புதன், 11 ஆகஸ்ட், 2021

ஆரியப் புத்தி எங்கே மேயப் போச்சு?

 

காமாலைக் கண்ணுக்குக் கண்டது எல்லாம் மஞ்சள்தான். ‘துக்ளக்பார்ப்பனர் கூட்டத்துக்கு நினைப் பெல்லாமே - பெரியார் - பெரியார் - பெரியார்தான்!

தமிழைப் பற்றிய தந்தை பெரியாரின் கருத்து என்ன?

"தமிழ் மொழிஆங்கில மொழி இரண்டைப் பற்றியும் என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லியிருக்கிறேன்ஆங்கிலம் - வளர்ந்த மொழிவிஞ்ஞான மொழி என்பதும்தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும்இதை நான் சொல்வதற்கான முக்கிய நோக்கம் தமிழ் மொழி - ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும்பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிரதமிழ் மீது எனக்கு வெறுப்பில்லைஎன்று கூறுகிறார் தந்தை பெரியார் (‘விடுதலை', 1.12.1970, பக். 2).

இவ்வளவு தெளிவாக தந்தை பெரியார் தமிழைப் பற்றிக் கருத்துக் கூறியிருக்கும் நிலையில்இதனை மித்திர பேதம் செய்யும் பார்ப்பன நரித்தனத்தைக் கவனிக்கத் தவறக் கூடாது!

தமிழை நீஷப் பாஷைஎன்று சொன்ன சங்கராச்சாரியாரை மகான் என்றும்லோகக் குரு என்றும்பெரிய வா(ல்)ள் என்றும் கூறும் கும்பலின் குதர்க்கப் புத்தியைக் கவனிக்கத் தவறக் கூடாது.

ஆன்மிகம் மட்டும்தான் தமிழைக் காப்பாற்றுமாம்.

பித்தாபிறை சூடி பெருமானே!"

"சந்திரனைத் தலையில் சூடியிருக்கும் சிவனே!" என்று பாடினால் தமிழ் வளர்ந்து விடுமாம்.

மூடத்தனம்தானே இந்த முப்புரிகளின் மூலதனம் - ஆன்மிகம் என்றால் என்னஇது குறித்து ‘துக்ளக்குருமூர்த்தியின் குருநாதர் சோ என்ன சொல்லியிருக்கிறார்?

கேள்விஅரசியல்வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்ஆன்மிகவாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்?

பதில்அரசியல்வாதி ஆவதற்கு பொய் சொல்லத் தெரிய வேண்டும்ஆன்மிகவாதி ஆவதற்குப் பொய்யை அருள் வாக்காக மாற்றத் தெரிய வேண்டும். (‘துக்ளக்', 26.10.2016, பக். 23)

இந்த ஆன்மிகம் வளர்ந்தால் தான் தமிழ் வளருமாம்.

கடைசியில் ஒரு கேள்விகோயில்களில் தமிழ் வழிபாட்டு மொழியாகக் கூடாது என்று கொடி பிடிக்கும் இந்தப் பார்ப்பனக் கும்பல் - ஆன்மிகம் மட்டுமே தமிழைக் காப்பாற்றும் என்கிறதே - அப்போது எங்கே மேயப் போனது ஆரியப் புத்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக