• Viduthalai
புதுடில்லி,ஆக.18- இந்தியா வில் சொந்த மாநில மக் களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டி யலில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியாவில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் யார் என்பது தொடர்பாக இந்தியா டுடே ஒரு கருத் துக்கணிப்பு நடத்தி யுள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 42 சதவீத ஆதரவை பெற்று முதலிடத் தில் உள்ளார்.
இவரை தொடர்ந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 38 சதவீதத்தை பெற்று 2ஆவது இடத்தி லும், கேரளா முதலமைச் சர் பினராயி விஜயன் அவர்கள் 35 சதவீதம் பெற்று மூன்றாம் இடத் திலும், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே 31 சதவீதத்தை பெற்று நான்காம் இடத் திலும் உள்ளனர்.
மேலும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் 30 சதவீதம் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளார். அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 6ஆவது இடத்திலும், உத்திரபிர தேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 7ஆவது இடத்திலும், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கேலாட் 8ஆவது இடத்தி லும் உள்ளனர். இதனை தொடர்ந்து டில்லி முத லமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 9ஆவது இடத்தி லும், ஜார்காண்ட் முதல மைச்சர் ஹேமந்த் சோரன் 10ஆவது இடத்திலும், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாஹெல் 11ஆவது இடத்தில் இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக