வெள்ளி, 8 நவம்பர், 2019

பாதைகளை மறித்துக் கட்டப்பட்ட கோவில்களை அகற்ற அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

‘இந்து' ஏடு வெளியிட்டுள்ள அரசாணைகள்

சென்னை, நவ. 8  அரசு நிலங் கள், சாலைகள், தெருக்கள், பூங்காக்கள் போன்றவற்றில் அனுமதியின்றி சட்டவிரோத மாக கட்டப்பட்ட வழி பாட்டுத் தலங்களை இடிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பொதுநலவழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று அரசிடம் கேள்வி கேட்டுள்ளது.

பேராசை கொண்ட நபர் கள் மற்றும் நில ஆக்கிரமிப்புக் கும்பல்கள் அரசு நிலம் மற் றும் பொதுச்சொத்துக்களை அபகரித்துக் கொண்டு அங்கு கோவில்களைக் கட்டி, அதன்மூலம் அங்கு பிரச் சினைகளை உருவாக்கி, அவ் விடங்களை தங்களதாக்கிக் கொள்ள திட்டமிட்டுள்ளன. இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழ கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் எம்.கண்ணதாசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.  சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு  நீதிபதி எம்.சத்ய நாராயனன், என்.சேசசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு வழக்குரைஞரான ஜெயபிரகாஷ் நாராயணனி டம் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர்; மேலும் தமிழக அரசிடமும் ஆக்கிர மிப்பு நிலங்களில் உள்ள கோவில்களை அகற்ற அரசு இதுவரை மேற்கொண்ட நட வடிக்கை என்ன என்றும் கேட்டனர்.

நிலங்களை ஆக்கிரமிக்க வும், மோசடியாக பணம் சேர்க்கவும் திடீரென்று சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கோவில்கள் முளைத்து வருகின்றன. இதனால் வாகன போக்குவரத்து நெரி சல் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்திற்குப் பெரிதும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற வழிப்பாட்டுத் தலங்கள் மோசடிக்காகவும் நிலத்தை அபகரிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படு கிறது. இது தொடர்பாகவே பொதுநலவழக்கு தொடரப் பட்டது. இவ்வாறு கட்டப் பட்ட கோவில்களை இடித்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டு மென்று 2003, 2005, 2010 போன்ற ஆண்டுகளில் தொடர்ந்து வழக்குகள் தொடரப்பட்டன. 2005-ஆம் ஆண்டு ராமகிருஷ்ணன் என் பவர் கோவையில் உள்ள வருமான வரித்துறை அலுவ லகத்தின் வளாகத்தில் கட் டப்பட்ட கோவிலை இடிக் கக் கோரி ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் அரசு நிலங்களில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களில் முன்பு நடந்த வழக்குகள் குறித்தும் அதன் தீர்ப்புத் தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என் றும் கேள்வி எழுப்பினர்.

முக்கியமாக அரசு கடந்த ஆண்டு தாக்கல் செய்த சட்டவிரோத கோவில் உள் ளிட்ட இதர வழிபாட்டுத் தலங்களின் பட்டியலை சுட்டிக்காட்டினர். அதில் இந்துமதக்கோவில்கள் 3003, கிறிஸ்தவ மதக் கோவில் மற்றும் தர்காக்கள் போன் றவை 140 என்று பட்டி யலிடப்பட்டுள்ளது.

மாநில அரசு 1968 முதல் அரசு அலுவலகங்களில் கட வுள் வழிபாட்டுச் சின்னங்கள், படங்கள், சிலை உள்ளிட்ட வற்றை வைக்கக் கூடாது; அரசு நிலங்களில் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங் கள் கட்டக் கூடாது என்று அரசாணை வெளியிடப்பட் டுள்ளது. ஆனால், இது தொடர்ந்து மீறப்பட்டு வரு கிறது. அரசு அலுவலகங் களில் எந்த மத விழாக்களும் கொண்டாடப்படக் கூடாது. மதச்சார்பற்ற அரசு மதம் தொடர்பான விவகாரங் களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என அரசு திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. ஆனால் அரசின் இந்த உத் தரவுகள் தொடர்ந்து மீறப் பட்டுக் கொண்டு வருகிறது என்று மனுதாரர் குறிப்பிட் டிருந்தார்.

இதனைத் தொடந்து நீதி பதிகள் கூறியதாவது:  ‘‘சாலை கள், அரசு நிலங்கள் ஆகிய வற்றை ஆக்கிரமித்து கட்டப் பட்டுள்ள வழிபாட்டுத்தலங் களை அகற்றுவது தொடர் பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தொடர்பாக டிசம்பர் 6 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட் டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் வக்பு வாரியம் மற் றும்பேராலயங்களின் அமைப்புகளையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ள னர். இதையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். எந் தெந்த ஆண்டுகளில் அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட் டன என்பதை இன்றைய ‘இந்து' ஆங்கில ஏடு விரி வாகவே வெளியிட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் வழிபாடு தொடர்பான படங் கள், சிலைகள் உள்ளிட்ட எந்த ஒரு மதச் சின்னங்களும் இருக்ககூடாது. 26.4.1968 தமி ழக அரசாணை வெளியீடு

இதே விதியை வலியுறுத்தி 13.12.1993- ஆம் ஆண்டுமீண்டும் ஒரு ஆணை வெளியிடப் பட்டது

இதே கருத்தை வலியுறுத்தி மத்திய அரசின் உள்துறை அமைச்சரகம் 4.5.1994- ஆம் ஆண்டு அனைத்து மாநில அரசாங்களுக்கும் அரசு அலு வலகங்களில் மதம் தொடர் பான எந்த ஒரு சின்னம், படம், சிலைகள் இருக்கக் கூடாது என்று உத்தர விட் டது.

29.1.1997-ஆம் ஆண்டு  மதம் தொடர்பான எந்த ஒரு விழாவும் அரசு அலுவலங் களில் கொண்டாடக்கூடாது என்று மத்திய அரசு மாநில அரசிற்கு கடிதம் மூலம் உத் தரவிட்டது.

29.92009- இல் உச்ச நீதிமன்றம், அரசு மற்றும் பொது நிலங்களில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கோவில்களை அகற்றிட உத்தரவிட்டது.

17.3.2010-- சென்னை உயர்நீதிமன்றம் மாநில அரசு 1968-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையைக் கட் டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட் டது.

31.1.2018-- அரசு மற்றும் பொது இடங்களில் கட்டப் பட்ட வழிபாட்டுத்தலங்களை அகற்றுவது தொடர்பாக மாநில நீதிமன்றங்கள் கண்காணிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.

22.2.2019- தமிழகம் முழுவதும் அரசு மற்றும் பொது நிலங்களை ஆக்கிர மித்துக் கட்டப்பட்ட வழி பாட்டுத்தலங்களின் எண்ணிக்கை 3168 என்று பட்டியலிட்டுக் கூறியுள்ளது.

- விடுதலை நாளேடு 8 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக