செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

கோயில் ஓதுவார் பணிக்கு பெண் நியமனம்


மாடம்பாக்கம், ஆக.16- தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் உள்ள பழைமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு பெண் ஒருவர் ஓதுவார் பணிக்கு நிய மிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு பெண் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு கோயில்களில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம்’ தொடங் கப்பட்டுள்ள நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (14.8.2021) தொடங்கி வைத் தார். 58 பேருக்கு அர்ச்சகர்களாக பணி ஆணை வழங்கப்பட்டது. இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் என் பவரது மனைவி சுகாஞ்சனா என்ற பெண், ஓதுவாராக நியமிக்கப்பட்டுள் ளார்.

இவர் தற்போது தாம்பரம் சேலை யூரில் வசித்து வருகிறார். இவரது கணவர் கோபிநாத் ‘டிசைனிங் இன் ஜினியராக' பணி புரிந்துவருகிறார். ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது இவர் இந்துசமய அறநிலையத் துறை யின் கட்டுப்பாட்டில் உள்ள மாடம்பாக் கம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு ஓது வாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறுவயதில் பாடல்களை நன்றாக பாடுவார் என்பதால் இவரது பெற்றோர் கரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர்த்துள்ளனர். பள்ளியில் பாடல்களை சிறப்பாக பாடி பயிற்சியை சிறப்பாக முடித்துள்ளார். தமிழ்நாட்டில் முதன் முறையாக பெண் ஓதுவாராக இவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின் றனர். நேற்று (15.8.2021) முதல் பணியில் சேர்ந்த சுகாஞ்சனா காலையில் பஞ்ச புராணம், தேவாரம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணப் பாடல்களைப் பாடினார். இதைத் தொடர்ந்து மாலையும் பூஜைகள் முடிந்த பிறகு பாடல்களைப் பாடினார். பெண் ஒருவர் ஓதுவாராக மாடம்பாக்கம் கோயிலில் நியமிக்கப்பட்டுள்ள செய்தி வேகமாகப் பரவியது. இதனால் மக்கள் இவர் பாடுவதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்து செல்கின்றனர்.

இதுகுறித்து சுகாஞ்சனா கூறும் போது, "கரூரில் அரசு இசைப் பள்ளியில் பயிற்சி பெற்றுஒரு பள்ளியில் இசை ஆசிரியராக பணிபுரிந்து வந்தேன். சமீ பத்தில் பத்திரிகைகளில் விளம்பரத்தைக் கண்டு ஓதுவார் பணிக்கு விண்ணப்பித் தேன்; பணி ஆணையை பெற்றுள் ளேன். எனக்கு வாய்ப்பளித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள் கிறேன். இந்த பணி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என் றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக