நீட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 மார்ச், 2022

'நீட்' நுழைவுத் தேர்வுபற்றி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் பார்ப்பன உயர்ஜாதியினர் வட்டாரங்களால் திட்டமிட்ட பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது!

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

‘நீட்'டால் பலன் யாருக்கு? பாதிப்பு யாருக்கு?

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

சட்டமன்றத்தில் இன்று "நீட்" தேர்வு ரத்து என்பதை ஓர் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்

 

கன்னிப்பேச்சில் உதயநிதி ஸ்டாலின் முழக்கம்

சென்னைஆக.18 நீட் தேர்வு குறித்து தனது கன்னிப்பேச்சில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

• தமிழ்நாட்டின் தலையாய பிரச் சினைகளில் ஒன்றாக இருப்பது நீட் தேர்வு.

• தங்கை அனிதாவில் தொடங்கி 14 மாணவ - மாணவிகள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டனர்.

அவர்களின் பெயரை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்.

• தங்கை அனிதாசெஞ்சி பிரதீபாஏஞ்சலினா சுருதிதிருச்சி சுபசிறீஅரியலூர் விக்னேஷ்கோவை சுபசிறீதிருச்செங்கோடு மோதிலால்தர்மபுரி ஆதித்யாமதுரை ஜோதிசிறீ துர்காதேனி ரிதுசிறீபட்டுக்கோட்டை வைஸ்யாபெரம்பலூர் கீர்த்தனாநெல்லை தனலட்சுமிவிழுப்புரம் மோனிஷா என 14 மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டனர்.

•  முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி உயிரிழந்த தங்கை அனிதாஆதித்யாவிக்னேஷ்மோதிலால்ஜோதிஸ்ரீ துர்கா ஆகியோர் வீடுகளுக்கே நான் நேரில் சென்று அந்த மாணவர்மாணவியரின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்னேன்.

• பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் சொன்ன ஒரே வார்த்தை நீட் வேண்டாம் என்பது தான்.

• முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி காலம் வரை வராத நீட் - அம்மையார் ஜெயலலிதா ஆட்சியின் போதும் வராத நீட் தேர்வுகடந்த ஆட்சியில்தான் திணிக்கப்பட்டது.

• நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஆரம்பம் முதலே நம்முடைய கழக தலைவர் -  முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

• நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் - நம் கழக தலைவர் அவர்கள் அறிவுரைப்படி கழக இளைஞரணி சார்பில் நானும்மாணவரணி சார்பில் அதன் செயலாளர் அண்ணன் சி.வி.எம்.பி எழிலரசன் அவர்களும் போராட்டங்களை முன்னின்று நடத்தினோம்.

• ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணமும் நீட் வேண்டாம் என்பது தான்.

•             மக்களின் இந்த உணர்வை பிரதிபலிக்கும் விதமாகத்தான் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம் கழக தலைவர் -   முதலமைச்சர் அவர்கள் தேர்தல் வாக்குறுதி தந்திருந்தார்கள்.

• தற்போது இதை மய்யப் படுத்திஆட்சி அமைத்து 100 நாட்கள் ஆகிவிட்டனவேஉங்கள் வாக்குறுதி என்ன ஆகிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன?

• எதிர்க்கட்சிகள் மட்டுமில்லைபத்திரிகைக்களும் - ஊடகங்களும் அத்தகைய கேள்வியை எழுப்புகின்றன.

• இதற்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன்.  கடந்த அதிமுக அரசு நீட் தேர்வை தடுத்திருக்க வேண்டும்ஆனால்அவர்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை.

• கடந்த ஆட்சிக்காலத்தின் நிர் வாக சீர்கேட்டால் அரசு என்ற ஒன்று இயங்குகிறதா இல்லையா என்றே தெரியாத நிலையில் தமிழ்நாட்டு மக்கள் போராட வலுவற்று சோர்வடைந்து இருந்தனர்.

• ஒட்டுமொத்த மாநிலமே மந்த நிலையிலேயே இருந்ததுஇதை பயன்படுத்தி கடந்த ஆட்சியாளர்கள் இன்னும் முறைகேடான செயல்களில் ஈடுபட்டனர்.

• ஆனால்நம்முடைய   முதலமைச்சர் அவர்கள் நீட் ஒழிப்பின் முதல்படியாக  ஓய்வுபெற்ற நீதியரசர் .கே.ராஜன் அவர்கள் தலைமையில் கருத்துக்கேட்பு குழு ஒன்றை நியமித்துஅந்த குழு தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்துள்ளது.

• இப்படி பணிகள் சென்று கொண்டிருக்கும் போதேநீட் தேர்வு ஏன் ரத்து செய்யவில்லை என்ற கேள்விகள் வருகின்றன.

• நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டின் அனைத்து தரப்பையும் பாதிக்கிறதுஇதில் கட்சி பேதமெல்லாம் கிடையாது.

• நீட்டால் நம்  தி.மு.கழகத்துக்காரர் வீட்டு பிள்ளைகள் மட்டுமில்லைஅதிமுகபாமககாங்கிரஸ்வி.சி. ஏன் பாஜகவினர் வீட்டு பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றன.

• கட்சி சாராத நடுநிலையாளர்களின் வீட்டு பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றன.

• எனவேநாம் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்நீட் தேர்வு ரத்து என்பதை ஓர் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று உங்கள் வாயிலாக அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

• தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டது போல மகளிருக்கு இலவச பேருந்து பயணம், - அதனை முதலமைச்சர் அவர்களின் பெயரை சொல்லித்தான் - அதாவது கலைஞர் தொலைக்காட்சி பெட்டி வழங்கிய போது எப்படி அது கலைஞர் தொலைக்காட்சி ஆனதோஅதே போல நம் முதலமைச்சர் அவர்கள் இலவச பேருந்து பயணம் அறிவித்த பிறகு நகர பேருந்தை அனைவரும் ”ஸ்டாலின் பஸ்” என்றே அழைக்கின்றனர்.

• ஆனால்இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை.

• பெட்ரோல் விலையை குறைத்தது உள்ளிட்ட நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை பேசாதவர்கள் நீட்டை மட்டும் குறி வைப்பது ஏன்?

• நீட் தேர்வு தவறானது என்பதை உணர்ந்துள்ள பத்திரிகைகளும்ஊடகங்களும் அவற்றின் உரிமையா ளர்களும் நீட்டுக்கு எதிரான தங்களின் குரலை பதிவு செய்ய வேண்டும்

•  முதலமைச்சர் அவர்கள் இதனை எனது அரசு என்று சொல்லவில்லைமாறாக நமது அரசு சொல்லியுள்ளார்கள்எனவேநாம் அனைவரும் ஒன்றிணைந்து நீட் தேர்வை ஒழிக்க குரல் கொடுப்போம் என்று மாண்புமிகு பேரவை தலைவர் அவர்கள் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

நீட் போராட்ட வழக்குகள் வாபஸ்

• இந்த நேரத்தில் நான் உங்களின் வாயிலாக முதலமைச்சர் அவர்களுக்கு இரண்டு கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன்.

• முதலாவது கோரிக்கை : நீட் ஒழிப்பு போராளி தங்கை அனிதாவின் பெயரை அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என்று தங்கை அனிதாவின் சகோதரர் மணி ரத்னம் உள்ளிட்ட அவரின் குடும்பத்தார் என்னிடம் வலியுறுத்தி வருகின்றனர்அப்படி அனிதாவின்  பெயரை சூட்ட வேண்டும் என்பது என்னுடைய விருப்பமும் கூட.

•  இக்கோரிக்கையை  முதல மைச்சர் அவர்கள் நிறைவேற்றி தரு வார்கள் என நம்புகிறேன்.

இரண்டாவது கோரிக்கை

நம்முடைய அரசு அமைந்ததும்ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது கடந்த அதிமுக அரசு போட்டிருந்த அத்தனை வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

• அதேபோலநீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது கடந்த அதிமுக ஆட்சியில் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும்  வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

நீட்: தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெற கூட்டத் தொடரிலேயே சட்ட முன்வடிவு!

 

 சட்டமன்றத்தில் இன்று: பாராட்டத்தக்க அறிவிப்பு!

முதலமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு

சென்னை, ஆக.18  நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க  ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்ட முன்வடிவு இக்கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப் படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் இன்று (18.8.2021) திட்டவட்டமாக அறிவித்தார்.

‘நீட் விவகாரம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியதற்கு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்  அளித்த பதில் வருமாறு:

மாண்புமிகு முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே எனக்கு முன்னால், தன்னுடைய கன்னிப் பேச்சை பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வகையிலே பல வினாக்களை எல்லாம் தொடுத்து, இங்கே நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. உதயநிதி அவர்கள் பேசியிருக்கிறார்.  எனவே, அந்தப் பிரச்சினை களுக்கெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிற துறையினுடைய  அமைச்சர்களிடமிருந்து, மானியக் கோரிக்கை விவாதங்களின்போது, அதற்குரிய விளக்கங்களைப் பெறலாம்.  ஆனால், முக்கியமான ஒன்று; ‘நீட்’ பிரச்சினை குறித்து அவர் இங்கே அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுச் சொன்னார்.  

நீட் பிரச்சினையைப் பொறுத்தவரையில், கட்சிப் பாகுபாடுகளை எல்லாம் மறந்து, அனைவரும் ஒன்று சேர்ந்து, அதற்காகக் குரல் கொடுக்க வேண்டுமென்ற நிலையிலே நாம் இருக்கிறோம்.  அதில் எந்த மாற்றமும் கிடையாது.  அந்த அடிப்படையிலேதான், தேர்தல் நேரத்திலே நாங்கள் உறுதிமொழி தந்தோம்.  ‘திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறுவதுதான் நம்முடைய இலட் சியமாக இருக்கும்.  அதுகுறித்து நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்’ என்று உறுதிமொழி தந்திருக்கிறோம்.    

அதனால்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே, இதுபற்றி அலசி ஆராய்ந்து, பொது மக்களுடைய கருத்துகளையெல்லாம் கேட்டு, ஆய்வு அறிக்கையை  அரசுக்கு வழங்கிட வேண்டுமென்று சொல்லி, ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே இராஜன் அவர்கள் தலைமையிலே ஒரு குழு அமைக்கப்பட்டு, அவரும் அந்தப் பணியை நிறைவேற்றி, ஒரு அறிக்கையைத் தந்திருக்கிறார்கள்.  தற்போது அந்த அறிக்கை சட்டரீதியாகப் பரி சீலிக்கப்பட்டு, இந்தக் கூட்டத் தொடரிலேயே அதற்குரிய சட்டமுன்வடிவு கொண்டு வரப்படும் என்பதைத் தெரிவித்து, அமர் கிறேன்.

- இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

செவ்வாய், 25 மே, 2021

மத்திய அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி வலியுறுத்தல்

மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்' தேர்வு கூடாது


சென்னை, மே 24 மருத் துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு கூடாது, பழைய நடைமுறைப் படி மாணவர் சேர்க் கையை நடத்த அனு மதிக்க வேண்டும் என்று மத்திய அமைச் சர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத் தில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன் முடி வலியுறுத்தினார்.

ஜே.இ.இ. உள்பட மத்திய அரசு சார்ந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் கரோனா நோய்த்தொற்று காரணமாக நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கரோனா நோய்த் தொற்று நிலையை கேட்பதற்காகவும், நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசனையை கேட்பதற்காகாவும், மத்திய அரசு உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நேற்று (23.5.2021) நடத்தியது.

காணொலி காட்சி வழியாக நடந்த இந்த கூட்டத்துக்கு மத்திய ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமை தாங்கினார். இதில் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர்  ஸ்மிருதி இரானி மற்றும் மத்திய கல்வி வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கல்வித்துறை அமைச்சர்களும், செயலாளர் களும் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் தமிழகத்தின் சார்பில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத் தில் மத்திய அமைச்சர்கள், நோய்த் தொற்றுக்கு மத்தியில் மத்திய அரசின் நுழைவுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி னார்கள்.அப்போது தமிழக அரசு தரப்பில் கலந்து கொண்ட அமைச்சர் க.பொன்முடி சில கருத்து களை முன்வைத்தார். குறிப்பாக, மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வான நீட் தேர்வை நடத்தக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை அவர் வலியுறுத்தினார். மேலும், நீட் தேர்வுக்கு பதிலாக, முன்பு மாநில அரசு பின்பற்றி வந்த நடைமுறையின்படியே மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்திய கருத்துகளையும் முன்வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.

உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி பேட்டி

இதையடுத்து கூட்டம் முடிந்து வெளியே வந்த உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேசிய கல்வி கொள்கையை நாங்கள் ஏற்கெ னவே ஏற்க முடியாது என்று தெரிவித்துவிட்டோம். மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் உள்ள பொறியியல், விவசாய படிப்புகளில் சேரு வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், 'நீட்' தேர்வும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் மட்டும் நடத்த வேண்டும். மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் ஏற்கெனவே நாங்கள் 'நீட்' தேர்வுக்கு முன்பு பின்பற்றிய நடைமுறையின்படி, அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறிய கோரிக்கையை வலியுறுத்தினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்கள், பொறியியல் படிப்புக்கும் நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறதே? என்று கேள்வியெ ழுப்பினர்.

அதற்கு அவர், அவர்கள் அப்படி பொறியியல் படிப்புக்கும் நுழைவுத்தேர்வு நடத்தினால் எதிர்ப் போம் என்று பதில் அளித்தார்.

வியாழன், 25 மார்ச், 2021

நீட்’ தொடருவதற்குக் காரணம் யார்?காங்கிரஸ் கூட்டணியா - பா.ஜ.க. கூட்டணியா?

உண்மை என்ன?

 ‘நீட்’ தொடருவதற்குக் காரணம் யார்?காங்கிரஸ் கூட்டணியா - பா..கூட்டணியா?

பொய்யர்களை அடையாளம் காண்பீர்!

நீட்’ தி.மு.அங்கம் வகித்த காங்கிரஸ் மத்திய ஆட்சியின் போதுதான் கொண்டு வரப்பட்டது என்று வார இதழ்கள் முதல் நாள் ஏடுகள் வரை பல்லாயிரக் கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து விளம்பரம் செய்கிறார்களே... அதன் உண்மை நிலை என்னபடித்த வர்களும்பாமரர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்ன?

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத் திட்டத்தில் படிப்போர் 98 விழுக்காடுசி.பி.எஸ்.உள்ளிட்ட பாடத்திட்டத்தில் படிப்போர் வெறும் இரு விழுக்காடே!

ஆனால்மருத்துவக் கல்லூரிக்கு ‘நீட்’ தேர்வு மூலம் கிடைத்திட்ட இடங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருகின்றனமாநிலக் கல்வித் திட்டத்தில் தேர்வு எழுதிய 98 விழுக்காட்டினருக்கு மருத்துவக் கல்லூரிகளில் கிடைத்த இடங்கள் 63 விழுக்காடுசி.பி.எஸ்.உள்ளிட்ட வேறு கல்வி திட்டத்தில் பயின்ற இரு சதவீதத்தினருக்குக் கிடைத்த இடங்களோ 37 விழுக்காடாகும்.

நீட்’ தேர்வை திராவிடர் கழகம் ஏன் எதிர்த்து வருகிறது என்பதற்கான நியாயத்தை இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டும்.

நீட்’ தேர்வினை இந்திய மருத்துவக் குழு (MCI) அறிமுகப்படுத்திய அந்த முதற்கட்டத்திலேயே (2012) திராவிடர் கழகம் கடுமையாக எதிர்ப்புக் குரலை உயர்த்தியது - கண்டனத்தை அழுத்தமாகவும் தெரிவித்தது. ‘நீட்’ தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 115 வழக்குகள் பதிவாயினதி.மு..வும் வழக்குத் தொடுத்ததுண்டுநீதிபதிகள் அல்தமாஸ் கபீர்விக்ரம் ஜித்சென்அனில்தவே அடங்கிய அமர்வில் முதல் இரு நீதிபதிகள் ‘நீட்’ தேர்வுக்குத் தடை விதித்தனர்மூன்றாமவர் மாறுபட்ட தீர்ப்பினை எழுதினார் (18.7.2013).

இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு(MCI க்குதேர்வு நடத்தும் அதிகா ரமே கிடையாது என்று அந்தப் பெரும் பான்மை தீர்ப்பை அறுதியிட்டுக் கூறியிருந்தனர் - இது எல்லாம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்  (UPA)  நடைபெற்ற நிகழ்வுகள் ‘நீட்’ தேர்வுக்கு முடிவு ஏற்பட்டு விட்டது என்று சமூக நீதியாளர்களுக்கும்ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நிம்மதிப் பெருமூச்சு ஏற்பட்ட நிலையில்மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பி.ஜே.பிதலைமையிலான - நரேந்திர மோடி பிரதமரான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மீண்டும் இடி விழுந்தது. ‘நீட்’ செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய பி.ஜே.பிஅரசும்தனியார் மருத்துவக் கல்லூரிகள் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் அனில்தவே.கே.சிக்ரிஆர்.கே.அகர்வால்.கே.கோயல்ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய சாசன அமர்வு ஏற்கெனவே உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மாறாக ‘நீட்’ தேர்வை நடத்திட அனுமதியளித்ததுஇதில் குறிப்பிட்டதக்கது என்னவெனில், 2013இல் உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, ‘நீட்டுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்த அதே அனில்தவேதான் இந்த அய்ந்து நீதிபதிகள் கொண்ட சாசன அமர்வுக்குத் தலைவர் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

சமூகநீதி எத்தனை எத்தனைத் தடைகளையும்கண்ணி வெடிகளையும் தாண்டிவர வேண்டியுள்ளது என்பதை எண்ணும் போது இரத்தக் கண்ணீர்தான் வடிக்க வேண்டும். +2 வரை பன்னிரெண்டு ஆண்டுகள் படித்து அரசுத் தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதாம்மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான முன்னெடுப்புப் பாடப் பகுதிகள் இதில்தான் உள்ளன என்பதை அறிய மாட்டார்களாஎல்லாம் தெரியும்.

கிராமத்தைச் சேர்ந்த அனிதாக்கள் எல்லாம்கூட 1200 மதிப்பெண்களுக்கு 1,176 பெற முடிகிறதுஅந்த அளவுக்கு மேலே வந்து விட்டனர்இதனை வளர விட்டால் தங்களின் ஆதிக்கத்துக்கு ஆபத்து வந்து விடும் என்ற அச்சத்தின் காரணமாகத் திணிக்கப்பட்ட ஆரியச் சதிதான் இந்த ‘நீட்’.

(28.6.2020 அன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கிவீரமணி அவர்கள் காணொலி மூலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசிய ஆதாரப்பூர்வ தகவலும் கருத்தும் இது)

நீட்டுக்கு உயிரூட்டி நடைமுறைக்குக் கொண்டு வரக் காரணமாக இருந்தது - இருப்பது நரேந்திர மோடி தலைமையிலான பா..அரசே - அதனோடு கூட்டணி வைத்திருக்கும் அதிமுக அரசு  தி.மு.பொய் சொல்லுவதாக தலைகீழாகப் பிரட்டி விளம்பரம் செய்யும் அசல் பொய்யர்களை அடையாளம் காண்பீர்வாக்குச் சீட்டு மூலம் தண்டிப்பீர்!