வெள்ளி, 29 நவம்பர், 2019

ஆத்திரப்படுவீர் ஒடுக்கப்பட்டோரே!

கேட்ட கேள்விக்கு எங்காவது பதில் இருக்கிறதா? பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கூடவே கூடாது என்பது பார்ப்பன 'தினமலர்' கூட்டத்தின் கருத்து என்பதை இதன்மூலம் பார்ப்பனரல்லாதார் - குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இவர்கள் இந்துக்களே ஒன்று சேர்வீர்! என்பார் கள். அந்த இந்துவான பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு! என்றால் இப்படி எதிர் குரல் கொடுப்பார்கள்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாதாம். ஆனால் உயர்ஜாதி பார்ப்பனரின் வயிற்றில் மட்டும் அறுத்துக் கட்டவேண்டுமாம்.

ஸ்டேட் பேங்க் தேர்வில் தாழ்த்தப்பட்டவர்களும் பிறப்டுத்தப்பட்டவர்களும் 61.25 மார்க்கு வாங்க வேண்டுமாம். ஆனால் உயர்ஜாதி பார்ப்பனக் கும்பல் 25.5 சதவீதம் வாங் கினால் போதுமாம். இதைச் சுட்டிக்காட்டினால் பிற்படுத்தப்பட் டோர் மத்தியில் ஆத்திரத்தைத் தூண்டுகிறாராம் வீரமணி. பிற்படுத்தப்பட்ட மக்கள் மரக்கட்டைகள் என்ற நினைப்பா?

ஆரியத்தின் இத்தகைய நடவடிக்கைகளால் உரிமை உணர்ச்சியால் உந்தப்பட்டு ஆத்திரப்படத்தான் செய்வார்கள். உணர்ச்சி பொங்க ஆத்திரப்படாவிட்டால் - முதல் அரசமைப் புச் சட்டத் திருத்தம் வந்திருக்குமா? 69 விழுக்காடு இடங்கள் தான் தமிழ்நாட்டில் கிடைத்திருக்குமா? ஆத்திரப்படுங்கள் - ஒடுக்கப்பட்டோரே!

அப்பொழுதுதான் ஆரியத்தின் அகங்காரமும் - ஆதிக் கமும் அடங்கும், ஒடுங்கும்! - நம் உரிமையும் காப்பாற்றப்படும்.

- விடுதலை நாளேடு 28 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக