நூல் வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

பாதை மாறா பயணம்‘‘ நூலினைப் பெற்றுக்கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

சனி, 26 நவம்பர், 2022

அன்றே சொன்னார் பெரியார்' என்ற புத்தகத்தை தமிழர் தலைவர் வெளியிட்டார்

சனி, 2 அக்டோபர், 2021

ஆர்.எஸ்.எஸின் சனாதனத்தை முறியடிப்போம்! பெரியார் மண்ணில் தாமரை மலர முடியாது!

 

புத்தக வெளியீட்டு விழாவில் ஒலித்த முத்துகள்

தொகுப்புமின்சாரம்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்ட ‘‘ஆர்.எஸ்.எஸ்என்னும் டிரோஜன் குதிரை'' நூல் வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் நேற்று (8.9.2021) மாலை திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது.

அதில் ஒலித்த கருத்து மணிகள்:

தயாநிதி மாறன் எம்.பி.

நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பி னர்கள் பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்தபோதுபா...வினர் ‘ஜெய் ஸ்ரீராம்என்று குரல் கொடுக்கதமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ‘‘பெரியார் வாழ்க'', ‘‘அண்ணா வாழ்க'', ‘‘கலைஞர் வாழ்க'', ‘‘வெல்க திராவிடம்'' என்று முழங்கினர் - நாடாளுமன்றமே அதிர்ந்தது.

***

ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் காலத் தின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியதுஒவ்வொரு இளைஞர்களிடமும் கொண்டு சேர்க்கப்படவேண்டும்.

இப்பொழுது இளைஞர்கள் மத்தியில் பெரியார்மீதான தாக்கம் அதிகரித்துள்ளதுபெரியார்பற்றிய நூல்கள் ஏராளமாக விற்கப்படுகின்றனஇதற்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ். - சங் பரிவார்கள் - அவற்றின் அரசியல் வடிவமான பா...வின் மோசமான நடவடிக்கைகள்தான்!

***

நூற்றுக்கு 3 சதவிகிதம் உள்ளவர்களை திராவிட இயக்கம் ஏன் எதிர்க்கிறதுஇரண்டாயிரம் ஆண்டுகால மாக அவர்களின் ஆதிக்கமும் - இன்றுவரை அதனை நிலை நிறுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகள்தான் - எதிர்ப்புக்குக் காரணம்.

***

விநாயக ஊர்வலத்துக்குத் தமிழ்நாடு அரசு தடை போட்டதற்கு என்ன காரணம்மத விழாக்களில் மக்கள் அதிகம் கூடுவதால்கரோனா பரவுகிறதுகும்பமேளாவில் வடநாட்டில் லட்சக்கணக்கில் கூடியதால்ஆயிரக்கணக் கானோர் கரோனாவால் பாதிக்கப்படவில்லையாகேரளாவில் கரோனா பாதிப்புக் குறைந்து வந்த நிலை யில்ஓணம் பண்டிகை காரணமாக கரோனா தொற்று அதிரித்துவிட்டதே - இந்தக் காரணங்களுக்காகத்தான் தமிழ்நாட்டில் விநாயக ஊர்வலத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மணி அடியுங்கள்கரோனா ஒழியும்விளக்கு ஏற்றுங்கள் கரோனா ஒழியும் என்றாரே பிரதமர் மோடி - இவற்றால் கரோனா ஒழிந்ததா?

***

நீட்டை நாங்கள் ஏன் எதிர்க்கிறோம்முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு அது தடையாக இருக்கிறதுகிராமப்புற மாணவர்களுக்குக் கடினமாக இருக்கிறது என்பதால்தான்.

நீட் தேர்வுதான் தகுதிக்கு அடையாளமாகுடியரசுத் தலைவருக்கும்பிரதமருக்கும் வைத்தியம் பார்ப்பவர்கள் எல்லாம் ‘நீட்எழுதி டாக்டர்கள் ஆனவர்களாஉலகம் முழுவதும் புகழ்பெற்ற டாக்டர்களாக விளங்குபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் - நீட் எழுதாமல் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைத்து டாக்டர்கள் ஆனவர்கள்தான் அவர்கள்.

சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் டாக்டராக முடியும் என்ற நிபந்தனையை வைத்த கூட்டம்தான் இப்பொழுது ‘நீட்'டை வலியுறுத்துகிறது என்றார் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன்.

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி.,

கரோனா காலத்திலும் தலைவர் ஆசிரியர் அவர்கள் காலத்துக்குத் தேவையான ஒரு நூலை - அதுவும் ஆய்வு நலை எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது.

***

ஆர்.எஸ்.எஸைப் புரிந்துகொண்டால்தான் பி.ஜே.பியைப் புரிந்துகொள்ள முடியும் - எனவே இந்த நூல் மிகவும் முக்கியமானது.

***

1925 ஆம் ஆண்டில்தான் சுயமரியாதை இயக்கமும்ஆர்.எஸ்.எசும் தோன்றினதமிழ்நாட்டில் மட்டும் ஆர்.எஸ்.எஸ்ஏன் தலைதூக்க முடியவில்லைகாரணம்தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் - திராவிட இயக்கம் - திராவிடர் கழகம்தான்.

***

சனாதனத்தை வேரறுக்கும் பணியைத்தான் தந்தை பெரியாரும்அண்ணல் அம்பேத்கரும் மகத்தான முறையில் மேற்கொண்டனர்.

***

தந்தை பெரியார் மறைந்தபோது - பெரியாரின் தன் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார் - நாம் அந்தப் பயணத்தைத் தொடர்வோம் என்றார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

இப்பொழுது அண்ணன் தளபதி ஸ்டாலின் அவர்கள் குடும்ப வாரிசாக இல்லாமல்கொள்கை வாரிசாக ஒளிவீசுகிறார் - அதன் அடையாளம் தான் தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்துஅன்று உறுதிமொழியையும் அரசு பணியாளர்கள் எடுக்கவேண்டும் என்றும் சட்டப்பேர வையில் அறிவித்துள்ளார்.

***

ஆர்.எஸ்.எஸ்பிள்ளை பிடிக்கும் ஒரு வேலையில் இறங்கியுள்ளதுபள்ளிப் பிள்ளைகளுக்கு யோகா சொல்லிக் கொடுக்கிறோம் என்ற போர்வையில் ஆர்.எஸ்.எசுக்கு ஆள் பிடிக்கிறார்கள்.

திராவிடர் கழகம் இருக்கும்வரை ஆர்.எஸ்.எஸின் ஜம்பம்தந்திரங்கள் எல்லாம் பலிக்கவே பலிக்காது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முயற்சி பெரிய வெற்றியைக் குவிக்கும் என்றார் எழுச்சித் தமிழர்.

***

தமிழர் தலைவர் ஆசிரியர்

தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அய் சமூகநீதி நாளாக அறிவித்துள்ளார் நம்முடைய முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள்.

அந்த நாளில் உறுதிமொழி ஒன்றை அரசு அலுவலகங்கள்கல்வி நிறுவனங் களில் எடுக்கவேண்டும் என்று அறிவித்துஅந்த உறுதிமொழி வாசகங்களையும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மட்டுமல்லஒன்றிய அரசே இதனை மேற்கொள்ளும் காலமும் வரும் என்பதில் அய்யமில்லை.

***

இந்திய அரசமைப்புச் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்பட்டதே சமூகநீதிக்காகத்தான் - அதற்குக் காரணம்தமிழ்நாடுதான் - தந்தை பெரியார்தான் - அதன் பலன் - பயன் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லஇந்தியா முழுமையும் கல்வி உரிமை கிடைக்கப் பெற்றது.

***

தந்தை பெரியார் பணி என்பது - எதிர்ப்பு என்பது சனாதனத்தின் மூல பலத்தை நோக்கிப் போர் தொடுப்ப தாகும்மூல பலத்தை நோக்கிப் போர் புரிவதுதான் தந்தை பெரியாரின் போர்முறை என்று அறிஞர் அண்ணா அவர்கள் அழகாகச் சொன்னது அந்த அடிப்படையில்தான்.

***

எழுச்சித் தமிழர் சொன்னார் - ஆர்.எஸ்.எஸின் வேலை பிள்ளை பிடிப்பது என்று - அதோடு மட்டுமல்ல - பிள்ளைகளைக் கிள்ளி விடுவதும் அவர்கள்தான் - தொட்டிலை ஆட்டுவதும் அவர்கள்தான் - அந்த தந்திரங்களையும் முறியடிப்போம்.

***

உண்மையிலேயே கடவுளைக் கேவலப்படுத்து பவர்கள் இவர்கள்தான்பிள்ளையாரை தண்ணீரில் கரைப்பது என்ற பெயரால்அந்தப் பொம்மைகளைசிலைகளை அடித்து நொறுக்கிகிரேன்மூலம் தண்ணீரில் அழுத்தி மூழ்கடிப்பது எல்லாம் யார்அந்த வகையில் பிள்ளையாரை முதலமைச்சர் ஸ்டாலின்தான் காப்பாற்றியுள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட ஒரு வார காலத்தில்ஆர்.எஸ்.எஸின் அதிகாரப்பூர்வ ஏடான ‘‘ஆர்கனைசரில்என்ன எழுதினார்கள்?

இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்க முடியாது - மனுதர்மத்தை மறந்துவிட்டார்கள் - மனுதர்மம்தான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாக இருக்கவேண்டும் என்று எழுதினார்கள்.

***

வளர்ச்சிவளர்ச்சி என்று அடிக்கடி பிரதமர் மோடி சொல்லுகிறார்எதில் வளர்ச்சிஅரசாங்க சொத்துகளை விலை பேசுவதிலா?

அரசு சொத்துகளை விற்பதற்கென்றே ஒரு புதிய துறையை ஏற்படுத்தியது பி.ஜே.பிஅரசுதான் - வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதே அது தொடங்கப்பட்டு விட்டது - அருண்ஷோரி இதற்காகவே அமைச்சராகவும் நியமிக்கப்பட்டதுண்டு.

2014 இல் பிரதமராக மோடி பதவியேற்ற நிலையில்மேடையை விட்டுக் கீழே இறங்கி இந்திய அரசமைப்புச் சட்டம் என்று செதுக்கப்பட்டிருந்த ஒரு கல்லின்மேல் தன் தலையை வைத்து வணங்கிஅரசமைப்புச் சட்டத்தின்மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக ஒரு நாடகம் போட்டார்.

உண்மையில் சட்டத்தை மதிக்கிறாரா?

இதற்கு வேறு எங்கும் போகவேண்டாம் - உச்சநீதி மன்றமே இப்பொழுது வெளிப்படையாகக் கூறிவிட்டதே! ‘உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை ஒன்றிய அரசு மதிப்பதில்லைஎன்று கூறியுள்ளதேஉச்சநீதிமன்றம்.

இதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தொடர வேண்டும் என்று ஒன்றிய அரசு எதிர்பார்க்கிறதா என்ற வினாவை எழுப்பியுள்ளதே - இதற்கு என்ன பதில்?

ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.,களுக்கு வெளிப்படையான அஜெண்டாஹிடன் அஜெண்டா என்று இரண்டு வகையான அஜெண்டாக்கள் உண்டு.

ஆர்.எஸ்.எஸ்என்ன நினைக்கிறதோ அதைத்தான் பி.ஜே.பிசெயல்படுத்தத் துடிக்கிறது.

மக்களிடம் அவற்றைக் கொண்டு செல்லவேண்டும்இந்த நூல் அதைத்தான் செய்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

***

எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன்

எழும்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன் தன் உரையில்,

பெரியார் திடல் எங்கள் குருகுலம்அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் முதன்முதலாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதை தவற விடக் கூடாது என்பதற்காகத்தான் சட்டமன்றம் நடந்துகொண்டு இருந்தாலும்சொல்லிவிட்டு ஓடோடி வந்தேன் என்றார்.

தமிழ்நாட்டில் தாமரை மலரத் துடிக்கிறது - அதனை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்றார்.

புதன், 3 மார்ச், 2021

நூல் வெளியீட்டு விழா 'நூல்'களின் ஆதிக்கத்தை வீழ்த்தும்!


சென்னைப் புத்தகச் சந்தையில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா - குறிப்பிடத்தகுந்த - திருப்பம் வாய்ந்த நிகழ்ச்சியே!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கிவீரமணி அவர்களின் வழிகாட்டுதல்படியும்வேண்டுகோள்படியும் தோழர் ஜி.பாபு ஜெயகுமார் அவர்களால் எழுதப்பட்ட நூல்"Periyar Ev. Ramasamy Ahead of His Time  என்பது.  நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த தமிழர் தலைவர் ஆசிரியர்

கிவீரமணி அவர்கள் காலம் பெரியாரின் காலடியிலேயே தவிரகாலத்தின் காலடியில் பெரியாரல்ல என்று கூறினார்.

தொலைநோக்காளர் பெரியார் என்பதை நாட்டில் நாளும் நடைபெறும் நிகழ்வுகளும் விளைவுகளும்புதிய புதிய கண்டுபிடிப்புகளும்  நிரூபித்து வருகின்றன.

நாட்டின் சமூக அரசியல் நிலை என்னஆட்சி அதிகாரப் பீடத்தில் பா..., சங்பரிவார் - மத்திய ஆட்சிப் பீடத்தில் மட்டுமல்ல  - பல மாநிலங்களிலும் அமர்ந்துவிட்டன.

அதன் தீய விளைவை வெகு மக்கள் நாளும் அனுபவித்து வருகின்றனர்இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மைசமூகநீதிசோசலிசக் கொள்கைகள் கண்மூடித்தனமாக வெட்டி வீழ்த்தப்பட்டு வருகின்றன.

சுருக்கமாகச் சொன்னால்ஆரிய சனாதனவல்லாண்மைக்கான  சட்டங்களும்திட்டங்களும்பிரச்சாரங்களும் திட்டமிட்ட வகையில் நாட்டு மக்கள் மத்தியில் திணிக்கப்படுகின்றன.

450 ஆண்டு கால சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலத்தை ஒரு பட்டப் பகலில் கொஞ்சம்கூட கூச்ச நாச்சமின்றிவெட்கமின்றி இடித்து நொறுக்கித் தரைமட்டமாக்கியவர்கள் மத்திய ஆட்சியில் மிகப் பெரிய பொறுப்பு அமைச்சர்களாகி விட்டார்களேயாரும் குற்றவாளி அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியும் விட்டதே!

இத்தகைய ஒரு மோசமான இருண்ட கால கட்டத்தில் நாடு நடைபோடும் ஒருகால கட்டத்தில்தந்தை பெரியார் என்ற பே(£)ராயுதம் இந்தியாவுக்கே தேவை என்பதை புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தலைவர்கள் அனைவரும் குறிப்பிட்டது மிகவும் முக்கியமானது.

இந்தச் சூழலில் தந்தை பெரியார் கருத்துக்கள் இந்தியா முழுவதும் பரவினால்மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

பிற மொழிகளில் தந்தை பெரியார் பற்றிய நூல்கள் வெளிவரும் பொழுதுதான் அந்த நிலையை எட்ட முடியும்அந்த வகையில் ஜி.பாபு ஜெயகுமார் அவர்களால் எழுதப்பட்ட ஆங்கில நூல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் அய்யமில்லை.

பிரெஞ்சுஸ்பானிஸ் மொழிகளில் தந்தை பெரியார் பற்றிய நூல்கள் வெளிவர வேண்டும் என்று ஜெர்மானிய பேராசிரியர் முனைவர் சுபாஷினி கூறியதும் முக்கியமானது.

இந்தியாவைப் பொறுத்தவரை - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட சமூகநீதிமதச் சார்பின்மைசோசலிசம் இவை அனைத்திலும் பா..தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு கை வைத்துஅவற்றின் ஆணி வேரை வீழ்த்தி வருகிறது.

மத்திய அரசின் அதிகாரப் பூர்வமான குடியரசு தின விளம்பரத்திலேயே திட்டமிட்டு - அரசமைப்புச் சட்டத்தில்  இடம் பெற்ற மிக முக்கியமான வாசகமான "மதச்சார்பின்மை" (Secularஎன்ற சொல்லையே நீக்கினர் என்றால் இந்த ஆட்சி என்பது மதச் சார்புள்ள இந்துத்துவா ஆட்சிதான் என்று ஆகிவிடவில்லையா?

எப்படிப் பார்த்தாலும் எங்குச் சுற்றி வந்தாலும் முற்போக்குச் சிந்தனையாளர்கள் சந்திக்க வேண்டிய மிக முக்கியமான  புள்ளி தந்தை பெரியார்தான்.

சுயமரியாதைசமதர்மம்சமத்துவம்சமூகநீதிபாலியல் நீதிமதச் சார்பின்மை என்பவை தான் மானுடத்தின் உயர்ந்த சீலமாகும்இவற்றைத் தன் வாழ்நாள் எல்லாம் மக்கள் மத்தியில் எடுத்துக் கூறிக் கூறி விழிப்புணர்வு - ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.

தமிழ்நாட்டில் இந்த  அடிப்படை சித்தாந்தம் தந்தை பெரியார் அவர்களால் வேர் பிடிக்கச் செய்யப்பட்டதால் தான்காவிக் கூட்டம்  கஜக் குட்டிக் கரணம் அடித்துகுறளி வித்தை போட்டுக் காட்டினாலும் தமிழ்நாட்டு மக்கள் நம்பத் தயாராக இல்லைநிராகரித்தே வருகின்றனர்.

அதிகார பலம்ஊடக பலம்பண பலம் மக்களிடத்தில் இருக்கும் மத மூடநம்பிக்கைமாநிலத்தில் உள்ள ஓர் ஆட்சியின் பலகீனம் - இவற்றைப் பயன்படுத்தி - குதிரை சவாரி செய்து நேரடியாக முடியாவிட்டாலும் நிழல் ஆட்சியை ஏற்படுத்தி விடலாம் என்று மனப்பால் குடிக்கும் சக்திகளை வீழ்த்திட தந்தை பெரியார் எனும் சித்தாந்த போர் வாளை நெஞ்சில் ஏந்தி களம் காண்போம் வாரீர்வாரீர்என்று அழைப்பதுதான் நூல் வெளியீட்டு விழாவின் பிரகடனமாக இருந்ததுவெல்லும் திராவிடம் என்பதை வீட்டுக்கு வீடு கொண்டு போய்ச் சேர்ப்போம்.

வாழ்க பெரியார்வளர்க பகுத்தறிவு!

சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்ற இயக்க நூல்கள் வெளியீட்டு விழா

 


சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்ற இயக்க நூல்கள் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோர் (28.2.2021)