செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

இந்து மதத்தைக் ‘கொச்சைப்படுத்தும்' ‘துக்ளக்'

செய்தியும், சிந்தனையும்....!

இந்து மதத்தைக் ‘கொச்சைப்படுத்தும்' ‘துக்ளக்'

* கேள்வி: தி.க.வின் அடுத்த கட்ட யோசனை எதுவாக இருக்கும்?

பதில்: துர்கா ஸ்டாலின் பூஜை அறை - அவர் கோவில் கோவிலாக, மடம் மடமாகப் போவதுபற்றி வைரலாக வீடியோக்கள் சுற்றுவதைப் பார்த்து கலங்கிப் போயிருப்பார் வீரமணி. அதிலிருந்து ஸ்டா லினுடைய நாத்திக இமேஜை எப்படி பாதுகாப்பது என்பதுதான் அவர்களின் அடுத்தகட்ட யோசனை (‘கவலையாக' இருக்கும்).

- ‘துக்ளக்', (இன்று வந்தது)

>>  பகுத்தறிவு - நாத்திகம் என்பது கட்டாயப்படுத்திக் கொண்டு வரப்படுவதல்ல என்ற சிறுபிள்ளைப் பாடம்கூடத் தெரியாத சிண்டுகள் விறைப்பதுதான் வேடிக்கை.

இவர்களின் வீர சாவர்க்கார் நாத்திகர் என்பதால், அவரின் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் நாத்திகர்கள் தானா?

இந்து மதத்தில் நாத்திகத்துக்கு இடம் உண்டு என்று ஆன பிறகு, அதனைக் கொச்சைப்படுத்துவது கூட இந்து மதத்தைக் கொச்சைப்படுத்துவதுதானே!

கைவசம் சரக்கு இல்லாதபோது அரட்டை அடிப்பதைத் தவிர வேறு வேலை எதுவாகத்தான் இருக்க முடியும்?

பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்களுக்கா இந்த நிலை?

* கேள்வி: ஒடுக்கப்பட்ட சமுதாயமான பிராமணர் களுக்கு சமூகநீதியில் நீதி கிடைக்கவில்லை, ஒடுக்கப்படுகிறார்களே?

பதில்: பிராமணர்கள் ஒடுக்கப்படவேண்டும் என்பது தானே சமூகநீதியின் நோக்கம். அதில் எப்படி பிராமணர்களுக்கு நீதி கிடைக்கும்?

- ‘துக்ளக்', 9.9.2021

>>  ஆக, ‘துக்ளக்' என்பது ‘பிராமணர்களுக்கான' பத்திரிகை என்பதை ‘துக்ளக்'கை வாங்கும் பார்ப்பனர் அல்லாதார் புரிந்துகொள்ள வேண்டும். ஜெகத்குரு(?) என்று ஒரு குச்சி முனிவரைத் தூக்கிச் சுமக்கப்படும் சங்கராச்சாரியாரே, நான் பிராமணர் களுக்காக ‘கம்யூனலாக' வாதாடுகிறேன் என்று சொன்ன பிறகு, இந்த நண்டு சிண்டுகள் வேறு எப்படித்தான் எழுதும்?

மல்லாக்கப்படுத்து...

* கேள்வி: கேரளாவில் கட்சி அலுவலகங்களில் முதல் முறையாக சுதந்திரத் தினத்தன்று தேசியக் கொடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏற்றியுள்ளதுபற்றி?

பதில்: உலக கம்யூனிஸ்ட் இயக்கக் கொடியை மட்டும் வைத்து, இந்தியாவில் அரசியல் செய்தால் போணி ஆக மாட்டோம் என்பது புரிந்த பிறகு, அவர்கள் தம் நாட்டுக் கொடியையும் ஏற்றத் தொடங்கி இருக்கிறார்கள்.

- ‘துக்ளக்', 9.9.2021

>>  ஆர்.எஸ்.எஸ். தலைமையிடமான நாக்பூரில் தேசியக் கொடியை எப்ப ஏற்றத் தொடங்கி னார்களாம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக