செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டப்படி - முறைப்படி நடந்துள்ளது - மிரட்டலுக்கு அஞ்சோம்!


செய்தியாளர்களிடையே இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திட்டவட்டம்!

சென்னை, ஆக.17  அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டப்படி - முறைப்படி நடந்துள் ளது - மிரட்டலுக்கு அஞ்சோம் என்று இந்து சமய அற நிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

அவ்விவரம் வருமாறு:

இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் வரும் திருக்கோவில்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டதின் பேரில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் திருமண மண்டபத்தில், 216 காலிப் பணியிடங்களுக்கு, கருணை அடிப்படையில், பணியின்போது இறந்தவர்களுக்கு, பல ஆண்டுகளாக ஓய்வூதியம் கிடைக்காமல் அல்லல்பட்டுக் கொண்டிருந்த குடும்பங்களுக்கு ஓய்வூதியம் என்று 216 குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு, அதற்கான உத்தரவை கடந்த 14 ஆம் தேதி வழங்கியதை அனைவரும் அறிவீர்கள்.

அதில், 58 நபர்கள் திருக்கோவிலில் அர்ச்சகர் நிலை - இரண்டு காலியாக இருந்த பணி இடங்களுக்கு, ஆகம விதிகளின்படி முறையாகத் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணி ஆணை வழங்கியதன் அடிப்படையில், இன்றைக்கு அவர்கள் எந்தெந்த திருக் கோவிலில் அர்ச்சகர் இரண்டு நிலைக்குப் பணியமர்த் தப்பட்டார்களோ, அந்தத் திருக்கோவிலில் அர்ச்சகர் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்.

விஷமத்தனமான செய்திகள்!

ஒரு சில விஷமத்தனமான செய்திகளோடு எப்பொழு துமே யாரும் உயர்நிலைக்கு வரக்கூடாது என்ற எண்ணங்கொண்டவர்கள், இதில் பல்வேறு விஷமத்தன மான செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்து சமய அறநிலையத் துறையைப் பொருத்த வரையில், 60 ஆண்டுகள் கழிந்து, பணி மூப்பு பெற்ற வர்களும், 70, 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும், திருக்கோவில்களில் அர்ச்சகர்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த வகையி லும் தொந்தரவில்லாமல், அவர்களும் அந்தத் திருக் கோவில்களில் இருக்கின்ற உப கோவில்களில் அர்ச்சனை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

முறையாகக் கற்றவர்கள்

இன்றைய இளைஞர்கள் இறை நம்பிக்கையோடு அடுத்த தலைமுறையினருக்கு ஆன்மிகத்தை விட்டுச் செல்லவேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான், 35 வயதிற்குட்பட்ட, அர்ச்சகப் பள்ளியில் படித்து, ஆகம விதிகளை முறையாக, முழுமையாக் கற்ற 58 பேரை இன்றைக்கு திருக்கோவில்களில் அர்ச்சகர்களாகப் பணியமர்த்தி இருக்கின்றோம்.

மாண்புமிகு தளபதி அவர்களுடைய தொலை நோக்குப் பார்வையின் காரணமாக, அடுத்த தலை முறைக்கு இந்த மக்களை அழைத்துச் செல்லவேண் டும். அடுத்த தலைமுறையினுடைய கட்டமைப்பு மிக உறுதியாக இருக்கவேண்டும் என்கிற நோக்கத் திற்காகத்தான், இப்படிப்பட்ட சீர்திருத்த நடவடிக்கை களை எடுத்துக் கொண்டிருக்கின்றார்.

இந்து சமய அறநிலையத் துறையைப் பொருத்த வரையில், பட்டாச்சாரியார்களையோ, அர்ச்சகர் களையோ யாரையும் திருக்கோவில்களில் இருந்து வெளியேற்றுகின்ற எண்ணம் இல்லை.

அப்படி புதிதாக பணியமர்த்தப்பட்ட இடங்களில் கூட, ஏற்கெனவே  வயது மூப்பினால் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களையும் தொடர்ந்து அந்த இடங் களிலேயே பணியமர்த்த உத்தரவுப் பிறப்பிக்கப் பட்டு இருக்கிறது.

யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை!

எங்கேயாவது ஒருவராவது எங்களைப் பணி நீக்கம் செய்துவிட்டார்கள் என்று பேட்டி அளித்திருக்கி றார்களா?

ஒரு சில ஊடகங்களும், ஒரு சில முகநூல் நண்பர் களும் இந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி, ஏதோ அர்ச்சகர்களுக்கு எதிரான ஓர் அரசு போன்று இந்த அரசை சித்தரிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்து சமய அறநிலையத் துறையைப் பொறுத்தளவில், பதவியேற்ற இந்த மூன்று ஆண்டுகளில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பெயரில், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்ததை அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த அரசியல் தளத்தில், இந்து சமய அற நிலையத் துறையைப் பொறுத்தவரையில், ஹிந்துக் கள், ஹிந்துத்துவா கையில் எடுப்பவர்களுக்கு வேலை யில்லாமல் போய்விட்டது என்ற காரணத்திற்காக, இப்பொழுது இந்த அர்ச்சகர் நியமனப் பிரச்சினையை கைகளில் எடுத்திருக்கிறார்கள்.

மவுனப் புரட்சி

எங்களைப் பொறுத்தவரையில், மாண்புமிகு முதல மைச்சர் அவர்கள் வெளிப்படைத்தன்மையோடு செயல்படுவோம் என்று கூறியிருக்கின்றார். அந்த வெளிப்படைத் தன்மையோடு இந்து சமய அறநிலையத் துறை பீடுநடை போடும். எந்தவிதத் தவறுக்கும் இடந்தராது. மனிதாபிமானத்தோடு ஏற்கெனவே வயது மூப்பு அடைந்து 70, 72 ஆண்டுகள் ஆகிய நிலையிலும், அவர்களுக்கும் உரிய பணிகளை அந்தத் திருக்கோவில்களில் வழங்கத் திட்டமிட்டு இருக் கின்றோம்.

கடந்த 14 ஆம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒரு பெரிய புரட்சியை செய்திருக்கிறார். அதை ஒரு மவுனப் புரட்சி என்றுகூட வருணிக்கலாம்.

மகளிர் ஒருவருக்கு ஓதுவார் பணி

அருகிலுள்ள வேதபுரீஸ்வரர் திருக்கோவிலில், மாடம்பாக்கத்தில் அமைந்திருக்கின்ற தேனுபுரீஸ்வரர் கோவிலில், சுகாஞ்சனா என்ற ஒரு பெண்மணியை ஓதுவராக பணியமர்த்தி இருக்கின்றார். தமிழ்நாட்டில் முதன்முதலில், ஒரு பெண்ணை ஓதுவராகப் பணிய மர்த்திய பெருமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச் சரையே சாரும்.

அந்தப் பெண்மணி, திருவாசகத்தையும், தேவாரத் தையும் முறைப்படியாகக் கற்றவர். ஓதுவார் என்ற நிலையிலிருந்து அவர் பாடுகின்ற பாடல்களை யார் கேட்டாலும், உருகாத மனம்கூட உருகும்.

அந்த அளவிற்கு, நேர்த்தியாக, அனைத்து விவரங்களையும் தெரிந்தவராக, ஆகம விதிப்படி அர்ச்சக முறைப்பற்றி தெரிந்தவர்களுக்குத்தான் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் தேர்ந் தெடுக்கப்பட்டவர்களுக்கு பணியாணையை வழங்கியி ருக்கிறார்கள்.

ஆகவே, இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கவேண் டும் என்பதற்காகத்தான் இன்றைக்குச் செய்தியாளர்களை சந்தித்திருக்கின்றேன்.

யாரை வெளியேற்றினோம்?

எங்கேயாவது, யாராவது - புதிதாக 58 அர்ச்சகர் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர்களுடைய பணி பாதிக் கப்பட்டு இருந்தால், அவருடைய வாய்ப்பு நிறுத்தப்பட்டு இருந்தால், எங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்; அவர்களுக்கு உடனடியாக மாற்றுப்பணி வழங்கப்படும்.

கடந்த 10 ஆண்டுகளில் அர்ச்சகர் நியமனமே நடைபெறவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் திருக்கோவில் களில் நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. சீர்கெட்டு சிதலமடைந்த இந்து சமய அறநிலையத் துறையை, இன்று சீர்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்குப் பொதுநல விரும் பிகள் அவருக்கு ஆதரவு தரவேண்டும்; அவருடைய கரத்தைப் பலப்படுத்தவேண்டும். தொடர்ந்து இதுபோன்ற ஆக்கபூர்வமான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு அனைவரும் உறுது¬ணாக இருக்கவேண்டும் என்று என்னுடைய இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக கோரிக்கையை இன்றைக்கு வைக்கின்றேன்.

சட்டத்திற்கு விரோதமா?

செய்தியாளர்: அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல், இந்து மதக் கோட்பாடுகளில் முதலமைச்சர் தலை யிடுகிறார்; பின்னாளில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சுப்பிரமணியசாமி எச்சரிக்கை விடுத்தி ருக்கிறாரே அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

அமைச்சர்: மிரட்டலுக்குப் பயப்படுகின்ற அரசல்ல, தமிழ்நாடு அரசு. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எந்த செயலை செய்தாலும், அந்த செயலில், சட்ட மீறல் இருக்கக்கூடாது என்று எங்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.

இதில் அரசமைப்புச் சட்டம் எங்கே மீறப்பட்டு இருக்கிறது என்று சுட்டிக்காட்டினால், நிச்சயமாக அதற்கு நாங்கள் விதிவிலக்கு அளிப்போம்.

இந்து சமய அறநிலையத் துறையைப் பொறுத்த வரையில், ஆக்ட் -2, 1971 - இந்து சமய அறநிலையத் துறைச் சட்டம்  1954 இல் சட்டத் திருத்தம் மேற்கொள் ளப்பட்டது.

அதன்படி பரம்பரை அர்ச்சகர் முறை ஒழிக்கப் பட்டு இருக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல், திருக் கோவில்களில் பணியாற்றுகின்ற பணியாளர்களின் வயது உச்சவரம்பு 60 என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, அரசமைப்புச் சட்டத்தை எங்கும் ஒரு துளிகூட இந்து சமய அறநிலையத் துறை  மீறவில்லை; மீறப்படவும் இல்லை. சுட்டிக்காட்டினால், அதற்கான விளக்கத்தைத் தரத் தயாராக இருக்கின்றோம்.

ஆகவே, மிரட்டலுக்கெல்லாம் அஞ்சுகின்ற இயக்கமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம்.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர்

செய்தியாளர்: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் செய்த தவறையே தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் செய்கிறார் என்கிறார்களே?

அமைச்சர்:  மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர் அவர்கள்தான், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத் திற்காகப் பாடுபட்டவர்.

அப்படி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் முன் னேற்றத்திற்குப் பாடுபட்டது தவறு என்றால், நிச்சயமாக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்தத் தவறை செய்வார்.

எந்தவிதத்தில் குற்றம்?

செய்தியாளர்: நாகநாத சுவாமி கோவிலில், ஒரு அர்ச்சகர் அழுவதுபோன்று முகநூலில் வெளிவந் திருக்கிறதே?

அமைச்சர்: இன்றைக்குக்கூட பிரபல பத்திரிகை எழுத்தாளர் அவர்கள், ஒரு பத்திரிகையில் இரண்டாண் டுகளுக்கு முன்பு தீட்டிய கட்டுரையை, இன்றைக்கு அதிலுள்ள ஒரு சில பகுதிகளை எடுத்து வெளியிட்டு, ஒரு அர்ச்சகர் அழுவதாகப் பதிவு செய்துள்ளார். அந்த அர்ச்சகர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர் அல்ல; ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட ஒரு நிகழ்வின் காரணமாக அந்த அர்ச்சகர் அழுகின்ற  நிகழ்வையும் இணைத்து -மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் எழுதிய கட்டுரையையும் ஒருங்கிணைத்து முகநூலில் பதிவிட் டுள்ளார்கள்.

இப்படி போலியாக, இந்தப் பணி நியமனங்களை எதிர்க்கவேண்டும் என்பதற்காகவே, கண்மூடித்தன மாகவே இப்படிப்பட்ட போலிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கப் படவேண்டியதாகும்.

செய்தியாளர் கேட்டதுபோல, நாகநாத சுவாமி திருக்கோவிலில் ஒரு அர்ச்சகர் பணியிடம் காலியாக இருந்தது. அந்தப் பணிக்கு திரு.முத்துக்குமார் என்பவர், ஏற்கெனவே இரண்டு திருக்கோவில்களில் தற்காலிக அர்ச்சகராகப் பணியில் இருந்தார்.

ஒரு திருக்கோவில் நீங்கள் சொன்ன நாகநாத சுவாமி திருக்கோவில், இன்னொரு திருக்கோவில் தார்கார்ணிசுவரர் திருக்கோவில். இந்த நாகநாத சுவாமி கோவிலில் 30.6.2021 இல்தான் தற்காலிக பணி அடிப் படையில் பணி நியமனம் செய்யப்பட்டார்.

ஏற்கெனவே அவர், தார்கார்ணிசுவரர் திருக்கோவி லிலும் தற்காலிக பணியாளராக இருக்கின்றார். ஆகவே, காலியாக இருந்த இடத்திற்கு, விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து, அதன் வாயிலாக வேல்முருகன் என்பவர் நியமிக்கப் பட்டார்.

ஆனால், நீங்கள் சொல்லுகின்ற நாகநாதசுவாமி கோவிலில் பணியாற்றுகின்ற முத்துக்குமார், தார்கார்ணி சுவரர் கோவிலிலும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். இரண்டு கோவில்களில் பணியாற்றுகின்றவரை, ஒரு கோவில் பணி நியமனம் செய்துவிட்டு, இன்னொரு கோவிலில் வேறொருவருக்குப் பணி கொடுப்பது எந்தவிதத்தில் குற்றமாகும்.

- இவ்வாறு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக