புதன், 11 ஆகஸ்ட், 2021

அரசமைப்புச் சட்டம் 8 ஆவது அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றிருக்க - ஹிந்திக்கு மட்டும் தனிச் சலுகையும் - கோடி கோடியாகப் பணத்தை வாரி இறைப்பதும் ஏன்?

 

ஹிந்தி எதிர்ப்பு 1938 இல் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தலைமையில் தொடங்கப்பட்டதை நினைவூட்டுகிறோம்!

ஹிந்தி எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்த்தே தீருவோம்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 22 மொழிகள் இடம்பெற்றிருக்கஹிந்திக்கு மட்டும் தனிச் சலுகை ஏன்கோடிக் கணக்கான ரூபாய்களை வாரிக் கொட்டுவானேன்தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஹிந்தி எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்த்தே தீருவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது  அறிக்கை வருமாறு:

இந்திய அரசமைப்புச் சட்டப்படி எட் டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப் பட்டுள்ள மொழிகள் 22 ஆகும்முதலில் 14 மொழிகள் - பிறகு கூடுதலாகி 22 ஆக பட்டியல் நீண்டதுஎந்த ஒரு தனி மொழிக்கும் ‘தேசிய மொழிஎன்று அதன் தலைப்பில் குறிப்பிடாமல்,   ‘‘Languages'' ‘‘மொழிகள்'' - என்று மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்!

ஒன்றிய அரசின் உறுதிமொழி என்னாயிற்று?

தேவ பாஷைஎழுத்துக்களைக் கொண்ட  ‘ஹிந்திஆட்சி மொழியாக அர சமைப்புச் சட்டத்தில் அறிவிக்கப்பட்டாலும்ஜனநாயகத்தில் மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் இணை ஆட்சி அலுவல் மொழியாக நீடிக்கும் என்பது இந்திய பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர் களால் நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி!

அது ஒன்றிய அரசின் வாக்குறுதியே தவிரஒரு தனி நபர் தந்த வாக்குறுதி அல்லஒன்றிய அரசை எந்நாளும் கட்டுப்படுத்தும்.

இந்தப் பின்னணியை அறவே - ‘வசதி யாகமறந்துவிட்டுஆர்.எஸ்.எஸின் அரசியல் பிரிவான பா..ஆட்சிக்கு வந்ததுமுதல்ஹிந்தியையும்அதன் தாயான சமஸ்கிருதத்தையும் வேக வேக மாகத் திணிப்பதிலேயே முனைப்பு காட்டி வருகின்றது!

எங்கும் ‘ஹிந்திஎதிலும் ‘ஹிந்திகூடுதல் நிதியை செம்மொழி தகுதி பெற்றி ருந்த தமிழுக்குக் கிள்ளிக் கொடுப்பதும்சமஸ்கிருதத்திற்கு அள்ளி - வாரிக் கொடுப்பதும் வாடிக்கையாகி வருகிறது இந்த பா..ஒன்றிய ஆட்சியில்!

(2017 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரை செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.643.84 கோடிஅதேநேரத்தில் தமிழ்மலையாளம்கன்னடம்தெலுங்குஒடிசா மொழிகள் அனைத்திற்கும் சேர்த்து ஒதுக்கப்பட்ட தொகையோ ரூ.29 கோடி மட்டுமே!)

கேள்வி கேட்பது ஒரு மொழியில் என்றால்,

பதில் அளிப்பது ஹிந்தியிலா?

ஹிந்தி தெரியாதவர்கள் கேள்வி கேட் டால்தகவல் சேகரிக்க விரும்பினால்அவர்கள் எந்த மொழியில் கடிதம் எழுதிக் கேட்கிறார்களோஅம்மொழியில் பதில ளிப்பதுதான் குறைந்தபட்ச நாகரிகம்சட்டப்படியான கடமையும்கூட!

அப்படியில்லாமல், ‘சர்வமும் ஹிந்திஎன்ற முறையில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் ஹிந்தி பேசாத - தெரியாத - பகுதி எம்.பி.,களுக்கும்கூட ஹிந்தி மொழியிலேயே பதில் எழுதுவது அரசியல் அடாவடித்தனம் அல்லாமல் வேறு என்ன?

மாநிலங்களவை தி.மு.கட்சியின் தலைவரான மூத்த உறுப்பினர் மானமிகு திருச்சி சிவா அவர்கள் இதுபற்றி இரண்டு நாள்களுக்குமுன்ஒரு பேட்டியை புது டில்லியில் ஊடகங்களுக்குத் தந்துள்ளார் - வேதனையுடன்!

தகவல் பரிமாற்றம் என்பது முக்கியமாமொழித் திணிப்பு முக்கியமா?

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் வேதனை!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (28.7.2021) விசாரணைக்கு எடுத்துக்கொள் ளப்பட்ட வழக்கொன்றில்புதுச்சேரியில் நியமன எம்.எல்..,க்கள் தொடர்பான தகவல்களை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டு விண்ணப்பித் திருந்தார் சென்னையைச் சேர்ந்த வழக்கு ரைஞர் எம்.ஞானசேகரன் என்பவர்.

அந்த மனுவை அவருக்குத் திருப்பி அனுப்பிய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம்ஹிந்தியிலேயே பதிலளித் திருக்கிறது.

‘‘எனக்கு ஹிந்தி தெரியாதுதமிழ்ஆங்கில மொழிகள் மட்டுமே தெரியும்.எனவேஹிந்தியில் வழங்கிய உத்தரவை ரத்து செய்யவேண்டும்எனக்குத் தெரிந்த மொழிகளில் மட்டுமே பதில் அளிக்க உத் தரவிட வேண்டும்'' என்று கோரி இருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி திரு.எஸ்.வைத்தியநாதன் அவர்கள் முன் நேற்று (28.7.2021) விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு ஆவணங்களைப் பார்த்த உயர்நீதிமன்ற நீதிபதிமனுதாரரைப் பார்த்து, ‘‘உங்களுக்கு மட்டுமல்லஎனக்கும் ஹிந்தி தெரியாது'' என்று விளக்கம் அளித்தார்!

பின்னர் ஒன்றிய அரசு 16 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவேண்டுமென்று உத்தரவிட்டார்!

என்னே விசித்திரம்திணிப்பின் காரண மாக எவ்வளவு நேரம்,  உழைப்பு வீணாகிநீதிமன்றமே இப்படி வேதனைப்படும் அளவுக்கு வெளிச்சம் போட்டு காட்டப் படுகிறது!

தனக்கே ஹிந்தி தெரியாது என்று உண்மையைக் கூறிய மாண்பமை நீதிபதிஹிந்தி எதிர்ப்புப் பின்னணியிலிருந்து அப்பதவிக்கு வந்தவர் அல்லஅவருக்கே இந்தத் திணிப்பு இவ்வளவு வேதனையைத் தந்துள்ளது என்கிறபோதுமற்றவர்களுக்கு எப்படிப்பட்ட உணர்வுகள் ஏற்படும் என்பதை ஒன்றிய அரசு எண்ணிப் பார்க்கவேண்டாமா?

ஹிந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!' - முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தொலைநோக்கு முழக்கம்!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் தந்த அய்ம்பெரும் முழக்கங்களில் ஒன்று, ‘ஹிந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!' என்பது - எப்படி சரியான வழிகாட்டல் பார்த்தீர்களா?

1938-லேயே கட்டாய ஹிந்தியை எதிர்த் துப் போர்க்குரலை தந்தை பெரியாரும்தமிழ் அறிஞர்களும்தமிழ்ப் பெருமக்களும் எதிர்த்துத் தொடங்கிய அறப்போர் இன்னும் முடியவில்லைமுற்றுப்புள்ளி வைக்காதுஅரைப் புள்ளியாகவே தொடரவேண்டிய அவசியத்தை வடக்கின் ஹிந்தி வெறியர்கள் உருவாக்கினால்ஒருபோதும் தமிழ் மண் - சகித்துக் கொண்டிருக்காது!

எதிர்த்தே தீருவோம்!

திணிப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்த்தே தீருவோம் - உயர்நீதிமன்ற நட வடிக்கை சாட்சியங்களாக அமைந்துள்ளதுநாம் நீதியின் பக்கம் நின்று நியாயம் கேட்பதை உலகுக்கு உணர்த்துவதாக உள்ளது அல்லவா!

கி.வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

29.7.2021            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக