வியாழன், 21 நவம்பர், 2019

'தினமலரே' பொய்ச் செய்திகளை அவிழ்த்துக் கொட்டாதே!

ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டத்துக்குப் பெயர் தொழிற் கல்வியாம். 2019லும் பார்ப்பனர்கள் திருந்தவில்லை. அதே ஆதிக்கப் புத்தியில்தான் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒன்று போதாதா?

சரி,காலையில் படிப்பு --& மாலையில்  அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று ராஜாஜி கொண்டு வந்தது குலக்கல்விதானே!

இந்தக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்ததுடன் 6000 பள்ளிகளை அவர் இழுத்து மூடியது ஏன்? ஏன்? சூத்திரன், பஞ்சமன் படிக்கக் கூடாது என்பதுதானே! ஓர் ஆட்சியின் கடமை பள்ளிகளைத் திறப்பதா & மூடுவதா?

குப்பன் மகன் சுப்பன் மாலை வேளையில் எந்தத் தொழிலை செய்வான் & கற்பான்? விவசாய வேலையோ, சவர வேலையோ, துணி துவைக்கும் வேலையோ தானே செய்வான்! ஆனால் பார்ப்பன மாணவர்கள் என்ன செய்வார்களாம்?

பார்ப்பனர்கள்தானே அந்தக் கால கட்டத்தில் டாக்டர்கள், வக்கீல்கள், நீதிபதிகள், உத்தியோகஸ்தர்கள். இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் அப்பன் தொழிலைச் செய்வார்கள் என்றால் இதன் பொருள் விளங்கவில்லையா? ராஜாஜி கொண்டு வந்தது தொழிற்கல்வி என்றால் தந்தை பெரியார் தலைமையில் மக்கள் பொங்கி எழுந்தனரே - - & ராஜாஜி பதவியிலிருந்து ஓடியது ஏன்? காமராஜர் என்ன செய்தார்? ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை ஒழித்ததோடு புதிதாக 12 ஆயிரம் பள்ளிகளைத் திறந்தாரே- & அதனால் தானே அவரைப் பச்சைத் தமிழன் & கல்விக் கண் திறந்தவர் என்று பாராட்டினார் பெரியார். திரிநூல் 'தினமலரே' - & காலம் கடந்து விட்டது என்பதற்காக பொய்ச் செய்திகளை அவிழ்த்துக் கொட்டாதே!

- விடுதலை நாளேடு 21 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக