ஞாயிறு, 3 நவம்பர், 2019

அட ‘ஞானசூன்யமே' - உன் பெயர்தான் ‘‘நமது அம்மா''வா?

அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான ‘‘புரட்சித் தலைவி நமது அம்மா'' நாளேட்டில், ‘‘பெயர் வைத்த நாள் பிறந்த நாள் ஆகுமா?'' என்ற தலைப்பில் ‘குத்தீட்டி' என்ற புனைப் பெயரில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.
சென்னை பெரியார் திடலில் கடந்த 1.11.2019 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில், ‘‘மொழி வாரி மாநிலம் உருவாக்கமும் - தமிழ்நாடு பெயர் மாற்ற மும்'' எனும் தலைப்பில் ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், நவம்பர் 1 (1956) என்பது மொழி வாரி மாநிலம் என்ற அடிப்படையில் சென்னை மாநிலம் (Madras State)உருவான நாள்.
1967 ஜூலை 18 என்பது தி.மு.க. ஆட்சியில் அண்ணா முதலமைச்சராகவிருந்தபோது, முதல மைச்சர் அண்ணாவால் முன்மொழியப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதுதான் ‘‘தமிழ்நாடு'' என்ற பெயர் மாற்றம் என்று பேசினார்.
இந்தத் தகவலிலோ, கருத்திலோ என்ன குறையைக் கண்டது அ.தி.மு.க. நாளேடு?
சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், ‘‘எங்களப்பன் 2 ஆம் நம்பர் குதிருக்குள் இல்லை'' என்பதுபோல மூக்கை நுழைத்து அறுபடுவது ஏன் என்று தெரியவில்லை.
‘‘அது சரி... மனிதகுலத்தின் மூலமும், முதற்புள்ளியும், ஆணிவேரும் தமிழன்தான் என்பதற்கு ஆவண சாட்சியங்களாக வைகை நதிக்கரையில் இருந்து கிடைத்தி ருக்கும் கீழடி பொக்கிஷங்களை அருங் காட்சியகம் மூலம் இந்த உலகிற்கே அறிவிக்க சுமார் பதின்மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கும் எடப்பாடியாரின் வரலாற்று சிறப்புமிக்க முடிவிற்கு வாழ்த்துச் சொல்ல மனம் வராத வீரமணி தமிழர் தினத்தை விவகார பொருளாக்க முயற்சிப் பது வெட்கக்கேடு அல்லவா?
பேர் வைக்கும் நாளும், வைத்திருக்கும் பெயரை மாற்றி வைக்கும் நாளும் ஒரு போதும் பிறந்த நாள் ஆகாது. இந்த விபரம் பெரியார் திடல் காரருக்கு எப்படி விளங்காம போச்சோ.''
என்று விளக்கெண்ணெய்த் தடவிய மொட் டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார்.
(வருந்தி வாழ்த்தைக் கேட்கும் வறுமை நிலைக்கு ஆளாகிவிட்டதே ‘நமது அம்மா' நாளேடு! ஆச்சாரியாரின் குலக்கல்வியின் மறு பதிப்பான புதிய கல்வித் திட்டத்தை செயல்படுத்தும் அரசுக்குப் பாராட்டு ஒரு கேடா?)
தமிழக அரசின் அறிவிப்பையோ - விழா கொண்டாடுவதையோ கூட குறிப்பிட்டுப் பேச வில்லை கழகத் தலைவர்.
ஒரு கருத்து விளக்கத்துக்காக இரு நிகழ்வுகளும் தனித்தனி தேதிகளில் தனித்தனி ஆண்டுகளில் நிகழ்ந்தன என்று கூறினார், அவ்வளவுதான்.
விவாதப் பொருளாக இப்போது ஆக்கி விட்டது அதிமுக ஏடுதான்.
தேவையில்லாமல் இந்தப் பிரச்சினையைக் கிளப்பியதன்மூலம் தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டை விவாதப் பொருளாக்கி, தமிழ்நாடு அரசின் தவறான நடவடிக்கையை அடிக்கோடிட்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்டதன் உள்நோக்கம் என் னவோ?
தனக்குத்தானே கோல் (Same Side Goal) என்பார்களே, அதனை ‘அழகாக' செய்திருக்கிறது அ.தி.மு.க. ஏடு.
பிரச்சினை என்று வந்து விட்ட பிறகு, பார்த்து விட வேண்டியதுதானே - இப்பொழுது மறுபடியும் கேட்கிறோம்:
நவம்பர் ஒன்றில் (1956) மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டபோது இம்மாநிலத்தின் அதிகாரப் பெயர் என்ன? சென்னை மாநிலம்  (விணீபீக்ஷீணீs ஷிtணீtமீ) என்பதுதானே? அங்கு தமிழ்நாடு எங்கே வந்தது?
மற்ற மற்ற மாநிலங்கள் எல்லாம் தங்களுக்குரிய வரலாற்றுப் பெயர்களைத் தாங்கும்பொழுது, தமி ழைத் தாய்மொழியாகக் கொண்ட நமது மாநிலத் திற்குத் தமிழ்நாடு என்று ஏன் பெயர் வைக்கக் கூடாது என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்த வரலாறு எல்லாம் தெரியாத கத்துக்குட்டிகள் எழுதுகோல் பிடிக்கலாமா?
நாடாளுமன்றத்தில், பூபேஷ்குப்தாகூட இது பற்றிப் பேசினார்; மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா அதை ஆதரித்துப் பேசினார்.
பிறகு சென்னை மாநில சட்டமன்றத்தில் தி.மு.க. சார்பிலும், பிரஜா சோசலிஸ்டு கட்சி சார்பிலும் தமிழ்நாடு பெயர் மாற்றம் கோரி கொண்டு சென்ற தீர்மானங்கள் தோற்கடிக்கப்பட்டன.
சங்கரலிங்கனார் இதற்காகப் பட்டினி கிடந்து உயிர் துறந்துள்ளார்.
கடைசியாக தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில், முதலமைச்சர் அண்ணாவே முன்மொழிந்து ஒரு மனதாக 1967 ஜூலை 18 இல் நிறைவேற்றப்பட்ட பெயர்தான் தமிழ்நாடு.
‘‘தமிழ்நாடு வாழ்க வாழ்க'' என்று அண்ணா கூற, உறுப்பினர்கள் தொடுத்து மூன்று முறை கூறிய வரலாறெல்லாம் தெரியாமல் உளறக்கூடாது.
இதனைப் புரிந்துகொள்ளாமல் பெயர் வைத்த நாள் பிறந்த நாளாகுமா என்று கேள்வி எழுப்புவது ‘நமது அம்மா' ஏட்டின் அறிவு சூன்யத்தைத்தான் அப்பட்டமாக ஓவியம் வரைந்து காட்டுகிறது.
பிறக்காத குழந்தைக்குப் பெயர் சூட்டுவதும், பிறந்த நாள் கொண்டாடுவதும் நல்ல தமாஷ்தான்!
பெயர் வைத்த நாள் என்கிறதே ‘நமது அம்மா' நாளேடு - அந்த பெயர் வைத்த நாளும் சரி, பிறந்த நாளும் சரி ஜூலை 18 தானே!
நவம்பர் 1 இல் ‘தமிழ்நாடு' என்ற வரலாற்றுப் பெயர் அறிவிக்கப்படவில்லையே!
அறிஞர் அண்ணாவால் நிறைவேற்றப்பட்ட வர லாற்றுச் சிறப்புமிக்க ஒன்றை அண்ணா பெயரை கட்சியில் வைத்துக் கொண்டுள்ள கட்சி  இருட்ட டிப்பு செய்வானேன்? அண்ணாவை அவமதிப்பது ஏன்?
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட கரு நாடகம், ஆந்திரா, கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்கள் பிரசவித்த நாள் நவம்பர் ஒன்றுதானே - தமிழகத்தின் பிறந்த நாள் என்று அரட்டை அடிக்கும் ‘நமது அம்மா' ஏடே!
அந்த நவம்பர் 1 அன்று தமிழ்நாடு என்று அறி விக்கப்பட்டதா? இல்லையே, சென்னை மாநிலம் என்றுதானே அழைக்கப்பட்டது. இந்தப் பாலபாடம் கூடத் தெரியாமல் பட்டித்தனமாகப் பேசி, ‘முட்டாளுக்கு ஓரிடம் புத்திசாலிகளுக்கு மூன்று இடம்' என்பதுபோல தன்னை அசிங்கப்படுத்திக் கொள்ளலாமா?
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை வெளி யிட்ட தாக எழுதுகிறது - அதுகூட ஒழுங்காகத் தெரியவில்லை. பேச்சுக்கும், அறிக்கைக்கும் வித்தியாசம் தெரியாத விவரம்  கெட்டதுகளுக்கு ‘குத்தீட்டி' என்ற பெயரா?
விமர்சனத்துக்கு விமர்சனத்தால் பதில் சொல்ல சரக்கு இல்லாததுகள் 86 வயதில் 75 ஆண்டுக்கு மேற்பட்ட பொதுத் தொண்டுக்குச் சொந்தக்காரரான தாய்க்கழகத்தின் தலைவரை, ரொட்டித் துண்டு போடுகிற எஜமானர்களுக்கு விசுவாசம் காட்டுபவர் என்று எழுதுகிறார் ஒருவர் என்றால், எப்படிப்பட்ட பேர்வழிகள் எல்லாம் ஓர் ஆளும் கட்சி ஏட்டில் ஏற்பாடு செய்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதலமைச்சரும், துணை முதலமைச்சரும்தான் இதனை விளக்கவேண்டும்.
-விடுதலை நாளேடு, 3.11.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக