா மஹா பெரியவாளாக மண்டைக் குள்ளும்மண்டைக்கு வெளியிலும் வைத்து வெண்சாமரம் வீசுகிறீர்களேஅந்த மஹா பெரியவாள் கூறும் பிராம்மண தர்மப்படி பிச்சை எடுக்கத் தயார்தானா?

உங்களைச் சொல்லிக் குற்றமில்லைநீங்கள் மஹா பெரியவாள் என்று ஜெபிக்கும் அந்தக் காஞ்சி சங்கரமட சந்திரசேகரேந்திர சரஸ்வதியேஅவர் சொன்ன பிராம்மண தர்மத்தைத் தன் காலில் போட்டு மிதித்து “பிராம்மணர்களுக்காக ‘நான் கொஞ்சம் கம்யூனல் பேஸிஸில் (வகுப்பு அடிப்படையில்)  பேசியாக வேண்டியிருக்கிறது” என்று ‘தெய்வத்தின் குரல்’ பேசுகிறதே - முற்றும் துறந்த முனிவராம் - ஆனால் பிராமணர் களுக்காக கம்யூனலாகப் பேசுவாராம்ஹி.... ஹி.... வெட்கமாவது - விவஸ்தையாவது இந்த வேதியக் கும்பலுக்கு!

திங்கள், 17 மே, 2021

எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் பார்ப்பனர் - பார்ப்பனரே!


பார்ப்பனர்கள் எந்த உயர்ந்த பதவி வகித்தாலும், அவர்களின் எண்ணமெல்லாம் இடஒதுக்கீட்டில் கைவைப்பதில்தான் இருக்கும். குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா ‘இந்து' ஏட்டின் விழா ஒன்றில் பங்கேற்க சென்னை வந்தபோது (4.9.1978) இடஒதுக்கீடு பற்றி கருத்துத் தெரிவித்தார்.

"சமுதாயத்தில் செய்யப்படும் உதவிகள் வகுப்பு அடிப்டையில் இருக்கக் கூடாது. இந்த ஆபத்தான போக்கை ஏற்கெனவே நாம் மேற் கொண்டு விட்டோம் என்று சொல்லுவதற்கு வருத்தப்படுகிறேன். வறுமையின் அடிப்படையிலே எல்லோருக்கும் உதவிடவேண்டும். உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பதற்காக அவர்களை வறு மையில் விட்டு விடக்கூடாது" (‘தினமணி‘, 5.9.1978).

தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடஒதுக்கீடு - நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்டு 9ஆவது அட்டவணையில் இடம் பெறச் செய்யப்பட்டது. அதில் கையொப்பம் போடும் இடத்தில் இருந்த குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா தெரிவித்த கருத்தென்ன?

Although the quota system might have  taken away posts from brahmins, no one could take away brahmin's brain (‘Indian Express', 25.9.1994) 

"இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பிராமணர் களுக்கான இடங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பிராமணர்களுக்கான மூளையை எடுத் துக் கொள்ள முடியுமா? என்று கேட்டவர்தான் இந்த நாட்டின் குடியரசுத் தலைவர். பதவியைவிட அவருடைய பார்ப்பனத்தனம் தான் மேலோங்கி நிற்கிறது.

(வேண்டாம் வேண்டாம் - அந்த மூளை எங்களுக்கு வேண்டாம் என்று சொன்னவர் சமூக நீதிக் காவலர் வி.பி. சிங்.)

செவ்வாய், 7 ஜனவரி, 2020

சாமியும் சுயராஜ்யமும் பார்ப்பனர் நன்மைக்கே!

25.7.1947 - குடிஅரசிலிருந்து...

இன்று நாங்கள் செய்துவரும் இந்தத் திராவிடர் கழகப் பிரசாரத்துக்குப் பார்ப்பனர்கள் எதிரிகள்; காங்கிரஸ்காரர்கள் எதிரிகள்; கம்யூனிஸ்டுகள் எதிரிகள்; மதவாதிகள் எதிரிகள்; இவர்கள் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள். இவற்றிற்கெல்லாம் பார்ப்பனர்களே தலைவர்கள். பார்ப்பனர்கள் பிழைப்புக்கு ஆதரவளிப்பதற்கே இந்த ஸ்தாபனங்கள் இருக்கின்றன. ஆதலால் நாங்கள் இந்த எதிர்ப்புக்களைச் சமாளித்தால்தான் எங்கள் வேலை நடைபெறமுடியும்.

பார்ப்பானும் கல்லும் சாமிகளா? நான் சாமி இல்லை  என்று சொல்லுவதாகவே வைத்துக்கொள் ளுங்கள், அதற்காக இந்த ஆள்களுக்கு ஏன் ஆத்திரம் வரவேண்டும்? இன்று நீங்கள் யாரை சாமி என்கிறீர்கள்? பார்ப்பனனைத்தானே சாமி என்கிறீர்கள்? பிறகு கல்லுகளையும், பொம்மை களையும்தானே சாமி என்கிறீர்கள்; இவை சாமி ஆகுமா? நீங்கள் எதற்காக மனிதனைச்  சாமி என்று கூப்பிடுகிறீர்கள்? எதற்காக மனிதனைச் சாமி என்று  கூப்பிட்டுக் கையெடுத்துக் கும்பிடுகிறீர்கள்? மற்றும், கல் பொம்மை சாமிகளும் பார்ப்பான் மாதிரித்தானே செய்து  வைக்கப்பட்டிருக்கின்றன? பார்ப்பானுக்கு உச்சிக்குடுமி என்றால், சாமிக்கும் உச்சிக்குடுமி! பார்ப்பானுக்குப் பூணூல் என்றால் சாமிக்கும் பூணூல்!  பார்ப்பானுக்குப் பஞ்சகச்சம், வேட்டி என்றால் சாமிக்கும் பஞ்சகச்சம், வேட்டி! பார்ப்பானை நாம் தொடக்கூடாது என்றால், சாமியையும் நாம் தொடக்கூடாது. பார்ப்பானை நாம் தொட்டால் தோஷம் என்றால் சாமியையும் தொட்டால் தோஷம்!

இப்படியாகப் பார்ப்பானும், பார்ப்பானைப் போல் உருக்கியும், அடித்தும் வைத்த பொம்மைகளும், எழுதி வைத்த சித்திரங் களும்தான் சாமிகளாக இருக்கின்றனவே தவிர,வேறு எது உங்களுக்குச் சாமியாக இருக்கிறது?  இந்தச் சாமிகளை நாங்கள் சாமிகள் அல்ல என்கிறோம். இதில் தப்பு என்ன?

நீங்கள் சொல்லுங்கள், எதற்காக ஒரு மனிதனை சாமி என்று கூப்பிடுவது? அந்த மனிதன் எந்த விதத்தில் உங்களைவிட மேலானவன் ஆவான்? நம் ஜனங்களுக்கு வெட்கமில்லை, மானமில்லை என்ப தல்லாமல் வேறு என்ன? இந்த ஊரில் ஒன்றோ இரண்டோ, பார்ப்பன வீடுகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன், அந்தப் பார்ப்பனரின் விஷமச் செய்கைதான் சுவரில் இப்படி எழுதச் செய்தது என்றும் சொன்னார்கள்.

பார்ப்பன ராஜ்யமே சுயராஜ்யம்!

உங்களுக்கு  சாமியைப்பற்றி புத்தி எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு புத்திதான் உங்களுக்கு சுயராஜ்யம், பொதுவுடைமை, நேதாஜி, ஜெய்ஹிந்த், என்பவைகளைப் பற்றியும் இருக்கிறது. சுயராஜ்யம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? சுயராஜ்யம் என்றால் பார்ப்பான் மந்திரி, பார்ப்பான் பெரிய அதிகாரி, பார்ப்பான் கொள்ளை என்பதல்லாமல் வேறு மாறுதல் என்ன என்று கேட்கிறேன். உங்களுக்கு சுயராஜ்யம் வந்தால் பார்ப்பானுக்குச் சாமிப்பட்டம், பிராமணப்பட்டம், மேல்ஜாதிப்பட்டம், போய்விடுமா? அல்லது உங் களுக்குச் சுயராஜ்யம் வந்தால் உங்களுக்குள்ள சூத்திரப்பட்டம், பஞ்சமப்பட்டம், கீழ்ஜாதிப் பட்டம், போய்விடுமா? சொல்லுங்கள் பார்ப்போம் அல்லது இங்கு யாராவது காங்கிரஸ்காரர் இருந் தால் இங்கு வந்து சொல்லட்டுமே பார்ப்போம். பித்தலாட்டமும், புரட்டும் சுயராஜ்யம் என்று சொல்லப்படுவதல்லாமல், யோக்கியமும், நாணய மும் தான் சுயராஜ்யம் என்று யாராவது சொல் லட்டும்! நான் இப்படிச் சொல்லுவதால் சுயராஜ்யம் வேண்டாம் என்று சொல்லுவதாக யாராவது கருதினால் அது தவறு, தவறு என்றே சொல்வேன்.

இன்று மக்களுடைய மானமற்ற தன்மையும், மடத்தனமும், ஏமாந்த தன்மையும்தான்  சாமியாக, சுயராஜ்யமாக இருந்து வருகின்றனவே தவிர உண்மைக் கடவுளும், உண்மை சுயராஜ்யமும் உங்களுக்குத் தெரியவே தெரியாது. உங்களுக்கு யாரும்  சொல்லவும் இல்லை! விளக்கவும் இல்லை!

ஓரவஞ்சனை செய்யும் சாமி

உண்மையான கடவுள் ஒன்று இருக்கிறது என்றால் பாடுபடாத சோம்பேறி,  பித்தலாட்டக் கூட்டத்தார் வயிறு வீங்கச் சாப்பிடவும், பாடுபடும் பாட்டாளி மக்கள் பட்டினி கிடந்து, உடுத்த உடையில்லாமல், இருக்க வீடில்லாமல், படிக்க எழுத்து அறிவில்லாமல் இருக்கவும் முடியுமா என்று கேட்கிறேன்?  சாமியைப் பற்றிக் கவலை கொள் ளுகிற எவனுக்காவது இந்தக் குறைகளைப் பற்றிய கவலை இருக்கிறதா? என்று கேட்கிறேன்.

கோவில்கட்டி கும்பாபிஷேகம் பண்ணின ஜாதியார் கீழ்ஜாதியார் என்றும், சூத்திரன் என்றும், அழைக்கப்படுவதை, நடத்தப்படுவதை எந்தச் சாமியாவது தடுத்ததா? என்று கேட்கிறேன்.

அதுபோலவே, எந்தச் சுயராஜ்யத்திலாவது அல்லது இப்போது பேசப்படுகிற, கொடிகள் பறக் கின்ற மகாத்மாக்களோ, ரிஷிகளோ, வீரசூர தளபதிகளோ, தியாகமூர்த்திகளோ, வீராங் கனை களோ, லட்சுமிகளோ, தேவிகளோ, தலைவர் களோ இருந்து நடத்துகின்ற எப்படிப்பட்ட சுயராஜ்யத்திலாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன், மிலேச்சன் இல்லாமல் ஒரே ஜாதி மக்கள் உள்ள சுயராஜ்யமாய் இருக்குமா என்று கேட்கிறேன்? யாராவது பதில் சொல்லட்டுமே பார்ப்போம்! இங்கு பல கொடிகள் கட்டிய கொடி வீரர்களாவது, ஜெய்ஹிந்த் கூப்பாடுபோடும் நேதாஜி சங்கத்தாராவது, காங்கிரஸ் சமதர்மி களாவது, யாராவது சொல்லட்டுமே, பார்ப்போம்!  சாமி இல்லை என்கிறவனும், தேசத்தைக் காட்டிக் கொடுத்தவனும் வருகிறான்; ஒருவரும் போகா தீர்கள், என்று துண்டுப் பிரசுரம் போட்டுச் சுவரில் எழுதிவிட்டால் போதுமா? வெட்கமும் இல்லை! அறிவும் இல்லையே! என்றால், இந்தக் கூட்டத் தாரின் இழிவான வாழ்வு எதற்குப் பயன்படும் என்று கேட்கிறேன். சாமி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சுயராஜ்யம் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, இந்த நாட்டுப் பழம் பெரும் குடிமக்களாகிய நாம் 100-க்கு 90 பேர் கொண்ட திராவிடர்கள் சூத்திரர் அல்லர், அடிமைகள் அல்லர், பஞ்சமர் அல்லர், கடை ஜாதியார் அல்லர், மக்களை ஏமாற்றி  வஞ்சித்துப் பாடுபடாமல் வயிறு வளர்க்கும் சோம்பேறிக் கூட்டத்தவரான பிராமணர் அல்லர், மேற்ஜாதியார் அல்ல யாவரும் ஒரு குல மக்களே!

தொடரும்...

மனிதனுடைய அல்லது மிருகத்தினுடைய மலம் கையிலோ காலிலோ பட்டுவிட்டால் தண்ணீர் விட்டுக் கழுவி விடுகின்றார்கள். ஆனால், மனிதர் கள் சரீரத்தின்மேலோ அல்லது சரீரத்தின்மேல் இருக்கும் துணியின் மேலோ பட்டுவிட்டால் குளித்துத் தீரவேண்டும் என்கிறார்கள். எனவே, இவர்கள் மனிதத்தன்மையுள்ள மனிதர்களா?

கோயிலைச் சுத்தப்படுத்த என்று மாட்டையும், சாணியையும், மூத்திரத்தையும் கோயிலுக்குள் கொண்டு போகிறார்கள். ஆனால், மனிதன் அக்கோயிலிலுள்ள கடவுளை வணங்க என்று உள்ளே போனால் சாமி தீட்டாகி விட்டதென்று கும்பாபிஷேகம் செய்கிறார்கள். இவர்கள் அறி வுள்ள மனிதர்களா?

-  தந்தை பெரியார்

- விடுதலை நாளேடு 3 1 20

திங்கள், 23 டிசம்பர், 2019

பாப்பாத்தியான எனக்கு ஏன் பெரியாரை பிடித்தது?

என்னுடைய சிறுவயது முதற்கொண்டு பெரியார் என்றால் சூத்திரன், பிராமண துவேஷி என்று மட்டுமே என் வீட்டு பெரியவர்கள் என்னிடம் கூறிட நான் கேட்டுள்ளேன். அது சிறுவயதில் என்னுடைய மனதில் மிக நன்றாகவே பதிந்தது. அன்றிலிருந்தே என்னுடைய நண்பர்களிடம் பெரியாரை பற்றி எந்தவித புரிதலும் இல்லாமல் தவறாக பேசியதே மிக அதிகம்.

பின் என்னுடைய கல்லூரி நாட்களில் எல்லா விதமான மாணவர்களுடனுமே நட்பு வைத்திருந்தேன். அதில் ஒரு நண்பன் மூலம் பெரியாரை பற்றிய சரியான புரிதலை கிடைக்கப் பெற்றேன். அன்று நான் முக்கியமாக புரிந்து கொண்ட விஷயம் பெரியாரின் மூலம் பிராமணப் பெண்கள் நிறையவே பலன் அடைந்துள்ளனர்.

பொதுவாக இந்த ஜாதி கட்டமைப்பு மற்றும் ஆணாதிக்கத்தின் அழுத்ததின் காரணமாக பெண்கள் தங்களுடைய ஜாதி பெருமையை நிறைய பேசுவார்கள். குறிப்பாக பாப்பாத்திகள் நிறையவே பேசுவார்கள். அப்படி தன்னுடைய ஜாதி பெருமையை பேசவில்லை என்றால் பிராமண ஆண்கள் தங்களை பிராமண பெண்களாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற பயமும் கூட இவர்கள் தங்களுடைய ஜாதி பெருமையை பேசுவதற்கான ஒரு முக்கியமான காரணம்.

அப்படி என்ன பெரியார் பார்ப்பன பெண்களுக்கு செய்துவிட்டார் ?

அந்தக் காலத்தில் மொட்டை பாப்பாத்தி என்ற கிண்டலான சொல்லாடல் இருந்தது, அது முக்கியமாக பார்ப்பன பெண்கள் தன்னுடைய கணவனை இழந்த பிறகு மொட்டை அடித்து காவி புடவையுடன் வீட்டின் ஓரமாக உட்கார வைத்து விடுவார்கள்.

அது பல வருடங்களாக வழக்கத்தில் இருந்தது. பெரியாருடைய பெண் விடுதலை போராட்டத்தின் பின் இந்த வழக்கம் முழுவதுமாக தமிழ்நாட்டில் இருந்து கைவிடப்பட்டது. அது மட்டும் இல்லாமல் மனுஸ்மிருதியின் படி பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தரக்கூடாது என்றும் அவர்களை மாதவிடாயின் போது ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற வழக்கங்களை பார்ப்பன ஆண்கள் அவர்களுடைய வீட்டு பெண்களிடம் காண்பித்து வந்தனர்.

பின் பெரியார் இது எந்த அளவிற்கு முட்டாள் தனம் பெண்களுக்கு கண்டிப்பாக சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று கூறினார். பின் பெண்கள் அடக்கு முறையில் உள்ள காலகட்டத்தில் மறுமணம் என்பது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கடினமான ஒன்றாக இருந்துள்ளது.

அதை மிக முற்போக்காக அன்றே மறுமணம் கண்டிப்பாக பெண்கள் செய்து கொள்ள வேண்டும் என்று பேசியவர் பெரியார். கருத்தடுப்பு, பெண்கள் கல்வி போன்ற பலதரப்பட்ட பிரச்சினைகளை பார்ப்பனீயம் தனக்கு சாதகமாக உபயோகித்து கொண்டதை தடுத்து அவர்களுக்கு கண்டிப்பாக சம உரிமை தரவேண்டும் எனக் கூறியவர் பெரியார்.

தேவதாசி முறையை அடியோடு கிள்ளி எறிவதற்காக முத்துலட்சுமி ரெட்டி உடன் போராடியவர்.

மேலே குறிப்பிட்ட அனைத்துமே சாஸ்திரத்தின் மூலம் பார்ப்பன பெண்களை ஒடுக்கி வைத்தனர். பின் பெரியாரின் பெண்கள் அடிமைத்தனத்திற்கெதிரான குரல் கண்டிப்பாக பார்ப்பன பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இன்றளவும் இருந்து வந்துள்ளது.

உதாரணத்திற்கு எல்லா பார்ப்பன வீடுகளிலுமே பெரியாரைவிட மஹாபெரியவாளுக்கு கூடுதல் மதிப்பு இன்றளவும் உள்ளது. பார்ப்பன பெண்கள் சந்திரசேகர ஸ்வாமிகளை தங்களுடைய உயிராகவும் வணங்குகின்றனர். ஆனால், பெண்களுக்கான சம சொத்து உரிமை சட்டம் இயற்றப்பட்ட பொழுது அதை எதிர்த்து பெண்களுக்கு எதற்கு சொத்தில் சமஉரிமை என டெல்லியில் போராட்டத்தையெல்லாம் முன்னெடுத்தவரே ஸ்வாமி சந்திரசேகரர்தான்.

ஆனால் பெரியார் கடைசி வரை பெண்களுக்கான மிக முற்போக்கான சிந்தனை மற்றும் செயல்களை முன்னெடுத்தார்.

உங்கள் தங்கையிடமோ, அக்காவிடமோ சென்று அடுப் பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்டுப்பாருங்கள் அண்ணன் என்றும் பார்க்காமல் செருப்பு பிஞ்சிடும் என்று பதிலளிப்பார்கள். அங்கே வாழ்கிறார் பெரியார்.

தான் பார்ப்பனீயத்துக்கு அடிமையாக இருக்கிறோம் என்று கூட தெரியாமல் பெரியார் என்ன செய்தார் என்று கூட தெரியாமல் அவரை திட்டும் பார்ப்பன பெண்கள் ஒருமுறை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும் தற்பொழுது தமிழ்நாட்டில் அவர்களால் படிக்க முடிகிறது என்றால் அதற்கு பெரியாருடைய பங்கு கண்டிப்பாக உண்டு.

அதற்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டுத்தான் உள்ளோம்.

அவர் கிழவர் அல்ல எல்லாருக்குமான கிழக்கு திசை.

- ராஜலட்சுமி அனுராதா (வாட்ஸ் அப்)

(நன்றி: வாய்ஸ் ஆப் ஓபிசி,

டிசம்பர் 2019)

விடுதலை ஞாயிறு மலர் 14 12 19