ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

பெரியார் காங்கிரசில் சேருவதற்கு ஒரு மூலகாரணமாக இருந்தவர் வ.உ.சி. தியாக சீலர் வ.உ.சி.பற்றி தமிழர் தலைவர்

 

 


சென்னைசெப். 7  தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் சேருவதற்கு ஒரு மூலகாரணமாக இருந்தவர் ..சிதம் பரனார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘..சிதம்பரனாரும் - தந்தை பெரியாரும்!''

..சி.யின் 149 ஆம் பிறந்தநாளில்அவரது தியாகத்தை நினைவுகூரும் விதமாக, 5.9.2020 அன்று மாலை 6 மணிக்கு, “..சிதம்பரனாரும்தந்தை பெரியாரும்” எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

பேரன்பிற்கும்பெருமதிப்பிற்கும் உரிய கழகக் கொள்கைக் குடும்பத்தவர்களேபகுத்தறிவாளர்களேதமிழன்பர்களேஇந்த உரையை செவிமடுக்க வந்துள்ள அறிஞர் பெருமக்களேதாய்மார்களேசகோதரிகளேநண்பர்களே உங்கள் அனை வருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னுடைய கொள்கைக்காகலட்சியத்திற்காக எல்லாவற்றையுமே இழந்தவர்

இன்று கப்பலோட்டிய தமிழன் என்று எல்லோராலும் பாராட்டப்படுகின்றபுகழப்படுகின்ற - இந்திய நாட்டின் ஒப்பற்ற ஒரு தலைசிறந்த தன்னலமறுப்பாளர் - தியாகத்தின் சிகரம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உயர்ந்த ஒரு தமிழன் - தமிழாராய்ச்சி அறிஞர் - ஒரு சுயமரியாதை வீரர் - சமூகநீதி யில் நம்பிக்கையுள்ள ஒரு புரட்சியாளர் - மிகப்பெரிய அள விற்கு தன்னுடைய கொள்கைக்காகலட்சியத்திற்காக எல்லா வற்றையுமே இழந்துமானத்தையும்அறிவையும்உரிமை யையும் மட்டுமே காப்பாற்றவேண்டும் என்று நினைக்கக் கூடிய எடுத்துக்காட்டான ஒரு பெருமகனார்தான் ..சிஎன்ற அந்த மூன்று எழுத்துக்குரியபெருமைக்குரிய அந்தப் புரட்சியாளர்.

தந்தை பெரியார் அவர்களைவிடஅவர் வயதில் மூத்தவர்அதேநேரத்தில்தந்தை பெரியாரைத்தான் தலைவர் என்று சொல்லிக் கொள்வதில் கொஞ்சம்கூட தயங்காதவராக இருந் தார்பெரியார் அவர்களேஅதற்காக அவர்கள் பின்வாங் கினார்கள் - சங்கடப்பட்டார்கள்அப்படிப்பட்ட பெருமகனார் தந்தை பெரியார் அவர் களுக்கும் - ..சிஅவர்களுக்கும் இருக்கின்ற உறவு பல பேருக்குத் தெரியாது.

நம்முடைய நாட்டிலே வரலாறு என்று சொன்னால்..சிதிரைப்படம் எடுப்பவர்கள்கூட பெரியாருக்கும் - ..சி.க்கும் இருக்கின்ற தொடர்பைப்பற்றி அவர்கள் அறவே மறைத்து விட்டார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசுக்கு வருவதற்கு ஒரு மூல காரணமாக இருந்தவர்

..சிஅவர்களும்பெரியார் அவர்களும் எந்தக் காலத்தில் தொடர்புடையவர்கள் என்று சொன்னால்தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசுக்கு வருவதற்கு ஒரு மூல காரணமாகஒரு ஈர்ப்பு சக்தியாக இருந்தார் -  மிகப்பெரிய அளவிற்கு சமூகநீதியில் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

அந்த சமூகநீதிக்காகத்தான் அவர் அரசியலிலே ஈடு பட்டார்அவரே சொல்லியிருக்கிறார்நான் அரசியலுக்கு வந்ததும் அதற்காகத்தான் - காங்கிரசை ஆதரித்ததும் அதற்குத் தான்காங்கிரசை விட்டு வெளியேறி எதிர்த்ததும் அதற்காகத் தான் - இன்றைக்கு எந்த ஆட்சியாக இருந்தாலும்அந்த ஆட்சியை நான் ஆதரிக்கின்ற அளவுகோல் சமூகநீதிதான் என்று தந்தை பெரியார் அவர்கள் மிகத் தெளிவாகச் சொல்வார்கள்.

அப்படிப்பட்ட அவர்களுடைய அந்த நெருக்கம் என்பது - மறைக்கப்பட்ட வரலாறுகளுடைய சில விஷயங்களை எடுத்துச் சொல்லவேண்டும்..சி.யை கப்பலோட்டிய தமிழன் என்ற அளவிற்குப் பெருமைப்படுத்துகின்றோம்அது உண்மைதான்அதேநேரத்தில்அவர் தன்னுடைய சொத்துசுகங்களையெல்லாம்  இழந்துஅதற்காக மிகப்பெரிய போராட் டத்தை நடத்திசிறைச்சாலையில்மிகப்பெரிய அளவிற்கு நாடு கடத்தக் கூடிய அளவிற்குத் தண்டனையெல்லாம் பெற்றுசெக்கிழுத்த செம்மல் என்ற அளவிற்கெல்லாம் வந்துமிகப்பெரிய வழக்குரைஞர்வசதியானவர் - தன்னுடைய வசதி வாய்ப்புகளையெல்லாம் சுதேசி என்ற அந்த உணர்வுக்கு ஆளாகிவிதேசியை விரட்டவேண்டும் என்பதற்காகவெள் ளைக்காரர்களுக்குப் போட்டியாகஒரு கப்பல் கம்பெனியை ஆரம்பித்தார் என்று சொன்னால்இந்த வரலாற்றுக்கு ஈடாக,  இந்திய நாட்டில் தியாக வரலாற்றில் யாராவது ஒருவரை காண முடியுமா?

இந்தியாவினுடைய ஒப்பற்றத் தியாகத்தின் சிகரமான குடும்பம்!

ஆனால்அவர் அடைந்த பெருமை என்ன வரலாற்றில்அவருக்கு என்ன அங்கீகாரம் கிடைத்ததுஏன் கிடைக்க வில்லை.  கடைசி நேரத்தில் அவர் பட்டபாடு சாதாரணமானதா?

இன்றைக்கு அவருடைய குடும்பம் என்று சொல்லக்கூடிய அளவிற்குஏதோ ஒரு  சில குடும்பங்களில் ஒன்றாக இருக்கிறதே தவிர - இந்தியாவினுடைய ஒப்பற்றத் தியாகத்தின் சிகரமான குடும்பம் அந்தக் குடும்பம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு - இன்றைக்கு அது பெறவேண்டிய பெருமையைப் பெற்றிருக்கிறதா என்பது கேள்விக்குறி.

இதற்கெல்லாம் என்ன காரணம்?

ஒரே ஒரு காரணம்தான் - தந்தை பெரியார் அவர்கள் மிக அழகாகச் சொன்னார்மற்றவர்கள் ஏற்கிறார்களோஇல் லையோ அது வேறுஇந்த நாட்டிலே எல்லாமே சமுதாய ஜாதிக் கண்ணோட்டம் - பிறவிக் கண்ணோட்டம்.

முதுகிலே பூணூல் இல்லாதவராக பிறந்த காரணத்தினால்தான்...

அந்த வகையில்அவர் பிறந்தது என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கக் கூடிய ஒரு வாய்ப்பு  - ஒரு சூத்திரனாகஒரு திராவிடனாகமுதுகிலே பூணூல் இல்லாதவராக பிறந்த காரணத்தினால்தான்அவருடைய தியாகம் என்பது இருக் கிறதேஅது சாதாரணமாக ஆக்கப்பட்டு விட்டதுஅதற்குரிய பெருமை இன்னமும் கிட்டியதாகத் தெரியவில்லை.

இந்த நாட்டிற்கு நெருக்கடி ஏற்பட்டபொழுதெல்லாம்விடுதலைப் போராட்டம்விடுதலைப் போராட்டம் என்று சொன்ன நேரத்திலேஅதில் ஈடுபடாதவர்கள் எல்லாம் இந்தி யாவினுடைய உயர்ந்த பதவிக்குப் போனார்கள் - இராஜ கோபாலாச்சாரியாரை எடுத்துக் கொள்ளுங்கள்அவரை காங்கிரசிலிருந்து நீக்கினார்கள்பிறகு காந்தியாருடைய செல்வாக்கினாலே அவர் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார்.

ஆகஸ்டு போராட்டத்தினை அவர் ஆதரிக்கவில்லைபாகிஸ்தானை அவர் ஆதரித்தார்அதற்காக காங்கிரஸ்காரர்கள் இராஜகோபாலாச்சாரியார்மீது நம்பிக்கை இல்லா தீர்மானத் தைக் கொண்டு வந்தார்கள்காந்தியார் அவருக்கு ஆதரவு கொடுத்தும் கூட - அந்த ஆதரவு மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் - டில்லியில் இருந்த செல்வாக்கு - மேலிடத்து செல்வாக்கு என்று சொல்லக்கூடிய அளவிற்குபார்ப்பனிய செல்வாக்கு இருக்கிறதே - அதனுடைய பெருமையினாலேஅவர் கவர்னரானார் - கவர்னர் ஜெனர லானார் - இலாகா இல்லாத மந்திரியாக மத்திய அரசாங்கத்தில் இருந்தார் - அதுமட்டுமல்லமிகப்பெரிய அளவில் மீண்டும் முதலமைச்சரானார்.

அந்தக் காலத்தில் ‘விடுதலை'யில்நம்முடைய விடுதலை ஆசிரியர் எழுதுவதைப்போல, ‘‘கலெக்டர் வேலை பார்த்தவர் கர்னல் வேலை பார்த்ததைப்போல அவர் முதலமைச்சரானார்தன்னுடைய இனத்திற்குசமுதாயத்திற்குச் செய்யவேண்டும் என்று.''

அவருக்குரிய சுயநலம் என்றுகூட நான் சொல்லமாட்டேன் - சொல்லமாட்டார்கள் யாருமே - அவருக்கு இருந்த இனப் பற்றுஅந்தக் காலத்தில்அதுதான் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்ததுஇப்படியெல்லாம் செய்து அவருக்குப் பெருமைக்கு மேல் பெருமை சேர்த்தார்கள்.

ஆனால்..சிஅவர்கள் தன்னுடைய சொத்தை இழந்துசுகத்தை இழந்துவாழ்வை இழந்து - எல்லாவற்றையும் இழந்தாலும்மானத்தை அவர் இழக்கவில்லை - கொள்கையை அவர் இழக்கவில்லைலட்சியப் போராட்டம் என்று வருகின்ற நேரத்தில்சமூகநீதி என்று ஆரம்பித்ததில் அவர்கள் வந்த காலத்தில் இது இருந்தது.

இதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள்காஞ்சிபுரத்தில் அவருடைய படத்தைத் திறந்து வைத்தார்கள்.

23.4.1961 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் நகர மன்றத்தில்..சிஅவர்களுடைய உருவப் படத்தைத் திறந்து வைத்துவர வேற்பில் மிக அருமையான ஒரு சொற்பொழிவை ஆற்றுகிறார்அது விடுதலையில் பதிவாகியிருக்கிறது நண்பர்களே!

பெரியார் அவர்களுக்கும்..சிஅவர்களுக்கும் எப்படிப்பட்ட நெருக்கம்?

அதில்பெரியார் ..சி.யைப்பற்றி எவ்வளவு உருக்கமான பல செய்திகளைச் சொல்கிறார் என்பதைக் கேட்டால்பெரியார் அவர்களுக்கும்..சிஅவர்களுக்கும் எப்படிப்பட்ட நெருக்கம் என்பதை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியும்.

அந்த நெருக்கம்ஏதோ அரசியலில்காங்கிரசில் சேர்ந்த பிறகு ஏற்படுவதைவிடகாங்கிரசில் சேருவதற்கு முன்பே ஏற் படுகிறதுஎப்படி ஏற்படுகிறது என்பதை எண்ணிப் பார்த்தோ மேயானால்தமிழ்நாட்டின் வரலாற்றில்அரசியல் போராட்டம் நிகழ்ந்ததில்லை - இனப்போராட்டம்தான் நடந்தது - நடந்துகொண்டிருக்கிறது என்பதை இந்திய வரலாற்றிலேயே என்பதைநாம் சமூகநீதி வராலற்றில் பார்த்தோம்.

தந்தை பெரியார் அவர்களுடைய கூற்றுஎவ்வளவுக்கெவ் வளவு ஆராய்ச்சிக்குரியது - வரலாற்றில் மறுக்க முடியாத உண்மை என்பதை அப்போது பார்த்தோம்.

அதேபோலத்தான் நண்பர்களேமிக முக்கியமாக சுட்டிக்காட்ட வேண்டுமானால், 1916-1917 ஆம் ஆண்டுகளில்நீதிக்கட்சி என்று சொல்லக்கூடிய தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் - பார்ப்பனர்களுடைய ஏகபோகத்தை உடைப்பதற் காக - கல்விஉத்தியோகத் துறையில் நூற்றுக்கு நூறு அவர்களே ஏகபோகமாக இருந்ததை மாற்றவேண்டும் என்பதற்காக சர்.பி.டிதியாகராயரும்டாக்டர் நடேசனாரும்டாக்டர் டி.எம்.நாயரும் சேர்ந்து பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று சொல்லக்கூடிய நீதிக்கட்சி - தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை ஆரம்பித்துஅதற்கு செல்வாக்கு வந்தவுடன்காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு பெரிய அச்சம் வந்தது.

அவர்கள் கேட்பது நியாயம்தானேஎன்று மக்கள் உணர ஆரம்பித்தார்கள்.

உடனே அவர்களுடைய செல்வாக்கைக் குலைப்பதற்காக - பார்ப்பனியம் எப்படியெல்லாம் உருவெடுக்கும் என்பதை - ..சிஅவர்களை வைத்தே தெரிந்து கொள்ளவேண்டிய செய்திகள் மிக அருமையாக இருக்கிறதுஅவருடைய வரலாற்றில் நடந்த நிகழ்வுகளும்!

..சி.யினுடைய வாழ்க்கை வரலாறு - தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றின் ஒரு பகுதி!

ஏனென்றால்அவருடைய வாழ்க்கை வரலாறு என்பது இருக்கிறதே - நம்முடைய இந்தியாவின்தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றின் ஒரு பகுதி.

அப்படி வருகின்ற நேரத்தில்தந்தை பெரியார் அவர்களும்திரு.வி.அவர்களும்வரதராசுலு நாயுடு போன்றவர்கள் எல்லாம் சேர்ந்துஅன்றைக்கு நீதிக்கட்சிக்கு எதிராகஅதனு டைய சமூகநீதிக் கொள்கையில் இருக்கின்ற நியாயத்தை உணர்ந்துபார்ப்பனரல்லாத மக்கள்திராவிடத் தமிழ்ப் பெரு மக்கள்அவர்கள் பக்கம் போய்விடக் கூடாது என்பதற்காகதாங்களே அந்தக் கொள்கையை சொல்வதாக வைத்துக் கொண்டு - சென்னை மாகாண சங்கம் (மெட்ராஸ் பிரசிடென்சி அசோசியேசன்என்ற ஒன்றை ஆரம்பித்துநாங்களும் 50 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் - அது நியாயம் தான் என்று சொல்லுகின்றோம்.  அவர்கள் வெள்ளைக்காரர் களை ஆதரிக்கிறார்கள்நாங்கள் வெள்ளைக்காரர்களை எதிர்க்கிறோம்வெள்ளைக்காரர்களின் அரசாங்கத்தை நாங்கள் ஆதரிப்பதில்லைதேச பக்தர்களே நீங்கள் இங்கே வாருங்கள் என்று சொன்னார்கள்.

அதிலே ஏமாந்துஅதற்குத் துணை போய்அந்த அமைப் பைத் தூக்கி நிறுத்துவதற்கு துணைத் தலைவராக இருந்துஆயிரம் ரூபாய் தந்தி மணியார்டர் அனுப்பிமிகப்பெரிய அளவில் செய்துஅதனுடைய இரண்டாவது ஆண்டு விழாவை ஈரோட்டில் மிகப் பிரபலமாக நடத்தியவர்தான் .வெ.ராமசாமி நாயக்கர் என்று அந்தக் காலத்தில் அழைக் கப்பட்ட தந்தை பெரியார் அவர்கள்.

மிகப்பெரிய வியாபாரி - உள்ளூரில் செல்வாக்கு உள்ள வர்கள்அவர் காங்கிரசில் அதிகாரப்பூர்வமாக சேரவில்லைஆனால்அவருக்கு சமூகநீதியில் இருந்த பற்றின் காரணமாகஅவர்கள் இதை ஏற்றுக்கொண்டவுடன்,

தந்தை பெரியாரை நம்ப வைத்தார்கள்!

ஓகோஅவர்கள் எல்லாம் (நீதிக்கட்சிக்காரர்கள்வகுப்பு வாதிகள் - வகுப்பு துவேஷிகள் - பார்ப்பன துவேஷிகள் - ஆகவே அவர்கள் அப்படி சொல்லுகிறர்கள்அது இல்லாம லேயே நாம் சுதந்திரம் பெற்றுஇவற்றையெல்லாம் செய்யலாம் என்று சொன்னவுடன்அதை மனதார நம்பினார் தந்தை பெரியார் அவர்கள்நம்ப வைத்தார்கள் டாக்டர் வரதராசுலு நாயுடு அவர்களும்இராஜகோபாலாச்சாரியார் அவர்களும்திரு.வி.அவர்களும்.

அந்த நிலையில்ஈரோட்டில் அவர்கள் அந்த அமைப்பை உருவாக்கி, 1917 காலகட்டத்தில் நீதிக்கட்சிக்குப் போட்டியாக - மக்கள் இவர்கள் பக்கம் போய்விடக் கூடாது என்பதற்காக வருகின்ற நேரத்தில்ஒரு சம்பவம் நடந்தது.

அதை தந்தை பெரியார் அவர்கள் மிக அழகாகச் சொல்கிறார்கள்அப்போதே பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார்எப்படி பார்ப்பனர்கள் தங்கள் நலத்தை விடமாட்டார்கள்தங் களுடைய இனஉணர்வோடு நடந்துகொள்வார்கள் என்பதைத் தந்தை பெரியார் புரிந்துகொள்ளக் கூடிய அளவிற்கு இருக்கிறார்அதற்கு மிக முக்கியமாகப் பயன்பட்டவர் - எந்த சந்தர்ப்பத்தில் என்றால் ..சிஅவர்கள்.

..சிஅவர்களுடைய புரட்சிகரமான சிந்தனையை மிகப்பெரிய அளவிற்கு ஆதரித்து..சி.யைப் பார்த்து பொதுவாழ்க்கையில் தான் ஈடுபடக் கூடிய அளவிற்குஅவரை ஒரு வழிகாட்டியாகக் கொள்ளக்கூடிய அளவிற்குபெரியவராக அங்கீகரித்தவர் தந்தை பெரியார் அவர்கள்அவரே பல நேரங்களில் சொல்லியிருக்கிறார்.

அப்படி வருகின்றபொழுதுஒரு சம்பவத்தை அய்யா அவர்கள் ஈரோட்டில் பழைய கதை என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவர்கள் ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

1936 ‘குடிஅரசிலேஇந்தச் சம்பவம் வெளிவந்திருக்கிறது.

1919 ஆம் வருஷத்தில் தோழர் .வெ.ராமசாமி தனது முனிசிபல் சேர்மன்ஜில்லா போர்டு மெம்பர்தாலுகா போர்டு மெம்பர் முதலிய பதவிகளை ஒரே காகிதத்தில் ராஜினாமா கொடுத்துவிட்டுதோழர்கள் வரதராஜூலு நாயுடுஇராஜகோபாலாச்சாரியார் அவர்களைப் பின்பற்றி காங்கிரசில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார்.

இந்தக் காலகட்டத்தில்அந்த சமயம் தோழர் .வெ.ராஜஸ்டிஸ் கட்சியாரை குறை கூறுவதெல்லாம் சரி - அவர்கள் கேட்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நியாயமானதுதானே என்று கேட்ட நேரத்தில்அதற்கு வரதராஜூலு உள்படவகுப்புவாரி பிரதிநிதித்துவத்தில் யாருக்கும் நமக்கு ஆட்சேபணை இல்லைஅதற்காகவேசென்னை மாகாண சங்கம் என்று ஒரு சங்கம் இருக்கிறதுஅதற்கு கே.பி.கேசவப் பிள்ளை தலைவர் என்றும்தோழர் வரதராஜூலு நாயுடு காரியதரிசி என்றும் சொல்லப்பட்டது.

ஈரோட்டில் சென்னை மாகாண மாநாடு

அந்த சமயம் தோழர் .வெ.ராவகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தை காங்கிரஸ் ஒப்புக் கொண்டதானதால்ஜஸ்டிஸ் கட்சி அவசியமில்லை என்று சொன்னதின் பேரில்உடனே அங்கேயே பார்ப்பன பல பிரமுகர்கள் ஒன்றுகூடிசென்னை மாகாண சங்கம் என்பதின் இரண்டாவது மாநாட்டை ஈரோட் டில் வேண்டுமானாலும் கூட்டிவகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தலாம் என்றும்அதைக் கூட்ட சம்மதிக்கிறீர்களா என்றும்தோழர் .வெ.ராமசாமியைதோழர்கள் வரதராஜூலுகல்யாண சுந்தரம் முதலியோர் கேட்கஒரே மாதத்தில் ஈரோட்டில் சென்னை மாகாண மாநாடு கூட்டப்பட்டது.

இது வரலாறு.  எப்பொழுது? 1919 இல்.

தோழர் கோவிந்ததாஸ் தலைமை வகித்தார்.வெ.ராவரவேற்புத் தலைவராக இருந்தார்தோழர்கள் கல்யாண சுந்தர முதலியார்வரதராஜூலு நாயுடுவிஜயராகவாச்சாரியார் முதலியோர் வந்து நடத்திக் கொடுத்துவகுப்புவாரி பிரதி நிதித்துவ தீர்மானத்தை நிறைவேற்றி விட்டுப் போனார்கள்.

இதன் பிறகுபார்ப்பனரல்லாதார்களில் ஏதோ பணக்காரர்களாய் இருந்தவர்கள் போகமற்றபடி உற்சாகமுள்ள வாலிபர் எல்லோரும் இவர்களைப் பார்த்துகாங்கிரசில் தேசியவாதிகள் சங்கம் (நேஷனலிஸ்ட் அசோசியேசன்என்ற ஒரு சங்கத்தைப்  புதிதாக உண்டாக்கினார்கள்.

அதிலும்வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஒப்புக்கொண்டுஅந்தச் சங்கத்திற்கு தோழர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார் தலைவராகவும்சி.இராஜகோபாலாச்சாரியார் பொதுக் காரிய தரிசியாகவும்தோழர் பிரகாசம் ஆந்திர நிர்மாண காரியதரி சியாகவும்தோழர் .வெ.ராதமிழ்நாட்டு நிர்மாணக் காரிய தரிசியாகவும் நியமிக்கப்பட்டார்கள்.

பிரசிடென்சி அசோசியேசன் அமைப்புதான் நேஷன லிஸ்ட் அசோசியேசன் என்று ஆகிறதுஇங்கேதான் ஒரு சம்பவம் நடக்கிறது.

அதுதான் ஆரியத்தினுடைய சூழ்ச்சி

அதற்கு உப தலைவராக இருக்க தோழர் வி..சிதம்பரம் பிள்ளை அவர்களின் பெயரை பிரரேபித்ததில்அது தோழர் இராஜகோபாலாச்சாரியாருக்குப் பிடிக்காததால்..சிமிகப்பெரிய தியாகம் செய்திருக்கிறார்மிகப்பெரிய அளவிற்கு வந்திருக்கிறார்அத்தனை தியாகத்தையும் செய்து வெளியே வந்துமிகப்பெரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்அவருடைய தியாகத்தை எப்படி மதித்திருக்கவேண்டும்எந்த அளவிற்கு தோளில் தூக்கி வைத்து ஆடியிருக்கவேண்டும்ஆனால்செய்தார்களாசெய்யவில்லை நண்பர்களேஏன்அதுதான் ஆரியத்தினுடைய சூழ்ச்சி.

ஆரிய மாயை எப்படி இருக்கிறது என்பதற்கு அந்தக் காலத்து வரலாற்றை ஆய்வு செய்தாலும் சரிஇன்றைய நிகழ்ச்சிகளோடு அதோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் உங்களுக்கு அதனுடைய தாத்பரியம் மிகத் தெளிவாக விளங்கும்.

உப தலைவராக இருக்க தோழர் வி..சிதம்பரம் பிள்ளை (..சி.) அவர்கள் பெயரை பிரரேபித்ததில்அது தோழர் இராஜகோபாலாச்சாரியாருக்குப் பிடிக்காததால்அதற்குப் பதிலாக வேறொரு பார்ப்பனர் எஸ்.கஸ்தூரி ரெங்க அய்யங்கார் பெயர் பிரரேபிக்கப்பட்டது.

அது சமயம் தோழர் .வெ.ராஇராஜகோபாலாச்சாரியாருக்கு எப்போதும் கடமைப்பட்டவராக இருந்தும்தோழர் வரத ராஜூலு முதலியார் வி..சிதம்பரம் பிள்ளைதான் உப தலை வராக இருக்கவேண்டும் என்று சொன்னதால்.வெ.ரா.வும் அதை ஆதரிக்கஅந்த விஷயம் உடனே பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியைக் கிளப்பிவிட்டது.

உடனே இந்த விஷயம் ஒத்திப் போடப்பட்டு விட்டுபிற்பகல் மாநாட்டில் பார்த்துக் கொள்ளலாம் என்று தலைவர் (விஜயராகவாச்சாரியார்சொல்லிவிட்டார்.

ஒரு ரூபாய் வீதம் டெலிகேட் பணம் கொடுத்து, 50 தொழிலாள பிரதிநிதிகளை...

ஆனால்கூட்டம் முழுதும் பார்ப்பன மயமாக இருந்ததால்பிற்பகல் மாநாட்டிற்குத் தொழிலாளர்களில் 50 பேருக்கு மேல்ஆளாளுக்கு ஒரு ரூபாய் வீதம் டெலிகேட் பணம் கொடுத்து, 50 தொழிலாள பிரதிநிதிகளை டாக்டர் வரதராஜூலுவும்.வெ.ரா.வும்திரு.வி.கல்யாணசுந்தரமும் கூட்டி வந்து உட்கார வைத்துவிட்டனர்.

தோழர் இராஜகோபாலாச்சாரியார் ஒரு சூழ்ச்சி செய்தார்அது என்னவென்றால்உபதலைவர் ஒருவர் என்று இருந்ததைஅய்ந்து உப தலைவர்களாக ஆக்கிஅதில் ..சிபிள்ளை அவர்களையும் ஒருவராக சேர்த்துஅதற்கு மதிப்பில்லாமல் ஆக்கினார்.

இதையும் தோழர் .வெ.ரா.,  வரதராஜூலுகல்யாண சுந்தரனார் ஆகியோர் ஒப்புக்கொள்ளாததால்..சிதம்பரம் பிள்ளை அவர்களை உப தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று.

‘‘உங்களைவிட ஜஸ்டிஸ் கட்சியாரே நூறு மடங்கு தேவலாம்''

நிர்வாகக் கமிட்டி மெம்பர்களிலும்அதற்குமேல் பார்ப் பனரல்லாதார்களைப் போடவேண்டும் என்றும்.வெ.ராவாதாடியதால்இதைப் பார்த்து தோழர் இராஜகோபாலாச் சாரியார் அன்றைய தினமே தன் வாயால், ‘‘உங்களைவிட ஜஸ்டிஸ் கட்சியாரே நூறு மடங்கு தேவலாம்'' என்று மனம் புழுங்கிவிட்டார்.

இதுபற்றி உண்மை அறியவேண்டியவர்கள் இன்றும் தோழர்கள் முதலியாரையும்நாயுடுகாரையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்இதன் காரணங்களால்அடுத்த நாளே சென்னை மாகாண சங்கமும்தேசிய சங்கமும் உடனே செத்துப் போய்விட்டன என்று எழுதியிருக்கிறார் அய்யா அவர்கள்.

இது 1936 குடிஅரசுவில் வந்திருக்கின்ற செய்தி.

இந்தத் தகவல்கள் எல்லாம் அரசியல் வரலாற்றில் கிடைக்காதுஅதையெல்லாம் அய்யா அவர்கள் தெளிவாக எடுத்துச் சொல்கிறார்.

எப்படிப்பட்ட தியாகம்?

அன்றிலிருந்தே அவருக்குப் புரிந்துவிட்டதுஅவ்வளவு பெரிய தியாகம் செய்தவர்கள்பெரியார் அவர்கள் வெளி யேறுகிற நேரத்தில் ..சியும் வெளியேறிவிடுகிறார். ‘‘பெரியா ரும் - ..சியும்'' என்பதுதான் எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு.

தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறபொழுதே...

..சி.யும் வெளியேறி விடுகிறார்கிட்டத்தட்ட அந்த உணர்வு அவர்களுக்குப் புகுந்துவிட்டதுஅப்படி புகுந்து விட்டவுடனேஅடுத்தபடியாக நீதிக்கட்சி - ஏற்கெனவே அவர்கள் ஆட்சிக்கு வந்து பல நல்ல காரியங்களை செய்தி ருக்கிறார்கள்காங்கிரஸ் கட்சியில் இருக்கிறபொழுதே இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை சட்டம் போன்றவற்றை ஆதரிக்கிறார் தந்தை பெரியார்.

அந்த உணர்வில்மதுரையில் 1926 இல் மாநாடு நடைபெறுகிறதுஅந்த மாநாட்டில் தந்தை பெரியார் கலந்துகொள்கிறார்அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க.

தந்தை பெரியார் அவர்கள் கலந்துகொண்ட மாநாட்டில்நம்முடைய ..சிஅவர்களும் கலந்துகொண்டார்அதை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்கிறார்.

1926 ஆம் ஆண்டு ‘‘பார்ப்பனரல்லாதார் மாநாடு''

அப்பொழுது நீதிக்கட்சி பெருந்தோல்வி கண்டிருக்கிறதுதோல்வியைக் கண்டு அவர்கள் துவண்டு விடக்கூடாது என்பதற்காகஅந்த பார்ப்பனரல்லாதார்களின் நன்மைக்காகத் தொண்டாற்றி வந்த இயக்கம் சோர்ந்து கிடப்பதைக் கண்டுஅதற்குப் புத்துயிர் அளிக்க முயன்றுமதுரையில் 1926 ஆம் ஆண்டு ‘‘பார்ப்பனரல்லாதார் மாநாடு'' என்ற தலைப்பில் கூட்டினார்கள்.

அம்மாநாட்டில்நீதிக்கட்சியினர் மட்டுமல்லாமல்காங் கிரஸ்காரர்கள் பலரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

கப்பலோட்டிய தமிழன் என்ற சிறப்புக்குரியவரான ..சிதம்பரனார் போன்றோரும் இதில் கலந்துகொண்டார்கள்.

இது தோழர் பன்னன் அவர்கள்தமிழ்ச்செல்வங்களுக்கு என்று தந்தை பெரியார் என்ற ஒரு அற்புதமான புத்தகத்தை எழுதியிருக்கிறார்இந்த புத்தகம் ஒவ்வொரு வீட்டிலும்நம்முடைய பிள்ளைகள்இளைஞர்கள் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகமாகும்.

பன்னன் அவர்கள்அய்யா அவர்களைப்பற்றி மிக அழகாகசுருக்கமாகதெளிவாக ஒரு பாடப் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்இந்தப் புத்தகத்தின் பதிப்பு இப்பொழுது இல்லை என்கிற குறையைப் போக்கநாம் விரைவிலே அதைப் பதிப்பிக்கவிருக்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக