வியாழன், 14 நவம்பர், 2019

குறளும் - பெரியாரும்!

இதோ ஒரு விளம்பரம்.

திருக்குறள்

கிரவுன் 1-க்கு 16 சைசில் 170 பக்கமுள்ள பாக்கெட் சைஸ் திருக்குறள் புத்தகம் திராவிடன் அச்சகத்தில் பதிப்பித்தது.

புத்தகம் 1-க்கு விலை அணா 0-5-0 விற்பனையா ளருக்கு 100-க்கு 25 வீதம் கழிவு தரப்படும்.

சொற்ப பிரதிகளே உள் ளன.

தேவை உள்ளவர்கள் முந்திக் கொள்ளவும்.

குறிப்பு: 14.1.1953 வரை யில் விளம்பரத்தில் குறள் விலை 6 அணா என்று போடப்பட்டிருந்தது. பிறகு கொள்முதல் பார்த்ததில் விலையில் சிறிது குறைக்க லாம் என்று தெரிய வந்தது. ஆகவே, விலையை இப் போது 5 அணாவாகக் குறைத்திருக்கிறோம். 5 அணாவுக்குத்தான் ஏஜண்டு கள் விற்க வேண்டும். வாங்குபவர்களும் இதைக் கவனித்து வாங்கவேண்டும். வாங்குகிற ஏஜெண்டுகள் தங்கள் கமிஷனையும் சிறிது விட்டுக் கொடுத்துதவினால் பொது மக்கள் ஏராளமாக வாங்கிப் படிக்க முடியும். பெரியார் சுற்றுப்பிரயாணத் தில் குறள் புத்தகம் கிடைக் கும்.

விடுதலை செயலகம்,

325 P.B.மவுண்ட் ரோடு,

சென்னை-2

(‘விடுதலை', 1.2.1953)

தந்தை பெரியார் திருக் குறளுக்கு எத்தகைய தொண்டாற்றினார் என்ப தற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்றே ஒன்று போதாதா?

பரண்மீது இருந்த குறளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர் பெரியார் என்பதற்கு திருக் குறளை மலிவுப் பதிப்பாகக் கொண்டு சென்ற ஆக்க ரீதியான செயல்தானே இது!

‘இதனை இதனால் இவன்முடிக்கும் என் றாய்ந்து அதனை அவன் கண் விடல்' என்ற குறள் மொழிப்படி, திருக்குறளை அனைத்துலகுக்கும் எடுத் தோதி, அதற்குச் சிறப்பு உண்டாக்கித் தர இப் பெரியார் ஒருவராலேயே முடியும் என்பதை உணர்ந்தே இயற்கையானது திருக்குறளை பெரியாரிடம் ஒப்படைத்திருக்கிறது' என்ற தந்தை பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டில் (15.1.1949) பேராசிரியர் சி.இலக்குவனாரின் கூற்றை இங்கு குறிப்பிடுவது முக்கிய மானது - சிறப்பானதேயாகும்.பார்ப்பனர்களின் சான்றுகள் தேவையில்லை.

‘நான் இந்து அல்ல - திராவிடனே - திருக்குற ளனே' என்று சொன்னவரும் தந்தை பெரியாரே!

(‘விடுதலை', 5.11.1948)

- மயிலாடன்

- விடுதலை நாளேடு 14 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக