ஞாயிறு, 3 நவம்பர், 2019

தமிழக அரசு விநியோகிக்கும் ரசீதுகளில் தமிழை நீக்கி இந்தியா?


தமிழக அரசு விநியோகிக்கும் ரசீதுகளில் தமிழை நீக்கி இந்தியா?
சென்னை, நவ. 3 தமிழகத்தில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துக் காவல்துறை சார் பில் அபராதத் தொகைக்கான ரசீது இந்தி மொழியில் கொடுக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி பேசாத மாநிலங்களில் அம்மொழியைத் திணிக்க மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டின் ஒரே மொழியாக இந்தி மட்டுமே இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு வழிகளில் இந்தியை முன்னிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ரயில்வேயில் பணியாற்றும் அதிகாரி கள் இந்தியில் மட்டுமே பேச வேண்டும். அனைத்து உரையாடல் களும் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட் டிருந்தது.
திராவிடர் கழகம் மற்றும்
தி.மு.க. உள்ளிட்ட...
இதற்கு தமிழகத்தில் இருந்து திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி களிடம் இருந்து கடுமையான கண் டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தித் திணிப்பு முயற்சியை கைவிடவேண் டும். இல்லையெனில் மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்துக் கிளம்பும் என தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனை அடுத்து இந்த முயற்சியில் இருந்து பின்வாங்கிய மத்திய அரசு உத்தர வையும் திரும்பப் பெற்றது.
அதன் பிறகு, தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளபட்டதாக அமித்ஷா விளக்கமளித்தார். இந் நிலையில், தமிழகத்தில் மீண்டும் இந்தித் திணிப்பு தொடங்கியுள்ளது.
தமிழக போக்கு வரத்துக்
காவல்துறை சார்பில்...
சாலை விதிமீறல்கள் தொடர்பாக கண்காணிப்பு கேமிராவில் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு தமிழக போக்கு வரத்துக் காவல்துறை சார்பில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப் பட்ட அபராதத் தொகை ரசீது விநி யோகிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக அரசுக்கும்
எதிர்ப்பு வலுத்து வருகிறது
ரசீதுகளில் தமிழ் மொழி இடம் பெறாததற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நடைமுறையை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அது போல, மத்திய அரசின் அறிவிப்பு களுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக் காமல் அதற்கு சிரம் தாழ்ந்து செயல் படுத்தும் அதிமுக அரசுக்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
- விடுதலை நாளேடு, 3.11.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக