பன்னாட்டு மனித உரிமைநாள்: டிச.10
மனித உரிமைப் பிரகடனமும்
இந்தியாவில் மனித உரிமைகளும்
பூவை புலிகேசி
1948 ஆம் ஆண்டு டிசம்பர் பத்தாம் நாள் அய்க்கிய நாடுகள் சபை கூடி மனிதர்கள் அனைவரும் சுதந்திரத்துடனும் அமைதி யுடனும் வாழ சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை (Universal Declaration of Human Rights) வெளியிட்டது. அந்த நாளைக் குறிக்கும் வகையில் 1950 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் பத்தாம் நாள் மனித உரிமைகள் நாளாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு தனிமனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற மனிதர்களையும் வாழ வேண்டும் என்ற நெறிமுறையை உணர்த்துவதுதான் இந்த பிரகடனத்தின் நோக்கமாகும்.
மனித உரிமைகள் என்பது இரக்கப்பட்டு கொடுக்கின்ற அருட்கொடை அல்ல. ’பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் திருவள்ளுவரின் கூற்றுப்படி பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்பதை மனித உரிமை பிரகடனத்தின் முதலாம் சரத்து கூறுகிறது. அதாவது
"All human beings are born free and equal in dignity and rights"என்கிறது.
இந்த மனித உரிமை பிரகடனத்தை ஏற்றுக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அய்க்கிய நாடுகள் மன்றம் மனித உரிமை தொடர்பான 10 உடன்படிக் கைகளை வெளியிட்டது. அவை
1. பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள்
2. குடிமை மற்றும் அரசியல் உரிமைகள்
3. இனப்பாகுபாடுகளை ஒழித்தல்
4. நிறவெறியை எதிர்த்து முறியடித்தல்
5. பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளை நீக்குதல்
6. கொடூரமான தண்டனை முறைகளை ஒழித்தல்
7. குழந்தை தொழிலாளர் ஒழிப்பு
8. விருப்ப ஒத்திசைவு ஒன்று அரசியல் உரிமைகள்
9. விருப்ப உத்தி செய்வோர் இரண்டு மரண தண்டனை ஒழிப்பு
10. குடிபெயர்ந்தவர்கள் உரிமை
இவற்றில் முதல் 7 உடன்படிக்கைகளை ஏற்று இந்தியா கையொப்பமிட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் இந்திய அரசு மனித உரிமை பாதுகாப்பு சட்டம்-1993 என்ற ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.
அதில் மனித உரிமைகள் என்றால் "அரசியலமைப்புச் சட்டத்தால் உத்திர வாதம் அளிக்கப்பட்டு, சர்வதேச உடன் படிக்கைகள் உள்ளடக்கப்பட்டு, இந்தியா வில் உள்ள நீதிமன்றங்களால் செயல்படுத்த தக்க தனிநபரின் வாழ்க்கை சுதந்திரம், சமத்துவம் மற்றும் மதிப்பு போன்றவற்றிற்கு தொடர்புடைய உரிமைகள்" என்று விளக் கம் அளித்துள்ளது. ஆனால் நடை முறை யில் மனித உரிமை எந்த அளவிற்கு உள் ளது என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தர வாதம் படுத்தப்பட்டுள்ள கருத்துரிமைக்கு இன்று என்ன நிலை மனித உரிமை ஆர்வலர்கள் கவலையுடன் சிந்திக்க வேண்டும்.
பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல் கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கவுரி லங் கேஷ் ஆகியோர் படுகொலை கருத்துரி மைக்கு எதிரானது அல்லவா?
அதுமாத்திரமல்ல மனிதன் தான் விரும்பும் உணவை உண்ணும் உரிமை இன்று உள்ளதா?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாத்திரி யில் 70 வயதான முகமது வீட்டிற்குள் மாட்டுக்கறி சமைத்து சாப்பிடுவதாக கருதப்பட்டதால் அடித்துக் கொல்லப் பட்டார். பின்னர் அது மாட்டுக்கறி அல்ல என்று ஆய்வுகளின் மூலம் நிரூபணமானது. ஒருவர் தாம் விரும்பிய உணவை உண்ணும் உரிமை மதத்தின் பேரால் பறிக்கப்படுகிறது.
நீட் என்னும் கொடுவாள் உயர் கல்வி உரிமை மறுக்கப்பட்டதால் அனிதா, பிரதீபா, சுபசிறீ என்று எத்தனை உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.
அறிவாசான் தந்தை பெரியார் கூறுவது தான் நினைவிற்கு வருகிறது.
" தாளில் சர்க்கரை என்று எழுதி நாக்கில் தடவினால் இனிக்குமா?" என்பார் தந்தை பெரியார்.
அதுபோல எத்தனை மனித உரிமை சட் டங்களை ஏற்றிருந்தாலும் செயலில் இருக் கின்றனவா?
எனவே சட்டத்தின்படி மட்டுமல்ல நியாயத்தின் படியும் மனித உரிமை செயல் வடிவில் நிலைநாட்ட வேண்டுமானால், இந்தியாவின் முதல் மனித உரிமைப் போராளிகள் மனித உரிமையை நிலை நிறுத்திய மனித உரிமைப் போராளி தந்தை பெரியாரின் வழியில், அதிகார வர்க்கமே அச்சம் கொள்ளும் வகையில் மனித உரிமைப் போரில் களமாடும், அமெரிக்க மனிதநேய அமைப்பால் விருது அளிக்க பட்டு பாராட்டப்பட்ட , "வாழ்நாள் மனித நேய சாதனையாளராம்" தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி காட்டும் திசை வழியில் மனித உரிமையை நிலைநாட்ட இந்நாளில் சூளுரைப்போம்.
- விடுதலை ஞாயிறு மலர், 7. 11.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக