மூடத்தனத்தில் மூழ்கிய மக்களைத் திருத்துவது தான் பகுத்தறிவாளர்களின் சீர்திருத்தக் காரர்களின் பணி . சுலபத்தில் அவர்கள் திருந்தமாட்டார்கள் என்பதற்காக சீர்த்திருத்தவாதிகள் தங்கள் பணி களை விட்டு விடுவதில்லை. காலம் தாழ்ந்தாலும், பகுத்தறிவும் விஞ்ஞானமும்தான் வெற்றி பெறும்.
'தினமலர்' எழுதுவதைப் பார்த்தால் மூடத்தனம் நிலைக்க வேண்டும் -அதன் மூலம் பார்ப்பனரின் புரோகிதத் தொழில் கொழுக்க வேண்டும் என்று கருதுவதை புரிந்து கொள்ள முடியும்.
தீண்டாமையை எதிர்த்துப் பெரியார் வைக்கம் வரை சென்றுகூடப் பேராடி வைக்கம் வீரரானார்.
இப்பொழுது "தினமலர்"க் கும்பல் தாழ்த்தப்பட்ட வரைப் பார்த்து தொடாதே - நெருங்காதே என்று சொல்லட்டுமே பார்க்கலாம் - கம்பி எண்ண வேண்டியதுதான்- திராவிடர் கழகத் தலைவரின் - கிரகண மூடநம்பிக்கைக்கு எதிரான செயல் தவறு என்று திரிநூலால் கூற முடியுமா? - மருத்துவ மனைகள் பெருகி என்ன பயன் - நோய்கள் பெருகத்தானே செய்கின்றன என்று எழுதுமா தினமலர் திரிநூல்!
- விடுதலை நாளேடு, 29.12.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக