ரஜினிக்கு மறுப்பு
'தி டைம்ஸ் ஆப் இந்தியா'வுக்கு
தமிழர் தலைவர் பேட்டி
'துக்ளக்' 50-ஆம் ஆண்டுவிழா நிறைவு நிகழ்வில், 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சி குறித்து உண்மைக்கு மாறான செய்தியை கூறிய ரஜினிகாந்த் திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் 'டைம்ஸ் ஆப் இந்தியா'விற்கு கி.வீரமணி அளித்த பேட்டியில், "ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறுகிறார்கள். அப்படி வருபவர் மீதான நம்பகத்தன்மை அற்றுப் போய் விட்டது. அரசியலுக்கு வருகிறேன் என் பவர் பிறரின் உணர்வுகளுக்கு மதிப் பளிக்கவேண்டும். தந்தை பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய உண்மைக்கு மாறான கருத்தால் பெரியாரைப் பின்பற்றுபவர் களின் மனதைப் புண்படுத்தி விட்டார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெரி யாரின் பற்றாளர்கள் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்" என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: "ரஜினி காந்த் உண்மைக்கு மாறாகக் கூறி உள்ளார். மேடையில் சோ வைப் புகழ்கிறேன் என்று சோ 'துக்ளக்' கில் எழுதாத ஒன்றையும், 'துக்ளக்'கில் அச்சிடாத ஒன்றை குறித்தும் ரஜினிகாந்த் பேசியுள்ளார். இவ்வாறு அவரைப் பேசத் தூண்டியது யார்? எங்கிருந்து அவருக்கு இப்படி பேசுமாறு உத்தரவு வந்தது?. ரஜினி யின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.
மேலும் மக்களிடையே அவர்மீதான நம்பிக்கையும் போய்விட்டது. இவர் கூறியுள்ளது 49-ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் நிகழ்வு ஆகும். இரண்டாம் நாள் கடவுளர் படங்கள் வாகனங்களில் மூடநம்பிக்கை குறித்து விழிப்புணர்வு ஊட்டும் வகையில் கொண்டு வரப்பட்டன. அப்போது பெரி யாருக்குக் கருப்புக்கொடி காட்டிய ஜன சங்கத்தினர்(இன்றைய பாஜக) பெரியார் மீது செருப்பை வீசினார்கள். ஆனால் அப்போது பெரியார் வாகனம் முன்னே சென்றுவிட்டது, அந்த செருப்பு கடவுளர் படங்கள் கொண்டுவந்த வாகனத்தின் மீது விழுந்துவிட்டது. இதுதான் நடந்தது" என்று கூறினார்.
ரஜினி 'துக்ளக்' விழாவில் பேசியதாவது: "1971இல் சேலத்தில் சிறீராமச்சந்திர மூர்த்தி யையும், சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ 'துக்ளக்' அட்டையில் போட்டு கடுமையாக விமர் சித்தார். இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். அது 50 ரூபாய்க்கு 'பிளாக்'கில் விற்றது" என்று கூறியிருந்தார்.
தந்தை பெரியார் மீது ரஜினிகாந்த் கூறிய இந்த உண்மைக்கு மாறான கருத் திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பெரியாரிய அமைப்புகள் பல மாவட்டங்களில் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
- விடுதலை நாளேடு 19 1 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக