பகுத்தறிவு பற்றி 'தினமலர்' பேசுவதுதான் வேடிக்கை
சூரிய கிரகணத்தின் போது சாப்பிடக் கூடாது என்று கூறுவது மூடநம்பிக்கை என்பதை முறியடிக்க திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னைப் பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமை யில் சூரிய கிரகணத்தின் போது சிற்றுண்டி அருந்தப்பட்டது.
அப்படி சாப்பிட்டவர்கள் நன்றாகத் தான் உள்ளனர். சூரிய கிரகணத்தால் பாதிப்பும் இல்லை; இதனை ஜீரணிக்க முடியாத கோழைகள் - சூரிய கிரகணத் தின்போது சிற்றுண்டி சாப்பிட்ட வீரமணி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார் என்ற பொய்ப் புழுதியைப் பரப்பினர் - மறுப்பு சொன்ன வுடன் பதுங்கியவர்கள் - இப்பொழுது வேறு கதையைக் கொட்டுகிறார்கள். இன் றைய தினமலரில் ஒரு ஆசிரியர் கடிதம் வெளிவந்துள்ளது. கிறிஸ்தவர்களும், முஸ் லீம்களும் கூட உபவாசம் இருப்பதில் லையா என்று கேள்வி கேட்கிறது.
உபவாசம் இருந்துவிட்டுப் போகட்டும் - அதுவல்ல பிரச்சினை.
சூரிய கிரகணத்தின்போது சாப்பிடக் கூடாது என்ற மூடநம்பிக்கையின் மூல வேரை அறுப்பதுதான் திராவிடர் கழகத் தின் நோக்கம். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப் போடும் பரி தாபத்தைப் பாரீர்!
ஒப்பாரி ஏன்?
இந்தச் செய்தியை வெளியிட்ட 'தினமலர்' - செய்திக்கு மேலே தன் கருத்தையும் பதிவு செய்துள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் கூறிய கருத்துக்கு தினமலரால் மறுப்பு சொல்ல முடியாத நிலையில், அய்யோ பாவம் - ஒப்பாரி வைக்கிறது.
ஆண்டாள் என்பது கற்பனைப் பாத்திரம் என்பதையும் தினமலர் ஒப்புக் கொண்டு விட்டது.
அதனால்தான் அதனால் மறுப்பு சொல்ல முடியாத பரிதாபம்.
திரிநூல் 'தினமலரின்' 'கயிறு' விடுபடலம்!
'விடுதலை'யைச் சீண்டி வாங்கிக் கட்டிக் கொள்ளாவிட்டால் 'தினமலர்'க் கும்பலுக்குத் தூக்கம் வராது போலும்!
திராவிடர் கழக துணைத் தலைவர் பேசிய பேச்சில் குறை இருந்தால் மறுக்கலாம். அப்படி மறுக்க வக்கு இல்லாத நிலையில் தேவையில்லாதவற்றை உளறிக் கொட்டுவது ஏன்?
ஈ.வெ.ரா. வந்த பிறகு தான் தேவாரம், திருவாசகம் எல்லாம் வெளியே வந்தன என்று யார் சொன்னது? 'தினமலர்' தான் எழுதுகிறது. இதில் அறிவு நாணயம் இருக்கிறதா? இதில் திருக்குறளையும் இணைத்து எழுதுவது எத்தகைய பித்தலாட்டம்!
1949ஆம் ஆண்டில் பெரியார்தான் முதல் முதலாக திருக்குறள் மாநாட்டை நடத்தியவர் என்பதை தைரியம் இருந்தால் மறுக்கட்டுமே பார்க்கலாம்.
- விடுதலை நாளேடு, 5.1.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக