தந்தை பெரியார் திருக் குறளை இழிவுபடுத்தியதுபோல பார்ப்பனர்களும், பி.ஜே.பி., சங் பரிவார்களும் கூடிப் பேசி, ஒரே மாதிரியான கட்டுக்கதையை பொய்யைத் திட்டமிட்டுப் பரப்பி வருகிறார்கள். ஒரு பொய்யை திருப்பித் திருப்பிச் சொன்னால் உண்மையாகும் என்ற கோயபல்சின் குரு நாதர்கள் இவர்கள்.
தங்கத் தட்டில் உள்ள மலம் என்று பெரியார் திருக்குறளை சொன்னாராம். எங்கே சொன் னார்? ஆதாரம் காட்டுவீர் என்று திருப்பிக் கேட்டால், தொலைக்காட்சிகளில் காட்டுக் கூச்சல் போடுகிறார்கள். அரட்டை அடிக்கிறார்கள்.
முகநூலில் நாம் விடுத்த ஒரு சவாலுக்கு மூச்சுப் பேச்சு இல்லை.
அவர்களால் ஆதாரம் காட்ட முடியாது. ஏனென்றால், அது கடைந்தெடுத்த ‘அக்மார்க் பொய்!' உண்மை ஆதாரம் என்ன?
இதோ ஆதாரம் பேசுகிறது.
‘‘ஒரு சமயம் பெரியார் தஞ்சையில் ஒரு வாலிபர் சங்கக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அங்கு பேசிய தமிழன்பர் ஒருவர், ‘‘பெரியார் இராமாயணத்தைக் குறை கூறு வது தவறு என்றும், கலை யுணர்ச்சிக்காகவும் அதனைப் போற்ற வேண்டும்'' என்றும் கூறினார்.
அதற்குப் பெரியார் கூறிய பதில்:
‘‘நான் கலையுணர்ச்சியை யும், தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று கூறவில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத் தியம் (மலம்) இருந்தால், தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத் தியைப் புசிக்க முடியுமா? அது போல், கம்பராமாயணப் பாட்டு கள் சிறந்தவைதான். அவற்றில் உள்ள மூடநம்பிக்கைக்கும், தமிழர் இழிவுக்கும், ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமான வற்றை வைத்துக்கொண்டு எப்படி அவற்றைப் பாராட்ட முடியும்?'' என்றார்.''
ஆதாரம்: சாமி.சிதம்பரனார் எழுதிய ‘‘தமிழர் தலைவர்'', பக்கம் 162 (11 ஆம் பதிப்பு,15 ஆம் பதிப்பு பக்கம், 187).
கம்பராமாயணத்தைப்பற்றி பெரியார் சொன்னதை, திருக் குறளுக்குச் சொன்னதாக மோசடி செய்யும் பார்ப்பனரை இதன் மூலமாகத் தெரிந்து கொள்வீர்!
உண்மை இவ்வாறு இருக்க - பொய்யிலே பிறந்து, பொய் யிலே வளர்ந்து, பொய்யையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண் டவர்கள் மோசடியாக திருக் குறள்பற்றி பெரியார் இப்படி சொன்னார் என்று திரித்துப் பேசுவது - திரிநூலாருக்கே ஏகபோக உரிமையான இழிப் புத்தியாகும்.
ஆதாரத்தோடு எடுத்துக் காட்டிய பிறகு, பாரப்பனர்களோ, சங் பரிவார்களோ, பி.ஜே.பி. வட்டாரமோ அறிவு நாணயம் எள் மூக்கு முனை அளவுக்கு இருந்தால், என்ன செய்யவேண் டும்? பகிரங்க மன்னிப்புக் கூடக் கேட்கவேண்டாம் - தவறுக்கு வருந்தலாம் அல்லவா?
அதெல்லாம் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. புத்த ரையே மகாவிஷ்ணுவின் அவ தாரம் என்று ஆக்கிய (அ)‘யோக் கிய சிகாமணி'கள் ஆயிற்றே!
விநாயகன் என்று புத்த ருக்குப் பெயர் - அந்த விநாய கனை பிள்ளையார் ஆக்கிய வர்கள் ஆயிற்றே! சாஸ்தா என்று புத்தருக்குப் பெயர் - அந்த சாஸ்தாவை அய்யப்பன் ஆக்கிய (அ)‘யோக்கியர்கள்' என்னதான் செய்யமாட்டார்கள்?
- மயிலாடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக