பாஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

2024 – மோடிக்குப் பதிலாகட்டும்!


வியாழன், 1 செப்டம்பர், 2022

பழங்குடியின பணிப்பெண் சித்திரவதை பிஜேபி பெண் பிரமுகர் கைது


ராஞ்சி, செப்.1- ஜார்க்கண்டின் ராஞ்சி நகரை சேர்ந்தவர் சீமா பத்ரா. மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரியான மகேஷ்வர் பத்ராவின் மனைவி. பா.ஜ.க.வின் மூத்த தலைவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், சீமா மீது அவரது வீட்டு பெண் பணியாளர் சுனிதா என்பவர் காவல்துறையில் புகார் அளித்து உள்ளார். அதன்படி, ராஞ்சி நகரின் அர்கோரா காவல்துறையினர் பத்ராவை தேடி வந்தனர். காவல்துறையினர் தேடுவது பற்றி அறிந்ததும் சீமா தப்பி செல்ல முயன்றுள்ளார்.

இதில், ராஞ்சியில் இருந்து சாலை வழியே தப்ப முயன்ற சீமாவை காவல்துறையினர்  கைது செய்துள் ளனர். பழங்குடியின பெண்ணான சுனிதா அளித்த புகாரில் பல கொடுமையான சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுஉள்ளன.

அந்த புகாரில், சீமா பத்ராவின் வீட்டில் பணியாளாக வேலை செய்து வருகிறேன். அவரது வீட்டில் உள்ள கழிப்பறையை நாக்கால் சுத்தம் செய்ய வைத்து கொடுமை செய்துள்ளார் என தெரிவித்து உள்ளார்.

சுனிதாவின் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளன. சூடான பொருட்களை கொண்டு அவரது உடலில் சீமா பத்ரா சூடு வைத்துள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுனிதாவின் வாக்குமூலம் பிரிவு 164இன் கீழ் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

வீட்டில் வேலைக்கு வந்த பெண் பணியாளை துன்புறுத்திய குற்றச்சாட்டை தொடர்ந்து ஜார்க்கண்ட் பா.ஜ.க., சீமாவை இடைநீக்கம் செய்துள்ளது. ராஞ்சி காவல்துறையினர் சீமா பத்ராவை நீதிமன்றத்தில்   நிறுத்தினர். சிறையில் அடைத்தனர்.

வீட்டுக்கு வேலைக்கு வந்த இடத்தில், பழங்குடியின பெண்ணை கொடுமையாக சித்ரவதை செய்த, மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவரான அவரது செயலால் அந்த பகுதி மக்கள் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்து உள்ளனர்.  

புதன், 3 மார்ச், 2021

செம்மொழி நிறுவனத்தைச் சிதைத்த பா.ஜ.க. ஆட்சி - தமிழ் அடையாள வேடமிட்டு உள்ளே நுழைய திட்டமிடுகிறது!


தமிழர்கள் ஏமாளிகள் அல்லஇது பெரியார் மண்-திராவிட மண்-

தக்க பாடம் கற்பிப்பார்கள் என்பதில் அய்யமில்லை!

செம்மொழி நிறுவனத்தைச் சிதைத்த பா..ஆட்சி - தமிழ் அடையாள வேடமிட்டு உள்ளே நுழைய திட்டமிடுகிறதுதமிழர்கள் ஏமாளிகள் அல்லஇது பெரியார் மண் - திராவிட மண் - தக்க பாடம் கற்பிப்பார்கள் என்பதில் அய்யமில்லை என்று   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:

தங்களிடமுள்ள ‘சர்வ பலத்தையும்'

முழு வீச்சில் இறக்கிவிட ஆயத்தம்!

எப்படியாவது தமிழ்நாட்டை கொஞ்சமாவது காவி மயமாக்கி ஆர்.எஸ்.எஸ். - பா...வை வைத்து கலாச்சாரஅரசியல் ரீதியாக ஊடுருவிதிராவிட இயக்கங்களை அழித்துதிராவிட சித்தாந்தங்களை அழித்துஆரிய மயமாக்கிதமிழ்நாட்டின் தனித்தன்மையை மாற்றிவிட கடுமையான முயற்சிகளில் இப்போது தீவிரமாகமத்தியில் உள்ள ஆட்சி அதிகாரச் செல்வாக்கு என்ற ஆயுதத்தைக் கொண்டுஇங்குள்ள ஊழல் நிறைந்த, ‘மடியில் கனம் உள்ளஒரு மாநில (.தி.மு..) ஆட்சியைப் பயன்படுத்தி உண்மையான திராவிடர் இயக்கத்தை ஆட்சிக்கு வர முடியாமல் செய்யும் வியூகத்தை - இந்தத் தேர்தல் களத்தில் அமைத்திடதங்களிடமுள்ள ‘சர்வ பலத்தையும்முழு வீச்சில் இறக்கிவிட ஆயத்தமாகிவிட்டனர்!

காலங்காலமாகத் தொடரும் ஆரிய - திராவிட பரம் பரை தத்துவப் போரின் புதிய அரசியல் வடிவம்தான் தற்போது காணப்படும் அரசியல் நிகழ்வுகள்.

பல்வேறு உத்திகளையும், ‘‘வித்தை''களையும் கைமுதலாகக் கொண்டு...

தமிழ்நாடு பெரியார் மண் - திராவிட மண் - சமூகநீதி மண் என்பதை எப்படியாவது மாற்றிவிட பல்வேறு உத்தி களையும், ‘‘வித்தை''களையும் கைமுதலாகக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். - பா..என்ற ஆரியத்தின் அரசியல் வடிவம் இறங்கியுள்ளது!

வீரத்தால் வெல்ல முடியாதபோதுவஞ்சகத்தையே ஒப்பனைமூலம் அரங்கேற்றி - சூதுசூழ்ச்சிமூலம் ‘‘விஷ உருண்டைக்குத் தேன் தடவிக் கொடுப்பது'' அவர்களின் வாடிக்கை.

திடீர் தமிழ்க் காதல்பீறிட்டுக் கிளம்பவேண்டிய அவசியம் என்ன?

தமிழ்நாட்டு மக்களுக்கு - வாக்காளர்களுக்கு வலை வீசிட இப்போது ஒரு புது முறை ஒன்றை வடக்கே இருந்து வந்து தமிழ்நாட்டைப் ‘‘பிடிக்க'' எண்ணும் ஆர்.எஸ்.எஸ். - பா..தலைவர்கள் கையாளத் தொடங்கியுள்ளனர்பிரதமர் மோடிஉள்துறை அமைச்சர் அமித்ஷாபா..கட்சித் தலைவர் நட்டாபாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற பலரும் தமிழ்மொழிதிருக்குறள்தமிழ் இலக்கியத்தின் பாடல்கள் - தமிழ் கலாச்சாரத்தின் பழைமைபெருமைபற்றிப் பேசி, ‘‘அய்யோஎங்களால் இந்த அழகிய தமிழ் மொழியைப் படிக்க முடியவில்லையே!'' என்று கூறி, ‘வானவில்போல் பல வண்ண வண்ண வேடிக்கைகளை விட்டுச் செல்லுகின்றனர்!

இவர்களுக்கு இப்போது ‘திடீர் தமிழ்க் காதல்பீறிட்டுக் கிளம்பவேண்டியதன் அவசியம் என்ன?

உரைகளைத் தயாரித்து இவர்களுக்குத் தரும் தமிழ்த் தம்பிரான்களுக்குஇதை ஒரு ‘தேர்தல் வியாபாரப் பண்டமாக மாற்றிடயார் யோசனை சொல்லியிருக்கிறார்கள் என்ற பூனைக்குட்டி இப்போது வெளியே வந்துவிட்டது!

ஆர்.எஸ்.எஸ்சில விபீடணர்களைத் தயாரித்துள்ள தோடுசில ஜாதிக்காரர்களுக்குத் தூண்டில் போட்டு இழுத்து வைத்தும் உள்ளது!

தமிழ்ப் பெருமை பஜனைஎன்ற பாசாங்குத்தனம்!

தென்னிந்தியாவுக்கு உள்ள அமைப்பாளர் ஒருவர்  கொடுத்துள்ள அறிக்கையின்படி,  தமிழர்களைதமிழ் நாட்டவரை ‘வளைக்கதமிழ் அடையாளத்தைப் (Tamil Identity) பயன்படுத்தவேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்திட்டமாம்அதன் விளைவுதான் இப்போது வடபுலத்திலிருந்து வரும் காவித் தலைவர்களின் ‘தமிழ்ப் பெருமை பஜனைஎன்ற பாசாங்குத்தனம்!

இது ஒரு தேர்தல் உத்திஇதைப் புரியாத அளவுக்கு தெளிவற்றவர்கள் அல்ல திராவிடத் தமிழ் மக்கள் - குறிப்பாக வாக்காளர்கள்!

‘‘தமிழ்ப் பெருமை போற்றிபோற்றி!!''

அகவல் பாடுவது யாரை ஏமாற்ற?

1. உண்மையில் தமிழ்மீது பற்றோபாசமோஅக்கறையோ இருந்தால்மத்திய அரசினர் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை அலட்சியப்படுத்தி இருப்பார் களாமுத்தமிழ் அறிஞர் கலைஞர்தம் முயற்சியால் காங்கிரஸ் - தி.மு.இடம்பெற்றிருந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A.) அரசினால் தமிழுக்கு செம்மொழித் தகுதி அளிக்கப்பட்டு பிரகடனப் படுத்தப்பட்டது. (அதனாலேயே வடமொழி சமஸ்கிருத மொழியும் செம்மொழி ஆணை பெற்றது).

அதனைக் கடந்த ஏழு ஆண்டுகால பா... - ஆர்.எஸ்.எஸ்ஆட்சி எவ்வளவு சிதைத்துசின்னாபின்னமாக்கிஅந்த மாபெரும் ஆய்வு நிறுவனத்தை - அதன் தனி அடையாளத்தை நீர்த்துப் போக வைத்துஏதோ தினக் கூலி நிறுவனம் போல செய்துவிட்டுஇப்படி ‘‘தமிழ்ப் பெருமை போற்றிபோற்றி!!‘‘ அகவல் பாடுவது யாரை ஏமாற்ற?

2. தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் இன்னமும் ஹிந்தியில் கடிதம் அனுப்புவதும்அதை சுயமரியாதை உள்ள அந்த உறுப்பினர்கள் திருப்பி அனுப்புவதும் தொடர்கதையாக தொடருகிறதா இல்லையா?

அப்புறம் ஏன் இந்தத் ‘‘தமிழ்ப் பெருமை'' மாய்மாலம்?

3. மத்திய அரசு - ஒத்திசைவுப் பட்டியலில் கல்வி இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திகேந்திர வித்யாலயா பள்ளிகளில்தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ் கற்றுக் கொடுக்க - படிக்க வாய்ப்பு ஏற்படுத்த தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு மறுத்துக்கொண்டே, ‘தமிழ் புராதன மொழிஎன்று பசப்புரை செய்து, ‘‘ஓநாய்கள்ஆடு நனைகிறதே என்று அழுவது''மான காட்சி அரங்கேற்றம் எல்லாம் ஏமாற்று வித்தைகள் அல்லாது வேறு என்ன?

4. உள்ளபடியே தமிழ் மொழிமீது இவர்களுக்கு உண்மையான அக்கறையும்ஆர்வமும் இருக்குமே யானால்உலகப் பொது நூலாம் திருக்குறளை தேசிய நூலாகப் பிரகடனப்படுத்தலாமே - செய்ய முன் வருவார்களா?

5. செம்மொழித் தகுதியுள்ள தமிழ் மொழி உலகத்தின் பல நாடுகளில் ஆட்சி மொழியாகவும் இருக்கிறதுஅந்தத் தமிழ் மொழிக்கு இவர்கள் மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கிய தொகை எவ்வளவுபேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதத்திற்கு இதுவரை இவர்கள் செலவழித்த தொகை எவ்வளவுஎன்பது மக்களுக்குப் புரியாதா!

‘‘அவர்களது கனத்த மடியும்உங்கள் பிடியில் உள்ள அவர்களது முடியும்!''

‘‘கொக்குத் தலையில் வெண்ணெயை வைத்துகொக்கைப் பிடிக்க நினைக்கிறார்கள்'' - ஒருபோதும் ‘‘கொக்கைப்'' பிடிக்க முடியாது - சில கொத்தடிமை களைத்தான் பிடிக்க முடியும்காரணம், ‘‘அவர்களது கனத்த மடியும்உங்கள் பிடியில் உள்ள அவர்களது முடியும்!''

எதிர்த்து அழிக்க முடியாததை அணைத்து அழிக்கும் வித்தை ஆரியத்திற்குக் கைவந்த வித்தை!

தமிழ்ப் பம்மாத்து

வேடம்செல்லாது!

தந்திரமூர்த்திகளின் முகமூடி கழலும்காரணம்இது பெரியாரின் சமூகநீதி மண்!

2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மறந்துவிட்டதா?

எனவே, ‘தமிழ்ப் பம்மாத்து வேடம்செல்லாது!

 

 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

2.3.2021

திங்கள், 15 பிப்ரவரி, 2021

திருமணம் செய்வதாக பொய் சொல்லி பெண்ணை வன்புணர்வு செய்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்


ஜோத்பூர், பிப்.8 ராஜஸ்தான் பாஜக சட்டமன்ற உறுப்பினர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

ராஜஸ்தான் மாநிலம் கோகுண்டா சட்டசபை தொகுதி யின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் பிரதாப் லால் பீல். 56 வயதான இவர்மீது, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்து விட்டு ஏமாற்றிவிட்டதாக 35 வயது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் நீமுச் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச் சியில், கலந்து கொண்ட பிரதாப் லால், அங்கு அறிமுகமான தன் னுடன் நெருக்கமாக பழகி வந்தார் என்றும், தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அவர்  தனது மனைவியை விவாகரத்து செய்துள் ளார். இதையடுத்து, கடந்த நவம்பர் 8-ஆம் தேதி குடும்பத்தினரின் சம்மதத்தை பெற்றுவிட்டதாக கூறி உதய்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு வரவழைத்து அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதாப் லால் மீது புகார் அளித்துள்ள அந்த பாதிக்கபப்ட்ட பெண்மணி, தன்னை திருமணம் செய்யாமலும் தனது தொலைபேசி அழைப்புகளை எடுக் காமலும் இருப்பதாகவும்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து அந்த  பெண்

ணுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலியல் வன்புணர்வு புகாரால் ராஜஸ்தான் மாநில அரசியலில் பரபரப்பு எழுந்துள்ளது பாலியல் புகாரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என தொடர்ந்து பெரிய புள்ளிகள் சிக்கிவருவது சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது அந்த வரிசையில் தற்போது இவரும் சேர்ந்துள்ளார்.

சனி, 30 ஜனவரி, 2021

இன்றைய மத்திய பா.ஜ.க. ஆட்சி எங்கே செல்கிறது?


சட்டத்தின் ஆட்சிக்கு அச்சுறுத்தல்; பொதுத்துறை நிறுவனங்கள் வலுவிழப்பு; எதேச்சதிகாரம், ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற போக்குகள் ஆபத்தானவை!

மேனாள் குடியரசுத் துணைத் தலைவர் கல்வியாளர் ஹமீத் அன்சாரியின் கருத்துகளை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் எச்சரிக்கை

நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்கு அச் சுத்தல்; மெஜாரிட்டி என்ற போர்வையில் எதேச்சதிகாரம்; ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற போக்கு இன்றைய மத்திய ஆட்சியில் நீடிப்பதால் ஏற்படும் ஆபத்தைச் சுட்டிக்காட்டி, மேனாள் குடி யரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, தனது வாழ்க்கை வரலாற்று நூலில் சுட்டிக்காட்டியிருப்பதை எடுத்துக் காட்டி திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

முன்னாள் (இந்திய) குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஹமீத் அன்சாரி அவர்கள் (இவர் நிறைந்த கல்வியாளர் என்று போற்றப்படுபவர் - நிதானமான போக்கும், சுபாவமும் கொண் டவர் என்று பலரால் ஒப்புக் கொள்ளப் பட்டவர்).

இவர் தனது தன் வரலாறு நூல் ஒன்றை ‘‘By Many a Happy Accident: Recollections of a Life'' (‘‘பலரால் ஏற்பட்ட மகிழ்ச்சிகரமான விபத்து'' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது) என்ற தலைப்பில் எழுதியுள்ளது குறித்து ஒரு செய்திச் சுருக்கம் இன்றைய ஆங்கில ‘ஹிந்து' நாளேட்டில் (29.1.2021, பக்கம் 11 இல்) வெளிவந்துள்ளது.

அவரைப் போன்ற பெரிய பொறுப்பில் இருந்தவர்கள், அவர்களது பதவிக் காலத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களையும், நாட்டின் தற்போதுள்ள போக்கையும்பற்றி எழுதுவது முற்றிலும் எதிர்பார்க்க வேண்டிய ஒன்று மட் டுமல்ல; அரசியல் வரலாற்றுக் குறிப்புகளாக வும் கருதப்படவேண்டியவை ஆகும்.

மேனாள் குடியரசுத் துணைத் தலைவரின் முக்கிய கருத்து

இவரது இந்த சுயசரிதை நூலில் முக்கிய கருத்தாக, ‘‘அரசியல் சட்ட விழுமியங்கள் (constitutional values), பன்முகக் கலாச் சாரம், சகோதரத்துவம், அறிவியல் மனப் பாங்கு (Scientific Temper) ஆகியவை தற்போதைய அரசியல் கலாச்சாரத்தில் மறைந்து வருவதாகவே தோன்றுகிறது. அவைகட்கு நேர் எதிரான நம்பிக்கை களையும், நடைமுறைகளையுமே புகுத்தி வரும் போக்கே பெரிதும் காணப்படுகிறது!'' என்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளியுறவுத் துறையில் சிறந்த மேதை யான இவர் இந்த நூலில் மிகுந்த வருத் தத்துடன் குறிப்பிடுகிறார். ‘‘நாட்டில் சட் டத்தின் ஆட்சி மிகவும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறது; அரசின் பொது நிறு வனங்கள் வலுவிழந்து, எதேச்சதிகார கண் மூடிய மக்களின் கூச்சலுக்கு உட்படுவதாகத் தெரிகிறது. ‘‘மெஜாரிட்டேரியனிசம், தேசியம், எதேச்சதிகாரம்'' ஆகியவற்றிற்குத் துணை போகும் நிலை உருவாகியுள்ளது!

2019 தேர்தலுக்குப் பின் லட்சிய ரீதியாக ஒரே மொழி, ஒரே மக்கள், ஒரே மதம், ஒற்றை நிலமும், கலாச்சாரமும்தான் என்ற உணர்வு பரப்பிடும் நிலையே உள்ளது!'' என்கிறார்.

இவர் மாநிலங்களவைத் தலைவராக (குடியரசு துணைத் தலைவர் என்பதால் Ex officio - மாநிலங்களவை தலைவர் என்பது அரசியல் சட்டப்படி உள்ள தகுதி யாகும்) இருந்தபோது நிகழ்ந்தவைகளைப் பற்றி எழுதியுள்ளதைப் படிக்கும்போது அதிர்ச்சி தருவதாகவே உள்ளது!

பிரதமரின் திடீர் வருகையும் - உரையாடலும்!

‘‘ஒரு நாள் பிரதமர் மோடி எனது அலுவல கத்திற்குத் திடீரென்று வந்தார். (முன்கூட்டி திட்டமிடப்படாமலேயே) நான் அதிர்ந்து போனேன். உரிய மரியாதையுடன்  அவரை வரவேற்று அமர வைத்தேன்.

உடனே பிரதமர் மோடி, ‘‘உங்களுக்கு நிறைய உயர் பொறுப்புகள் காத்துக் கொண் டிருக்கின்றன; ஆனால், நீங்கள் எங்களுக்கு உதவ மாட்டேன் என்று உள்ளீர்களே'' என்றார்.

அதற்கு நான், ‘‘எனது மாநிலங்களவைப் பணி என்பது மக்களால் கூர்ந்து கவனிக் கப்படுவை'' என்றேன்.

‘‘நீங்கள் ஏன் பல மசோதாக்களை எதிர்த்து கூச்சல் இருந்தாலும், நிறைவேற் றாமல் தள்ளிப் போடுகிறீர்கள்?'' என்று கேட்டார்.

அதற்கு நான், ‘‘எனது முடிவுகளை அவை யின் கட்சித் தலைவர்கள் அனைவரும் வரவேற்கின்றனர். பெருங்கூச்சல் மத்தி யிலும், மற்ற முறைகளில் எப்படி மசோ தாக்களை நிறைவேற்ற இயலும்? பொது வான சட்ட நடைமுறை, அவையின் நடைமுறைகளையே நான் கடைப்பிடித்து வருகிறேன்'' என்று பதில் அளித்தேன். ‘‘தொடர்ந்து அப்படி நடப்பது எனது கடமை'' என்று தெளிவுபடுத்தினேன்.

அடுத்து மோடி அவர்கள், ‘‘ராஜ்ய சபை டி.வி., அரசுக்கு ஆதரவாக இல்லையே'', என்றார்.

அதற்கு நான், ‘‘அந்த டி.வி. சேனலின் மேலாண்மையில் மாநிலங்களவைத் தலை வர் என்ற முறையில் எனக்குப் பங்கிருந் தாலும்கூட, அதன் ஆசிரியக் கருத்துரை களில் நான் எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்க முடியாது.'' (I  had no control over the editorial content) என்று கூறினேன்'' என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன!

இதுதான் ஆட்சியின் வெளிப்படைத்தன்மையா?

இன்றைய பா.ஜ.க. ஆட்சியும், அதன் தலைமையும் - இப்போதுள்ள முழு மெஜாரிட்டி - ரோட்ரோலர் மெஜாரிட்டி -  2019 வரும் முன் நிகழ்ந்தவை இவை.

அப்படியென்றால் இப்போது வெளிப் படையாகவே அரசியல் சட்ட விழுமியங்கள் காற்றில் பறப்பதை எவரும் நன்கு புரிந்துகொள்ள இயலும்!

இதுதான் ஆட்சியின் வெளிப்படைத் தன்மை (Transperancy) என்பதற்கு அடையாளம்!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

29.1.2021

செவ்வாய், 19 ஜனவரி, 2021

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் அனைவரும் ஒழுக்கம் சார்ந்தவர்கள் என்பதெல்லாம் அசல் பித்தலாட்டம் என்பது அம்பலமானது!


தொழிலதிபர் மோகனைக் கடத்தி ரூ.5 கோடி பேரம்: கோவை இந்து மகா சபைப் பிரமுகர் பல பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த பெங்களூரு பா.ஜ.க. பிரமுகர் யுவராஜ் சுவாமி

காவல்துறையின் கிடுக்கிப் பிடியில் சிக்கினர்!

நமது சிறப்புச் செய்தியாளர்

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ‘‘உத்தமர்கள்'', ‘‘ஒழுக்க சீலர்கள்'', ‘‘யோக்கிய சிகாமணிகள்'' என்று தம்பட்டம் அடிப்பவர்கள் - எப்படிப்பட்டவர்கள் என்பது ஒரே நாளில் நடைபெற்ற நிகழ்வுகளில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. மோசடி சங் பரிவார்கள் காவல்துறையின் கிடுக்கிப் பிடியில் சிக்கினர்.

அதன் விவரம் வருமாறு:

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மிக ஒழுக்கமான அமைப்பு என்றும்,  சமுதாயத்தில் தேய்ந்துவரும் ஒழுங்கை, ஒழுக்கத்தை மீட்டெடுக்கவே ‘அவதரித்த' இயக்கம் என்றும், தொண்டு என்ற போர்வையில் ஆரியத்திற்குப் புதிதாக ஆலவட்டம் சுற்றி, அப்பாவி பாமர மக்களை - படித்த பாமரர் உள்பட, சகோதாரத்துவ ஒற்றுமைக்கு கேடு விளைவித்து, ஜாதி, மதங்கள் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி, அவ்வப்போது சூழ்ச்சி களையும், தந்திரங்களையும் கையாண்டும் எப்படியாவது பொய்யான வாக்குறுதிகளை தேர்தலில் தந்து மக்களை மயக்கி வாக்கு பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், தங்களது பிரதான அஜெண்டாவாகிய சிறுபான்மையினரையும், சமூகநீதியையும், ஒழித்துக் கட்டும் பணிகளை முதன்மைப்படுத்தி அவை வேகமாக நடைபெறுகின்றன.

அதற்கு வசதியாக சுதந்திரமாக இயங்கவேண்டிய ஆட்சியின் பல அங்கங்கள் கூட அவற்றின் சுய தன்மையை இழந்துள்ள நிலை உள்ளது!

அரசியல் சட்டத்தின் அடிக்கட்டுமான பகுதியை - ‘‘தோலிருக்க சுளை முழுங்கிய வித்தைபோல்'' - லாவகமாக உரிமைப் பறிப்பு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நடைபெறுகிறது.

தமிழ்நாட்டிலும், மற்ற சில மாநிலங்களிலும் பல பழைய கிரிமினல் ரெக்கார்டு -வழக்குப் பதிவு உள்ளவர்கள் - ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வை வளர்க் கிறோம் என்ற சாக்கில், அவற்றில் தங்களை இணைத்துக் கொண்டு,  தங்கள் பாதுகாப்பு நிலையமாக, இதைப் பயன்படுத்தி வருகின்றனர். காவல்துறையாலும், ஊடகங்களாலும் தொடர்ந்து இது சுட்டிக்காட்டப்பட்டு வருவது மறுக்க முடியாத சாட்சியங்களாகும்!

நேற்று (11.1.2021) ஒரே நாளேட்டில் வந்துள்ள இரண்டு செய்திகள் இதோ:

சென்னை தொழிலதிபர் உள்ளிட்ட 3 பேரை கடத்தி ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய 9 பேர் கைது

ஈரோடு,ஜன.11- சென்னை தொழிலதிபர் உட்பட 3 பேரை கடத்தி ரூ.5 கோடி கேட்டு மிரட்டியது தொடர்பாக- கோவை இந்து மகா சபைப் பிரமுகர் உள்ளிட்ட 9 பேரை சத்தியமங்கலம் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 6 பேரையும் தேடி வருகின்றனர்.

சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர் தொழி லதிபர் மோகன் (46). இவர் பழமை வாய்ந்த பொருட்களை வாங்கி சேமித்து வைப்பதில் ஆர்வம் கொண்டவர். இவரை ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் மற்றும் கோவை இந்து மகா சபைப் பிரமுகர் பிரேம் ஆகியோர் தங்களிடம் பழமை வாய்ந்த பொருட்கள் இருப்பதாகக் கூறி அழைத்துள்ளனர்.

இதன்பேரில் கடந்த 7-ம் தேதி பண்ணாரியம்மன் கோயில் பகுதிக்கு தொழிலதிபர் மோகன் மற்றும் அவரது நண்பர் ரகுமான் உட்பட 3 பேர் வந் துள்ளனர். அங்கு திடீரென 3 கார்களில் வந்த மர்ம கும்பல் போலீஸார் எனக் கூறி, சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டதற்காக கைது செய்வதாகக் கூறி மோகன் உள்ளிட்ட 3 பேரையும் காரில் ஏற்றி யுள்ளனர்.

பின்னர், சத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன் நகர் கிராமத்தில் அன்பு என்பவரது தோட்டத்தில் 3 பேரையும் அடைத்து வைத்துள்ளனர். மூவரையும் விடுவிக்க ரூ.5 கோடி கொடுக்க வேண்டும், இல்லையெனில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

மேலும், மோகனின் மனைவி வித்யாவை தொடர்பு கொண்ட கும்பல் ரூ.5 கோடி தர வில்லையென்றால் உங்கள் கணவரைக் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். இதில் அச்சமடைந்த வித்யா 3 தவணைகளாக ரூ.21 லட்சத்தை, மர்ம கும்பலைச் சேர்ந்த தருமபுரி ரமேஷ் என்பவரது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். மேலும், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வித்யா புகார் அளித்துள்ளார்.

இதன்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் போலீஸார் எனக் கூறி மர்ம கும்பல் மோசடியில் ஈடு பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட ரஞ்சித் (எ) ரஞ்சித்குமார், கோவை இந்து மகா சபைப் பிரமுகர் பிரேம், தருமபுரி ரமேஷ், எரங்காட்டூர் ஜீவானந்தம், சபாபதி, கோபாலகிருஷ்ணன், சண்முகம், சேதுபதி, பாபு ராஜேஷ் குமார் ஆகிய 9 பேரை நேற்று கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 3 சொகுசு கார், ரூ.9 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் இருடியம் தயாரிப்பதற்காக வைத்திருந்த மூலப்பொருட்கள், ஏமாற்றுவதற்காக இவர்கள் ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்த உபகரணங்கள், கெமிக்கல் உள்ளிட்டவற்றை பறி முதல் செய்தனர்.

விசாரணையில், கடத்தலில் 15 பேர் ஈடுபட்டதும், 6 பேர் தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தக் கும்பல், தமிழகத்தில் பல்வேறு நபர்களிடம் விலை உயர்ந்த இருடியம் இருப்பதாகவும், அதனை விற்பனை செய்வதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

ஆர்எஸ்எஸ் நிர்வாகி எனக் கூறி பெண்ணிடம் ரூ.8.3 கோடி ஏமாற்றிய ஜோதிடர்: குட்டி ராதிகாவுக்கு ரூ.1.25 கோடி கொடுத்தது பற்றி பெங்களூரு போலீஸார் விசாரணை

பெங்களூரு, ஜன.11- பெங்களூருவில் ஜோதிடர் ஒருவர் ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகி எனக் கூறி, மத்திய மாநில அரசுகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள நாகர்பாவியைச் சேர்ந்தவர் யுவராஜ் சுவாமி (52). பாஜக ஆதர வாளரான இவர் ஜோதிடம், ரியல் எஸ்டேட், திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்தார். விஜயநகரைச் சேர்ந்த ஒருவருக்கு மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.8 கோடி மோசடி செய்ததாக கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.

யுவராஜ் சுவாமி மீது மேலும் சிலர் இதே போன்ற புகாரை தெரிவித்ததால் இவ்வழக்கு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் யுவராஜ் சுவாமி, அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மல்லேஸ்வரத்தைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவர் யுவராஜ் தன்னிடம் ரூ.8.3 கோடி மோசடி செய்ததாக புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், ‘‘எனக்கு பழக்கமான ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் ஒருவர் மூலம் யுவராஜ் சுவாமி கடந்த 2018-ல்அறிமுகமானார். தன்னை மூத்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி என அறிமுகம் செய்துகொண்ட அவர், தேசிய அளவிலான பாஜக மூத்த தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் படத்தைக் காட்டினார். மேலும் கர்நாடக பாஜக மூத்த தலைவர்கள் பலரும் தனக்கு நண்பர்கள் என கூறினார்.

எனது ஜாதகத்தைப் பார்த்த யுவராஜ் சுவாமி, "அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. மத்திய அரசில் முக்கிய பொறுப்புக்கு வரவும் வாய்ப்பு இருக்கிறது" எனகூறினார். இதற்காக என்னிடம் ரூ.3.8 கோடி பணம் வாங்கினார். எனக்கு சொந்தமான நிலம், அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றை விற்று அவருக்கு அந்தப் பணத்தை கொடுத்தேன்.

என்னை டில்லிக்கு அழைத்துச் சென்று பாஜக மூத்த‌ தலைவர்களை சந்திக்க வைத்தார். ஆனால் எதிர்பார்த்ததை போல எனக்கு எந்தப் பதவியும் கிடைக்கவில்லை. யுவராஜ் சுவாமி என்னிடம்மேலும் ரூ.5 கோடி ப‌ணம் கேட்டார்.என்னிடம் பணம் இல்லாத நிலையில், என் பெயரைச் சொல்லி என் உறவினர்களிடம் ரூ.4.5 கோடி பணம் வாங்கினார்.

ஒருகட்டத்தில் எனக்கு எந்தப் பொறுப்பும் வேண்டாம் எனக்கூறி, என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டேன். அதற்குப் பிறகு என்னிடம் பேசுவதைத் தவிர்த்த அவர், கூலிப்படை மூலம் என்னைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார். அவரோடு இருந்த ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளரும் புகார் அளிக்கக்கூடாது என எச்சரித்தார்'' என தெரிவித்துள்ளார்.

குவியும் புகார்கள்

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் யுவராஜ் சுவாமி மற்றும் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் யுவராஜ் வீட்டில் இருந்து ரூ.2.1 கோடி ரொக்கப்பணம், ரூ.1.7 கோடி மதிப்பிலான 3 சொகுசுகார்கள், ரூ.91 கோடி மதிப்பிலான 100 கசோலைகள், 26 இடங்களில் வாங்கப்பட்ட பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் ஆகிய வற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தன் மகளுக்கு கர்நாடக அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக யுவராஜ் சுவாமி மீது புகார் அளித்துள்ளார். மேலும் ஓய்வுபெற்ற பொறியாளர் ஒருவர் தன் மகனுக்கு பெங்களூரு மாநகராட்சியில் உதவி நிர்வாக பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். யுவராஜ் சுவாமி மீது ரூ.10 கோடிக்கும் அதிகமாக மோசடி புகார்கள் குவிந்து வருவதால் பல கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குட்டி ராதிகாவிடம் விசாரணை

இதனிடையே யுவராஜ் சுவாமி கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவியும் நடிகையுமான குட்டி ராதிகாவுக்கு கடந்த மார்ச் மாதத்தில் ரூ.1.25 கோடி வழங்கியது தெரியவந்தது. இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸ் துணை ஆணையர் நாகராஜ் நேற்றுமுன்தினம் குட்டி ராதிகாவிடம் விசாரணை நடத்தினார். விசாரணை யின் போது அவருக்கும் யுவராஜ்சுவாமிக்கும் உள்ள தொடர்பு, பணப் பரிவர்த்தனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விசாரணைக்குப் பிறகு குட்டி ராதிகா, ‘‘யுவராஜ் சுவாமியை எனக்கு 15 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும். அவர் என் குடும்ப ஜோதிடர். என் தந்தையின் இறப்பைமுன்கூட்டியே சரியாக கணித்ததால் அவர் சொல்வதை எல்லாம் நம்பி னேன். அவர் தயாரிக்கும் ஒரு வரலாற்று படத்தில் நடிப்பதற்காக என் வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சமும், என் சகோதரர் ரவி ராஜ்கணக்கில் ரூ.75 லட்சமும் அனுப்பினார். இதில் எவ்வித முறைகேடும் இல்லை. இந்த விவகாரத்தில் நானும் என் சகோதரரும் போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்" என தெரிவித்தார்.

இதுபோல பல்வேறு செய்திகள்! இதற்குமுன் ஹிந்துத்துவா அமைப்புகளைச் சார்ந்த பலரும், தங்களுக்குக் கொலை மிரட்டல் (போலியாக) வந்ததாகக் கூறி, பழிபோட்டு, தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு, இவற்றை கோவை, திண்டுக்கல் காவல்துறையினர் கண்டறிந்து அம்பலப்படுத்திய செய்திகளும் முன்பு எல்லா நாளேடுகளிலும் வந்தது.

இந்தக் ‘‘காவிகளை'' ஏன் தமிழ்நாடு காலூன்ற அனுமதி மறுக்கிறது என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளட்டும் அகிலம்!

சனி, 19 டிசம்பர், 2020

கிருத்தவ கல்வி நிறுவனங்களில் பயிலும் பாஜக புள்ளிகளின் பிள்ளைகள்

*ராஜ் நாத்சிங்கின் மகன்* இங்கிலாந்தின் "லீட்ஸ்" பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்.

*நிர்மலா சீதாராமன் மகள்* "வாங்மயிபரகலா" அமெரிக்காவின் நார்த் வெஸ்ட் பல்கலைக்கழத்தில் படிக்கிறார்.

வெளி விவகார *அமைச்சர் ஜெய்சங்கரின் மகன்* "துருவ்" ஜியாஜ் டவுன் பல்கலைக்கழகத்திலும், மகள் "மேதா" டெனிசன் பல்கலைக்கழகத்திலும் படிக்கிறார்கள்.

*அமைச்சர் ப்யுஸ்கோயல் மகள்* "ராசிகா" மகன் "துருவ் "ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்கள்.

*அமைச்சர் பிரகாஷ் சவடேகர் மகள்* "அபூர்வா" பாஸ்ட்டன்  பல்கலைக்கழத்தில் படிக்கிறார்.

*அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மகள்* "ஆதித்யா " அமெரிக்காவின் கார்னகி பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்..

*அமைச்சர் சுஜேந்திர சிங் செகாவத் மகள்* "சுபாஷினி" ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்.

*அமைச்சர் ஜிஜேந்திரசிங்கின் மகள்* "அருனேதய் " ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்.

*அமைச்சர் சஞ்சய் தோத்ரா மகன்* "நகுல் " கார்னகி பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்.

*அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் மகள்* "திபோத்தமா " வார்விச் பல்கலைக்கழத்தில் படிக்கிறார்.

*இந்த தேசபக்தர்களின் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் படிப்பது தான் "மேக் இன் இந்தியாவா?*
நம்ம புள்ளைங்க உன் சாமி பெருசா இல்ல என் சாமி பெருசானு அடிச்சுகிட்டு சாவுறானுங்க...

குறிப்பு : *இந்த கல்விக்கூடங்கள் அனைத்தும் கிருஸ்த்தவர்களால் உறுவாக்கப்பட்டது என்பதை கிருஸ்த்தவர்களை வசைபாடும் இராம அவதார காவிகள் நினைவில் கொள்ள வேண்டும்*.
- கட்செவி வழியாக

புதன், 11 மார்ச், 2020

இந்தூரில் என்ன நடந்தது?டாக்டர் கிருபாநிதி பதில்:

தமிழா தமிழா (ஏப்ரல் 2003) ஏட்டுக்கு டாக்டர் கிருபாநிதி அளித்த பேட்டி.
கேள்வி: இந்தூரில் என்ன நடந்தது?
டாக்டர் கிருபாநிதி பதில்: தேசிய கவுன்சில் கூட்டம் இந்தூரில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காகச் சென்றேன். இல. கணேசனும் வந்திருந்தார். கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு நான் தங்கியிருந்த தாஜ் ரெசிடென்சியல் ஹோட்டலுக்குக் கிளம்ப வேண்டும். காருக்காக போர்டிகோ அருகில் காத்திருந்தேன். அப்போது அங்கு இல. கணேசன் அவசரமாக வந்தார். நீ என்ன பெரிய ஆளா? உன்னை ஒழித்திடுவேன் என்று பேசியவர் ஜாதி ரீதியாகவும் என்னை இழிவாகப் பேசினார்.
நான் அவர்கிட்ட பொறுமையா பேசுங்கன்னு சொன்னேன். ஆனா, அவர் எதையும் கேட்கிற நிலையில இல்லை. நிதானம் இழந்து காணப்பட்டார். யார் கிட்டப் பேசுறோம், என்ன பேசுறோம்னு உணருகிற நிலையில் - நிலைமையில இல்லை. ஒரு கட்டத்தில் என் கையைப் பிடிச்சி முறுக்கி அடிச்சிட்டார்.
கேள்வி: இல கணேசன் உங்கள்மீது அவ்வளவுக் கோபமாவதற்கு என்ன காரணம்?
டாக்டர் கிருபாநிதி: என் பதவிக் காலம் முடியப் போகிறது அதற்கு முன் கட்சி கணக்கு வழக்குகளை சரி பார்த்து ஒப்படைக்கணும். அதனால் கணக்கு வழக்குகளை ஆராய்ந்தபோது பல குளறு படிகள் நடந்திருப்பது புரிந்தது. மாநிலச் செயலாளராக இருந்த இல. கணேசன் தேசியச் செயலாளராக ஆன பிறகும் மாநில கட்சி நிதியை கையாண்டு கொண்டி ருந்தார். இதை நான் தடுத்ததால் ஆத்திரப் பட்டு என்னை அடிக்கும் அளவுக்குப் போய் விட்டார்.
கேள்வி: நீங்கள் தமிழக தலைவராக பதவியேற்றதிலிருந்தே பலவித அவமானங் களை சந்தித்து வந்தீர்கள் அல்லவா?
டாக்டர் கிருபாநிதி: ஆமாம், தலைவர் என்கிற முறையில் கட்சிப் பணிகளைக் கவனிக்க எனக்கு அடிப் படை வசதிகள்கூட செஞ்சு தரலை ஃபேக்ஸ் மிஷன் நானே சொந்தமாக வாங்கினேன். டைப் அடிக்கணும் என்றால் வெளியில் கொடுத்து அடிச்சிக்கிட்டேன். இப்படி கட்சிப் பணிகளுக்குச் சொந்த பணத்தை செலவழித்தேன். கட்சியின் மாநிலத் தலைமையகத்திலேயே (கமலாலயம்) ரங்கநாதன் மற்றும் ராஜசிம்மன் ஆகிய இருவரும்தான் ஆட்டிப் படைக்கிறார்கள். இவர்களை இயக்கும் சூத்ரதாரி இல. கணேசன்தான். கமலாலயத்துக்கு வரும் கட்சிக்காரர்கள் தலைவர் இருக்கிறாரா என்று கேட்டால் சரியான பதில்கூட சொல்ல மாட்டார்கள். எவ்வளவோ அவமானங்கள்.
கேள்வி: உங்கள் கட்சியில் சாதீய உணர்வு தலைவிரித்து ஆடுகிறது என்று பலமாக செய்திகள் வருகின்றன. நீங்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்ப தால்தான் அவமானப்படுத்துகிறார்களா?
(சற்று மவுனத்திற்குப்பிறகு) நடக்கிறதை எல்லாம் பார்க்கும் போது அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கு. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவன் தலைமைப் பதவியில் இருக்கிறதை அவங்களால ஜீரணிக்க முடியல என்று கூறினார்.
- நாச்சியாள் சுகந்தி முகநூல் கருத்து , 11.3.20

புதன், 13 நவம்பர், 2019

பாரதீய ஜனதாவே ரப்பர் ஸ்டாம்ப் எப்பொழுது வந்தது?

சென்னை, நவ.9ஆசியான் மாநாட்டிற்காக தாய்லாந்து சென்ற மோடி அங்கே அந்த மாநாட்டிற்கும் இதர வணிக ஒப்பந்தங்களுக்கும் தொடர் பில்லாமல்  திருக்குறளின் ‘தாய்’ மொழி பெயர்ப்பை வெளியிட்டார். இந்த செய்தியை வழக்கத்தை விட அதிகமாக முக்கியப் படுத்தவேண்டும் என்பது தான் பாஜகவின் திட்டமாக இருந்தது. இதையொட்டி தமிழகத்திலுள்ள முன்னணி அச்சு மற்றும் காட்சி ஊட கங்களுக்கு பிரதமர் அலு வலகத்திலிருந்தும், பாஜக தலைமையிலிருந்தும்- உத்தர வுகள் பறந்தன.

திருக்குறளை தாய்லாந்து மொழியில் மோடி வெளியிட் டது உண்மையாக இருக்க லாம். அது ஒரு விளம்பரத் திற்காகவே! 1964-ஆம் ஆண்டே ரமிலி பின் தக்கீர் என்ற மலாய் மொழி அறிஞர் மலாய் மொழியிலும், தாய் லாந்து  மொழியிலும் மொழி பெயர்த்துவிட்டார்.

இந்த நிலையில் மோடி தாய்லாந்து மொழியில் திருக் குறளை வெளியிட்டார் என்று தமிழக பாஜகவினர் பெருமை கொண்டாடி வரும் நிலையில், அவர்களே திரு வள்ளுவருக்கு காவி ஆடை அணிவித்து தங்களின் குயுக் தியை காட்டிவருகின்றனர்.

இவர்களின் இந்தச்செய லுக்கு தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு வெளி வந்த நிலையில், தஞ்சை-பிள் ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை சில விசமிகள் அவமதித்துள்ள னர். இந்த இரண்டு நிகழ்வு களுக்கும் தொடர்பு இருப் பதை அடுத்து குறிப்பிட்ட அமைப்பினர்தான் இந்த வேலையைச் செய்துள்ளனர் என்று கூறி மக்கள் போராட்டம் நடத்திவருகின் றனர் மேலும். அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக வினர் மீண்டும் ஒரு படத்தை வெளியிட்டு 1800-களிலேயே திருவள்ளுவரை இந்து துற வியாக மதித்து புத்தகம் வெளியிட்டுள்ளனர் என்று கூறி அதனை நம்பவைக்க ரப் பர் ஸ்டாம்ப் அடையாளம் ஒன்று இருப்பதையும் காட் டியுள்ளனர்.

27.7.1865 என்ற தேதியிட்ட ஒரு ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை அந்த நூலில் உள்ளது.

இவர்களுக்கு ரப்பர் ஸ்டாம்ப் பற்றிய  வரலாறு தெரிந்திருக்கவாய்ப்பில்லை.

மனித இன நாகரீகம் தோன்றிய காலத்தில் இருந்தே முத்திரை வழக் கத்தில் வந்துவிட்டது, இதை எளிமையாக்க 1500-களில் கிறிஸ்தவ சபைகள் உல கெங்கும் மிசினரிகளை அமைத்து அதற்கு ஆணை களைப் பிறப்பிக்க  நீண்ட மரக்கட்டையின் அடியில் தேவைப்படும் எழுத்துக் களைச் செதுக்கி அதை மையில் நனைத்து காகிதத்தில் முத்திரை இடும் முறையை கொண்டுவந்தனர்., அதில் எழுத்துக்கள் தெளிவில்லாத காரணத்தால் 1880-களுக்குப் பிறகுதான் ரப்பர் ஸ்டாம்ப் கண்டுபிடிக்கப்பட்டது, முதல் முதலாக 1895-ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ராயல் வங்கி ரப்பர் ஸ்டாம்பு களை அலுவலகப் பயன் பாட்டிற்கு பயன்படுத்தியது,

அதன் பிறகு நீண்ட கால மாக ஒரே மாதிரியாக பயன் படுத்தப்பட்டு வந்த ரப்பர் ஸ்டாம்ப் கணினி பயன் பாட்டிற்கு வந்த பிறகு 1980-ஆம் ஆண்டுகளில் இருந்து பல்வேறு வடிவங்களில் பயன் படுத்தும் ரப்பர் ஸ்டாம்புகள் புழக்கத்திற்கு வந்தன,

முக்கியமாக இந்த நூலில் இருக்கும் ரப்பர் ஸ்டாம்ப் 1980களுக்குப் பிறகுதான் பிர பலமானது, மேலும் இதில் உள்ள எழுத்துக்கள் கணினி எழுத்துருவான டைம்ஸ் ரோமனில் உருவாக்கப்பட் டவை ஆகும்., திருவள்ளுவர் ஒரு இந்து மத வீரத் துறவி என நிறுவுவதற்கு எப்படி எல்லாம் பித்தலாட்டம்-மோசடி செய்கிறது காவிக் கூட்டம் என்பதைப் பார்த் தீர்களா?

- விடுதலை நாளேடு 9 11 19

சனி, 26 அக்டோபர், 2019

மராட்டிய மாநிலத்தில் 2 தொகுதிகளில் நோட்டாவிடம் தோற்ற பாஜக கூட்டணி!

மும்பை, அக்.26 மகாராட்டிர சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக கூட்டணியானது, ல தூர் (ஊரகம்) மற்றும் பலூஸ் ஆகிய2 தொகுதிகளில் நோட் டாவிடம் தோற்றுள் ளது.

மறைந்த காங்கிரஸ் தலை வர் விலாஸ்ராவ் தேஷ்முக். முன்னாள் முதல்வரும் ஆவார். இவரது இரண்டு மகன்களும் காங்கிரஸ் சார் பில் வெற்றி பெற்றுள்ளனர். மூத்த மகன் அமித் தேஷ்முக், லதூர்(நகரம்) தொகுதியில் பாஜக வேட்பாளரை 42 ஆயிரம் வாக்குகள் வித்தியா சத்தில் தோற்கடித்த நிலை யில், இளைய மகன் திராஜ் தேஷ்முக், லதூர் (ஊரகம்) தொகுதியில் சுமார் ஒரு லட் சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சிவசேனா வேட்பாளரை டெபாசிட் இழக்க வைத்துள்ளார்.

திராஜ் தேஷ்முக், மொத் தம் பதிவான ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 599 வாக்குகளில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 615 (சுமார் 67.59 சதவிகிதம்) வாக்குகளை அள்ளிய நிலை யில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் சச்சின் என்ற ரவி தேஷ்முக் சுமார் 13 ஆயிரம் வாக்குகளை மட் டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு போயிருக்கிறார். இத்தொகுதியில் நோட்டா 27 ஆயிரத்து 500 வாக்கு களைப் பெற்றுள்ளது. இதே போல, பலூஸ் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வஜீத் கதாம், மொத்த வாக்குகளில் ஒரு லட்சத்து 71 ஆயிரம் (83.04 சதவிகிதம்) வாக்கு களைப் பெற, அவரை எதிர்த் துப் போட்டியிட்ட சிவ சேனா வேட்பாளருக்கு வெறும் 8 ஆயிரத்து 976 வாக் குகள் மட்டுமே கிடைத்துள் ளது. இங்கு நோட்டா பெற் றது 20 ஆயிரத்து 631 வாக் குகள் ஆகும். இவ்வாறு லதூர் (ஊரகம்) மற்றும் பலூஸ் தொகுதிகளில் நோட்டாவி டம் தோற்றது, சிவசேனா - பாஜக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.

இதுதவிர அக்கல்குவா என்ற தொகுதியில் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சிவசேனா வேட்பாளரை, காங்கிரஸ் வேட்பாளர் வென்றுள்ள நிலையில், இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 4 ஆயிரத்து 856 வாக்குகள் கிடைத்துள்ளன.

- விடுதலை நாளேடு 26 10 19