பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள் அமைக்க மத்திய அரசு நிதி
நிதியைப் பெற தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அவலம்
சென்னை,நவ.9, பணிபுரியும் பெண் களுக்கான விடுதிகள் அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கும் நிதியைப் பெற எடப்பாடி அரசு 3 ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்ற தகவல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மத்திய அரசில் இருந்து பெறப்படும் நிதி பெறப்பட வேண்டிய என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் தங்களின் குடும்பத்தை வீட்டு பிரிந்து வந்து பல்வேறு நகரங்களில் வசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கான வர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும் பாலும் மேன்சன்கள் எனப்படும் தனி யார் விடுதிகளில்தான் தங்கு கின்றனர். ஒரு சிலர் மட்டுமே வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை போன்ற பெருநகரங்களில் அரசு பணிபுரியும் பெண்களுக்கான மகளிர் விடுதியை அதிக எண்ணிக்கையில் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.
தமிழக அரசு சார்பில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் 28 விடுதிகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது
சென்னையில் மாத ஊதியம் ரூ. 25 ஆயிரத்துக்குள்ளும், இதர மாவட்டங் களில் மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்துக் குள்ளும் பணி புரியும் பெண்கள் இந்த விடுதிகளில் சேர்ந்து பயன் பெறலாம். சென்னையில் மாதமொன்றுக்கு ரூ.300ம், இதர மாவட்டங்களில் மாத மொன்றுக்கு ரூ.200ம் வாடகை வசூலிக்கப்படுகிறது
இந்நிலையில் பணிபுரியும் பெண் களுக்கான புதிய விடுதிகள் கட்ட மத்திய அரசுவழங்கும் நிதி உதவியை பெற கடந்த 3 ஆண்டுகளாக எடப்பாடி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் பணி புரியும் பெண்களுக்கான விடுதிகள் அமைக்க மத்திய அரசு நிதி உதவி அளிக்கிறது.
மாநில அரசின் கீழ் செயல்படும் பெண்கள் மேம்பாட்டு நிறுவனம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்துராஜ் அமைப்புகள், மகளிர் சுய உதவி குழுக்கள், அங்கீகரிக்கப்பட்ட கல் லூரிகள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட அமைப்புகள் இதற்காக விண்ணப் பிக்கலாம்.
மத்திய அரசு வழங்கும்
60 சதவிகித நிதி!
இதன்படி விடுதி அமைப்பதற்கான மொத்த தொகையில் 60 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கும். மாநில அரசு 15 சதவீத நிதியையும், திட்டத்தை செயல் படுத்தும் நிறுவனங்கள் 25 சதவீத நிதியையும் செலவு செய்ய வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் பணி புரியும் பெண்களுக்கான மகளிர் விடுதி அமைக்க நிதி அளிக்க கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு எந்த கோரிக் கையும் வைக்கவில்லை.
தனியார் விடுதிகளில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தமிழக அரசின் இந்த செயல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் மகளிர் அமைப்புகள் குற்றம் சாட்டி யுள்ளனர்.
மாநிலங்களுக்கு 2017 முதல் 2019 வரை
மத்திய அரசு அளித்துள்ள நிதி விவரம்
மகாராஷ்டிரா 202.4 லட்சம் ரூபாய், அருணாச்சல பிரதேசம் 193.47 லட்சம் ரூபாய், அசாம் 8.83 லட்சம் ரூபாய், குஜராத் 183.76 லட்சம் ரூபாய், இமாச்சலப்பிரதேசம் 265.83 லட்சம் ரூபாய், கருநாடகா 973.66 லட்சம் ரூபாய், மத்தியபிரதேசம் 244.03 லட்சம் ரூபாய், மணிப்பூர் 991 லட்சம் ரூபாய், தெலங்கானா 115.01 லட்சம் ரூபாய், மிசோரம் 170.62 லட்சம் ரூபாய் என்று மூன்று ஆண்டுகளில் பத்து மாநிலங்களுக்கு மட்டும் மத்திய அரசு சுமார் 1330 கோடிகளுக்கு மேல் நிதி வழங்கியுள்ளது.
நிதி பெற்ற அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நல்லெண்ணத்தில் மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற்று மகளிர் தங்கும் விடுதிகள் அரசு சார்பில் கட்டப்பட்டு அவர்களின் நலனை காத்து வருகின்றது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் சரி, கல்லூரிகளில் படிக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பாக தங்குவதற்கு விடுதிகள் அமைத்துத் தர வேண்டியது ஒரு அரசின் கடமை அல்லவா? அதற்குரிய நிதி ஒதுக்கீட்டினை மத்திய அரசிடமிருந்து உரிமையுடன் பெறவேண்டியதும் அரசின் கடமை அல்லவா?
உடனடியாக மத்திய அரசிடமிருந்த உரிய நிதியை பெற்று பணிக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்கும் விடுதிகள் அரசின் சார்பில் அமைத்து தரவேண்டும் என்று மகளிர் உரிமைகளுக்கான அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
- விடுதலை நாளேடு 9 11 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக