சமூகநீதி நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகநீதி நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

தந்தை பெரியார் பிறந்த நாளை, சமூக நீதி நாளாக முதலமைச்சர் அறிவிப்பு : வைகோ பாராட்டு

 

சென்னை,செப்.7- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 17, ஆண்டுதோறும் ‘சமூக நீதி நாளாக’ அரசு சார்பில் கொண்டாடப்படும் என்றவரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றதமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களுக்குமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின்  சார்பில்பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கேரளாவின் வைக்கம் நகரில் ஈழவ மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடிதன் மனைவி நாகம் மையார்சகோதரி கண்ணம்மாள் ஆகியோர்களுடன் சிறை சென்று சமூகநீதி காத்த போராளித் தலைவர் தந்தை பெரியார்.

தாழ்த்தப்பட்டபிற்படுத்தப் பட்ட மக்களுக்குகல்விவேலை வாய்ப்புகளை வழங்கும் சமூகநீதிக் கொள்கை உயர்நீதி மன்றத்தாலும்உச்ச நீதி மன்றத்தாலும் முடக்கப் பட்டபோதுஅதனை எதிர்த்து மக்களை அணி திரட்டிப் போராடிமுதன் முதலாக இந்திய அரச மைப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்ய வைத்து சமூக நீதி காத்த மாபெரும் தலைவர் தந்தை பெரியார்.

பெண் அடிமை ஒழிப்புதொழி லாளர் மேம்பாடுஜாதி ஒழிந்த சமத்துவ நிலைசுயமரியாதை ஆகிய சமூகநீதிக் கொள்கை களுக்காகவிழி மூடுகின்ற வரை யிலும்களத்தில் நின்று போராடிய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியார்.

அவரது தலை மாணாக்கரான அறிஞர் அண்ணா அவர்கள்தமிழ்நாடு அரசையே தந்தை பெரியார் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி மகிழ்ந்தார்.

யுனெஸ்கோ பாராட்டு

27.6.1970 அன்றுஅய்.நாநிறு வனத்தின் யுனெஸ்கோ அமைப்பு, “தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என்றும்சமூக சீர்திருத்த இயக் கத்தின் தந்தை என்றும்மூட நம்பிக்கைபகுத்தறிவு அற்ற சடங் குகளுக்குக் கடும் எதிரி” என்றும் தந்தை பெரியார் அவர்களுக்கு விருது அளித்துப் பாராட்டியது.

அரசுப் பொறுப்பு எதுவும் வகிக்காத அவர் மறைந்தபோதுஅவரது உடலை அரசு மரியாதை யுடன் அடக்கம் செய்யமுதல மைச்சர் கலைஞர் அவர்கள் ஏற்பாடு செய்து சிறப்பித்தார்கள்.

மொரார்ஜி தேசாய் தலைமையிலான இந்திய அரசுதந்தை பெரியாருக்கு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பு செய்தது.

சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள்மண்டல் குழு பரிந்துரைகளை நாடாளுமன்றத் தில் நிறைவேற்றி உரையாற்றும் போது, “சமுதாய மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தையான பெரியார் அவர்களின் கனவுத் திட்டமான சமூகநீதிக் கொள்கையைஇந்த அரசு இப்பொழுது செயல்படுத்து கின்றது” என்று குறிப்பிட்டுபெரி யாருக்குப் புகழாரம் சூட்டினார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் அவர்கள்மண்டல் குழு அறிக்கை வழக்கு தொடர்பான தீர்ப்பில், “குற்றப் பரம்பரையில் பிறந்த என்னைப் போன்றவர்கள்நீதிபதி யாக உயர்வதற்கு பெரியாரின் சமூகநீதிக் கொள்கையே காரணம்” என்று பாராட்டினார்.

இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்ற வி.எஸ்.நைபால் அவர்கள்பெரியார் திடலில் பெரியார் சிலை யையும்பெரியார் நினைவகத்தையும்பெரியார் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டு, “சமூகநீதி காக்க இவரைப் போல் உழைத்தவர்கள் இந்தியாவில் எவருமே இல்லை” என்று மனம் திறந்து பாராட்டினார்.

அத்தகைய மாபெரும் சமூகநீதிப் போராளியான தந்தை பெரியாரின் பிறந்த நாளைசமூகநீதி நாளாக அறிவித்துதலைமைச் செயலகம் தொடங்கிஅனைத்து அரசு அலுவ லகங்களிலும் சமூகநீதி காக்கும் உறுதிமொழி எடுப்பதற்கு ஆவன செய்துள்ளதமிழ்நாடு முதல் அமைச்சர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களுக்குமறுமலர்ச்சி தி.முகழகத்தின் சார்பில்  நன்றியையும்பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 6 செப்டம்பர், 2021

தந்தை பெரியார்பற்றி முதலமைச்சரின் அறிவிப்பு காலத்தால் நின்று பேசும் கல்வெட்டு!


‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்''

என்றே இனி  முதலமைச்சரை அழைப்போம், அழைப்போம்!

 தமிழர் தலைவர் பாராட்டும் - நன்றியும்!

முதலமைச்சரின் அறிவிப்பு குறித்து  தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள    அறிக்கை வருமாறு:

காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சம உரிமை, சம வாய்ப்புப் பெற்றுத் தரவே பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் பொது வாழ்வைத் தொடங்கி, சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவத்திற்காகவே தனது வாழ்வையே அர்ப் பணித்தார்.

அவர்தம் ஒவ்வொரு பிறந்த நாளும் - சமூகநீதி நாளாகக் கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் இன்று சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது வெற்றிக்கான ஒரு கூடுதல் மைல்கல். அதனை சூளுரைத்து மேற்கொள்ளும் நாளாக அறிவித்துள்ளார்.

நமது ஒப்பற்ற மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புக் கேட்டு, பெரியார் தொண்டர்களாகிய நாம் அடையும் மகிழ்ச்சி ஊற்று வெள்ளம் பெருகி ஓடுகிறது!  உலகமெங்கும் உள்ள தமிழர்கள், பகுத்தறிவாளர்கள், மனித உரிமை நேயர்கள் உற்சாக வானில் பறப்பார்கள்!

வரலாற்றின் ஜீவநதியாம் தந்தை பெரியா ருக்குக் காணிக்கையாக்கப்பட்ட அண்ணாவின், கலைஞரின், திராவிட  ஆட்சி எப்படி நன்றி உணர்ச்சியின் நாயகமாகவும், மிளிர்கிறதோ, அதேபோல, தளபதி முதலமைச்சர் தலைமையில் அமைந்த  இந்த ஆட்சி மகுடம் - மாணிக்கக் கற்கள் பொருத்தப்பட்ட ஒளிவீசும் மகுடமாக சமூகநீதி பிரகடனத்தைச் செய்துள்ளது.

இது காலம் காலமாக நின்று பேசும் வரலாற்றுக் கல்வெட்டாக, சிலாசாசனமாக ஒளிவீசப் போகிறது- போகிறது!

நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இனி என்றும் ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' என்றழைக்கப்பட வேண்டியது - வரலாற்றின், காலத்தின் கட்டளை!

நன்றி! நன்றி!! நன்றி மேல் நன்றி!!!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

6.9.2021