சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 ஜூலை, 2021

இ.பி.கோ.124-ஏ பிரிவு - பழைய ரவுலட் சட்டத்தின் மறுபதிப்பு - கிரிமினல் லா அமென்மெண்ட்டின் ‘புதிய அவதாரமே!'

 

காலனிய அரசின் சட்டங்கள் - காலாவதியாகவேண்டிய சட்டங்களே!

.பி.கே. 124- பிரிவு மட்டுமல்ல - மற்ற பல பிரிவுகள் - பழைய ரவுலட் சட்டத்தின் மறுபதிப்பு - கிரிமினல் லா அமென்மெண்ட் என்ற ‘புதிய அவதாரமாகவேவந்துள்ளனமேலும் பல சட்டப் பிரிவுகளும் காலனிய அரசின் சட்டங்கள் - காலாவதியாக வேண்டிய சட்டங்கள் என்று தீர்ப்புகள் வரவேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது  அறிக்கை வருமாறு:

காலாவதியாக வேண்டிய காலனியச் சட்டம் .பி.கோ.124- பிரிவு

‘‘நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையில்கூட இன்னமும் கூட காலனிய பிரிட்டிஷ் அந்நிய அரசால் இயற்றப்பட்ட 124- என்ற தேசத் துரோக குற்றம் சுமத்தும் சட்டம் தேவையா?'' என்ற நியாயமானநாட்டின் பல்வேறு தரப்பு மக்களும் மனக் குமுறலுடன் எழுப்பும் கேள்வியைஉச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் என்.வி.இரமணா அவர்கள் கேட்டுள்ளார்இதுபற்றிய ஒன்றிய அரசின் பதில் என்னகாலாவதியாக வேண்டிய காலனியச் சட்டமான .பி.கோ.124- பிரிவு பெரிதும் தவறாகவே பயன் படுத்தப்பட்டு வருகிறது.

அப்பாவி மக்கள் தண்டிக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்து வருகிறதே!

‘‘அரசுகள் தங்களை எதிர்ப்பவர்களை அடக்கி ஒடுக்க உடனடியாக இந்த சட்டப் பிரிவை ஏவிதவறாகப் பயன்படுத்துகின்றன.

நிலைமை மிக மோசமாக உள்ளதுஒரு ஆட்சிக்கு மற்ற ஒருவர் சொல்வது பிடிக்கவில்லையானால்உட னடியாக .பி.கோ. 124- பிரிவு அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறதுதனி நபரும்கட்சிகளும் இயங்கு வதற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் நிலையை நாம் இப்போது காண்கிறோம்.

நாங்கள் குறிப்பிட்ட எந்த அரசையும்மாநிலத்தையும் குறை கூறவில்லைஆனால்அதேநேரத்தில்தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66- பிரிவு சட்டம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும்கூடஎத்தனை முறை அதனை விடாப்பிடியாகப் பயன்படுத்தி அப்பாவி மக்கள் தண்டிக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்து வருகிறது!

கிராமத்தில் ஒரு காவல்துறை அதிகாரி யாரையாவது தண்டிக்க விரும்பினால்உடனடியாக அவருக்கு இந்த .பி.கோ.124- பிரிவுதான்கண்ணை மூடிக்கொண்டு எந்த தயக்கமும் இன்றி பயன்படுத்தும் ஆயுதமாக உடனடியாகக் கிடைக்கும் அவல நிலை உள்ளதே!

எத்தனை எளிய மக்கள் இந்தக் கொடுமையால் சிக்கி பாதிக்கப்பட்ட நிலை உள்ளதுஇதுபற்றி யாரும் கேட்பதே இல்லை. (‘‘No accountability for all this'')  என்ற நிலைதானே நாட்டில் உள்ளது.''

என்று ஒன்றிய அரசை நோக்கி நியாயமான கேள்வி களை - நாட்டில் நிலவும் யதார்த்தமான நிலையைச் சுட்டிக்காட்டி கேட்டுள்ளார் நீதிபதி!

தலைமை நீதிபதியின் விளக்கம்!

அதற்குப் பதிலளிக்கும் வகையில்அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘‘சட்டப் பிரிவான

124- பிரிவை செல்லாது என்று நீதிமன்றம் கூறாமல்தவறாகப் பயன்படுத்தப்பட்டவற்றை மட்டுமே செல்லாது என்று கூறலாம்'' என்ற ஒரு விளக்க வேண்டுகோளை முன்வைத்துள்ளார்!

ஆனால்அதற்கும்கூட தலைமை நீதிபதி சில புள்ளிவிவரங்கள்மூலம் சில முக்கிய கேள்விகளையே - தக்க விளக்கமாகத் தந்துள்ளார்.

‘‘2016 இல் இந்த ‘‘தேசத் துரோக'' (.பி.கோ. 124- பயன்படுத்தப்பட்டவழக்குகளின் எண்ணிக்கை 35.

2019 இல் 93 வழக்குகளாக உயர்ந்தனஅதாவது 165 சதவிகிதம் மூன்றே ஆண்டுகளில் பெருகியுள்ளது!

இந்த 93 வழக்குகளில் குற்றப்பத்திரிகை போடப் பட்டுள்ளது 17 சதவிகித வழக்குகளில் மட்டுமே!

அதில் தண்டிக்கப்பட்டவை மிகமிகக் குறைவான சதவிகித அளவான 3.3 சதவிகிதமே!''

‘‘அரசுமீதுவிமர்சனம் செய்வது என்பது எல்லாம் ‘தேசத் துரோகம்என்றே குற்றம் சுமத்தப்பட்டும்பேச்சுரிமைஎழுத்துரிமைகருத்துரிமை பறிப்புக்கும்  இது மிகப்பெரிய கோடரியாக உள்ளதுஇந்தக் கோடரி மரத்தை வெட்டுவதற்குப் பதில்காட்டையே அழித்துச் சிதைக்கும் கோடரியாகவே மாறியுள்ளது'' என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது உச்சநீதிமன்றத்தில்!

தேசத் துரோகக் குற்றப் பிரிவின் எல்லையை வகுக்கவேண்டிய தருணம் நெருங்கி விட்டது!

கடந்த மே மாதத்தில் மற்றொரு மூத்த உச்சநீதிமன்ற நீதிபதியான ஜஸ்டீஸ் ஒய்.சந்திரசூட் இந்தக் தேசத் துரோக குற்றப் பிரிவின் (Seditionஎல்லையை வகுக்க வேண்டிய தருணம் நெருங்கி விட்டது என்று கூறியுள்ளார்!

இச்சட்டப் பிரிவு ஊடகங்களுக்கு எதிராக முண்டா தட்டி மிரட்டிடும் நிலை உள்ளது என்று ஜஸ்டீஸ் எல்.நாகேஸ்வரராவ் (மற்றொரு உச்சநீதிமன்ற நீதிபதியும்கருத்து தெரிவித்ததோடுஆந்திராவில் உள்ள டி.வி.எஸ்., .பி.என்என்ற இரண்டு தொலைக்காட்சிகள்மீதும் அவற்றின் வாயடைக்க இச்சட்டப் பிரிவு (.பி.கோ.

124- வைஏவப்பட்டுள்ளது என்றும் சுட்டியுள்ளார்!

அதேபோலமற்றொரு உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டீஸ் யு.யு.லலித் அவர்கள்துவா என்பவர் பிரதமரையும்ஒன்றிய அரசையும் விமர்சித்தார் என்ப தற்காக அவர்மீது மூர்க்கத்தனப் பாய்ச்சலுடன் இப் பிரிவின் துணையுடன் காவல்துறை எடுத்த நடவடிக்கை செல்லாது என்று தீர்ப்பளித்ததையும் நினைவு கூறுவது பொருத்தமே!

ஒன்றிய அரசு பதிலளிக்க ‘‘நோட்டீஸ்''

தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் ஆர்.வி.இரமணா தலைமையிலான அமர்வு முன்பு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கிஷோர் சந்து வாங்கே மிச்சா மற்றும் அமோடா பிராட்காஸ்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் மற்றும் முன்னாள் அமைச்சர்பத்திரிகை எழுத்தாளர் அருண் ஷோரிகேரள சசிகுமார் போன்றோர் இந்த வழக்குகளை தனித்தனியே தொடுத்துள்ளனர்!

ஒன்றிய அரசுக்குப் பதிலளிக்க ‘‘நோட்டீஸ்'' அனுப்பப்பட்டுள்ளது.

சுமார் 59 ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்றம் அளித்த கேதார்நாத் வழக்கில் .பி.கோ. 124- பிரிவு செல்லும் என்ற அளிக்கப்பட்டத் தீர்ப்பு இந்த புதிய வழக்குகள் மூலம் மறு ஆய்வுக்கும்புதிய பார்வைக்கும் உள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்!

காலனிய அரசின் சட்டங்கள் - காலாவதியாக வேண்டிய சட்டங்கள்

.பி.கோ. 124- பிரிவு மட்டுமல்ல - மற்ற பல பிரிவுகள் - பழைய ரவுலட் சட்டத்தின் மறுபதிப்பு - கிரிமினல் லா அமென்மெண்ட் என்ற ‘புதிய அவதாரமாகவேவந்துள்ளவை முதல் பல சட்டப் பிரிவுகளும் காலனிய அரசின் சட்டங்கள் - காலாவதியாக வேண்டிய சட்டங்கள் என்று தீர்ப்புகள் வரவேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும்!

சுதந்திரக் காற்றை நாட்டு மக்கள் சுவாசிக்க விரும்புவது குடிமக்களது பறிக்கப்பட முடியாத உரிமையாகும்நம்பிக்கையோடு இருப்போமாக!

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம் 

சென்னை       

16.7.2021            

திங்கள், 9 நவம்பர், 2020

பார்ப்பனர்களின் சட்டத்திற்கு எதிரான சட்டங்கள்!

பிரிட்டிஷார் Vs பிராமணர்கள்

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும், ஷத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும், 
வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் 
எனவும் இருந்த, இந்து மனுதர்மச் சட்டத்தை பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல், 
சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 
1773 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் அரசு பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.

ஷத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை, 
1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.

1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது.

1813 ஆம் ஆண்டு கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும் 
(இந்து மனு சட்டம் VII 374, 375), 

ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம். ஆனால், அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் அது பிணம் போன்றதேயாகும். 
(இந்து மனு சட்டம் IX 178)

பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது

சூத்தரப் பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிவிடைகள் செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும் என்ற வழக்கம் பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த 
இந்து சட்டத்தை 1835 ஆம் ஆண்டு Lord
மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற 
ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டுக் கொல்ல வேண்டும் என்ற கங்காதானம் 1835-ல் பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.

1835 ஆம் ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்கான அரசாணை கொண்டுவரப்பட்டது.
1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து மனு தர்மச் சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது.

இந்தியாவை மட்டும் பிரிட்டிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருந்தால் "ஜோதிராவ் புலே"வுக்கு கல்வி கிடைத்திருக்காது.
இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது.
அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவப் பணியும் கிடைத்திருக்காது,
இவையெல்லாம் இல்லாமல் போயிருந்தால் அம்பேத்கர் இல்லை. அம்பேத்கர் இல்லை என்றால் நாம் இல்லை.

சூத்திர பஞ்சமனின் அடிமைச் சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகள் பாராட்டுதலுக்குரியதே!!!

(ஆதாரம்:தினமணி 25-2-2007)