ஞாயிறு, 30 ஜனவரி, 2022

தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்


 தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியீடு

சென்னை, ஜன.19 அலுவலகங் களில் பணிபுரியும் போது முகக் கவசம் அணியாதவர்களை உடன டியாக வெளியேற்ற வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தர விட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தற்போது வேக மெடுத்துள்ளது. தினசரி ஏராள மானோர் பாதிக்கப்பட்டு வருகின் றனர். மற்றொருபுறம் ஒமிக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் வைரஸ் பரவலை தடுக்க, அரசு பல்வேறு தடுப்பு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே பல்வேறு மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கான வழி காட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள் ளது. அலுவலகங்களில் பணிபுரியும் போது முகக்கவசம் அணியாதவர் களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று தனியார் நிறுவ னங்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். அறிகுறி உள்ள பணியா ளர்களுக்கு பரிசோதனை மேற் கொள்ள வேண்டும். 300 நபர் களுக்கு மேல் உள்ள தொழிற்சாலை களில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும்  என்று குறிப்பிட்டுள்ளது.

தேசிய சட்டக் கல்லூரி சேர்க்கையில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., வகுப்பினருக்குப் பட்டை நாமமா?

கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதி நலவாரிய தலைவர் தகவல்


சென்னை, ஜன.30 தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிவிப்பு:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்ட பேரவை கூட்டத்தில் சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

அதன்படி பதிவு பெற்றுள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு சொந்தமாக வீடு இல்லாமல் இருந்தால் நகர்ப் புறங்களில் நகர்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வீடு வாங்கி கொள்ள ரூ.4 லட்சம் வரை கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படும். கிராமப்புறங்களில் சொந்த வீடு இல்லாதவர்கள், சொந்தமாக வீட்டு மனை வைத்திருந்தால் அதில் அவர்களே வீடு கட்டிக் கொள்ள ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.

முதல் கட்டமாக ஆண்டிற்கு 10,000 தொழிலாளர் களுக்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர், மாநகராட்சி ஆணையர், திட்ட அலுவலர், சம்மந்தப்பட்ட செயற்பொறியாளர் (நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) மற்றும் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ஆகியோர் கொண்ட குழு மாவட்ட அளவில் பயனாளிகளை தேர்வு செய்து வாரியத்தின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு அனுப்பிவைக்கப்படும். இறுதி ஒப்புதலினை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் வழங்கும்.

பயனாளிகளே வீட்டைக் கட்டிக்கொள்வார்கள். கட்டுமான பணிக்கேற்ப நான்கு கட்டங்களாக பிரித்து இந்த உதவி பணம் தொழிலாளர்களின் வங்கிக்கணக்கிற்கு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

ஒவ்வொரு கட்ட கட்டுமான நிறைவு பணிக்கும் சம்பந்தப்பட்ட பிடிஓ சான்று அளிக்கப்பட வேண்டும். அந்த சான்றின் அடிப்படையில் நான்கு கட்டங்களாக பணம் அனுப்பி வைக்கப்படும். இதற்கான அரசு ஆணை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களை இணையதளத்தில் காணலாம்.

வியாழன், 27 ஜனவரி, 2022

தமிழ்த்தாய் வாழ்த்து: ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் அவமரியாதை!


தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணையைப் புறந்தள்ளி ஆணவமாக நடந்துகொள்வதா?

தண்டனைக்குரியதே தவிர, மன்னிப்பதற்குரியது அல்ல!

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்பொழுது எழுந்து நிற்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணைபற்றி ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்குத்  தெரியாமல் போனது எப்படி? இது தண்டனைக்குரியதே தவிர,  மன்னிப்பதற் குரியது அல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நேற்று (26.1.2022) குடியரசு நாள் கொண்டாட்டம்; சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, அங்குள்ள அதிகாரிகள் பலர் எழுந்து நிற்கவேண்டிய குறைந்தபட்ச அவை நாகரிகத்தைக் கடைப்பிடிக்காதது மட்டுமல்ல, எழ முயற்சித்தவர்களையும் இழுத்து அழுத்தி உட்காரச் சொன்னதும், இதுபற்றி செய்தியாளர்கள் அவர்களிடம் கேட்டதற்கு மேலும் ஆணவத்தோடும், அறியாமை யோடும், ''தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டியதில்லை என்று உயர்நீதிமன்றமே தீர்ப்பு கூறியுள்ளது'' என்று பதில் கூறியது மிகவும் வன்மையாகக் கண்டிக்க வேண்டியதும், தண்டிக்கப்படக் கூடிய அவமரியாதைச் செயலுமாகும்!

தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணைபற்றித் தெரியாமல் போனது எப்படி?

அதுமட்டுமல்ல; அதன் பிறகு அரசு ஆணை வந்தது எப்படி இந்த அதிகாரிகளுக்கு - பெரிய மனிதர்களுக்குத் தெரியாமல் போனது?

சமாதானம் கூறி தப்பிக்க முடியாது!

சட்டத்தில் 'Ignorance of Law is no Excuse' என்பது அடிப்படை அறிவு அல்லவா?  அதன்படி பிறகு வந்த ஆணை குறித்து எங்களுக்குத் தெரியாது என்றுகூட அவர்கள் சமாதானம் கூறி, தப்பிக்க முடியாதே!

இவர்கள்மீது உரிய நடவடிக்கை சட்டப்படி எடுக்கத் தயங்கக் கூடாது.

தண்டனைக்குரியதே தவிர - மன்னிப்பதற்கு உரியது அல்ல!

சட்டத்திற்குமுன் அனைவரும் சமம் என்பதால், பெரிய பதவியில் உள்ள சின்ன மனிதர்களுக்குப் பாடம் புகட்டுவது பல வகையிலும் பொது ஒழுக்கச் சிதைவைத் தடுக்க உதவும்.

அறியாமையைவிட, ஆணவ பதில் நிச்சயம் தண்டனைக்குரியதே தவிர, மன்னிப்பதற்கு உரியது அல்ல - காவல்துறை கடமையாற்றவேண்டும்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

27.1.2022

திங்கள், 24 ஜனவரி, 2022

அகில இந்திய அளவில் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு - தி.மு.க. முயற்சிக்கு வெற்றி!

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

மாங்காய் மடையர்கள்!

புண்படுத்துபவர் யார்? 'தினமலர்' 22.8.2021


பெரியார் மறைந்து 48 ஆண்டுகள் கழித்து, அவர் விரும்பிய 'அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை' நிறைவேற் றப்படுகிறது என்றால் அதற்குக் காரணம், பார்ப்பனர்கள் (தினமலர் கூட்டம்) நீதிமன் றங்கள் சென்று காலதாமதம் செய்ததுதானே? தவறுக்குக் காரணமானவர்களே மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தும் இந்தக் குள்ளநரிப் புத்திக்குப் பெயர்தான் பார்ப்பனீயம் என்பது.

மத உணர்வுகளை அழிக்க 3000 ஆண்டுகள் ஆனாலும் முடியாதாம்! என்ன திமிர்வாதம்! மதத்தின் பெயரால் பெரும் பாலான மக்களை சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் இழிவுபடுத்துவது யார்? புண்படுத்துபவர் யார்? தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே, துவேஷிகளாக இருந்து மற்றவர்களைப் பார்த்து 'துவேஷிகள், துவேஷிகள்' என்பார்கள் என்று லாலா லஜபதி(ராய்) சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது!

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, மண்டல் ஆணைய தீர்ப்பிற்குப் பிறகு - இந்தியச் சமூகநீதி வரலாற்றில் கிடைத்துள்ள மிக முக்கிய வெற்றி!

சனி, 22 ஜனவரி, 2022

இட ஒதுக்கீடு என்பது தகுதி - திறமைக்கான முரண்பாடாக இல்லாமல் அனைவருக்கும் பங்கிட்டு அளிக்கும் உரிய ஏற்பாடே!