செவ்வாய், 26 நவம்பர், 2019

திமிர் அடங்கவில்லை "தினமலர்" கும்பலுக்கு!

பூணூல் கூட்டம் சொந்த உழைப்பால் முன்னேறி யிருக்குதாம். அப்படி என்ன உழைத்தார்களாம்? பட்டியல் போடட்டுமே இந்தப் பார்ப்பனர் கூட்டம்.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சாஸ்திரம் எழுதி வைத்தது யார்?

தலைமுறை தலைமுறைகளாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து கைதூக்கிவிட்டது நீதிக்கட்சி ஆட்சிதானே.   அதற்குப் பாதுகாப்பு அரண் அமைத்தது தந்தை பெரியார் தானே.

அந்தப் பாதுகாப்பு ஆணையை எதிர்த்து உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம் வரை படையெடுத்து அந்த ஆணையை ரத்து செய்வதற்குக் காரணமாக இருந்தது பூணூல் கும்பல்தானே.

இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் உறுப்பினராக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே மரபுகளை உதைத்துத் தள்ளி, நீதிமன்றத்தில் பார்ப்பனர் களுக்காக வாதாடவில்லையா? இந்தப் புத்தியைப் பூணூல் புத்தி என்று அழைக்காமல், பூமாலை போட்டு ஆரத்தி எடுக்க வேண்டுமா?

இன்று வரை பூணூல் போடுவதற்கும், புதுப்பிப்பதற்கும் ஒரு தனி நாளையே குறிப்பிட்டு பூணூல் தரிப்பதன் தாத்பரியம் என்ன?

தூவிஜாதி (இரு பிறப்பாளர்) பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் என்னும் ஜாதி ஆணவம்தானே.

நீ - இரு பிறவியாளன் - பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் என்றால் பார்ப்பனர் அல்லாத மக்கள் எல்லாம் யார்? சூத்திரன்தானே.  சூத்திரனை வேசிமகன் என்று எழுதியுள்ளதே- உங்கள் மனுதர்மம் (அத்தியாயம் 8 சுலோகம் 415). இதனை எதிர்த்தால் பார்ப்பனத் துவேஷமா?

எங்களை வேசி மகன் - சூத்திரன் என்று கூறுவோரை எதிர்த்தால் பார்ப்பனத் துவேஷமா?

'சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!' என்று கூறுவது சுயமரியாதை உணர்வின் ஆவேசம் அல்லவா?

உடல் முழுவதும் நெய்யைத் தடவி புத்திரன் நிமித்தம் யாருடனும் புணரலாம் என்று கூறும் பூணூல் கூட்டம் மான அவமானம் பற்றிக் கவலைப்படலாமா?

சொந்த உழைப்பால் முன்னேறி எந்த குறையும் இல்லாமல் இருக்கிறார்களாம் பார்ப்பனர்கள்.

அட அண்டப்புளுகு திலகங்களே, ஆகாயப் புளுகின் அப்பன்களே!

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டீஸ் இராமச்சந்திர அய்யர் தன் பதிவேட்டில் (SR) தன் வயதைத் திருத்தி மோசடி செய்து பதவி நீடித்த கேவலத்தை என்னவென்று சொல்லுவது!

அன்றைய ஜனாதிபதியாக இருந்த இராதாகிருஷ்ணன் என்ற பார்ப்பனர், காது காதும் வைத்தாற்போல் தண்டனை யிலிருந்தும், ஒரு பைசா இழப்புமின்றித் தப்ப வைத்ததுதான் 'தினமலர்' திரிநூல்களின் அகராதியில் "எந்தக் குறையுமில்லாதவர் பார்ப்பனர்" என்பதற்கான பொழிப்புரை - கருத்துரையா?

ஒன்றைக் கொடுத்து ஒன்பது வாங்க வேண்டாம்.  கொட்ட ஆரம்பித்தால்  தாங்க மாட்டீர்கள்! தர்ப்பைப் புல் கூட்டம் தணலோடு விளையாடிப் பார்க்க வேண்டாம். மத்தியில் பார்ப்பனத் தர்பார் ஆட்சி என்பதால் ஆணவ நிர்வாண ஆட்டம் போட ஆசைப்படவேண்டாம் - எச்சரிக்கை!

-  விடுதலை நாளேடு, 26.11.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக