செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

தேவை மனநல மருத்துவம்


சுதந்திரப் போராட்டத் தின் போது காந்தியாரால் அறிவிக்கப்பட்ட போராட்டங்களில், குறிப்பாக மதுவிலக்குப் போராட்டத்தில் தம் மனைவி, தங்கை சகிதமாக ஈடுபட்டு சிறை சென்றவர் பெரியார். தமக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டித் தள்ளியவரும் அவரே.

"மதுவிலக்குப் போராட்டத்தை கைவிடுவதா, தொடருவதா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் என்னிடம் இல்லை, ஈரோட்டில் இரு பெண்களின் கைகளில்தான் இருக்கிறது" என்று பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் சொன்னவர் காந்தியார். அந்த இரு பெண்கள் பெரியாரின் மனைவி நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாளும்தான். கதர்ப் பிரச்சாரத்தில் முன் வரிசையில் நின்றவரும் பெரியாரே!  கதர்ப்பற்றி மயிலாப்பூரில் பெரியார் பேசியதற்காக 124ஏ செக்சனும் அவர்மீது பாய்ந்ததுண்டு. கோர்ட் பகிஷ்காரம் என்று காந்தியார் அறிவித்த போது தனக்கு வந்துசேரவேண்டிய ரூபாய் 50 ஆயிரத்துக்கான அடமான பத்திரத்தை கிழித்து எறிந்த பெருமகன் பெரியார். சுதந்திரப் போராட்ட வீரர் என்ற தாமிர பட்டயத்தையும் ஒன்றிய அரசு அவருக்கு அளித்ததுண்டு. '1942 - வெள்ளையனே வெளியேறு!' போராட்டத்தின்போது காங்கிரசை விட்டு வெளியேறிய ராஜாஜியை 'ஆகஸ்டுத் துரோகி' என்று காங்கிரசார் பழித்ததும், சிறுமைப்படுத்தியதும் உண்டு. ஆனால் அவர் தான் முதல் கவனர் ஜெனரல் - உள்துறை அமைச்சர் - முதல் அமைச்சர் பதவிகள். துரோகப் பரிசுகள்! இந்த யோக்கிய சிகாமணிகள் தான் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினைப் பற்றி திராவிடர் கழகத் தலைவர் சொல்லாத ஒன்றைத் தாங்களே கற்பனை செய்து,  சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறுகின்றனர்.

குருமூர்த்தியை உடனடியாக ஒரு நல்ல மனநல மருத்துவமனையில் சேர்ப்பது நல்லது.

நாங்கள்கூட எழுதலாம். மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கனவில் வந்து  விஜயேந்திர சரஸ்வதியிடம் 'நான் எப்படி மடத்தை 'காம' கோடியாக நடத்தினேனோ... அதிலிருந்து வழுவாமல் பார்த்துக் கொள்' என்று சொன்னார் என்று போட்டால் சந்தோஷம் தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக