தமிழர் தலைவர் கருத்துரை
சென்னை,ஜன.18 தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் 26 ஆம் ஆண்டு திராவிடர் திருநாள் வெகு நேர்த்தியோடு நடைபெற்றது. வீர விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், ‘பெரியார் விருது’ அளிப்பு என்று பல அம்சங்களுடன் திராவிடர் பண்பாட்டுத் திருவிழாவாக அமைந்தது.
நம் இனத்தின் பண்பாட்டு மீட்டுரு வாக்கமே இந்த விழாவின் நோக்கம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 25ஆண்டுகளாக தமிழர்களை ஆரிய ஆதிக்கத்திலிருந்து மீட்டு, திரா விடர்களின் பண்பாட்டைப் பேணிக் காத்திடும் வகையில் திராவிடர் திருநாள், தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தை பெரியார் பெயரில் பல்துறை வல்லுநர்களை, சாதனையா ளர்களை அடையாளம் கண்டு, அவர் களின் சாதனைகள் மேன்மேலும் தொடர பெரியார் விருது அளிக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர் களுக்கு பெரியார் விருது அளிக்கப் பட்டுள்ளது.
16.1.2020 மற்றும் 17.1.2020 ஆகிய இரு நாள்கள் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 26ஆம் ஆண்டு விழா திராவிடர் திருநாள் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் எழுச்சியுடன் நடை பெற்றது.
திராவிடர் திருநாளில் சிறப்பு சேர்க் கும் வகையில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருவள்ளுவர் 2050’’ சிறப்புக் கண்காட்சி, ஓவியர் பகலவனின் ஓவியக் கண்காட்சி அனைவரையும் கவர்ந்தது. சிறப்புக் கண்காட்சி முகப்பில் அமைக்கப் பட்டிருந்த திருவள்ளுவர் முழு உருவச் சிலை அருகில் பார்வையாளர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் படங்களை எடுத்துக்கொண்டனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று (17.1.2020) நடைபெற்றன. கழகக் குடும்பத்தினர் பங்கேற்ற கோலாகல குடும்ப விழா நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. பெரியார் பிஞ்சுகள், மகளிர், இளைஞர்கள் விளை யாட்டுப் போட்டிகள், உறியடிப் போட் டிகளில் தொடர்ந்து உற் சாகத்துடன் பங்கேற்றனர். பரிசுகளையும் வென்றனர்.
சிலம்பாட்டம் வீரவிளையாட்டுகள், தப்பாட்டம்
லோகன் ப்ளாக் பாய்ஸ் வழங்கும் தப் பாட்டம், சொல்லிசை, கானா, பீட் பாக்சிங், ஹிப்ஹாப் கலை நிகழ்ச்சிகள், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம் வழங்கும் சிலம் பாட்டம் ஆகியவற்றை கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
வீரவிளையாட்டுக் குழுவினரைப் பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
கிடா ஆடு கண்காட்சி அமைத்த குழு வினரை கழகப் பொதுச்செயலாளர் பாராட்டி சிறப்பு செய்தார்.
நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் திராவிடர் திருநாள், தமிழ்ப்புத்தாண்டு விழா, ‘பெரியார் விருது’ வழங்கும் விழா இரண்டாம் நாள் நிகழ்வுக்கு தலைமை யேற்று கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.
க.பார்வதி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த் தினி, பசும் பொன் செந்தில்குமாரி, கு.தங்க மணி, செ.கனகா, வி.வளர்மதி, மு.நாகவள்ளி, மு.ராணி, நதியா, ராணி ரகுபதி, பூவை செல்வி, க.வனிதா, க.சுமதி, த.மரகதமணி, பொன்னேரி செல்வி, இளையராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரை ஆற்றினார்.
மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை அறிமுகவுரை ஆற்றினார்.
நூல்கள் வெளியீட்டு விழா
‘பெரியார் அம்பேத்கர் நட்புறவு ஒரு வரலாறு’ (நன்கொடை ரூ.220), ‘தமிழில் பெயரிடுவோம்’ (நன்கொடை ரூ.50), ‘குடியுரிமைத் திருத்தச்சட்டம் கூடாது ஏன்?’ (நன்கொடை ரூ.40) ஆக மொத்த நன்கொடை ரூ.290. திராவிடர் திருநாள் சிறப்புத் தள்ளுபடியுடன் ரூ.250க்கு 3 நூல்களும் வழங்கப்பட்டன.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நூல்களை வெளியிட, பேராசிரியர் கருணானந்தம் பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் நூல்களை தமிழர் தலைவரிடமிருந்து மகிழ்வுடன் பெற்றுக் கொண்டனர்.
நூல்களைப் பெற்றுக் கொண்டவர்கள்
வழக்குரைஞர் சு.குமாரதேவன், தாம் பரம் ப.முத்தையன், புலவர் பா.வீரமணி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வழக்குரை ஞர் ந.விவேகானந்தன், புழல் இராசேந்திரன், போளூர் பன்னீர்செல்வம், துரைமுத்து, மகிழ்க்கோ, எண்ணூர் வெ.மு.மோகன், மாணிக்கம், ஆவடி தமிழ்மணி, கண்ணப்பன் மற்றும் பலர் நூல்களைப் பெற்றுக்கொண் டனர்.
‘கெடுப்பதூவும் எடுப்பதூவும்!’ என்னும் தலைப்பில் பேராசிரியர் அரசு செல்லையா (அமெரிக்கா) கருத்துரையாற்றினார்.
நூற்றாண்டு விழா கண்டுள்ள பெரியார் பெருந்தொண்டர் பெங்களூரு வீ.மு.வேலு அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார்.
பெரியார் பெருந்தொண்டர் வீ.மு.வேலு ஏற்புரையில் என்றும் பெரியார் தொண் டனாக பணியாற்றுவேன் என்றார்.
பெரியார் விருதுகளை வழங்கி
தமிழர் தலைவர் சிறப்புரை
டாக்டர் வி.ஜி.சந்தோஷம், பேராசிரியர் அ.கருணானந்தன் ஆகியோருக்கு ‘பெரியார் விருது’களை வழங்கி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப் பிலிருந்து தமிழர்களின், திராவிடர்களின் பண்பாட்டை மீட்டுருவாக்குவதே இவ் விழாவின் நோக்கம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள். விருது பெற்ற டாக்டர் வி.ஜி.சந்தோஷம், பேராசிரியர் அ.கருணானந்தன் ஏற்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சிகளை மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி தொகுத்து வழங்கினார்.
ஓவியா அன்புமொழி நன்றி கூறினார்.
திராவிடர் திருநாளின் இரண்டு நாள் நிகழ்ச்சிகளையும் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்.
கழகப் பொருளாளர் வீ.குமரேசன், எழுத்தாளர் மஞ்சை வசந்தன், மோகனா அம்மையார், மருத்துவர் மீனாம்பாள், சுதா அன்புராஜ், த.க.நடராசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
திராவிடர் திருநாள் பொங்கல் விழா - குடும்ப விழா- (சென்னை- 17.1.2020)
- விடுதலை நாளேடு 18 1 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக