வியாழன், 19 ஆகஸ்ட், 2021

பக்தி என்ற முகமூடியை பயன்படுத்தி சாமியார்கள் மக்களுக்கு துரோகம் செய்கின்றனர் மக்கள் விழிப்புடன் தங்களைக் காத்துக் கொள்ளவேண்டும்: உயர்நீதிமன்றம்

 

சென்னை,ஆக.18- சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிறுவனர் சாமியார் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளி முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர்இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவி களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் காவல்துறையினர் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய் தனர்பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.அய்.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்தநிலையில் தலைமறை வாக இருந்த சிவசங்கர் பாபாவை தமிழ்நாடு சி.பி.சிஅய்.டிகாவல்துறையினர் டில்லியில் கைது செய்தனர்பின்னர் அவர் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்அவ ரிடம் சி.பி.சி.அய்.டிகாவல் துறையினர் பல கட்டங்களாக விசாரணை நடத்தினர்அவ ரது பள்ளியில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத் தப்பட்டதுஇதில் சில ரகசிய தகவல்கள் கைப்பற்றப்பட்ட தாக தகவல்களும் வெளியா னதுபள்ளி ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப் பட்டது.

அண்மையில்,  இந்த வழக் கில்  300 பக்கங்கள் கொண்ட  குற்றப்பத்திரிகையை செங்கல் பட்டு நீதிமன்றத்தில் சி.பி.சிஅய்.டிகாவல்துறையினர் தாக் கல் செய்தனர்.இதில் 40 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக கூறப்படுகிறதுஇந்த வழக்கில் இதுவரை சிவ சங்கர் பாபாஆசிரியைகள் பாரதிசுஷ்மிதாதீபா ஆகி யோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் ஏற்கெனவே நீதிபதி எம்.தண்டபாணி முன் பாக விசாரணைக்கு வந்ததுஅப்போது பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி அளித்த ரகசிய வாக்குமூலத்தை காவல் துறையினர் சீலிடப்பட்ட உறை யில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘‘கடந்த 2015, 2018, 2020ஆம் ஆண்டுகளில் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் சிலர் அளித்துள்ள புகார்களில் காவல்துறையினர் போக்சோஇந்திய தண்டனை சட்டம்தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, 3 முறை கைது செய்துள்ளதாக பதிவு செய்துள்ளனர்.

புகார் அளித்த மாணவிக ளில் ஒருவர் தனது பள்ளிப் படிப்பை முடித்தபிறகும் 20 நடன நிகழ்ச்சிகளை இந்த பள்ளியில் நடத்தியுள்ளார்மேலும் 2015ஆம் ஆண்டு பாலி யல் ரீதியாக துன்புறுத்தப்பட் டதாக கூறப்படும் மாணவி ஒருவர்கடந்த 2019ஆம் ஆண்டு சிவசங்கர் பாபாவை யும்அந்த பள்ளி நிர்வாகத் தையும் சமூக வலைதளங்களில் புகழ்ந்து பேசியுள்ளார்.

கைதான பிறகு சிவசங்கர் பாபாவுக்கு 2 முறை நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பிணை வழங்க வேண்டும்’’ என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.தண்ட பாணிசிவசங்கர் பாபாவுக்கு பிணை கோரி தாக்கல் செய் யப்பட்ட 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து நேற்று (17.8.2021) உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி தனது உத்தரவில், ‘மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிப்பதாகவும்ரட்சிப்ப தாகவும் கூறும் போலி சாமி யார்களும்மத குருமார்களும் சமுதாயத்தில் காளான்களைப் போல பெருகியுள்ளனர்ஒரு வித மன இறுக்கத்தில்விரக்தி யில் இருக்கும் பொதுமக்களும் போலி சாமியார்களிடம்தான் சிக்கிக்கொள்கின்றனர்பக்தி என்ற முகமூடியை பயன்படுத்தி மக்களின் நம்பிக்கைக்கு போலி சாமியார்கள் துரோகம் செய் கின்றனர்எனவேபோலி சாமியார்களிடமிருந்து மக்கள் விழிப்புணர்வுடன் செயல் பட்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக