வியாழன், 28 நவம்பர், 2019

கொஞ்சமாவது அறிவு நாணயம் இல்லாத பேர்வழிதான் குருமூர்த்தியா?

'சோ' மறைவுக்குப் பிறகு 'துக்ளக்'கை தன் வசமாக்கிய கோயங்கா வீட்டுக் கணக்குப்பிள்ளை என்று அறிமுகமான திருவாளர் குருமூர்த்தி அய்யர் ஒவ்வொரு நாளும் தன் பூணூல் தனத்திற்கு "முத்தம்" கொடுத்து பச்சைப் பார்ப்பனத்தனத்தைப் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

13.11.2019 நாளிட்ட 'விடுதலை'யில் திருக்குறளை & தங்கத் தட்டில் உள்ள மலம் என்று தந்தை பெரியார் சொன்னதாக பார்ப்பன ஏடுகளும், அரட்டைக் கச்சேரிக்காரர்களும் எழுதுவது, பேசி வருவது பச்சைப் பொய் என்று ஆதாரத்துடன் மறுக்கப்பட்டது.

தந்தை பெரியார் அப்படி சொன்னது கம்பராமாயணத்தைத் தான் என்று சாமி சிதம்பரனாரால் எழுதப்பட்ட தமிழர் தலைவர் நூலில் (பக்கம் & 62இல்) உள்ளது என்று ஆதாரப் பூர்வமாக சொன்னதற்குப் பிறகும் திருவாளர் குருமூர்த்தி அய்யர் கொஞ்சம்கூட அறிவு நாணயமின்றி மறுபடியும், மறுபடியும் இந்த வார 'துக்ளக்'கிலும்கூட (27.11.2019 - & பக்.10லும், 15லும் திருக்குறளை மலம் என்று சொன்னார் ஈ.வெ.ரா. என்று எழுதுகிறார் என்றால் இந்த ஈனங்களை எதைக் கொண்டு சாற்றுவதோ!

கோர்ட்டுக் கூண்டில் ஏற்றி 'குடுமி'யை ஆட்டினால்தான் அடங்குவார்களோ!

 - விடுதலை நாளேடு 23. 11.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக