ஒரு குடையின்கீழ் நின்று சிறப்பாகப் பணியாற்றிட முடிவு
கோலாலம்பூர், நவ.25 மலேசியாவில் பல்வேறு அமைப்புகளாக செயல்படும் திராவிட அமைப்பினர் ஒருங்கிணைந்து ஒரு குடையின்கீழ் சிறப்பாக செயல் பட முடிவு எடுக்கப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரை வழங் கினார்.
நேற்று (24.11.2019- ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கிள்ளான், கிரிஸ்டல் கிராவ்ன் விடுதி கூட்ட அறையில் மலேசியாவில் உள்ள திராவிடர் அமைப்பு களுடனான சந்திப்புக் கூட்டம் மலேசிய திராவிடர் கழக ஏற்பாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மலேசியாவில் உள்ள திராவிட அமைப்புகள் ஒற்று மையுடன் பெரியார் பணிகளை செய்திட வேண்டும் என்பதற்காகவும், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேட்டுக்கொண்டதற் கிணங்க இச்சந்திப்பு கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒத்த கருத்துடைய திராவிடர் அமைப்புகளின் தலைவர்களும், பொறுப் பாளர்களும் தங்கள் கருத்துகளை முன்வைத்து பெரியார் என்ற பெயரில் ஒன்றிணைவதாக ஒப்புதல் வழங்கினர்
தமிழர் தலைவர்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமதுரையில், சமூகத்தில் ஏற்ற தாழ்வுகளை ஏற் படுத்திய ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும். சிறப்பான வாழ்க்கை வாழ தந்தை பெரியார் நமக்குக் காட்டிய வழியினை உலகெங்கும் பரப்பும் நம்மிடையே ஒற்றுமை குணம் மேலோங்க வேண்டும் என்றும், இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு பிரிவுகளாக செயல் பட்டு வரும் திராவிட அமைப்புகள் இன்று பெரியார் என்ற குடையின் கீழ் ஒன்றிணைந்ததற்காக மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.
இச்சந்திப்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, பெரியார் நினைவு நாள் நிகழ்வுகளை ஒன்றி ணைந்து அனைத்துத் திராவிட இயக்கங்கள் நடத்திட வேண்டும் என்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அதன் முதல் நிகழ்வாக தந்தை பெரியார் 46ஆம் ஆண்டு நினைவு நாளை தலைநகரில் நடத்திட முடிவு செய்யப்பட்டது.
பங்கேற்றோர்
இச்சந்திப்பு கூட்டத்தில் மலேசிய திராவிடர் கழகத் தலைவர் ச.த.அண்ணாமலை, துணைத் தலைவர் சா.பாரதி, பொதுச்செயலாளர் பொன்.பொன்வாசகம், மலேசிய மாந்த நேய ஆலோ சகர் இரெ.சு.முத்தையா, தலைவர் நாக.பஞ்சு, மலேசிய தன்மான இயக்கத் தலைவர் கெ.வாசு, உதவித் தலைவர் மரு.கிருட்டிணன், பெரியார் பாசறைத் தலைவர் வா.அமுதவாணன், பொரு ளாளர் அ.அல்லி மலர் அவர்களு டன் அனைத்து திராவிட அமைப்புகளின் வழியி லான அய்ம்பதிற்கும் மேற்பட்ட பொறுப் பாளர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு மலேசிய திராவிடர் கழகப் பொதுச்செயலாளரும், திராவிட அமைப்புகள் சந்திப்புக் கூட்ட ஒருங்கிணைப்பாளருமான பொன்.பொன்வாசகம் தெரிவித்துள்ளார்.
- விடுதலை நாளேடு, 25.11.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக