செவ்வாய், 21 செப்டம்பர், 2021

அனைத்து வகைகளிலுமான அர்ச்சகர்கள்


மனுராஜ் சண்முகசுந்தரம்

[இந்து சமய அறநிலையத் துறைச் சட்டத்தின் கண்ணோட்டத்தில்  ஆழப் பதிந்து போயுள்ள ஜாதிய பழைமை வாதத்தையும் ஆணாதிக்க மனப்பான்மையையும் ஒன்று சேர்த்து அழித்துவிட இயலும்.]

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டில் வரும் மாநிலம் முழுவதிலும்   உள்ள கோயில்களில் பயிற்சி பெற்ற 24 அர்ச்சகர்களை 2021 ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு நியமனம் செய்ததுஅதே தினத்தன்று,  ஓதுவார்பூசாரிமஹந்த்பூமாலை கட்டுபவர்கள் மற்றும் ஒரு குடை தூக்கி ஆகிய பணியிடங்களும் நிரப்பப்பட்டனஅதனைத் தொடர்ந்த வாரங்களில்இந்த நியம னங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வரிசை வரிசையாக ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டு வந்துள்ளன.

மாநில அரசும் கோயில்களும்

இந்து கோயில்களையும்இந்து மத அமைப்பு களையும் நிர்வகிப்பதற்காக இயற்றப்பட்ட சட்டம்தான் 1959 தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சட்டமாகும்பாரம்பரியமாக அர்ச்சகர்களை நியமனம் செய் வதற்கான நடைமுறையை நீக்குவதற்காக இந்த இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் 55 ஆவது பிரிவு 1971 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டதுஜாதி பாகுபாடு இன்றி போதுமான பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை இந்து கோயில்களில் அரசால் நியமிக்கப்படுவதற்கு வகை செய்யும் திருத்தம் , 2006 ஆம் ஆண்டில் இந்த சட்டத்திற்கு செய்யப்பட்டதுஇந்த இரு திருத்தங் களையும் எதிர்த்து வழக்குகள் உச்சநீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்ட போது,  திருத்தப்பட்ட சட் டங்கள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அப்படியிருந்தபோதிலும்இந்து சமய அற நிலையத் துறை சட்டத்தின் நோக்கத்தையும்அதிகாரத்தையும் குறைப்பதற்கான அறைகூவல்கள் குறைந்து போய்விடவில்லைஅண்மையில் சில ஆண்டு காலமாகஅரசின் கைப்பிடியில் இருந்து கோயில்களை விடுவிப்பதற்கான ஓர் இயக்கம் தோன்றி காலூன்றியுள்ளதுஇதன் அடிப்படையில்  கட்டமைக்கப்பட்ட தனது 2021 சட்டமன்றத் தேர் தலுக்கான தேர்தல் அறிக்கையில்இந்து கோயில்களை நிர்வாகம் செய்வதற்குஇந்து பண்டிதர்கள் மற்றும் துறவிகள் அடங்கிய ஒரு தனி வாரியம் அமைப்ப தற்கான செயல்திட்டத்தையும் கூட பா..கட்சி சேர்த்து இருந்தது.

இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராக  விடப் பட்டுள்ள பல்வேறுபட்ட சவால்களை பரிசீலனை செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் நமது அரச மைப்பு சட்டப்படி அமைக்கப்பட்ட நீதிமன்றங்களுக்கு இருக்கின்றனசேஷம்மாளுக்கும் ஒன்றிய அரசுக்கும் 1972ஆம் ஆண்டில் நடைபெற்ற வழக்கில்பாரம்பரியமான அர்ச்சகர்கள் நியமன நடைமுறையை  நீக்குவது என்பதுஇந்து சமய அறநிலையத் துறை திருத்த  சட்டம் மூலம்,  மத சடங்குகளிலும்கொண் டாட்டங்களிலும்வழிபாடுகளிலும் எந்த ஒரு மாற் றத்தையும் கொண்டு வர அரசு உத்தேசித்துள்ளது என்ற பொருள் தராது என்று உச்சநீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளதுஅதே போலஆதி சைவ சிவாச் சாரியார்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில்,  இயல்பாகவேஅரச மைப்பு சட்டப்படியான நியாயத்தன்மைஅனைத்து மத நம்பிக்கைகள் அல்லது பழக்க வழக்கங்களையும் விட முக்கியத்துவம் வாய்ந்தது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுமேலும்இந்த நியமனங்களில் ஒவ்வொரு வழக்கும் தனித்தனியாக சோதனை செய்யப்பட வேண்டும் என்றும்ஆகமங்களின்படி அல்லாத நியமனங்கள்,  அரசமைப்பு சட்ட 25 மற்றும் 26 ஆவது பிரிவுகளில் பொறிக்கப்பட்டுள்ள அரச மைப்பு சட்டப்படியான சுதந்திரங்களுக்கு எதி ரானவை"  என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ஆகமங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இத்தகைய விவாதங்கள்,  கோயில் நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருக்கின்றது என்று கூறி பதிவு செய்யப்படும் அனைத்து மனுக்களிலும் பொது வாகவே பயன்படுத்தப்பட்டு வருபவையாகும்ஆகமங்கள் மீறப்படுகின்றன என்ற எந்த ஒரு கருத்தும் ஒவ்வொரு வழக்கிலும் தனித்தனியாக சோதனை செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்துள்ளதுஒரு நிர்வாக முடிவோ அல்லது ஆணையோ ஆகமங்களை அல்லது இன்றி யமையாத மத பழக்க வழக்கங்களை மீறுபவையாக உள்ளன என்ற ஒரு பொதுவான கருத்தின் அடிப் படையில் எந்த ஒரு நிவாரணமும் மனுதாரருக்கு அளிக்கப்பட இயலாது என்று கூறுவதே இது.

நீதிபரிபாலன நடைமுறை உருவாக்கம்

எப்படியிருந்தபோதிலும்கடந்த மூன்று ஆண்டு காலமாக உருவாகி வரும் உரிமைகளின் அடிப்படையிலான நீதிபரிபாலன நடைமுறை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததுஇந்தியாவின் இளம் வழக்கறிஞர் சங்கத்துக்கும் கேரள மாநில அரசுக்கும் இடையே நடைபெற்ற சபரிமலை வழக்கிலும்,  2018 ஆம் ஆண்டில் ஜோசப் ஷைனுக்கும்இந்திய ஒன்றிய அரசுக்கும் இடையே நடைபெற்ற வழக்கிலும்ஒரு சில குறிப்பிட்ட அடையாளங்களையும் தாண்டிய வரலாற்று ரீதியிலான பாகுபாடுகளையும்,  வாய்ப்பு மறுக்கப்பட்ட குழு மக்களுக்கு எதிராக திட்டமிடப் பட்டு நடைமுறைப்படுத்தப்படும் பாகுபாடுகளையும் நீக்கப்பட வேண்டியதன் தேவையை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது மட்டுமன்றிஅத்தகைய பாகு பாடுகள் காட்டப்படுவதை நியாயப்படுத்துவதற்கான ஒரே மாதிரியான கண்ணோட்டங்களையும்வாதங் களையும் நிராகரித்துள்ளது.

இத்தகைய அனைத்து வழக்குகளிலும்,  பல்வேறு பட்ட அரசமைப்பு சட்ட உரிமைகளையும் நியாயமான முறையில் சமனப்படுத்துவதற்கே நீதிமன்றம் முன் னுரிமை அளித்துள்ளதுசபரிமலை வழக்கில்அரசமைப்பு சட்ட முன்னுரிமை வரிசைப்படிஅரசமைப்பு சட்ட மூன்றாம்  பாக விதிகளில் அங்கீ கரிக்கப்பட்டுள்ள   மதம் பற்றிய தனிநபரின் சுதந்திரம்அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள சமத்துவம்விடுதலை மற்றும் தனிப்பட்ட மக்களின் சுதந்திரங்கள் ஆகியவற்றை விடதனிப்பட்ட நபரின் மத சுதந்திரம் முன்னுரிமை பெறத் தகுதி அற்றது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுமேலும்அத்துடன்மத சுதந்திரத்தையும்அதன் விளைவாக அளிக்கப் பட்டுள்ள மதத்திற்கு இன்றியமையாத உரிமைகள் மற்றும் பழக்க வழக்கங்களையும் நமது அரசமைப்பு சட்டம் பாதுகாக்கிறது என்ற போதிலும்கவுரவம்சுதந்திரம்சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படை யிலான அரசமைப்பு சட்ட மதிப்பீடுகளை நிலைநாட்டு வற்கான வழிகாட்டுதலையே இந்த நீதி மன்றம் பின்பற்றும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

முக்கியமற்ற மதம் சாரா விவகாரங்களைப் பொறுத்தவரையில்கோயில் நிர்வாகம் என்று வரும் போதுசபரிமலை வழக்கில் பெறப்பட்ட ஆதாயங் களின்மீது  நீதிபரிபாலனத் துறை கட்டமைப்பை உருவாக்குமாறு அரசமைப்பு சட்ட நீதிமன்றங்களுக்கு இப்போது அழைப்பு விடப்படும்அவ்வாறு செய்யும்போது,  அரசமைப்பு சட்ட நன்னெறி மற்றும் அடிப்படை சமத்துவம் ஆகிய கொள்கைகளினா லேயே அவை வழிநடத்திச் செல்லப்படும்நவ்தேஜ் சிங் ஜோஹர்மற்றும் இந்திய ஒன்றிய அரசுக்கும் இடையே 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற வழக்கில்அரசமைப்பு சட்ட 15 ஆவது பிரிவை மிகவும் அகண் டதாகவும்,  மிகுந்த முன்னேற்றம் அடைந்ததாகவும்மற்ற பிரிவுகளுடன் கலந்ததாக இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

இன்றுஅனைத்து ஜாதிக் குழுக்களையும் சேர்ந்த மக்கள் அர்ச்சகர்களாக ஆகமுடியுமா என்பது பற்றியே பெரும்பாலான விவாதங்கள் மேற்கொள்ளப் படுகின்றனவே அன்றி,  இத்தகைய விவாதங்களில் உள்ளடங்கியுள்ள பாலியல் பாகுபாடுகளைப் பார்க்க நாம் தவறிவிட்டோம்அதனால்பெண்களையும்பாலினம் மாற்றம் அடைந்தவர்களையும் கோயில் களில் அர்ச்சகர்களாக ஏன் நியமிக்கக்கூடாது என்று கேட்பதற்கான வாய்ப்பினை சென்னை உயர்நீதிமன் றத்தின் முன் தற்போது விசாரணையில் உள்ள வழக்குகள் இப்போது அளித்துள்ளனஅத்துடன்இந்து அறநிலையத் துறையின் கண்ணோட்டத்தில் ஆழமாகப் பதிந்து போயுள்ள  பழைமையான ஜாதிய வாதம்ஆணாதிக்க மனப்பான்மை ஆகியவை நீக்கப் பட்டு,  நியாயமானசமத்துவம் நிறைந்தகவுரவம் மிகுந்த சமூகம் ஒன்று படைக்கப்பட வேண்டும்.

நன்றி: 'தி ஹிந்து' (ஆங்கிலம்) 14-09-2021

தமிழில்..பாலகிருட்டிணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக