பிற்படுத்தப்பட்டோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிற்படுத்தப்பட்டோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 ஜூலை, 2021

டில்லியில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தலைவர்களைக் கொண்டு புதிதாக ‘சமூக புரட்சிக்கான அணி’ உருவாக்கம்

 

புதுடில்லிஜூலை 27- புதுடில்லியில் அசோகா சாலையில் அமைந்துள்ள ஆந்திர பிரதேச பவனில்  25.7.2021 அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை தாழ்த் தப்பட்டபழங்குடியினர்பிற்படுத்தப்பட் டோர்மதச் சிறுபான்மை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில்அரசமைப்புச்சட்ட நோக்கத்தின்படி ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான சமூகநீதியை உறுதிப் படுத்துவதன்மூலம் நாட்டின் வளர்ச்சிமுன் னேற்றம் காண்பதற்குரிய வழியில் முக்கிய அமைப்புகள் ஒன்றிணைந்து செயலாற்றுவது என்றும்நாடு முழுவதும் ஒடுக்கப்பட்டபிற் படுத்தப்பட்ட மக்கள் சந்தித்து வரும் பிரச் சினைகளுக்கான காரணிகளை எதிர்த்துப் போராடுவது என்றும்அதற்குரிய போராட் டங்களை நடத்துவதற்கான நாள் மற்றும் இடத்தை அடுத்த கூட்டத்தில் தீர்மானிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தின் மேனாள் தலைவர் நீதிபதி ஈசுவரய்யா தலைமையில் அவதேஷ் கூட்டத்தை ஒருங்கிணைத்தார்ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்புஅகில இந்திய மருத்துவக்கல்வி ஒதுக்கீட்டில் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடுபிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு தனி அமைச்சகம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட் டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதிமேனாள் நாடாளுமன்ற உறுப் பினர் பி.கே.அரிபிரசாத்டாக்டர் பாதன்ராஷ்டிரிய ஓபிசி மகா சங்கத்தின் தலைவர் பி.தவ்டேடில்லி பல்கலைக்கழகம் ஷியாம் லால்கல்லூரி பேராசிரியர் டாக்டர் சந்தீப் உள்ளிட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களின் பிரச்சினைகள்குறித்து உரையாற்றினர்.

உத்தரப்பிரதேச மாநில பிற்படுத்தப் பட்டோர் அமைப்பின் செயலாளர்அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் அமைப்புச் செயலாளர் டாக்டர் அம்ரி தான்ஷூயூனியன் வங்கி பிற்படுத்தப்பட் டோர் சங்கத்தின் டில்லி கிளையின் பொறுப் பாளர்கள் ஷியாம் சுந்தர்ஷிவால்பிரசாத் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

வியாழன், 22 ஜூலை, 2021

அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு

 

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் - ஒன்றிய அரசு செயல்படாதது ஏன்?

கூட்டு  முயற்சியை திராவிடர் கழகம் மேற்கொள்ளத் தவறாது

மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக் கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 69 விழுக்காடு இடங்கள் அளிக்கப்படவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும்ஒன்றிய அரசு செயல்படுத்தாது நீதிமன்ற அவமதிப்பு இல்லையாஇவ்வாண்டே ஒன்றிய அரசு செயல்படுத்தவேண்டும்இல்லையெனில் கூட்டு முயற்சியை  மேற்கொள்ளத் திராவிடர் கழகம் தயங்காது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்அவரது  அறிக்கை வருமாறு:

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 69 சதவிகித இட ஒதுக்கீட்டை 2021-2022 ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தாமலும் - ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப் பினை செயல்படுத்தாமலும் இருப்பதுஒன்றிய அரசின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை என்பதைச் சுட்டிக்காட்டி தி.மு.சார்பில் (திராவிடர் கழகம் உள்பட தமிழ்நாட்டின் அத்துணைக் கட்சிகளும் .தி.மு.உள்பட வழக்குகள் போட்டு  சென்ற ஆண்டு பெற்ற தீர்ப்பு அது!) போடப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேற்று (19.7.2021) சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் எடுத்துக்கொள்ளப்பட்டுஏன் இது வரை அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்று நீதிபதிகள் ஒன்றிய அரசைப் பார்த்து  நியாயமான - சட்ட ரீதியான கேள்வியை எழுப்பியுள்ளனர்.

உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஒன்றிய அரசு

‘‘சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக் கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைப்படி மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத் தப்பட்டோருக்கு 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் இட ஒதுக்கீடு வழங்கப்படும்'' என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உத்தரவாதம் தந்துள்ளது.

அப்போது 1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழகத்தில் செயல்பட்டு வரும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும் என்று கூறப்பட் டுள்ளதுஆனால்ஒன்றிய அரசு அந்த உத்தரவாதத்தை தற்போது நிறைவேற்றவில்லை.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனி குமாரி வழக்கு முதலில் தீர்வுக்கு வரவிருக்கிறதுஅதன் பின்னர் இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப் படுத்துவது குறித்து முடிவு செய்வோம் என்ற எண் ணத்தில் ஒன்றிய அரசு செயல்படுகிறது.

 ஆனால்தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில்அகில இந்தியப் படிப்பில் - அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முறைக்கு எவ்வகையிலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனி குமாரி வழக்குத் தடை யாகக் குறுக்கே நிற்கப் போவதில்லை.

இந்த வழக்கில் ஒன்றிய அரசின் செயல்பாடுஉயர் நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியாமலும்அதை அவமதிக்கும்படியாகவும் உள்ளது.

ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் காலக்கெடு

எனவே, ‘‘மருத்துவப் படிப்பில்அகில இந்திய ஒதுக்கீட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையை 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப் படுத்துவது குறித்த ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்துக்குள் தெரியப்படுத்தவேண்டும்இந்த இட ஒதுக்கீட்டு முறையில் மட்டும்தான் தமிழ்நாட்டில் மருத் துவப் படிப்புக்கு சேர்க்கை நடத்தப்படும்விசாரணையை வருகிற 26 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளனர்!

நீட்நுழைவுத் தேர்வுபற்றிய விளக்க சட்டத்தில்கூட அந்தந்த மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு அப்படியே பின்பற்றப்படும் என்று கூறப்பட் டுள்ளது - ஏனோ காற்றில் பறக்கவிடப்பட்டது!

ஒன்றிய அரசின் பிடிவாதப் போக்கு

சென்னை உயர்நீதிமன்றத்தில் அத்துணை கட்சி களும் தொடுத்த வழக்குகள் அடிப்படையில் கொடுக் கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் இருக்கசாக்கு போக்கு சொல்லுவதற்காகவே இப்படி சலோனி குமாரி வழக்கைக் காட்டியுள்ளனர்உச்சநீதிமன்றமே இந்த வழக்குக்கும்தமிழ்நாட்டு இட ஒதுக்கீட்டுக்கும் (69 சதவிகித அடிப்படையில்எவ்வித சம்பந்தமும் இல்லை என்று தெளிவாக கூறிவிட்ட பிறகும்கூடசெயல்படவில்லை என்பதும்அதன் சட்டத்தையே ஒன்றிய அரசு மதிக்காதுசெயல்படுத்தாத கொடுமை  (நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?) - அலட்சியம் - சமூகநீதிக்கு எதிரான ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., பா.அரசின்  பிடிவாதப் போக்கையே காட்டுகிறது!

வெற்றிகரமான தீர்ப்புகளை - ஆணைகளைப் பெற் றும்கைக்கெட்டியது தமிழ்நாட்டு மக்களுக்கு வாய்க் கெட்டாதது  என்பது அசல் சமூக அநீதி அல்லவா?

சென்னை உயர்நீதிமன்றத்தின் நேற்றைய ஆணைக் குப் பிறகாவது வழிக்கு வந்தால் - தாமதிக்கப்பட்ட நீதிமறுக்கப்படாமல் வழங்கப்படல் வேண்டும்!

மற்றொரு கூட்டு முயற்சியை திராவிடர் கழகம் மேற்கொள்ளும்!

முன்பு ஒன்று சேர்ந்த அனைத்துக் கட்சிகளும்அமைப்புகளும் ஓரணியில் திரண்டுஒன்றுபட்டு குரல் எழுப்பதிராவிடர் கழகம் மற்றொரு கூட்டு முயற்சியைத் துவக்கவும் தவறாது!

சமூகநீதியை வைத்து கண்ணாமூச்சி விளையாட்டை டில்லிஒன்றிய அரசு செய்வதுஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வு என்ற நெருப்போடு விளையாடும் விபரீத விளையாட்டே என்பதைப் புரிந்துகொள்வீர்!

தி.மு.தலைமைக்கும்வாதாடிய வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி.,  அவர்களுக்கும் நமது நன்றியும்பாராட்டும்!

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை       

20.7.2021           

வியாழன், 4 மார்ச், 2021

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி அய்தராபாத்தில் ஆர்ப்பாட்டம்



அய்தராபாத், மார்ச் 3- அகில இந்திய பிற் படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங் கானா மாநில பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின்சார்பில் 28.2.2021 அன்று அய்தராபாத் இந்திரா சவுக் பகு தியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவர் நாடா ளுமன்ற மேனாள் உறுப்பினர் வி.அனு மந்தராவ், பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி மற்றும்தேசிய, தெலங்கானா மாநில கூட்டமைப்பின் பொறுப்பா ளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட உரையாற்றினார்கள். கிரீமிலேயர் முறையை ஒழிக்க வேண்டும். ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும். பிற்படுத்தப்பட்டவர் களுக்கு தனியே அமைச்சகம் உருவாக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங் களை தனியார் மயமாக்கக்கூடாது. பிற் படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக் கீட்டை 52 விழுக்காடாக விரிவுபடுத்த வேண்டும். மருத்துவக்கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு உரிய இடஒதுக்கீடு நடை முறைப்படுத்தப்பட வேண்டும். நீதித் துறை, தனியார் துறைகளில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

மண்டல் அறிக் கையின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பின் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத் தப்பட்டது.

திங்கள், 15 பிப்ரவரி, 2021

பிற்படுத்தப்பட்டோர் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


 சென்னை, பிப். 13- அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சென்னை மாநகர நிர்வாகிகள், அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் முடிவுப்படி

1. பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசில் அமைச்சரகம் அமைக்கவேண்டும்.

2. ஜாதிவாரி கணக்கெடுப்பினை 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இணைத்து நடத்திட வேண்டும்.

3. பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய பிரிவினர் எனும் கிரிமிலேயர் முறை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்.

4. தற்போது பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பணிகளுக்காக ஜாதி சான்றிதழ் தருவதில், வருமான வரம்பை உயர்த்த வேண்டும்.

5. மண்டல் குழு பரிந்துரையை முழுமையாக அமல்படுத்தி, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 27-ஆம் தேதி சனிக்கிழமை சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் அருகில் காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 22 நவம்பர், 2019

பிற்படுத்தப்பட்டோர் அனாதைகளா?நாடாளுமன்ற உறுப்பினர்களே என்ன செய்கிறீர்கள்?

இரத்தம் கொதிக்கவில்லையா?

பிற்படுத்தப்பட்டோர் அனாதைகளா?

நாடாளுமன்ற உறுப்பினர்களே என்ன செய்கிறீர்கள்?

மாநிலங்களிலிருந்து மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கல்விக்கான இடங் களில் பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கிடையாதாம். நாடாளுமன்றத்தில் உள்ள பிற்படுத் தப்பட்ட உறுப்பினர்களே, என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? இரத்தம் கொதிக்கவில்லையா என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

நாடு முழுவதும் உள்ள சுமார் 30,774 மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இடங்களுக்கு அகில இந்திய நீட் பீஜி தேர்வு ஜனவரி மாதம் நடத்திட மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற் கான குறிப்பாணையை நவம்பர் ஒன்றாம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கிடையாதாம்!

அதில் மொத்தமுள்ள 30,774 இடங் களில் 50 சதவிகிதம் அதாவது 15,387 இடங்களுக்கு மத்திய அரசே கவுன்சிலிங் மூலம் இடத்தை நிரப்பும். இந்த 15,387 இடங்களில் இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறையில் 50 சதவிகிதம் (7,693 இடங்கள்) பொதுப்பிரிவிலும், 22.5 சதவிகிதம் (3,462 இடங்கள்) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியினருக்கும், 27 சதவிகிதம் (4,155 இடங்கள்) இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கும் வழங்கப்படவேண்டும். ஆனால், மத்திய அரசோ அதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக் கீடு மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இருந்து பெறப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கு வழங்கத் தேவை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சொற்பமான 300 இடங்களில் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட பிரி வினர் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலை வரும் கல்வியாண்டிலும் தொடர் வதால் சுமார் 3,800 இடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைக்காமல் போகும்.

உயர்ஜாதி ஏழைகளுக்கு மட்டும் ‘பம்பர்' பரிசா?

ஆனால், இதே ஆணையில் 10 சதவிகிதம் உயர்ஜாதியில் ஏழையினருக்கு (EWS) மொத்தமுள்ள 15,387 இடங்களி லும்  இடம் கொடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், உயர் ஜாதியினருக்குத் தனியாக மேலும் பொதுப் பிரிவில் உள்ள 7,693 இடங்கள் போக, 1,538 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், 27 சதவிகிதம் உள்ள இதர பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதால், வெறும்  300 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள் ளன. இதன்மூலம் இழப்பு 3,800 இடங்கள். இது மிகப்பெரிய சமூக அநீதியாகும் - கொடுமையிலும் கொடுமையாகும்.

தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் மாநில அரசின் நிதியில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி இடங்களை எடுத்துச் சென்று, அந்த மாநிலத்தின் பெரும் எண்ணிக்கைவாசிகளான பிற்படுத்தப்பட் டோருக்கு பட்டை நாமம் சாத்துவதா? மாநில அரசு என்ன செய்துகொண்டுள் ளது? பா.ஜ.க.வுக்கு பஜனை பாடவே நேரம் போதவில்லையா? கண்டிக்கத் தக்கது.

உயர்ஜாதியினருக்கு மட்டும்

சட்ட விரோதமாக பம்பர் பரிசா?

இவ்வளவுக்கும் மக்கள் தொகையில் மிகவும் அதிகமானவர்கள் பிற்படுத்தப் பட்டோரே! (மண்டல் குழு அறிக்கைப்படி 52 விழுக்காடு) ஜனநாயகப்படி பெரும் பான்மையான மக்களுக்குரிய உரிமை வழங்கப்படுவதற்கு மாறாக மறுக்கப்படும் கொடூரம்!

தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பு!

தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மேலும் சுமார் 1,758 மருத்துவப் பட்ட மேற்படிப்பிற்கான இடங்கள் இங்கே;  அதிலும் இந்தியாவிலேயே முன் னணி மாநிலமாக உள்ளது. இருந்த போதிலும், இந்த 1,758 இடங்களில் 50 சதவிகிதம் அதாவது 879 இடங்களை மத்திய அரசிடம் கொடுத்து விடுகிறோம். இந்த 879 இடங்களில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 50 சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாததால் (இடங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடுகிறது). சுமார் 450 மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இடங்களை ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோரும், மிகவும் பிற் படுத்தப்பட்டோரும் மருத்துவ இடங் களை இழக்கிறார்கள்.

உயர்ஜாதியில் ஏழைகள்மீது கரிசனம் பாரீர்!

அதேநேரத்தில், சட்ட விரோதமான - உச்சநீதிமன்றத்தாலேயே நிராகரிக் கப்பட்ட பொருளாதார அளவுகோலை உயர்ஜாதியில் ஏழை என்பவர்கள்பால் செலுத்தி (10 விழுக்காடு) இடங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள்.

வங்கித் தேர்வில்

நடந்தது என்ன?

எடுத்துக்காட்டாக கடந்த ஜூன் மாதம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கிளார்க் பணிகளுக்காக நடத் தப்பட்ட தேர்வில் எப்படி மதிப்பெண் (கட்-ஆஃப் மார்க்) மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது?

பொதுப் பிரிவினருக்கு 61.25%

இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் 61.25 %

மலைவாழ் மக்களுக்கு 53.95% நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதியினருக்கான கட் ஆஃப் மார்க் என்ன தெரியுமா? 25.5%

நியாயப்படி கல்விக் கூடங்களில் 25.5% மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி கிடையாது. ஆனால்,  பி.ஜே.பி. என்னும் மனுதர்ம ஆட்சியிலே 61.25% மதிப்பெண் பெற்றால்தான் தாழ்த்தப் பட்டோருக்கு, இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கு  தேர்ச்சி. ஆனால், உயர்ஜாதியின ருக்கோ கட் ஆஃப் மார்க் வெறும் 25.5 சதவிகிதம்.

மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி என்பது இதுதானே!

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட உறுப்பினர்கள் என்ன செய்யவேண்டும்?

இரத்தம் கொதிக்கவில்லையா? நாடா ளுமன்றத்தில் இருக்கக்கூடிய தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?.

மக்களவை தி.மு.க. குழுத் தலைவர் மானமிகு டி.ஆர்.பாலு அவர்கள் இது குறித்து நேற்று குரல் எழுப்பியுள்ளது பாராட்டத்தக்கது. நாடாளுமன்றத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்களை ஒருங்கிணைத்து இந்த மனுதர்ம சமூக அநீதிக்கு முடிவு கட்ட வேண்டும். இதைத் தி.மு.க. உறுப்பினர் களும் முன்னெடுக்கவேண்டும் என்பது நமது கனிவான வேண்டுகோள்!

ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களுக்கானது. ஆனால், மனுநீதி பி.ஜே.பி. ஆட்சியிலோ குறைந்த எண் ணிக்கையில் உள்ள பார்ப்பனர்களுக் குத்தான் எல்லாமும் என்ற நிலை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இனி நாம் என்ன செய்யவேண்டும்? குட்ட குட்ட குனிந்து கொண்டு இருக்கப் போகிறோமா?

உரிமை மறுக்கப்பட்ட மக்கள் எரி மலையாகக் கிளர்ந்து எழுவது எந்நாள்? தந்தை பெரியார் பிறந்த மண்தான் குரல் கொடுக்கவேண்டும் - கொடுப்போம் - நிமிர்ந்திடுவீர், எழுந்திடுவீர்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

22.11.2019