செவ்வாய், 21 செப்டம்பர், 2021

ஜப்பான் மொழியில் தந்தை பெரியாரின் இரு நூல்கள் வெளியீடு "பெரியார் குறித்த செய்திகள் வியப்பாக இருக்கின்றன!"

 

 ஜப்பான் தூதரக அதிகாரி

நேற்றைய விழா (17.9.2021) சிறப்பு என்று கூறும்போதுஜப்பானிய மொழியில் தந்தை பெரியார் அவர்களின் இரு நூல்கள் வெளியிடப்பட்டதாகும்.

தந்தை பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள்வைக்கம் போராட்டம் ஆகிய இரண்டு நூல்களும் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.

இந்நூல்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கேசேகர்பாபு அவர்கள் வெளியிடகலாச்சாரதகவல் பிரிவு ஆராய்ச்சியாளர் மற்றும் ஆலோசகரான ஜப்பானியத் தூதரக அதிகாரி மியூகி இனோஉவே சான் பெற்றுக் கொண்டுதம் வாழ்த் துகளைத் தெரிவித்தார்பெரியார் குறித்த செய்திகள் வியப்பாக இருக்கிறது என்றும்இன்றைய நாள் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்றும் அவர் கூறினார்.

எனது பயணம்!

இந்நிகழ்வில் காணொலி மூலம் ஜப்பானில் இருந்து வாழ்த்துரை வழங்கிய கோரா ஒசிதா   தம் உரையில்நான் நாற்பத்தி நான்கு ஆண்டுகள் டோக்கியோவில் துப்புரவுப் பணியில் இருந்துள்ளேன்இப்போது ஜப்பானில் நிகழும் மனித உரிமைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக இயங்கி வருகிறேன்இந்தியாவிற்கு குறிப்பாக சென்னைக்கு அய்ந்து முறை என் பணி சார்ந்து பயணம் செய்துள்ளேன்.

சென்னையில் இயங்கும் தாழ்த்தப்பட்டோர் இயக்கங் களுடன் இணைந்துகுழந்தைகளுக்கான கல்வி உதவி பெற்றுத் தருவதில் பணி புரிந்திருக்கிறேன்Sanitation Workers Soceity For Human Rights  என்கிற அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறேன்.

இந்தியாவில் ஜாதிய அடக்குமுறைக்கு ஆளான பெரும் சமூகமாகஅதிலும் தாழ்த்தப்பட்ட மக்களிடை யிலும் கூட ஒடுக்கப்பட்ட சமூகமாகத் துப்புரவுப் பணி யாளர்கள் இருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்.

ஜப்பானிலுள்ள துப்புரவுப் பணியாளர்களின் உரி மைக்காக பாடுபடும் இயக்கத்தை சார்ந்தவன் என்கிற முறையில்இந்தியாவிலுள்ள சக தோழர்களின் உரிமைகளுக்கு எப்படியெல்லாம் உதவலாம் என்று தொடர்ந்து இயங்கி வருகிறேன்.

பெரியாரின் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள ரா.செந்தில்குமார்  அழைத்திருந்தார்நான் கலந்து கொள்ள மிக விரும்பியும்வேறொரு கூட்டத் திற்குச் செல்ல வேண்டியிருப்பதால் இந்த வீடியோ வழியாக எனது வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன்.

மனித உரிமைக்காக ஜப்பானில் தொடர்ந்து இயங்குவதோடுஉலகின் எந்த மூலையில் இவ்வகைப் பிரச்சினை இல்லாது ஒழிக்கும் வகையில் பாடுபடுவேன் என்று உறுதி கூறுகிறேன் என கோரா ஒசிதா பேசினார்.

பெரியார் உலகமயம்!

தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய ஜப்பானியர் ஜூன்இச்சி ஹூக்காவோ, "நான் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆய்வுப் படிப்புப் படித்தேன்அங்கு இருக்கும் போது பெரியார் குறித்துப் படித் திருக்கிறேன்.பெரியார் மற்றும் பொதுவுடமைத் தோழர்களுடன் நட்பில் இருந்தேன்உலகம் முழுக்க சமநீதி என்பது கண்டிப்பாகத் தேவை!

அந்த வகையில் பெரியார் கொள்கைகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்!

பேருவகை கொள்கிறோம்!

பெரியார் நூல்களை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்த ஜப்பான் வாழ் தமிழர் .கமலக்கண்ணன் பேசும் பொழுது, "சமூகநீதி நன்னாளில் சுயமரியாதைச் சுடரொளியைப் போற்றும் இத்திராவிடத் திருவிழா விற்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் அவை யத்து ஆன்றோர் அனைவரையும் வரலாறு.காம் சார்பில் வணங்கி மகிழ்கிறேன்.

2004ஆம் ஆண்டு நண்பர்களுடன் இணைந்து துவங்கிய வரலாறு.காம் மின்னிதழில் சோழர் காலக் கட்டடக்கலை மற்றும் வரலாறு தொடர்பாகப் பல கட்டுரைகளை எழுதியிருந்தாலும்பெரியார் டென்கி மற்றும் வைக்கம் நோ ஹெய்ஷி ஆகிய இந்நூல்கள் தான் என் உழைப்பைத் தாங்கி அச்சில் வரும் முதல் நூல்கள்.

இதற்கான வாய்ப்பை வழங்கிய திராவிடர் கழகத் திற்கு நன்றி கூறும் இவ்வேளையில்என் சிந்தனைக்கும் எழுத்துக்கும் உரமிட்ட இரு நல்ல உள்ளங்களை நினைவு கூர வேண்டிய கடமையும் எனக்கு உள்ளது.

சிறு வயது முதலே எதற்கும் யாருடைய தயவையும் எதிர்பார்த்து இருக்காதேயாரிடமும் உதவியைப் பெற தன்மானத்தை விட்டுக் கொண்டிருக்காதே எனத் தற்சார்பையும்சுயமரியாதையையும் என்னுள் விதைத்த என் தந்தையார் என் முதல் நூலைக் காண இப்போது இல்லை என்ற வருத்தம் மேலிடுகிறது.

இரண்டாமவர் திருச்சிராப்பள்ளி டாக்டர் மாஇராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மய்ய இயக்குநர் முனைவர் இராகலைக்கோவன் அவர்கள்வரலாற்று ஆய்வையும்ஆய்வு நெறிமுறைகளையும் எனக்குக் கற்றுக் கொடுத்தவர்நான் எழுதத் தொடங்கிய காலத்தில் ஊக்கப்படுத்திஒரு கட்டத்தில் மேற் கொண்டு எப்படி எழுதிக் கட்டு ரையை முடிப்பது எனத் தடுமாறிய போதெல்லாம் ஆற்றுப்படுத்திஎன் எழுத்துகள் மேம்பட உதவிய அவருக்கு இந்நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொள்ள இயலாத வருத்தத் துடன் நன்றி கூறி என் உழைப்பை இருவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

இவ்விரு நூல்களையும் பெரியார் பிறந்த நாளுக்குள் மொழி பெயர்க்க வேண்டும் என நண்பர் ரா.செந்தில் குமார் அவர்கள் கூறியபோது முடியுமாமுடியாதாஎன்றெல்லாம் எதையும் யோசிக்காமல்பெரியா ருக்காக உடனே ஒப்புக் கொண்டேன்துணிந்த பின்னர்தான் எண்ணினோம் என்றாலும் நூல் வெளிவர வேண்டிய தேதியிலிருந்து "ரிவர்ஸ் கால் குலே ஷன்செய்து மொழிபெயர்ப்பின் ஒவ்வொரு கட்டத்தையும் எப்போது முடிக்க வேண்டும் எனத் திட்ட மிட்டோம்.

நேரடியாக எழுதப் பெறும் ஒரு நூலுக்கும்மொழி பெயர்க்கப்படும் நூலுக்கும் வெவ்வேறு விதமான சிக்கல்கள் எழும்அதுவும் இந்நூல் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இருவேறு நிலப்பரப்புகளை இணைக் கும் தன்மை கொண்டது.

இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்தாலும்தமிழ்நாடு தனித்தன்மை யுடையதுவள்ளலார் போன்றோர் இத்தமிழ் மண்ணில் சமநீதியைப் பேசி இருந்தாலும்பெரியாரின் சிந் தனை ஓட்டமும்சமூகநீதிக் கண் ணோட்டமும் முற்றிலும் வேறானது.

எந்தப் பின்புலத்தில் அவர் இச்சிந்தனையைப் பெற்றுயாருக்காக எதையெல்லாம் பெற வேண்டி போராடினார் என்பதைமுற்றிலும் வேறான பின்புலம் கொண்ட மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்ற பணி மிகப்பெரிய சவாலாக இருந்தது.

உதாரணமாக ஆலய நுழைவு என்பது ஒரே சொல்லில் இன்று தமிழ்நாட்டில் எளிதாகப் புரிந்துக் கொள்ளப்படக்கூடியதுஆனால் இப் பிரச்சினை இல்லாத ஜப்பானியர் களுக்கு இதன் பின்புலத்தை விளக்க வேண்டியது அவசியமாகிறதுஇம் மூலநூலில் இத்தகைய பின்புல விளக் கங்கள் எளிதான நடையில் எழுதப் பட்டிருந்தது எங்களுக்கு உதவியாக இருந்தது.

இதற்கு எதிர்மாறானதும் உண்டுசுயமரியாதைத் திருமணம் என்பது இயல்பான ஒன்றாக மாற பெரியார் பட்டபாடுகள் தமிழ்நாட்டில் வாழும் இன்றைய தலைமுறைக்கே புரிந்துக் கொள்ளக் கடினமானதுகடந்த அரை நூற்றாண்டில் இத்தகைய திரும ணங்கள் ஜப்பானில் நடைமுறையாகி விட்டதுதிருமணம் செய்வதும்குழந்தைப் பெற்றுக் கொள்வதும் பெண்கள் முடிவெடுக்க வேண்டிய விசயங்கள் எனப் பெரியார் சொன்னது போல இன்றைய ஜப் பானியப் பெண்கள் பொருளாதாரத் தற்சார்பு பெற்று அதே சிந்தனையைக் கொண்டிருக்கிறார்கள்எனவேஅவர்களால் இவற்றை எளிதாகப் புரிந்துக் கொள்ள முடியும்.

அடுத்து இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்கிற உணர்வு வராமல்இயல்பாக ஜப்பானிய மொழியில் எழு தப்பட்ட ஒரு நூல் என்ற எண்ணம் படிப்போருக்கு வரவேண்டும் எனவும் எண்ணினோம்எங்களால் முடிந்த அளவுக்குக் கவனத்துடன் செயல்பட்டோம்.

ஜப்பானிய மொழி ஆசிரியர் யுதகா நகானோ அவர்களின் உதவி யுடன்மொழிபெயர்த்த வரிகள் ஒவ்வொன்றையும் படித்துப் பார்த்துஆலோசித்து இறுதி வடிவம் கொடுத்தோம்.

ஒரு ஜப்பானியர் எழுதிய நூல் அளவிற்கு இல்லாவிட்டாலும்எந்த இடத்திலும் அத்தகைய தரத்துக்குச் சற்றும் குறைவில்லாத வடிவத்தில் இந்நூலைக் கொண்டு வந்திருப்பதில் பேருவகை கொள்கிறோம்.

இந்த வாய்ப்பிற்குத் திராவிடர் கழகத்திற்கும் இம்முயற்சிக்குப் பால மாகவும்உறுதுணையாகவும் நின்ற திருவி.சி.வில்வம் அவர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்!

பெரியார் எனும் ஜனநாயகவாதி!

இந்நூல்களை மொழி பெயர்த்த ஜப்பான் வாழ் தமிழர் ரா.செந்தில்குமார் பேசும் போதுபெருமைக்குரிய இந்த அவையில் கூடியிருக்கும் அனை வருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.  சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் தந்தை பெரியார் பிறந்த நாளான செப் 17 ஆம் தேதியான இன்று உங்களை எல்லாம் இணையம் வழி சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

சிறு வயதிலேயே குடும்பத்தின் திராவிடப் பின்னணி காரணமாகப் பெரியார் ஒரு பிம்பமாக உள்ளேறி யிருந்தார்பிறகு வாசிக்கும் வழக்கத் தினால்பெரியார் பற்றி படித்தவை யெல்லாம் அவரைப் பற்றிய பெரும் வியப்பைத் தான் ஏற்படுத்தியது. 2002 ஆம் ஆண்டு டோக்கியோவிற்கு பணி நிமித்தம் வந்தடைந்தேன்.

அந்த காலக் கட்டத்தில் ஜப்பானி யர்களிடம் இந்தியா பற்றி பேசும் போதெல்லாம் பெரும்பாலானோ ருக்கு காந்தியார் அவர்களைத் தெரிந் திருந்ததுஅவர்களுடைய பள்ளி பாடங்களிலேயே  காந்தியாரைப் பற்றிய ஒரு அறிமுகம் கிடைத்திருக் கிறது என்பதை கண்டேன்ஆனால் காந்தியாரை விடுத்து மற்ற தலை வர்கள் குறித்துப் பெரிய அறிமுகம் இல்லை.

காந்தியாரைப் போலவே அண்ணல் அம்பேத்கரும்தந்தை பெரியாரும் இந்த மண்ணில் தோன் றிய மிக முக்கியமான வரலாற்று நாயகர்கள்.  தந்தை பெரியாரும்,  காந்தியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றே நான் கருதுகிறேன்இவர்கள் இருவரும்ஒருவரை ஒருவர் நிரப்புபவர்கள்.My life is my message என்று இந்த மண்ணில் முழங்கியவர் காந்திஅப்படியே வாழ்ந்தவர் தான் பெரியார்!

மாபெரும் புரட்சியாளரான பெரியார்எதை முன்னிட்டும் மனிதன் அடிமைப்படவோஅச்சப் படவோ கூடாது என்கிற மாபெரும் நம்பிக்கையைத் தமிழ் மண்ணில் விதைத்தவர்ஜாதியத்தின் வேரான பிராமணியத்தை எதிர்க்கின்ற மன நிலையை இந்த மண்ணில் எழுப் பியவர்.  எவையெல்லாம் சக மனி தனை இழிவுபடுத்துகிறதோஅவை யெல்லாம் தூக்கி எறியப்பட வேண் டியவை என்கிற கலகக் குரலுக்குச் சொந்தகாரர்அதே சமயத்தில் நான் சொல்கிறேன் என்பதற்காக எதையும் ஏற்க வேண்டியதில்லைஉன்னுடைய அறிவுக்கு உட்படுத்தி அதை பரீசி லனைச் செய்சரி என்றால் ஏற்றுக் கொள்இல்லையென்றால் நிராகரி என்று சொன்ன மாபெரும் ஜனநாயக வாதி.

இன்றைக்குக் "கிச்சன்லெஸ் சொசைட்டிபற்றி பேசுகிறோம்நூறாண்டுகளுக்கு முன்பே பெரியார் ”பெண்களை அடிமைப்படுத்தும் அடுப்பாங்கரைகள் இடித்துத் தள்ளப் பட வேண்டியவை” என்றார்.

தன்னுடைய வீட்டுப் பெண்களை தான் நம்பியவழி நடத்திய அனைத் துப் போராட்டங்களிலும் ஈடுபடுத்தி யவர்காலங்காலமாக இந்த மண்ணில் வேரூன்றிய ஆணாதிக்கத்தின் சொச் சம்எப்போதெல்லாம் என்னையும் மீறி என்னுள் எழுகிறதோஅப்போ தெல்லாம் அதன் மீது விழும் அடி பெரியாரின் கைத்தடியுடையதுஅவ்வகையில் பெரியாருக்கு நான் நன்றிக் கடன்பட்டவன்.

நண்பர்களேஇந்த இரு நூல் களுக்கும் பிழை திருத்தி உதவியவர் ஜப்பானிய மொழி ஆசிரியர் யுதாகா நகானோ அவர்கள்முதலில் பெரியாரின் வாழ்க்கைக் குறிப்புகள் நூலைப் பிழை திருத்தம் செய்த போதுஏறக்குறைய ஒவ்வொரு பக் கத்தையும் படித்த பின்னர் இவ்வளவு மகத்தான காரியங்களைச் செய்த பெரியாரை எப்படி நாங்கள் தெரிந்துக் கொள்ளாமல் போனோம் என யுதாகா நகானோ கேட்டார்இந்தக் கேள் விக்கான விடையாக இந்த இரு நூல்களும் இனி இருக்கும் என்பதில் மகிழ்கிறேன்.

நண்பர்களேஒரு சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன்.  2002 ஆம் ஆண்டு ஒன்றாக வேலை பார்த்த ஜப்பானிய நண்பர்களிடம் பேசும் போது பெரியார் பற்றி குறிப்பிடுவ துண்டுசில நாட்கள் கழிந்து ஒரு ஜப்பானிய நண்பர்என்னை அவர் களுடைய பகுதியில் நிகழும் ஒரு சமூகக் கூட்டத்திற்கு வரும்படி அழைத்தார்.  மொத்தமே நாற்பது பேர் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்திற்கு என்னை அழைத்தது வியப்பாக இருந்ததுஅங்கு சென்ற பின்புதான் தெரிந்ததுஅந்தக் கூட்டம்ஜப்பானில் ஒரு காலத்தில் இனப் பாகுபாட்டுக்கு ஆளான ஒரு சமூக மக்களின் கூட்டம் என்பது!

அவர் யார்அவர்தான் ஆசிரியர் கி.வீரமணி

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட வயது முதிர்ந்த ஜப்பானியர், 1980 ஆம் ஆண்டு எங்களுடைய கூட்டத்திற்கு தமிழ்நாட்டுத் தலைவர் ஒருவர் வந்து கலந்து கொண்டார் என்று கூறினார்அவர் வேறு யாருமல்லஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தான்இனப் பாகுபாட்டிற்கு ஆளானவர்கள் உலகின் எந்த மூலை யில் இருந்தாலும் அவர்களுக்காகச் சிந்திக்க கூடியவர்களாகஅவர்களுக் காகப் பரிதவிக்கக் கூடியவர்களாக திராவிட இயக்கம் விளங்குவதைக் கண்டு மிகுந்த பெருமிதம் கொண் டேன்.  எனவே தான்ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் பெரியார் பற்றிய நூலை ஜப்பானிய மொழியில் கொண்டு வர இயலுமா என்று வினவிய போது மிகுந்த மகிழ்ச்சிய டைந்தேன்.  ஆசிரியர் வினவியது ஜூன் மாத இறுதியில்அதற்கு பிறகும்சீரான கால இடைவெளியில் அக்கறையுடன் நூலை பற்றி கேட்டுக் கொண்டே இருந்தார்நண்பர்சக பெரியாரியப் பற்றாளர் கமலக்கண் ணன் அவர்களுடன் இணைந்து இரண்டு மாத காலத்தில்ஆசிரியர் விரும்பிய வண்ணம் பெரியாருடைய பிறந்த நாளிலேயே இந்தப் பணியை செய்து முடிக்க முடிந்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன்.  எங்களுடைய மொழி பெயர்ப்பை சரி பார்த்துப் பிழை திருத்திய ஆசிரியர் யுதாகோ நகனோ சான் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியாரின் பிறந்த நாளை 'சமூகநீதி நாள்என்று அறிவித்துப் பெருமை சேர்த்த தமிழ்நாடு முதல மைச்சர் மு..ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை உரித்தாக்கு கிறேன்இந்த நூல் ஆக்கத்திற்கு காரணமாக இருந்த ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நூலை வெளியிட்ட மாண்புமிகு அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கும்நூலைப் பெற்றுக் கொண்ட மியுகி இனோஉவே சான் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.  மேலும் இந்த விழாவில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஜோதிமணி அவர்களுக் கும்சுப.வீரபாண்டியன்  அவர்களுக் கும்வரவேற்புரை ஆற்றிய பொறி யாளர் இன்பக்கனி அவர்களுக்கும்நோக்கவுரை வழங்கிய கவிஞர் கலி.பூங்குன்றன்   அவர்களுக்கும்இந்த முயற்சியில் உறுதுணையாக இருந்த நண்பர் வி.சி.வில்வம் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன் என்றார் தோழர் கமலக் கண்ணன்.

தொகுப்பு:

வி.சிவில்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக