சென்னை, நவ. 13- திருவள்ளுவரை வைத்து பாஜக அரசியல் ஆதாயம் தேடப் பார்ப்பதாக விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காவி உடை, ருத்திராட்சம், விபூதி ஆகிய இந்து மத அடையாளங்களுடன் திருவள் ளுவர் படம் வெளியிடப்பட்டதைக் கண்டித்து விசிக சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று (12.11.2019) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விசிக பொதுச்செயலாளர் து.ரவிக் குமார், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்
"கடவுள், மதம், ஜாதி, கோவில், மோட்சம், நரகம், மறுபிறப்பு, ஆத்மா என்ற சொல்லை எங்கும் பயன்படுத் தாதவர் திருவள்ளுவர். “கடவுள் வாழ்த்து‘ என்று அதிகாரம் பிரித்தவரும் திரு வள்ளுவர் கிடையாது. இந்த நிலை யில் திருக்குறள் ஹிந்து நூல் என்பது மோசடியே"- என்றார் திராவிடர்
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள்.
எழுச்சித் தமிழர் உரை
இதில் திருமாவளவன் பேசியதா வது: உலகப் பொதுமறையான திருக் குறளை எழுதிய திருவள்ளுவரை இந்து மதத் துறவி என்று அடை யாளப்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சி புதிது இல்லை என்றாலும் இப்போது சில மாதங்களாக இந்துத்துவ சக் திகள் திருவள்ளுவர் தங்களுக்கு மட் டுமே உரியவர் என்று சொந்தம் கொண் டாடி வருகின்றனர். திருவள்ளுவரை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். இதை சாதாரண மாக எடுத்துக் கொள்ள முடியாது.
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இந்து மதம் என்பதே இல்லை. மதம் என்ற கட்டமைப்பே இல்லாமல் வழிபாட்டு முறைகள் இருந்த காலம் அது. மனிதர்கள் அனைவரும் சமம். பிறப்பின் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை என்று உயரிய கருத்தைச் சொன்னவர் திருவள்ளுவர். அவரது சிந்தனைகள் இந்து மதத்துக்கு எதிரானது. எனவே, அவர் இந்து துறவியாக ஒருபோதும் இருக்க முடியாது.
அனைவருக்கும் பொதுவான திருவள்ளுவருக்கு ஒரு குறிப்பிட்ட மதச்சாயம் பூசியவர்கள் மீதும், வள் ளுவரின் சிலைக்கு காவி சால்வை அணிவித்து அவமானப்படுத்தியவர் கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக் காமல் அதிமுக அரசு அமைதியாக இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. வள்ளுவரை அவமானப்படுத்தியவர் கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சிந்தனை செல்வன், மு.முகமது யூசுப், எஸ்.எஸ்.பாலாஜி, த.பார்வேந்தன், வி.கோ.ஆதவன், அ. அசோகன், வீர.ராஜேந்திரன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
- விடுதலை நாளேடு 13 11 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக