செவ்வாய், 21 செப்டம்பர், 2021

மதச்சார்பின்மைபற்றி 'விஜயபாரதம்' பேசலாமா?

 

ஆர்.எஸ்.எஸ்வார இதழான 'விஜயபாரதம்ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன்பாகவத் கருத்து என்று ஒன்றைப் பதிவு செய்துள்ளது.

"ஆர்.எஸ்.எஸ்.ஸின் மூத்த பிரமுகர் பாவுராவ் தேவரஸ் இங்கிலாந்து சென்றிருந்தார்அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்விருது பெற்றோர் உள்ளிட்ட பிரமுகர்களின் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்இவரை வரவேற்றுப் பேசிய ஆங்கிலேயர், 'பாரத நாட்டின் தொடர்பு நமக்கு கிடைத்தது குறித்து மகிழ்ச்சிபாரதத்திற்கு நாம்தான் ஜனநாயகத்தை அளித்திருக்கிறோம்என்று பேசினார்அவரை திருத்தினார் பாவுராவ்: "உங்கள் விருந்துக்கு நன்றிநீங்கள் பேசியதில் ஒரு சிறு பிழைஜனநாயகத்தை நீங்கள் எங்களுக்கு தரவில்லைஇங்கிலாந்து என்ற தேசமே இல்லாத காலத்தில் பாரதம் ஜனநாயக குடியரசுகளாக தழைத்தோங்கி இருந்ததுஒருவேளை அங்கிருந்து கிரேக்க நாடு வழியாக உங்களுக்கு ஜனநாயகம் வந்து சேர்ந்திருக்கலாம்!"

'கர் வாப்சிஎன்ற தாய் மதம் திரும்பும் விஷயம் குறித்து நாடாளுமன்றமே பரபரப்பாகிய நேரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நான் சந்தித்தேன்உடல் நிலை காரணமாக பல நிகழ்ச்சிகளை ரத்து செய்திருந்த அவர் என்னைச் சந்திக்க இசைந்தார்சந்தித்த போது அவரே கூறியது இது: "பாரதத்திற்கு மதச்சார்பின்மை போதிக்க இவர்கள் யார்பாரதத்தின் அரசியல் சாசனம் மதச்சார்பின்மை பற்றி பேசுவதால் தேசம் மதச்சார்பற்றதாக இருக்கிறது என்பது அல்ல உண்மைஅரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் மதச்சார்பற்றவர்களாக இருந்தார்கள் என்பதுதான் உண்மைஎனவேதான் நமது அரசியல் சாசனம் மதச்சார்பின்மை பேசுகிறது." சற்று நேரம் அமைதியாக இருந்த பிரணாப் முகர்ஜி தொடர்ந்து இவ்வாறு கூறினர்; "நமது அரசியல் சாசனத்தை எழுதியவர்களுக்கு அப்போதுதானா மதச்சார்பின்மை எண்ணம் ஏற்பட்டது? 5,000 ஆண்டுகளாக பாரத மண்ணில் நிலவும் பாரம்பரியம் தந்த கொடை மதச்சார்பின்மை". பின்னர் நமது சங்க சிக்ஷா வர்க முகாமிற்கு வந்திருந்தபோதுகூட பிரணாப் முகர்ஜி இதையே கூறினார்அது பதிவாகியுள்ளதுமதச்சார்பின்மை என்பது நமது கலாச்சார பாரம்பரியம் என்பதுதான் விஷயம்."

('விஜயபாரதம்' - 13.8.2021)

இதனைப் படிக்கும் பொழுது ஏற்பட்ட நகைச்சுவைக்கு அளவேயில்லை.

'பேச நா இரண்டுடையாய்ப் போற்றி!" என்று 'ஆரிய மாயை'  நூலில்  அறிஞர் அண்ணா எழுதியதுதான் நினைவிற்கு வருகிறது.

2015 குடியரசு நாளில் (26.1.2015) ஒன்றிய அரசு சார்பில் வெளியிடப்பட்ட  அதிகாரப் பூர்வமான அரசு விளம்பரத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் (Preambleஇடம் பெற்றுள்ள 'சோசலிஸ்ட்' 'செக்குலர்' (மதச்சார்பின்மைஎன்ற முக்கிய சொற்களையே திட்டமிட்டு நீக்கியவர்கள்தானே இவர்கள்?

ஒரே நாடு என்றும்ஒரே மதம் என்றும்ஒரே கலாச்சாரம் என்றும்இந்து ராஜ்யம் என்றும்ராமராஜ்ஜியம் என்றும் பேசுகின்ற நாக்கிற்குச் சொந்தக்காரர்கள் மதச்சார்பின்மை என்பது நமது கலாச்சார பாரம்பரியம் என்று பேசுவது அறிவு நாணயமானதுதானா?

450 ஆண்டு கால வரலாறு படைத்த 'அயோத்தி பாபர் மசூதியை இடித்தவர்கள்', '1,100 கோடி ரூபாயில் ராமன் கோயில் கட்டிக் கொண்டு இருப்பவர்கள்' - எந்த முகத்தை வைத்துக் கொண்டு மதச் சார்பின்மை பேசுகிறார்கள் - எழுதுகிறார்கள்?

"எனது புனிதமான இந்து மதத்துக்கும்இந்து சமுதாயத்துக்கும்இந்து கலாச்சாரத்திற்கும் பாசமிகு பாரத் வர்ஷத்தில்அதுவே உயர்ந்தது என்பதை நிலைநாட்ட இந்து ராஷ்டிர சுயம் சேவக்கில் (ஆர்.எஸ்.எஸில்நான் உறுப்பினராகிறேன் என்பதை எல்லாம் வல்ல இறைவன் முன்னாலும்எனது மூதாதையர் முன்பும் பிரமாணம் எடுக்கிறேன்இந்தச் சங்கத்தின் பணிகள் அனைத்தையும் இதயப் பூர்வமாக ஏற்க வாழ்நாள் முழுவதும் செயல்படுவேன்இதுதான் ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ்.காரரும் ஆர்.எஸ்.எஸில் சேரும் போது எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி.

இத்தகைய ஆர்.எஸ்.எஸின் தேசியத் தலைவர்தான், "பாரத தேசத்தின் பாரம்பரியம் என்பதே 'மதச்சார்பின்மைஎன்று கூச்சநாச்சம் இல்லாமல் கூறுகிறார்.

காங்கிரஸ் முன்னணி தலைவர்களுள் ஒருவரான அர்ஜுன் சிங் ஒரு வினாவைத் தொடுத்தார். 'ஆர்.எஸ்.எஸில் எடுத்துக் கொள்ளப்படும் உறுதிமொழி - பதவி ஏற்கும் போது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விசுவாசமாக இருக்கப்போவதாக எடுத்துக் கொள்கிறார்களே - இந்த உறுதிமொழி - இரண்டில் எதற்கு விசுவாசமாக இருக்கப் போகிறார்கள்?' என்று அர்ஜுன் சிங் சரியாகக் கிடுக்கிப்பிடி போட்டாரே - இதுவரை பதில் உண்டா?

இவரை விட்டுத் தள்ளுங்கள். 'ஜென்டில்மேன்என்று சொல்லுகிறார்களே அடல் பிஹாரி வாஜ்பேயின் கருத்து என்ன!

புனாவில் சத்ரபதி சிவாஜியின் 325ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் வாஜ்பேயி என்ன பேசினார்.

Mr.Vajpayee said Chattrapathi was secular to the true sence as against today is "Distorted Secularism"  for he paid equal respect to all religions and never discriminated on the ground of religion. (The Hindu 27.6.1998).

சத்ரபதி சிவாஜி இப்பொழுதுள்ள "உருக்குலைக்கப்பட்ட மதச் சார்பின்மைக் கொள்கையை"ப் போன்ற ஒன்றைக் கடைப்பிடிக்க வில்லைஎல்லா மதத்தினரையும் மரியாதையாக நடத்தினார்.

இது தான் பிரதமர் என்ற நிலையில்கூட .பிவாஜ்பேயி பேசியதாகும்வாஜ்பேயியே இந்த நிலை எனில்மோகன் பாகவத் பேசுவதுபற்றிக் கேட்கவா வேண்டும்?

மோகன் பாகவத்துக்கு முந்தைய ஆர்.எஸ்.எஸ்தலைவர் கே.எஸ்சுதர்சன் ஆக்ராவில் ஆர்.எஸ்.எஸ்ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் தேசியப் பாதுகாப்பு முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் என்ன பேசினார்?

"சிறீ ராமபிரான்சிறீ கிருஷ்ணபகவான் ஆகியோருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்" ('தினமணி' - 16.10.2000)

என்று ஆர்.எஸ்.எஸ்தலைவர் சுதர்சன் பேசியதற்கு என்ன பதில்விஜயபாரதம் விளக்குமாமோகன்பாகவத் முறையாகப் பதில் கூறுவாரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக