செவ்வாய், 21 செப்டம்பர், 2021

பாராட்டத்தக்க அறிவிப்பு: 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் தொழில்படிப்புகளுக்கான கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 

 

சென்னைசெப்.21 7.5 சதவீத உள்ஒதுக் கீட்டின்படி பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் அறிவித்தார்.

பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர் களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வந்தது.

அதன்படி இப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெற்றது.

பொறியியல் படிப்பிற்கு 7.5 சதவீதம் சிறப்பு உள்ஒதுக்கீட்டின் அடிப்படை யில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று (20.9.2021) நடந்ததுஉயர் கல் வித்துறை அமைச்சர் .பொன்முடி தலைமை தாங்கினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன் பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்முன்னதாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வரவேற்றார்.

முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் 50 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கி பேசியதாவது:-

மாணவர்களின் கனவு

அரசு பள்ளியில் படித்த மாணவர்க ளுக்கு தொழில் கல்வியில் சேர்வதற்காக 7.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளதுஅந்த அடிப் படையில் தொழில் கல்வி படிப்புகளில் சேர்வதற்கான ஆணைகளை பெறுவதற் காக இங்கு வந்திருக்கும் மாணவமாணவியர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள் கிறேன்பொறியியல் பட்டதாரியாக ஆக வேண்டும் என்ற உங்களது கனவு நிறைவேறும் நாள் இதுஉங்கள் கனவு நிறைவேறுவதன் மூலமாக உங்களது பெற்றோரது கனவும்உங்களது குடும்பத்து கனவும் நிறைவேறக்கூடிய நாளாக இது அமைந்திருக்கிறது.

திராவிட இயக்கத்தின் நோக்கமே அனைவருக்கும் கல்விஅனைவருக்கும் அவர் தகுதிக்கேற்ற வேலை தரப்பட வேண்டும் என்பது தான்தமிழ்நாட்டின் இளைய சக்தி அனைத்தும் உயர் கல் வியை அடைந்ததாக மாற்றுவது தான் இந்த அரசின் உயரிய இலக்காகும்தற்போது நீட் தேர்வுக்கு எதிராக இந்த அரசும் சட்ட போராட்டம் நடத்தி வருகிறதுசமூகநீதி உத்தரவுகளால் தான் சமநிலைச் சமுதாயம் அமைப்ப தற்கான அடித்தளம் இடப்படுகிறது.

10 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள்

தொழில் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், 7.5 சதவீத இடங்கள் முன்னுரிமையின் அடிப் படையில் ஒதுக்கீடு செய்ய இந்த அர சால் கடந்த சட்டமன்ற கூட்டத்தொட ரில் சட்டம் இயற்றப்பட்டதுஅந்த அடிப்படையில் தான் நீங்கள் கல்விச் சாலைகளுக்குள் நுழைகிறீர்கள்நடப்பு கல்வி ஆண்டில்இந்த சிறப்பு உள்ஒதுக் கீடு மூலம் பொறியியல் படிப்புகளில் சுமார் 10 ஆயிரம் அரசு பள்ளி மாண வர்கள் பயன்பெறுவர்அதேபோலஅரசு பள்ளிகளில் பயின்ற சுமார் 350 மாணவர்கள் வேளாண்மைகால்நடை மருத்துவம்மீன்வளம் மற்றும் சட்டப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறுவார் கள்உங்களுக்கு கல்வி ஆணை வழங்கு வதை நான் எனக்கு கிடைத்த பெரு மையாக கருதுகிறேன்.

இன்னும் சில ஆண்டுகள் கழித்துஎங்கோ ஒரு ஊரில் என்னைச் சந்தித்துநீங்கள் கொடுத்த அரசாணையால் கல்வி பெற்ற நான்மிகப்பெரிய நிறு வனத்தில் வேலை பார்க்கிறேன்சொந்த மாக தொழில் செய்கிறேன் என்று நீங்கள் சொல்வீர்களானால் அதை விட எனக்கு மகிழ்ச்சி இருக்க முடியாது.

கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும்

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தொழில் படிப்புகளுக் கான கல்லூரியில் சேரக்கூடிய மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் மனம் மகிழக்கூடிய வகையில் ஒரு செய்தியைஒரு அறிவிப்பை மகிழ்ச்சியோடு நான் வெளியிட காத்திருக்கிறேன்.

அது என்னவென்றால்அரசு பள்ளி களில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழில் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுடைய கல்விக் காக ஆகக்கூடிய செலவு கல்வி கட்டணம்விடுதி கட்டணம்ஏன் கலந்தாய்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் இந்த அரசு ஏற்றுக்கொள்ள முன்வந் திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.250 கோடி செலவு

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி தமிழ்நாடு முழுவதும் தொழில் கல்வி யில் 12 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப் படுவார்கள்அந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணம்விடுதி கட்டணம்கலந்தாய்வு கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும் என்ற வகையில் அரசுக்கு ரூ.250 கோடி செலவாகும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக