சனி, 26 அக்டோபர், 2019

நவம்பர் முதல் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாட நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சென்னை, அக். 26- நவம்பர் 1ஆம் தேதியை, தமிழ்நாடு நாள்., என்று கொண்டாட நிதி ஒதுக்கி, தமிழ்நாடு அரசு, அரசாணையை வெளியிட்டுள்ளது.

1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்டதை, பெருமைப் படுத்தும் வகையில் ஆண்டுதோறும் விழா எடுத்து சிறப் பாக  கொண்டாடப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி, அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதியினை தமிழ்நாடு நாள் என சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு அரசு அர சாணை வெளியிட்டுள்ளது.

மேலும் மொழிக்காவலர்கள், மற்றும் தமிழறிஞர் களையும் சிறப்பிக்கும் வண்ணம் விழா எடுத்து சிறப்பிக்கவும் முடிவு செய்திருக்கிறது. மேலும், இளைய சமுதாயம் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்துகொள்ளும் வகையில் கவிய ரங்கங்கள், பட்டிமன்றம், கருத்தரங்கம், இளையோர் அரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுக்க ஏதுவாக, 10 லட்சம் ரூபாய் நிதியினையும் தமிழ்நாடு அரசு ஒதுக்கி யுள்ளது.

- விடுதலை நாளேடு 26 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக