செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

சட்ட விரோத கோயில்களும் நீதிமன்ற தீர்ப்புகளும்

 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்கிருபாகரன்தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு ஓர் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது.

"சாலைகளை ஆக்கிரமித்து கோவில்களைக் கட்ட வேண்டும் என்று எந்தஒரு மதக் கடவுளும் சொல்லவில்லைஆனால் மதத்தின் பெயரை எந்தெந்த வகையிலோ எல்லாம் தவறாகப் பயன்படுத்துவது மனிதன் மட்டும்தான்என்று நறுக்குத் தெறித்ததுபோல தீர்ப்பில் கூறி இருக்கின்றனர்.

வேலூர் நாராயணன் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்தபோது நடைபாதைக் கோயில்களை எல்லாம் சரமாரியாக இடித்துத் தள்ளினார்.சண்முகம் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதும் இந்தத் 'திருப்பணிநடைபெற்றது.

கடவுள்கோயில்கள் ஒழுக்கக் கேடான அணுகு முறைகளில் சட்ட விரோதமாக உருவாக்கப்படுவதைப் பற்றி யாருக்கும் வெட்கமில்லை.

சென்னை சைதாப்பேட்டையில் மாடல் பள்ளி எதிரே மிக முக்கியமான பகுதியில்நான்கு வழிப்பாதையில் ஒரு பாதையையே முழுமையாக அடைத்துக் கோயில் கட்டப் பட்டுள்ளது.  செங்கற்பட்டு முதன்மைச் சாலையிலும் இந்த யோக்கியதைதான். (குருக்களுக்கும் குடியிருப்பும் உண்டு).

சென்னையில் மக்களின் நடைபாதைகளில் எங்கு பார்த்தாலும் கோயில்கள் - கண்டிப்பாக உண்டியல்கள் உண்டுஅன்றாடம் உண்டியல் வசூல் யாருக்குப் போய் சேர்கிறதுசமூக விரோத காரியங்கள் இந்தக் கோயில்களை ஒட்டி நடந்து கொண்டுதான் உள்ளனகாவல்துறைக்குத் தெரியாமல் நடக்க முடியாதேஎப்படி இவற்றையெல்லாம் அனுமதிக்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வியாகும்.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், "தமிழ் நாட்டில் 77,450 கோயில்கள் அனுமதியின்றிக் கட்டப்பட் டுள்ளனஇக்கோயில்கள் அகற்றப்பட வேண்டும்இதனைச் செயல்படுத்தாத மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வர வேண்டும்என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததுண்டு (14.9.2010).  11 ஆண்டுகள் ஓடி விட்டனஉச்சநீதிமன்றத் தீர்ப்பு மதிக்கப்பட்டதா?

உச்சநீதிமன்றமாவது நீதிமன்ற அவமதிப்பு என்று கூறிஅதன் மீது நடவடிக்கையைத்தான் எடுத்ததா?

ஏனிந்த நிலைசட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதானேகோயில் - குளம் என்றால் சட்டமும்தீர்ப்பும் நழுவி விடுமா?

நடைபாதைக் கோயில்களால் மக்களுக்கு எவ்வளவு இடையூறு என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லைவிபத்துக்கள் பெரும்பாலும் நடப்பதற்கு இந்த நடைபாதைக் கோயில்களும் முக்கிய காரணம்தானே.

கோயில் என்பது ஒரு சுரண்டலுக்கான வியாபார கருவியாகி விட்டது என்பது உண்மையிலும் உண்மை.

இதில் என்ன வெட்கக் கேடு என்றால் ஆக்கிரமிப்புகள் என்று சொல்லிகுடிசைகளையும்ஏன் கான்கிரீட் வீடுகளையும்கடைகளையும் கண் மூடித்தனமாக இடித்துத் தள்ளும் அரசு இயந்திரம் - கோயில்களை மட்டும் அப்படியே விட்டு விட்டு செல்வதையும் பார்க்க முடிகிறது.

சர்வ சாதாரணமாகப் பொது மக்கள் கோயில் மட்டும் நடுநாயகமாக நிற்பதைப் பார்க்க முடிகிறது.  உயிருள்ள மனிதனின் குடியிருப்புகளை இடிக்கலாமாம்ஆனால் குழவிக் கல்லுக் கடவுள் குடியிருப்பதாகக் கூறப்படும் கோயில்களை மட்டும் இடிக்கக் கூடாதாஇது என்ன சட்டம் - ஒழுங்கு முறைஇப்படி சட்டமும்அரசு இயந்திரமும் ஒரு சார்பாக நடந்து கொண்டால் சட்டத்தின்மீதும்அதனைச் செயல் படுத்தும் அரசுமீதும் எப்படி நம்பிக்கையும் மரியாதையும் ஏற்படும்?

கோயில்களை இடித்தால் எந்தக் கடவுள் கேட்கப் போகிறதுநேர்மையான அதிகாரிகளால் சட்டப்படி இடிக்கப்பட்ட கோயில்களில் இருந்த எந்தசாமி   அல்லது கடவுள் அதிகாரிகள் முடியைப் பிடித்துத் தடுத்தது?

கோயில்கள் பக்திக்கானது என்பதெல்லாம் வெறும் வாய்ப் பேச்சுதான் - உண்மையில் வியாபாரத்துக்காக ஏற்பாடு செய்யப்படுபவைதான்.

இதில் என்ன கொடுமை என்றால் அரசு நிலத்தில் அனுமதியின்றிக் கட்டப்படும் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அமைச்சர்களே கலந்து கொண்டதுதான்!

உயர்நீதிமன்றமும் சொல்லிவிட்டதுஉச்சநீதி மன்றமும் கூறிவிட்டதுஅரசுகள் என்ன செய்யப் போகின்றன என்பதுதான் முக்கிய கேள்வியாகும்.

இப்பொழுதுள்ள அரசு சட்டப்படி நியாயப்படி நடந்து கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக