சிந்துவெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்துவெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 பிப்ரவரி, 2020

வரலாற்றைத் திரித்து சிந்து சமவெளி திராவிட நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்பதா?

ஆரியத்தின் பொய்யும் புரட்டும் நீடிக்காது - அம்பலமாகும்!

நிதி அமைச்சர் பட்ஜெட் உரையில் வரலாற்றைத் திரித்து சிந்து சமவெளி திராவிட நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்பதா?

இதைவிட ஒண்ணாம் நம்பர் விஷமம் வேறு உண்டா?

வரலாற்று ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்ட, திராவிடர்களின் சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் திரிபுவாதம் செய்திருப்பது - ஒண்ணாம் நம்பர்  விஷமம் என்றும், இத்தகு பொய்யும் புரட்டும் நீடிக்காது - நிலைக்காது - அம்பலமாகும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சிந்து சமவெளி நாகரிகம் என்பது புராதன - பண்டைக் கால பழைமை வாய்ந்த திராவிட(ர்) நாகரிகம் ஆகும். திராவிட மொழிகளில் மூத்த முன்னோடி மொழி தமிழ்மொழி. இதனை அகழ்வாராய்ச்சி மூலம் ஹரப்பா, மொஹஞ்சதாரோ முதலிய பழைய நகரங்களைத் தோண்டி எடுக்கும் ஆராய்ச்சியை, மேற்கொண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கால தொல் பொருள் ஆய்வு அதிகாரிகளான சர். ஜான் மார்ஷல், ஃபாதர் ஹிராஸ் ஆகிய ஆய்வாளர்களும், அதனைத் தொடர்ந்து பல வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், அறிஞர்களும் திராவிட நாகரிகம் என்று உறுதிப்படுத்தினர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், ஆரியர்களும் இதனை மறைத்தும், திரித்தும் தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகின்றனர்.

இந்தியா முழுவதும் பரந்து

இருந்தவர்கள் திராவிடர்களே!

திராவிடர்கள் இந்தியா முழுவதும் ஒரு காலத்தில் பரந்து இருந்தவர்கள்; தமிழ்மொழி அக்காலத்தில் பேசப்பட்டது; நாகர்கள் தமிழ் மொழி பேசிய திராவிடர்கள் என்ற கருத்துக்களை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தனது "தீண்டப்படாதவர்கள் யார்? ஏன் அவர்கள் தீண்டப்படாதவர்கள் ஆக்கப்பட்டார்கள்?" என்ற நூலில் எழுதியுள்ளார்கள்.

சிந்து சமவெளி நாகரிகத்தை

அழித்தவர்கள் ஆரியர்களே!

அது ஒருபுறமிருக்க, சிந்துசமவெளி நாகரிகத்தை அழித்தவர்கள் ஆரியர்கள் என்றும், அவர்களது வேதத்தின் பல சுலோகங்கள் இந்தத் தத்துவார்த்த கருத்துக்களையே கொண்டது என்றும் மேல் நாட்டு அறிஞர்கள் முதல் நம் நாட்டு வரலாற்றாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

திராவிடப் பண்பாடு - நாகரிகம் காலத்தால் மூத்தது; கருத்தாலும் முதிர்ந்தது என்பதை ஏற்க மனமில்லாத ஆரியக் கூட்டமும், அதன் "அடியார்களும் நுனியார் களும்" இன்று ஒரு கட்டுப்பாடான பொய்ப் பிரச் சாரத்தைக் கட்டவிழ்க்க, அமெ ரிக்காவில்கூட அன்று ஆள் பிடித்தது அம்பலமாகியது!

வாஜ்பேயி பிரதமராக

இருந்தபோது நடந்தது என்ன?

வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான முரளி மனோகர் ஜோஷி இதில் மும்முரமாக ஈடுபட்டு மொஹஞ்சதாரோ ("திராவிட") காளை மாட்டுச் சின்னத்தை  - முத்திரையை (ஆரிய) குதிரையாக மற்றியது அப்போதே அம்பலமாகியது. (ஆதாரம்: 'Front line' ஆங்கில ஏடு)

அன்று முதலே தங்கள் கைவசம் உள்ள ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, இல்லாத ஆறாகிய (கற்பனை) சரஸ்வதி நாகரிகம் என்று ஒன்றை இட்டுக்கட்டி, அதனைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய சிலரைத் தயாரித்து எழுத வைத்து வந்தார்கள் - வருகிறார்கள்!

பி.பி. லால் என்பவர்மூலம் தொடங்கி வைத்தனர். எஸ்.பி. குப்தா என்பவரைவிட்டு 'சிந்துசமவெளி நாகரிகம்' என்ற பெயரைக்கூட மாற்றி திரிபு செய்து பார்த்தனர். சிந்து - சரஸ்வதி நாகரிகம் என்று மாற்றி திராவிட நாகரிகம் என்பதையே மறைத்து, அழித்து ஒழித்துவிட வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.

ஆய்வாளர் டோனி ஜோசப் நூல் என்ன கூறுகிறது?

DNA ஆய்வு மூலம் பல அரிய தகவல்கள் வருவதோடு, அக்காலத்திலே புழக்கத்திலிருந்து - மக்கள் பயன்படுத்தியது தமிழ் என்பதை ஆய்வாளர் டோனி ஜோசப் (Tony Joseph) அவர்கள் எழுதிய ஆய்வு நூலில் (The Early Indians)  குறிப்பிட்டுள்ளார்.

The First Urbanites: The Harappans முதல் நகரத்தவர்; ஹரப்பியர்கள் என்ற தலைப்பில் மூன்றாவது அத்தியாயத்தில்,

''How the Largest Civilization of its time, with a unique set of practices and outlook, took wing. And how its creators spread the Dravidian languages and became the ancestors of both North Indians and South Indians'' என்றே தலைப்பிடப்பட்டுள்ளது.

இதன் தமிழாக்கம்:

"அன்றைய காலகட்டத்தில் தலை சிறந்த பண்பட்ட நாகரிகக் குழுக்களாக திராவிடர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களின் வாழ்வியல் முறை சிறந்த நாகரிகத்திற்கான எடுத்துக்காட்டுகளாக திகழ்ந்தது. அவர்கள் தங்களின் நாகரிகத்தோடு தங்களுக்கென்ற தனித்த மொழியை யும் கொண்டு வட இந்தியா மற்றும் தென் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்து வந்தனர்."

நிதி அமைச்சரின் ஒண்ணாம் நம்பர் விஷமம்!

இதை தலைகீழாக்கிட நேற்று (1.2.2020) நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தனது பட்ஜெட் உரையில், சரஸ்வதி நாகரிகம் என்ற ஆர்.எஸ்.எஸ். கரடியை உள்ளே திணித்து, அதிகாரப் பூர்வமாகப் பதிவு செய்திருப்பது ஒண்ணாம் நம்பர் விஷமம்! திட்டமிட்ட ஆர்.எஸ்.எஸ். கோல்வால்கர் குரலை அங்கே ஒலித்துள்ளது  - வன்மையான கண்டனத்திற்குரியது.

நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கேயே எதிர்ப்புத் தெரிவித்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாகும்.

"சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவுவது" என்பது போன்ற மோசடி வித்தை இது!

பொய்யும், புரட்டும் அம்பலமாகும்!

வரலாற்றை மாற்றுவது, திரிபுவாதத்திற்கு ஆளாக்குவது, என்பதில் இவர்கள் தலைகுப்புற நின்று (சிரசாசனம்) போட்டாலும் இளைய தலைமுறையையோ, இனிவரும் தலைமுறையையோ  இக்கூட்டம் ஒருபோதும் ஏமாற்ற முடியாது!

பண்பாடு, மொழி இவைகளை அழிப்பதே அவாளின் குறிக்கோள்!

ஒப்பனைகள் வெகுநாள் நீடிக்காது!

உண்மை ஒரு நாள் அல்ல, ஒவ்வொரு நாளும் வெளியாகும்; அதில் இவர்களது பொய்யும் புரட்டும் பலியாகும். - அம்பலமாகும் - இவர்களின் சதித் திட்டம் நீடிக்காது- நிலைக்காது என்பது உறுதி! உறுதி!!

 

கி. வீரமணி,

தலைவர்

திராவிடர் கழகம்

(குறிப்பு: இவர்கள் கூறும் சரஸ்வதி பற்றிய ஆபாசப் புராணக்கதை -& ஆதாரத்துடன் 3ஆம் பக்கம் காண்க)

 

 

திராவிட நாகரிகத்தைத்  திட்டமிட்டு அழித்த சதி

மும்பை பிரின்ஸ் வேல்ஸ் அருங்காட்சியகத்தின் முகப்பில் 1990-களுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகம் குறித்த வரைபடங்கள், அங்கிருந்து எடுத்த புதைப்பொருட்கள் மற்றும் அப்பகுதியின் வரலாறு போன்றவை எழுதி, அதற்கு இந்திய தீபகற்பத்தில் திராவிட நாகரிகம் மிஸீபீவீணீஸீ suதீநீஷீஸீtவீஸீமீஸீt ஷீறீபீமீst பீக்ஷீணீஸ்வீபீவீணீஸீ நீவீஸ்வீறீவீக்ஷ்ணீtவீஷீஸீ என்று தலைப்பிடப்பட்டு இருந்தது. 1995-களுக்கு முன்பு அங்கு சென்ற பலர் இதைப் பார்த்துள்ளனர்.

1995-களில் முதல் முதலாக சிவசேனா-பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது, பம்பாய் (அழகிய வளைகுடாக்களைக் கொண்ட பகுதி) மும்பையாக மாறியது. விக்டோரியா டெர்மினல் ரயில் நிலையம் சத்திரபதி சிவாஜி ரயில் நிலையமாக மாறியது. சாகர்(பெருங்கடல்) விமான நிலையம் சத்திரபதி சிவாஜி விமான நிலையமாக மாறியது. பிரின்ஸ் வேல்ஸ் அருங்காட்சியகமும் சத்திரபதி சிவாஜி அருங்காட்சியகமாக மாறியது. இவ்வளவு மாற்றங்களோடு சேர்த்து, அங்கு இருந்த மிஸீபீவீணீஸீ suதீநீஷீஸீtவீஸீமீஸீt ஷீறீபீமீst பீக்ஷீணீஸ்வீபீவீணீஸீ நீவீஸ்வீறீவீக்ஷ்ணீtவீஷீஸீ என்ற எழுத்துக்களில் பீக்ஷீணீஸ்வீபீவீணீஸீ என்பதை அழித்து uஸீளீஸீஷீஷ்ஸீ என்பதை எழுதிவிட்டார்கள். இப்போது அங்கு uஸீளீஸீஷீஷ்ஸீ நீவீஸ்வீறீவீக்ஷ்ணீtவீஷீஸீ அதாவது பெயர் தெரியாத நாகரிக மனித இனம் வாழ்ந்தது என்று எழுதிவிட்டார்கள்.  கிட்டத்தட்ட உலக அகழ்வாராய்வு அறிஞர்கள் அனைவருமே ஒப்புக்கொண்ட கருத்து ஆரிய இனம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே திராவிட இனம் செழித்து வளர்ந்திருந்தது என்பதாகும். 2017-ஆம் ஆண்டு முதல் கீழடி ஆய்வுகள் கூட இந்துகுஷ், கைபர் மற்றும் பர்மிய சமவெளிக்கு மேல் இன்றைய பங்களாதேஷ் பகுதிகள் முதல் தென்கோடி நிலப்பகுதி கடலடியில் மூழ்கிய தென் குமரி வரை திராவிட இனம் வாழ்ந்துள்ளதற்கு சான்றாக இருக்கும் போது இவர்கள் அடையாளம்தெரியாத இனப்பிரிவு என்று எழுதிவைத்துள்ளனர். நிதி அமைச்சரின் உரையின் படி நாளை இவை அனைத்தும் சரஸ்வதி நாகரிகம் என்று மாறும் ஆபத்து உள்ளது.

திராவிடத்திலிருந்து தொளவீரா வரை: குஜராத்தில் உள்ள அரப்பா நாகரிகத்தின் அடிச்சுவடாக இன்றும் இருக்கும் இந்த பகுதியும் திராவிட நாகரிகத்தின் தொட்டில் என்று குறிப்பிடும் வார்த்தையில் 'திராவிடா' என்று முன்பு இருந்தது, சிவசேனா மகராட்டிராவில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அதே கால கட்டத்தில் 1995-ஆம் ஆண்டு பாஜக குஜராத்தில் கேசுபாய் படேல் தலைமையில் ஆட்சியில் அமர்ந்தது. அதன் பிறகு அரப்பா நாகரிகத்தில் இருந்த 'திராவிடா' குறித்த வாசகங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டு தொளவீரேஷ்வர் என்ற ஒரு கடவுள் இருந்ததாகக் கூறி அந்தப் பகுதிக்கு தொளவீரா என்ற பெயர் வைத்து இன்று அராப்பா நாகரிக மக்கள் வாழ்ந்த பகுதி தொளவீரா என்று அடையாளம் காணப்படுகிறது, 'திராவிடா' என்ற பெயர் இருந்த அனைத்து அடையாளங்களையும் அழித்து விட்டார்கள்.

ஆரிய - பித்தலாட்ட சதி - புரட்டல்களுக்கு அளவும் உண்டோ!

- விடுதலை நாளேடு 2 2 20

சனி, 12 அக்டோபர், 2019

சிந்து சமவெளி மக்களுக்கு உருவம் - விஞ்ஞானிகள் புதிய முயற்சி

புதுடில்லி,அக்.12, சிந்து சமவெளி பகுதியில் வாழ்ந்த நாகரீக மக்களுக்கு உருவம் கொடுக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
உலகின் மிக தொன்மை யான நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம். இந்தியா- - பாகிஸ்தான் இடையே ஓடும் சிந்து  நதியை ஒட்டி வாழ்ந்த மக்கள் கி.மு 3000க் கும், கி.மு 2500க்கும் இடைப் பட்ட காலத்திலேயே நாகரீக வாழ்க்கை வாழ்த்துள்ளதற் கான ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
ஆனாலும், சிந்து சம வெளி மக்களின் தோற்றம் எப்படியிருக்கும் என்பது  பற்றி யாருக்கும் தெரியாது. அரியானாவின் ராக்கிகர்கி பகுதி, மிகப்பெரிய சிந்து சமவெளி இடங்களில் ஒன்று. இங்கு 4500 ஆண்டுகள் பழ மையான மயானத்திலிருந்து 37 பேரின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றின் வரைபட தகவல்களை வைத்து ‘கிரானி யோபேசியல் ரீகன்ஸ்ட்ரக் ஷன்’ (சிஎப்ஆர்) என்ற தொழில்நுட்பம் மூலம், சிந்து சமவெளி மக்களுக்கு உருவம் கொடுக்கும் பணியில் தென்கொரியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள  6 மய்யங்களைச் சேர்ந்த 15 விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
விஞ்ஞானி லீ மற்றும் டெக்கான் கல்லூரி முது நிலை ஆராய்ச்சி மய்ய பேராசிரியர் வசந்த் ஷிண்டே தலைமையிலான இந்த குழு வினரின் இந்த ஆய்வறிக்கை ‘அனாடமிக்கல் சயின்ஸ்  இன்டர்நேஷன்ல் என்ற இதழில் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஷிண்டே கூறியதாவது:  சிந்து சமவெளி மக்கள் எப்படி இருப்பார்கள் என் பது பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், தற் போது, எங்களுக்கு சில கருத்துக்கள் ஏற்பட்டுள்ளது.
சிந்து சமவெளி மயா னங்கள் பற்றி இதுவரை போதுமான அளவு ஆய்வு செய்யப்பட வில்லை என்ப தால், அங்கு வாழ்ந்த மக் களின் உருவம் இப்படித்தான் இருக்கும் என நிருபிப்பது  சிரமமாக இருந்தது.
மொகஞ்சசோதராவில் கண்டுபிடிக்கப்பட்ட மன் னர் உருவம் தவிர, சிந்து சமவெளி மக்கள் உருவம் பற்றி கலை வடிவிலான எந்த ஆதாரமும் இல்லை.
ராக்கி கர்கி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 2 பேரின் எலும்புக்கூடுகளை  வைத்து சிஎப்ஆர் தொழில் நுட்பம் மூலம் சிந்து சமவெளி மக்களுக்கு உருவம் கொடுக் கப்பட்டுள்ளது.
இந்த இரு உருவங்களின் முப்பரிமாண காட்சிகளைப்  பார்க்கும்போது, சிந்து சம வெளி மக்கள் காக்கேசிய இன மக்களை போல் தோற் றம் அளித்தனர்  என்றார்.
- விடுதலை நாளேடு,12.10.19