தினமலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினமலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 டிசம்பர், 2022

அட, அண்டப் புளுகு - அவுட்டுத் திரி ‘தினமலரே!'

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

காமாலைக் கண்ணு 'தினமலரே!'


கருப்பு துக்கத்தின் அடையாளம் என்று கிண்டல் செய்கிறது. போராட்டம் என்றால், எந்தக் கட்சியும் வித்தியாசம் இல்லாமல் கருப்புடை அணிந்து வீதிக்கு வருகிறார்களே, ஏன்?

ஓ, போராட்டம் என்றாலே, 'தன்னெஞ்சே தன்னைச் சுடும்' என்ற பாணியில் பார்ப்பனக் கூட்டம் பதை பதைக்கிறதே!

அது சரி, கருவிழி கருப்பு என்பதால், பிடுங்கி எறிந்து விடுவீர்களா? வழக்குரை ஞர்களும், நீதிபதிகளும் கருப்புடை அணிவது துக்கத்தின் அடையாளமா?

கருப்பான ஹிந்துக் கடவுள்களை குப்பைமேட்டில் ஒதுக்கித் தள்ளப் போகிறீர்களா?

அட காமாலைக் கண்ணே! உன்னை சொல்லிக் குற்றமில்லை - உங்கள் பூணூல் புத்தியின் விபரீதப் பார்வை அது!

புதன், 10 ஆகஸ்ட், 2022

திராவிட மாடல்" என்றால் குருதிக் கொதிப்பானேன்?

புதன், 9 மார்ச், 2022

தி.க.வின் நிலைப்பாடு - "இனமலர்கள்" புரிந்து கொள்ளட்டும்!


 


13 ஆண்டு காலம் எம்.ஜி.ஆர். ஆட்சியில் திராவிடர் கழகம் கெட்டி மேளம் அடித்ததா?

கடந்த 10 ஆண்டுகாலமாக அதிமுக ஆட்சி நடந்ததே அப்பொழுது  தி.க. என்ன உருமிமேளம் அடித்ததோ?

எந்த நிலையிலும் குடுமிகளின் கொட்டத்தை அடக்குவதில் மட்டும் உறுதியாக இருந்து வந்திருக்கிறது.

கொள்கையின் அடிப்படையில் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி கொள்கையின் அடிப்படையில் ஆதரவும் - எதிர்ப்பும் என்பது தான் தி.க.வின் நிலைப்பாடு - "இனமலர்கள்" புரிந்து கொள்ளட்டும்!

சனி, 19 பிப்ரவரி, 2022

ஆச்சாரியார் கொண்டு வந்தது குலக்கல்வியா - தொழிற் கல்வியா?

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

புண்படுத்துபவர் யார்? 'தினமலர்' 22.8.2021


பெரியார் மறைந்து 48 ஆண்டுகள் கழித்து, அவர் விரும்பிய 'அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை' நிறைவேற் றப்படுகிறது என்றால் அதற்குக் காரணம், பார்ப்பனர்கள் (தினமலர் கூட்டம்) நீதிமன் றங்கள் சென்று காலதாமதம் செய்ததுதானே? தவறுக்குக் காரணமானவர்களே மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தும் இந்தக் குள்ளநரிப் புத்திக்குப் பெயர்தான் பார்ப்பனீயம் என்பது.

மத உணர்வுகளை அழிக்க 3000 ஆண்டுகள் ஆனாலும் முடியாதாம்! என்ன திமிர்வாதம்! மதத்தின் பெயரால் பெரும் பாலான மக்களை சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் இழிவுபடுத்துவது யார்? புண்படுத்துபவர் யார்? தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே, துவேஷிகளாக இருந்து மற்றவர்களைப் பார்த்து 'துவேஷிகள், துவேஷிகள்' என்பார்கள் என்று லாலா லஜபதி(ராய்) சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது!

வியாழன், 7 அக்டோபர், 2021

சென்னை மாநகரம் மீட்கப்பட்டது ராஜாஜியாலா?

 ‘புளுகு’ மலருக்கு பதிலடி!

சென்னை மாநகரம் மீட்கப்பட்டது ராஜாஜியாலா?

21.7.2021 நாளிட்ட ‘தினமலரில் (பக்கம் 11) நாஞ்சில் நாடு கண்ட நம் டி.வி.ஆர்எனும் தலைப்பில் சிறப்புக் கட்டுரை ஒன்று தீட்டப்பட்டுள்ளதுஅதில் ஒரு செய்தி பகிரப்பட்டுள்ளது.

சென்னையை - ஆந்திராவின் தலைநகராக்குவது குறித்த பிரச்சினை அதுஎன்ன எழுதுகிறது தினமலர்?

ஆந்திரர்களின் ஆர்ப்பாட்டங் களுக்கும்போலிக் கண்ணீருக்கும் மத்திய சர்க்கார் பணிந்து சென்னையை ஆந்திராவின் தற்காலிகமாக தலைநகராக்கத் தீர்மானித்திருக்க ராஜாஜி ஒருவர் முழு பலத்தோடு எதிர்த்ததன் பலனாக, “பகீரதன் கங்கையைக் கொண்டு வந்தது போலசென்னையைத் தமிழர்களுக்கு கொண்டு வந்தார்” என்று தினமலரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் உண்மை நிலை என்ன என்பது விளக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

சென்னை தலைநகரப் பிரச்சினை தொடர்பாக நீதிபதி வாஞ்சு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

நீதிபதி வாஞ்சு தன் பணியை 30.12.1952இல் தொடங்கினார். 7.2.1953 இல் வாஞ்சு குழுவின் அறிக்கையை இந்திய அரசிடம் ஒப்படைத்தனர்அவர் தம் பரிந்துரையில்,சென்னை ஆந்திராவின் தற்காலிகத் தலைநகராக 3 முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கலாம்ஆந்திரர்களுக்குச் சென்னையின் மீது எவ்வித உரிமை யும் இல்லைவிருந்தாளிகளைப் போல அல்லது வாடகைதாரர்களைப் போல அவர்கள் இருக்கலாம்அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அவர்கள் சென்னையில் இருக்கக் கூடாதுஅதற்குள் தாங்கள் மாநிலத்தில் புதிய தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும்இமாச்சல பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் இருந்தபோதும்இமாச்சல அரசு சிம்லாவின் மீது எந்த உரிமையையும் கொண்டாட முடியவில்லை” என்பதை வாஞ்சு உதாரண மாகக் காட்டியுள்ளார்இது என் சொந்தக் கருத்து என்றும் கூறியுள்ளார். (வாஞ்சுகுழு அறிக்கை பக். 5)

சென்னையைத் தற்காலிகத் தலைநகராகக் கொடுத் தால் அதன் பிறகு ஆந்திரர்கள் போகமாட்டார்கள் என்று சென்னையில் உள்ள மற்றவர்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றும் கூறியுள்ளார். “ஆந்திர அரசின் அனைத்து அலுவலகங்களையும் உடனடியாக மாற்றிக் கொள்வதில் சிரமம் இருக்கும்சென்னையிலேயே ஆந்திர உயர்நீதிமன்றம் தற்காலிகமாக 5-10 ஆண்டுகள் வரை இருக்கப் பரிந்துரை செய்கிறேன்.” (பக். 8) அதற்கு உதாரணத்தையும் வாஞ்சு காட்டியுள்ளார். “ஒடிசா 1936இல் பிரிந்தாலும் அதனுடைய உயர்நீதிமன்றம் 1947 வரை பீகாரிலேயே இருந்தது” என்கிறார். (பக். 9) “ஆந்திராவின் தலைநகரமும் ஆந்திராவின் உயர்நீதிமன்றமும் உடனடியாகச் சென்னையை விட்டுப் போகவேண்டும் என்று ஆந்திரர் அல்லாத வர்கள் கூறுகிறார்கள்அது உடனே முடியக் கூடிய காரியமல்ல”. (பக். 10)

சென்னை மருத்துவக் கல்லூரிபொறியியல் கல்லூரிசட்டக்கல்லூரி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 36 இடங்களை 25 ஆண்டுகளுக்கு ஆந்திரர்களுக்கு ஒதுக்கித்தரவேண்டும்அந்த இடங்களுக்கான மாணவர் பெயர்ப் பட்டியலை ஆந்திர அரசு கொடுக்கும்“. (பக். 12) இக்குழு பெல்லாரி மாவட்டத்தைக் கருநாடகாவுடன் சேர்க்கப் பரிந்துரை செய்தது. (பக். 2) மற்ற 11 மாவட்டங் களைக் கொண்ட ஆந்திர மாநிலம் அமைத்துக் கொள்ள வழிவகுத்தது.சென்னை நகருக்கு ஈடாக ரூ. 2.3 கோடியை புதிய ஆந்திர அரசுக்குக் கொடுக்கப் பரிந்துரை செய்தது. (பக். 26)`

சென்னை பிரமுகர்கள் ஆலோசனை

அனைத்துக் கட்சிக்கூட்டம்வாஞ்சு அறிக்கையைப் பற்றிப் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கும் சேதிகள் அநேகமாக உண்மையென்றே விஷயம் தெரிந்த மக்களிடையே பேசப்படுகிறதை உத்தேசித்து அதைக் கண்டித்து டில்லி முதன் மந்திரிக்குக் (பிரதமர்கண்டனம் அனுப்புவதற்காக சென்னை மேயர் செங்கல்வராயன் அவர்கள் முன் முயற்சியின் மீது கார்ப்பரேஷன் தியாகரா யர் கட்டிடத்தில் 13.02.1953இல் மாலை 4 மணிக்கு சென்னைப் பிரமுகர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது.

அக்கூட்டத்திற்கு தந்தை பெரியார்,  சர்.முகமது உஸ்மான்,  மேயர் டி.செங்கல்வராயன்மாஜி மந்திரிகள்எம்.பக்தவச்சலம்டி.பரமேஸ்வரன்எஸ்.முத்தையா முதலியார்மாஜி மேயர்கள்ராமநாதன் செட்டியார்ராதா கிருஷ்ணபிள்ளைசிக்யதுல்லா சாயுபுமாஜி அய்க் கோர்ட் ஜட்ஜ் பிபாஷ்யம் அய்யங்கார்மாஜி அட்வகேட் ஜெனரல் குட்டி கிருஷ்ணமேனன்தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உபதலைவர் என்.எல்கரையாளர்பார்லிமென்ட் மெம்பர் பி.எம்லிங்கேஸ்வரன்எம்.எல்.சி., .பொ.சிவஞான கிராமணிகேவிநாயகம்டாக்டர் வி.கேஜான்எம்.பிதாமோதரன்லக்கபராய்நஜீர் உசைன்தெபொமீனாட்சி சுந்தரம்மீனாம்பாள் சிவராஜ்செரியன் ஆகிய தமிழ்கேரளகருநாடக நாட்டுப் பிரதிநிதிகளான முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டு இருந்தார்கள்வந்திருந்தவர்கள் யாவரும் கலந்து ஆலோசித்துபண்டித நேருவுக்கு ஒரு அறிக்கை அனுப்புவது என்றும்அதன் சுருக்கத்தைத் தந்தியில் உடனே அனுப்புவது என்றும்ஒருமனதாக முடிவு செய்தனர்அதில் மேற்கண்டவர்கள் கையெழுத்திட்டனர்பிறகு 16ஆம் தேதி திங்கட்கிழமை திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒரு சென்னை ராஜ்யப் பொதுக்கூட்டம் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றி டில்லிக்கு அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்திய சர்க்காருக்கு வேண்டுகோள்!

அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் முடிவு:-நீதிபதி வாஞ்சு இந்திய சர்க்காருக்கு ஆந்திர ராஜ்ய அமைப்புப் பற்றிச் செய்துள்ள சிபாரிசுகளைக் குறித்துப் பற்பல கவலைகளைக் கொடுக்கக்கூடிய தகவல்கள் பத்திரிக்கை மூலமாகவும் வெளிவந்திருக்கின்றனஆந்திர ராஜ்ய அமைப்பில் மிகவும் முக்கியமான அம் சங்களைப் பற்றிய மேற்கூறிய தகவல்கள் எங்களுக்கு மிகுந்த கவலையைக் கொடுத்திருக்கின்றனஆந்திர  மாநிலத்தின் தலைநகரமானதுஉயர்நீதி மன்றமாவது தற்காலிக ஏற்பாடாகக்கூட சென்னை நகரத்தில் இருக்கக்கூடாதென்று மீண்டும் வற்புறுத்திக் கூற விரும்புகிறோம்ஆந்திரத் தலைநகரையும்உயர்நீதி மன்றத்தையும் சிறிது காலத்திற்குச் சென்னை நகரில் விருந்தாளியாகக்கூட இருப்பதற்கு அனுமதிப்பதால் அநாவசிய மான தொல்லைகளும் சர்ச்சைகளும் ஏற்படும்இதனால் நிர்வாகக் கஷ்டங்களும் தொல்லைகளும் ஏற்படும்ஆந்திர ராஜ்ய அமைப்பு மிகவும் சவுகர்யமாகவும் நேச மனப்பான்மையாகவும் அமல் நடத்தப்பட வேண்டியது அவசியம்ஆகவே ஆந்திரத் தலைநகரை எந்த வகையிலும் சிறிது காலத்திற்குக் கூட சென்னையில் வைத்ததால் அநாவசியமான தகராறுகள்சர்ச்சைகள் ஏற்படுகிறதுஆகவே பாக்கியுள்ள சென்னை ராஜ்யத்தின்தமிழ்கன்னடம்மலையாளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சொற்பகாலத்திற்குக் கூட ஆந்திரத் தலைநகரமோ உயர்நீதி மன்றமோ சென்னை நகரத்தில் இருக்கக் கூடாதென்று ஏக மனதாக அபிப்ராயப்படுகிறார்கள்ஆந்திரர்களில் சிலர் இன்னும் சென்னை நகரத்தில் பாத்தியதை கொண்டாடிக் கிளர்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்இந்த நிலையில் ஆந் திரத் தலைநகரைச் சென்னை நகரில் ஏற்படுத்துவது மிக வும் ஆட்சேபகரமானதுசென்னை நகரம் பாக்கியுள்ள சென்னை மாநிலத்தின் தலைநகராக இருக்கும்ஆகவே பலமான எதிர்ப்பை அலட்சியம் செய்துஆந்திர தலை நகரையும்உயர்நீதி மன்றத்தையும்தற்காலிகமாகக்கூட சென்னை நகரத் தில் ஏற்படுத்துவதென்று முடிவு செய்யா மலிருக்குமாறு இந்திய சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறோம் என்று தீர்மானிக்கப்பட்டது. (‘விடுதலை’, 14.02.1953)

தந்தை பெரியார் வேண்டுகோள்

சென்னை மேயர் தலைமையில் 13.02.1953இல் கூடிய கூட்டத்தில் தந்தை பெரியார் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கையொப்பமிட்டு பிரதமர் நேருவுக்கு அன்றே உடனடியாகத் தந்தி அனுப்பப்பட்டதுவிரிவான கோரிக்கை விண்ணப்பத்தையும் அனுப்பி வைத்தார்கள்.சென்னை நகரமேயர் ஏற்பாடு செய்து திருவல்லிக்கேணிக் கடற்கரையில் 16.02.1953 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் பேசியதாவதுமாட்சிமிக்க மேயர் அவர்களேதாய்மார்களேதோழர்களேநான் உங்கள் ஆரவாரத்திற்கு நன்றி செலுத்துகிறேன்.ஆனால் இந்த ஆரவாரத்திற்கு ஏற்ப நீங்கள் இப்போது என்னிடம் உங்களுக்கு உற்சாகமும் உணர்ச்சியும் ஊட் டத் தகுந்த காரசாரமான பேச்சை எதிர்பார்த்து ஏமாற்ற மடையக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்ஏனெனில் இன்று என் பேச்சு அப்படி இருக்காதுஇந்தக் கூட்டம் பல கருத்துக் கட்சிகள் கூட்டமாகும்இதில் ஆளும் கட்சியும் அங்கம் வகித்திருக்கிறதுகாங்கிரஸ் கலந்துகொண்ட இந்தக்கூட்டத்தில் எனக்குத் தலை காட்டவும் பேசவும் கிடைத்த ஒரு வாய்ப்பை நல்ல வாய்ப்பென்றே கருதுகிறேன்ஆதலால் இந்தக் கூட்டத் தின் தன்மைக்கு ஏற்றபடிதான் நான் பேசுவேன்வேறு எதையாவதைப் பேசி அவர்களுக்குத் தொந்தரவோசங்கடமோ ஏற்படும்படி பேசமாட்டேன்அப்படி எதை யாவதை நான் பேசிவிட்டால் அப்புறம் அவர்கள் என் னைக் கூப்பிட மாட்டார்கள்அன்றியும் எல்லோருடனும் சேர்ந்து எல்லோருக்கும் ஏற்ற முறையில் நமது குறை பாடுகளுக்கு ஒரு பரிகாரம் செய்ய வாய்ப்புக் கிடைத்தால் அது நமக்கு எவ்வளவு பெரிய இலாபம் என்று எண்ணிப் பாருங்கள்.நம் காரியம்நாம் செய்ய வேண்டிய - செய்யப் போகும் காரியம் இருக்கவே இருக்கிறதுஅதை எடுத்துச் சொல்ல நமக்கு வேறு பல மேடைகளும் இருக்கின்றனசந்தர்ப்பங்களும் இருக்கின்றனநாம் கடிவாளம் இல்லாத குதிரைகள்மற்றவர்கள் எல்லோரையும் அப்படி எதிர் பார்க்கக் கூடுமா?இந்தக் கூட்டம் நான்கு நாட்களுக்கு முன் மேயர் காரியாலயத்தில் பல பிரமுகர்கள் கூடிப்பேசிஒரு குறிப்பிட்ட காரியத்திற்காகவே கூட்டப்பட்ட கூட்ட டமாகும்ஆகவே அந்தக்காரியம் நடைபெறும் அளவுக்கே நமது எல்லை இருக்க வேண்டும்.ஆதலால் நான் மேயர் அவர்களின் தீர்மானத்தை ஆதரிக்கிற அளவுக்குப் பேசுகிறேன் என்றார்.

சென்னை நகரம் தமிழ்நாட்டுக்குரியதே என்பதை வலியுறுத்தி 1.2.1953 அன்று பிற்பகல் சென்னை ராபின்சன் பூங்கா அருகிலிருந்து புறப்பட்டன. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் திரண்ட அந்த ஊர்வலத்தில் தந்தை பெரியார் அமர்ந்து வர சென்னை கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது - சென்னை தமிழ்நாட்டுக்கு உரியது என்றும்மொழிவாரி மாநிலம் என்று ஆன பிறகு நிர்வாக வசதிக்காக ஆந்திராவோடு இணைக்கப்பட்டுள்ள தமிழ்ப்பகுதி தமிழ்நாட்டோடு இணைக்கப்பட வேண்டும் என்றும் தந்தை பெரியார் வலியுறுத்திப் பேசினார்.

15.2.1953 சென்னையில் கூடிய திராவிடர் கழக மத்திய கமிட்டியிலும்சென்னையில் தற்காலிகமாக ஆந்திர உயர்நீதிமன்றத்தை வைத்துக் கொள்ளலாம்அரசு அலுவலகங்களையும் சென்னையில் தற்காலிகமாக வைத்துக் கொள்ளலாம் என்று நீதிபதி வாஞ்சு குழுவின் அறிக்கையை கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுதமிழக உரிமை பாதுகாப்பு நாள் (22.2.1953) தமிழ்நாடெங்கும் கொண்டாடுவது என்று குடியரசு தலைவர் ராஜேந்திரபிரசாத்துக்கு கறுப்புக் கொடி கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இவ்வளவு நிகழ்வுகளும் (அனைத்துக் கட்சிக்கூட்டம் உட்படதலைநகரைக் காப்பாற்றுவதற்காக நடைபெற்றுள்ளனஇவற்றுள் எதிலும் தலைகாட்டாத ராஜாஜிதான் சென்னையை மீட்டாராம் - சொல்லுகிறது பூணூல் மலரான ‘தினமலர்’. (21.7.2021, பக்கம் 11)

ஒரு எழுபது ஆண்டுகளுக்குள் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வையே தலைகீழாக புரட்டிபார்ப்பனர்களால் அவர்களின் ஊடகங்களால் திரிக்க முடிகிறது என்பதை கவனிக்க வேண்டும்புளுகுப் பூணூல்கள் எச்சரிக்கைஎச்சரிக்கை!!

பூணூலா, கோவணத்தைக் கட்டிக் கொள்ள இடுப்பில் கட்டும் கயிறா?


'தினமலர்' 22.8.2021 - பக்கம் 14

"பார்ப்பனர்கள் திருந்தி விட் டார்கள் - காஸ்மாபாலிட்டன் ஆகி விட்டனர் - முனியாண்டி ஓட்டலிலும்புகாரியிலும் புகுந்து வெட்டு வெட்டு என்று வெட்டுகின்றனர்.

நிலைமை இப்படி எல்லாம் மாறிவிட்ட பிறகு இன்னும் பார்ப்பனர் களைப் பற்றிப் பேசலாமாதி..காரர் களுக்கு வேறு வேலையில்லையா?' என்று சில வேலையற்றதுகள் வெட்டிப் பேச்சுப் பேசு வதுண்டு.

பார்ப்பனர் எதிர்ப்பு உணர்ச்சி காரணமாக படித்தவர்கள்பதவி களுக்குச் சென்ற மே(ல்)தாவிகள் கூட 'மேல்தட்டுவிமர்சனங்கள் செய் வதுண்டு.

சமூகநீதி பிரச்சினையிலும், 'அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர்உரிமைப் பிரச்சினையிலும் பார்ப் பனர்கள் எப்படி எல்லாம் நடந்து கொள் கிறார்கள் - புழுதிவாரித் தூற்று கிறார்கள் - சாபமிடுகிறார்கள்உண்ணா விரதம் இருக்கிறார்கள் - யாகங்கள் நடத்துகிறார்கள். 'சோடா பாட்டில்புகழ் ஜீயர்கள் எல்லாம் முண்டா தட்டுகிறார்கள்சு.சாமிகள் 'பிராம ணர்கள் மீதா கை வைத்தீர்கள்பார்த்து விடுகிறேன்ஒரு கைஎன்று அரட்டை அடிக்கிறார்கள்.

நேற்றைய தி()னமலரில் (22.8.2021) "பூணூலின் புனிதம் காப்போம்!" என்று பார்ப்பனப் பொடியன் களின் பூணூல் கோலத்துடன் வண்ணமயமாகப் படம் போட்டு பூரித்துத் திளைக்கிறது.

பூணூல் என்ன புதுமையின் சின்னமாசமதர்மத்தின் சாட்சியமா!

"நாங்கள் இரு பிறப்பாளர்கள்" (துவி ஜாதியினர்நீங்கள் எல்லாம் சூத்திரர்கள் - பூணூல் அணியும் தகுதி உங்களுக்குக் கிடையவே கிடையாதுசூத்திரர்கள் என்றால் ஏழு வகைப்படுவர்அதில் ஒன்று விபசாரி மகன்" (மனுதர்மம்  அத்தியம் 8 சுலோகம் 415).

இதனை இந்த 2021லும் காட்டுவதற்குத்தானே ஆவணி அவிட்டம் - ஆண்டுதோறும் பூணூல் புதுப்பிப்பு 'தினமலர்கள்சாங்கோ பாங்கமாக படம் போட்டுத் துள்ளிக் குதிப்பு.

'தினமலரின்புரூடாவைக் கவனித்தீர்களா?

பூணூலை ஒரு தராசுத் தட்டில் போட்டு இன்னொரு தட்டில் தங்கத்தைப் போட்டால் பூணூல் தட்டுதான் கீழே நிற்கிறதாம் - அவ்வளவு கனமாம் - கனபாடிகள் கூறுகிறார்கள்.

அப்படியென்றால் இப்பொழுது ஒரு பரீட்சை வைத்துப் பார்க்கலாமா?

ஒரே ஒரு சுத்த 'பிராமணன்கூடவா கிடைக்காமல் போவான்அவனைக் கொண்டு வந்து நிறுத்தி முறைப்படி சடங்காச்சாரங்களை சாங்கோ பாங்கமாக செய்து அந்தப் பூணூலை தராசின் ஒரு தட்டில் வைத்து இன்னொரு தட்டில் தங்கத்தைப் பாளம் பாளமாக அடுக்கி வைத்து அந்த நிலையிலும் பூணூல்தான் கனமாக இருந்தது என்று நிரூபிக்கத் தயாராசவால்சவால்!!

2021லும் இப்படி 'காது குத்துகிறார்கள்என்றால்கடந்த காலங்களில் எப்படி எப்படியெல்லாம் ஆட்டம் போட்டு இருப்பார்கள்அடுத்தவன் தொடையில் கயிறு திரித்து ஆனந்தக் கூத்து ஆடித் தீர்த்து இருப்பார்கள்.

ஒரு கதையைச் சொல்லுவார்கள் 'பிராமணன் மட்டும்தானா பூணூல் தரிக்கிறான்ஆசாரியார்கள்பக்தர்கள்செட்டியார்கள் எல்லாம் பூணூல் தரிப்பது உண்டே!' என்று பசப்புவார்கள் - நமது அப்பாவி சூத்திரர்களும் 'ஆமாம்ஆமாம் - நல்ல கேள்விஎன்று கூறி எதிரிகளுக்கு முதுகு சொரிந்து விடுவார்கள்.

ஓர் உண்மை தெரியுமாசூத்திரர்களுக்குப் பூணூலை அணியும் உரிமை சாத்திரப்படி உண்டா?

இதோ மனுதர்மம் கூறுகிறது.

"பிராமணனுக்கு மிஞ்சிப் புல்லினாலும்க்ஷத்திரி யனுக்கு வில்லின் நாணையொத்த முறுவற் புல்லினாலும்வைசியனுக்கு ஷணப்பன நாரினாலும்மேடு பள்ளமில் லாமல் மெல்லியதாகப் பின்னி மூன்று வடமாக மேலரை ஞாண் கட்ட வேண்டியதுஎன்று தானே மனுதர்மம் கூறுகிறது.

இதில் எங்காவது சூத்திரர்களுக்கு'ப் பூணூல் அணியும் உரிமை காணப்படுகிறதா?

"புலியைப்(?) பார்த்துப் பூனை சூடு போட்ட கதையாக சூத்திரர்களில் சிலர் பூணூல் தரித்தாலும்சாத்திரப்படி அது செல்லுபடியாகாதே!

ஆச்சாரியார் (ராஜாஜிசென்னை மாநில முதல் அமைச்சராக இருந்தபோது ஆசாரியார்கள் 'ஆச்சாரியார்கள்என்று போடக் கூடாது என்று ஆணை பிறப்பித்தது நினைவில் இருக்கிறதா?

இது ஒரு புறம் இருக்கட்டும் - பூணூல் பூணூல் என்று புனிதம் பேசுகிறார்களே - அந்தப் பூணூல் பற்றி பார்ப்பனர்கள் தலையில் தூக்கி வைத்து 'தைதக்காஎன்று ஆட்டம் போடும் - அமெரிக்கா வரை சென்று 'பிராமணீயம்பற்றிப் பிளந்து கட்டிப் பேசிய திருவாளர் விவேகானந்தர் (நரேந்திரன்என்ன சொல்லுகிறார்?

சுவாமிஜி  சொல்கிறார்முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் கடக்கும் பொருட்டு ஜீவனுடைய சோகங்களையும் துன்பங்களையும் கருணையினால் அழித்து விடுகின்றவரே உண்மைக் குருபழைய காலத்திலே சிஷ்யனானவன் கையில் சமித்துகளை எடுத்துக் கொண்டு குருவினுடைய குடிலுக்குப் போவான்குருவும் அவனுடைய தகுதியை அறிந்துஉளம்சொல்செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரி யாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீட்சை செய்து வேதங்களைப் போதிப்பார்அரையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக் கொள்ளுவான்முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது."

("சுவாமி விவேகானந்தர் சம்பாஷனைகள்"

என்ற நூல் - வெளியீடுஸ்ரீராமகிருஷ்ண மடம்மயிலாப்பூர்சென்னை- 4)

சொல்லுவது நாமல்ல - அவாளின் 'சொக்கத் தங்கமானவிவேகானந்தர் தான்விடயத்தைப் போட்டு உடைக்கிறார்!

கோவணத்தைக் கட்டிக் கொள்ள இடுப்பைச் சுற்றிக் கட்டிக் கொண்டதுதான் தினமலர்களும்தீட்சதர்களும் கர்மாக்களும்அய்யர்அய்யங்கார் களும் இப்பொழுது தோளில் அணிந்து கொள்ளும் பூணூல் என்பதைப் புரிந்து கொள்வீர்இதுதான் புனித நூலாம்!

ஜட்டி போன்ற உள்ளாடை வந்த பிறகுஅதை இடுப்பில் கட்டும் வேலைக்கு வாய்ப்பு இல்லைகோவணக் கயிறு பூணூல் புனிதமான கதையைப் புரிந்து கொள்வீர்!

பார்ப்பனர்தம் மாய்மாலத்தைத் தோலுரிப்பீர்!