முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு
97 வயது காணும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களை மேடைக்கு அழைத்து சால்வை அணிவித்துப் பாராட்டினார் கழகத் தலைவர் (திருப்பூர், 9.1.2020).
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கோவை வசந்தம் கு.இராமச் சந்திரன் அவர்களைச் சந்தித்து சால்வை அணிவித்து நலம் விசாரித்தார் கழகத் தலைவர் (கோவை, 9.1.2020).
திருப்பூர், ஜன.10 நேற்று (9.1.2020) திருப்பூரில் ‘விடுதலை' சந்தா வழங்கும் விழா - கே.சுப்பராயன் எம்.பி. பாராட்டு விழா நடை பெற்றது. நிகழ்ச்சியின் விவரம் வருமாறு:
வரவேற்புரை: இரா.ஆறுமுகம் (திருப்பூர் மாவட்டத் தலைவர்)
தலைமை: யாழ்.ஆறுச்சாமி (திருப் பூர் மாவட்டச் செயலாளர்)
மானமிகுவாளர்கள்: பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தின் தலைவர் பொத்தனூர் க.சண் முகம், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), க.செல்வராஜ் (திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர்), வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலா ளர், திராவிடர் கழகம்), இரா.குண சேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), த.சண்முகம் (அமைப்புச் செயலாளர்), மு.ரவி (மாவட்டச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி), செ.முத்துக் கண்ணன் (மாவட்டச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), இல.அங்ககுமார் (பெரியார் இயக் கங்களின் கூட்டமைப்பு), சு.துரை சாமி (பெரியார் இயக்கங்களின் கூட்டமைப்பு), ஊமை.ஜெயராமன் (அமைப்புச் செயலாளர்), ச.இன்பக் கனி (துணை பொதுச்செயலாளர்), வே.செல்வம் (அமைப்புச் செயலா ளர்), பழனி பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்), பி.கே.ஆர்.கவுதமன் (தலைவர், பெரியார் மருத்துவக் கழகம்), ஆ.பாண்டியன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்), இரா.கருணாகரன் (கோவை மண்டலத் தலைவர்), மா.சந்திரசேகரன் (கோவை மண் டல செயலாளர்), சு.வேலுச்சாமி (மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர்), மு.வேணுகோபால் (நீலமலை மாவட்டத் தலைவர்), ச.சிற்றரசு (கோவை மாவட்டத் தலைவர்), க.கிருஷ்ணன் (தாராபுரம் மாவட்டத் தலைவர்), மு.நாகேந் திரன் (நீலமலை மாவட்டச் செய லாளர்), க.சண்முகம் (தாராபுரம் மாவட்டச் செயலாளர்), அரங்க.வெள்ளியங்கிரி (மேட்டுப்பாளை யம் மாநகரச் செயலாளர்), பா.மா.கருணாகரன் (திருப்பூர் மாநக ரச் செயலாளர்)
நன்றியுரை: இல.பாலகிருஷ்ணன் (திருப்பூர் மாநகரத் தலைவர்)
துரைசாமி (திருப்பூர் பகுத்தறி வாளர் கழக பொறுப்பாளர், ஓய்வு பெற்ற ஆசிரியர்), தகடூர் தமிழ்ச் செல்வி (மாநில மகளிரணி செய லாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்)
நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு: வன்னிப்பட்டு தமிழ்ச்செல்வம், டி.கே.டி.நாகராஜன் (திமுக மாநகர செயலாளர்)
விடுதலை ஆசிரியரிடம் விடு தலை சந்தா வழங்கியோர்
கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர்), பொத்தனூர் க.சண்முகம் (பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர்), வீ.அன்பு ராஜ் (பொதுச் செயலாளர்), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப் பாளர்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), த.சண்முகம் (அமைப் புச் செயலாளர்), ஊமை.ஜெய ராமன் (அமைப்புச் செயலாளர்), பழனி பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்) பொறியாளர் ச.இன் பக்கனி (துணை பொதுச்செயலா ளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), த.சீ.இளந் திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), இரா.செந்தூரப் பாண்டியன் (மாணவர் கழக அமைப்பாளர்) மற்றும் கோவை மண்டல மாவட்ட பொறுப்பாளர் கள் அனைவரும் சேர்ந்து விடுதலை சந்தாக்களை விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் களிடம் பலத்த கர ஒலிக்கிடையே வழங்கினர்.
திருப்பூரில் நடைபெற்ற கொள்கைத் திருவிழா
மேற்கு ஆப்பிரிக்கா கானா நாட்டில் இயங்கிவரும் பெரியார் ஆப்பிரிக்கன் ஃபவுண்டேஷன் நிறுவனர் தலைவர் கே.சி. எழிலரசன் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் திரட்டப்பட்ட 200 விடுதலை சந்தாக்களை தமிழர் தலைவரிடம் வழங்கினார்கள்.
திருப்பூர் எம்.பி. கே. சுப்பராயன் 'விடுதலை' ஓர் ஆண்டு சந்தா மற்றும் புத்தகத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
'விடுதலை' சந்தா வழங்கு விழா, திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே. சுப்பராயன் எம்.பி. அவர்களுக்குப் பாராட்டு விழா ஆகிய இரு விழாக்களும் திருப்பூர் இராயபுரத்தில் நேற்று (9.1.2020) வெகு சிறப்புடன், நேர்த்தியுடன் விழாக் கோலமாக நடைபெற்றன.
கூட்டம் நடக்கும் இராயபுரம் பகுதியில் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. மாலை 5 மணிக்கே 'மந்திரமா? தந்திரமா?' நிகழ்ச்சியை புரபசர் ஈட்டி கணேசன் நடத்தத் தொடங்கினார். தொடக்கத்தில் கொஞ்சம் பேர்தான் கூடியிருந்தனர். அவர் நிகழ்ச்சிகளைத்தொடங்கிய பத்து நிமிடங் களிலேயே ஏராளமான மக்கள் கூடி விட்டனர். இளைஞர்கள், சிறுவர்களை அவரது நிகழ்ச்சி பெரிதும் ஈர்த்தது.
மந்திரம் என்று சொல்லி மக்களை மோசடியாக ஏமாற்றும் கபடவேட தாரிகளின் முகத்திரையைக் கிழிக்கும் நிகழ்ச்சி யாக அது அமைந்திருந்தது.
பார்வையாளர்களாக இருந்த சிறுவர்களையும் மேடைக்கு அழைத்து, அவர்களையும் பங்கேற்கச் செய்து, தந்திர காட்சிகளைச் செய்து காட்டி பொது மக்களைப் பிரமிக்கச் செய்தார்.
இறுதியாக அவற்றை எப்படி தந்திரமாக செய்தேன் என்பதையும் விளக்கிக் காட்டியபோதுதான் சாயி பாபாக்கள் உள்ளிட்ட 'மந்திரவாதிகள்' என்று கருதப்படுபவர்களின் ஏமாற்றுத்தனத்தைப் பொது மக்கள் புரிந்து கொண்டு பலத்த கரஒலி எழுப்பினர். அவருக்குக் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் பயனாடை அணிவித்துச் சிறப்பு செய்தார்.
சரியாக 6.30 மணிக்கெல்லாம் விழா மேடையில் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. எந்த ஊரிலும் இல்லாத ஒன்றை திருப்பூர் காவல்துறை அரங்கேற்றியது. இரவு 9 மணிக்குள் கூட்டத்தை முடித்து விட வேண்டுமாம். தேர்தல் பிரச்சாரத்துக்குக்கூட இரவு 10 மணி வரை அனுமதிக்கும் காவல்துறை - திருப்பூரில் மட்டும் இந்த வேடிக்கையான ஆணையைப் பிறப்பித்தது ஏன் என்று தெரியவில்லை.
கழகத் தலைவர் கூட்டத்தின் தொடக்கத்தில் சுட்டிக் காட்டியது போல, 'சட்டங்களையும், ஆணைகளையும் மதிக்கக் கூடிய திராவிடர் கழகம் - இந்த விழாவையும் இரவு 9 மணிக்குள் முடிப்போம்' என்று கூறியதற்கிணங்க பல்வேறு நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கி இரவு 9 மணிக்குள் நேர்த்தியாக விழா நிறைவேற்றி முடிக்கப்பட்டது.
'மந்திரமா? தந்திரமா?' நிகழ்ச்சியைத் தொடர்ந்து 30 மணித் துளிகள் தமிழ் மண்ணின் கலாச்சார கலையான பறையிசை நிகழ்ச்சி தூள் கிளப்பியது. அந்தக் கலைஞர் களுக்குக் கழகத் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.
திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் யாழ் - ஆறுச்சாமி நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். மாவட்டக் கழகத் தலைவர் இரா. ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். திருப்பூர் மாநகர திராவிடர் கழகத் தலைவர் இல. பாலகிருஷ்ணன் நன்றி கூறினார் (மற்ற விவரம் தனியே காண்க).
நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் மாவட்ட செயலாளர் மு. இரவி சி.பி.எம். மாவட்ட செயலாளர் செ. முத்துக்கண்ணன், பெரியார் இயக்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த இல. அங்ககுமார், ஆசிரியர் துரைசாமி (பகுத்தறி வாளர் கழகம்), திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் முதலி யோரும் உரையாற்றினர்.
- விடுதலை நாளேடு 10 1 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக